Sunday, December 7, 2025

இறைவன் பகவானின் கடவுள் உலகம்

 பணம் பதவி புகழ் அதிகாரம் 

  பல ஆயிரம் செலவு

 வையக ஷா உயர் மருத்துவரின் சிகிச்சை 

 விளைவு 

 கலைஞர் மரணம்.

 அமேரிக்கா சிகிச்சை 

 எம்ஜிஆர் மரணம்.

 மனித ஞானத்திற்கு 

 அறிவிற்கு மேல் .

 32 பேர் தற்கொலை.

 பிரார்த்தனை

கள் .

 ஜெயலலிதா மரணம்.

 சனாதன தர்மம் 

  மரணம் நிச்சயம்.

 ஜகத் மித்யா.

பிரம்மம் சத்தியம்.

 இது தான் நிலையான தத்துவம்.

Saturday, November 1, 2025

உண்மை ஆத்மாவின் ஒளி

 


☀️ உண்மை — ஆத்மாவின் ஒளி ☀️


சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 3


உண்மை —

அது இல்லாத உள்ளம்,

தன் நிழலைத் தானே சுடும்.

பொய் சொன்ன மனம்,

தன் நெஞ்சைத் தானே தகனம் செய்கிறது.


வள்ளுவர் சொன்னார் —

“தன் நெஞ்சறிந்து பொய்யற்க.”

அது வாழ்வின் முதல் வேதம்.


களங்கம் தான் குருக்ஷேத்திரம்,

சத்தியம் தேடும் யுத்தம்.

கிருஷ்ணன் கூட சில சமயம்

பொய்யைச் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினார்.

அது தத்துவமா?

அல்லது சூக்ஷ்ம மாயையா?


நிராயுதபாணி கர்ணன் விழுந்தான்,

கிருபாச்சாரியர் வஞ்சிக்கப்பட்டார்,

துரியோதனன் தொடையில் அடித்தான் —

அது தர்மமா?

அல்லது தண்டனையா?


அபிமன்யு வதம்,

அரக்க மாளிகை,

சூதாட்டம், மௌனமாய் இருந்த குந்தி —

ஒவ்வொன்றிலும் பாவமும், புன்ணியமும்

இணைந்து நின்றன.


ஆண்டவன் மாயையின் இயக்குனர்,

நாடகம் எழுதுவான்,

அதிலே மனிதனை பாத்திரமாக்குவான்.

சத்தியம் தெரிந்தும் மறைக்கும்,

அது அவனின் சூக்ஷ்ம லீலை.


விளக்குப் பூச்சி போல் ஒளி காட்டி,

தீயவற்றை அழகாக ஆக்கும்.

மனிதன் ஓடிச் சேரும்,

அதுதான் லௌகீக மாயை.


ஆனால்,

இதையெல்லாம் மீறி

மனக் கட்டுப்பாடு காக்க முடிந்தால் —

அதே ஆத்ம ஞானம்.


வெல்லம் கொட்டி

எறும்பை ஈயைத் தடுக்க முடியுமா?

அதுபோல மாயை நடுவே

பொய் இல்லாமல் வாழ்வது கடினம்.

ஆனால் சாத்தியம் —

அதுதான் ஆத்மாவின் ஒளி.


Thursday, October 30, 2025

சனாதன தர்மம் 2

 மாயை மற்றும் உண்மை 🌞


சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 2


வையகம் வாழ்க — ஜய் ஜகத்!

என்று முழங்கும் வேதம்,

அதே வேதம் சொல்லும் —

“ஜகத் மித்யா, ப்ரம்ம சத்யம்.”


உலகம் பொய்யானது,

அதில் வாழ்பவன் உண்மையை தேடும்.

ப்ரம்மம் — காணாத கதிர்,

அதிலே விளையும் மாயை — ஒளியின் நிழல்.


மாயை — உடனடி ஆனந்தம்.

பொய்யால் வரும் சுகம்,

நொடியிலே மாறும் துன்பம்.

குடிகாரனின் போதை போல்,

சில மணிநேர அமைதி, ஆயுள் முழுதும் வலி.


பெண் சுகம், பொருள் ஆசை,

மண வாழ்க்கை, பிள்ளை ஆசை —

எல்லாம் மாயையின் பல வண்ணம்.

தனம் தண்ணீராக கரையும்,

உறவுகள் காற்றில் கரையும்.


பல்லி புலி போல் மறைந்து தாக்கும்,

பச்சோந்தி போல் நிறம் மாறும் மாயை.

சிங்கம் போல் கர்ஜிக்கும்,

மான் போல் பாசம் காட்டும்.

வண்டு போல் மயங்க வைக்கும் உலகம்.


சிரித்துக் கொல்லும் அரசியல்,

மொழி விளையாட்டில் ஆட்சி பிடிக்கும் வஞ்சகம்.

தவம் செய்து ஆண்டவனை அடிமைப்படுத்த நினைக்கும் பக்தர்கள்,

வேதம் உச்சரிக்கும் போலி சாமியார்கள்.

ஆஸ்ரமம் என்ற பெயரில் ஆசையின் அரண்மனை.


உண்மை எது?

பொய் எது?

அறியாமல் ஏமாறும் மனிதன் —

அவனே மாயையின் விளையாட்டு பொம்மை.


மதவாதிகள் “சைத்தான்” என்று சொல்லும்,

அது ஒரே பெயரில் பல வடிவம்.

அனைத்து மதங்களிலும்,

அனைத்து கட்சிகளிலும்,

உட்பிரிவால் பிறக்கும் வெறுப்பு —

அது தான் மாயையின் நெருப்பு.


உண்மை என்னவென்றால் —

அனைத்திலும் ஒரே ஆதாரம்,

அதே ஆன்மாவின் ஒளி.

மாயை அதன் திரை,

உண்மை அதன் வெளிச்சம்.


அறம மதம் தர்மம்

 தர்மம் என்றால் அறம்.

 தான தர்மம்.

 தமிழில்  தர்மம் என்றால் அறம்.

 இந்து மதம்.

 அறம் கிடையாது.

அதனால் இந்துக்களில் ஒற்றுமை இல்லை.

 சிவன் பக்தர்கள் எத்தனை பேர். வீர சைவம் லிங்காயத்.

பல மடாலாயங்கள்.

 மதம் மாறும் துண்டு படும் கிளைகளாகும்.

 சண்டை தூண்டும்.

 வடகலை தென்கலை போன்று.

 தர்மம் தலை காக்கும்.

 மதம் உயிர் எடுக்கும்.

 எத்தனை சமணத் துறவிகள் கழுமரம்.

 முகலாயர் எத்தனை லட்சம் பேரைக் கொன்றனர்.

 மத வெறி. தர்மம் நிலையானது சுயம்பு.

மனஅலை

 மனம் அலை மேல் அலை 🌊


சே. அனந்தகிருஷ்ணன் — சனாதன சிந்தனைகள் : பகுதி 1


1. அலைமனத்தின் தொடக்கம்


மனம் அலை மேல் அலை,

ஒரு நிமிடம் அமைதி,

அடுத்த நிமிடம் கலக்கம்.

அந்த அலைகளில் தான்

ஆண்டவன் சோதனை நடத்துகிறார்.


2. மாயையின் பாசம்


உலகம் தற்கால ஆனந்தம்,

கண நேரம் நகைச்சுவை,

அடுத்த கணம் வலி.

மாயை மழையில் நனைந்து

மனிதன் மறந்தான் தன் உண்மை.


3. மௌனத்தின் பாவம்


சத்தியம் தெரிந்தும்,

அதைச் சொல்லாமல் இருப்பது

சிறிய பாவமல்ல.

நண்பன் நலம், உறவின் பயம்,

அதற்கும் மேலே நம்மை ஆளும் அச்சம்.


4. துன்பத்தின் வரம்


துன்பமில்லா மனிதன்

இந்த பூமியில் இல்லை.

துன்பம் தான் கண்ணாடி —

அதில் தான் தெரியும் நம் முகம்,

நம் மனம், நம் மதிப்பு.


5. நேர்மையின் ஒளி


சோதனைகள் இருளில்

ஒளியாகப் பிறக்கும் நேர்மை.

அதைப் பிடித்தவன்

தாழ்வதில்லை, அழிவதில்லை,

அவனே தர்மத்தின் சாட்சியம்.


6. தர்மம் — நிலையான நதி


தர்மம் மாறாதது,

அது காலம் கடந்த ஓடம்.

மதம் — மனிதன் வரைந்த வரைபடம்,

நாளை வேறு வடிவம்,

மறுநாள் வேறு வண்ணம்.


7. அறம் — சுயம்பூ


அறம் பிறக்கவில்லை,

அது பிறவாமை.

மனதில் விளையும் வெளிச்சம்,

அது தெய்வம் பேசும் மொழி.


8. கலப்பின் கடல்


நதி வரும், சாக்கடை வரும்,

அனைத்தும் சேரும் கடல் —

அதன் ஆழத்தில்

கலப்பு தெரியாது.

அது தான் சனாதன தர்மம்.


9. மாயையின் மேகம்


உண்மையை மறைக்கும் மாயை,

மழையாகப் பெய்து மனிதனை மூடுகிறது.

ஆனால், சத்தியத்தின் காற்று வீசியால்

மாயை கரையும் —

அது தான் ஆன்மிக விடியல்.


10. முடிவு — சாக்ஷி நானே


நான் சாட்சியாய் நிற்கிறேன்,

என் மனம் அலை, என் உயிர் கடல்.

அதன் நடுவே அமைதி ஒன்று —

அது தான் ஆன்மா,

அது தான் சனாதன அறம்

Friday, October 24, 2025

சத்தியம் நிலை நாட்ட ப்படும்

 மாயை உலகம்


— எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை


அன்பே ஆண்டவன்,

அறிவே ஆண்டவன்,

சத்தியமே சர்வேஸ்வரன்.


சத்திய ஹரிச்சந்திரன் பட்ட இன்னல்கள்,

பக்தி தியாகராசர் அனுபவித்த வறுமை —

பக்தர்களின் சோதனை முடிவில்லா பாதை.


ஊழல்வாதிகள் கையூட்டு வாங்கி

சுகபோகத்தில் மிதக்கிறார்கள்;

தீயவர்களுக்கு இரக்கம் இல்லை.


தேர்தலில் பணம் ஓடுது,

ஏழைகள் நீதிக்காக

நீதிமன்றம் போக முடியாத நிலை.


சாதி சலுகைகள், மதிப்பெண் சலுகைகள்,

வயது சலுகைகள் —

நியாயம் எங்கே? சமம் எங்கே?


ஆண்டவன் பெயரில் ஏமாற்றம்,

ஆலயம் சுற்றி ஆயிரம் ஊழல்,

வியாபாரம் ஆனது பக்தி வழி —

ஆலயமா அது, கடைத்தெருவா அது?


மாயை நிறைந்த உலகம் இது,

அநியாயம் எல்லை கடக்கிறது.

ஆண்டவன் எப்போது அவதரிப்பார்?

நீதி நேர்மை நிலைநாட்ட தாமதம்.


ஆனால்...

உண்மை மறையாது,

மாயை நீங்கும் நாள் வரும்.

ஆண்டவன் நியாயம் நிலைநிற்கும் —

அன்பே மீண்டும் விளக்கும் உலகம்.

Sunday, May 25, 2025

சித்தர்களே போற்றி

 சித்தர்களே போற்றி! 

போற்றி!

 சித்தத்தில் சிவனை வைத்து 

 சிவ சிவ என்றிட

 மனம் அழியும்.

 உலகியல் உண்மை புரியும்.

 ஆத்ம ஞானம் கிட்டும்.

 ஆத்மானந்தம் பெருகும்.

 ஆத்ம  சாந்தி  கிட்டும்.

 ஆத்மதிருப்தி பெருகும்.

 பரமானந்தம் 

 பிரம்மானந்தம் 

 அவன் அருகில் இருந்து 

 ஆத்மா பரமாத்மா ஒன்றாகும்.

 அத்வைதம் பாவம் 

 அஹம் பிரஹ்மாஸ்மி 

நிலை ஏற்படும்.

 அனந்த கிருஷ்ணன சிவதாசன்

Sunday, May 18, 2025

லீலை புரியாத புதிரே। लीला पहेली


 तमिल हिंदी सेवा தமிழ் ஹிந்தி பணி 

சே. அனந்த கிருஷ்ணன்

ऍस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु 

 भारत भाषा प्रेमी।

सुप्रभात। 

 நற்காலை வணக்கம்.

Goodmorning.

இறையன்பு --भगवदप्रेम्=इरैयन्बु

 இறையின்பம்--भगवद्सुख=इरैयिन्बम्

 ஈடில்லா  =अतुलनीय --ईडिल्ला 

ஆனந்தம். =आनंद  =आनंदम्

 வணிகமய பக்தி =वाणिज्य भक्ति  =वणिकमय भक्ति 

 பக்தி அல்ல. =भक्ति नहीं। =भक्ति नहीं।

 சனாதன தர்மம்  सनातन धर्म=  सनातन धर्मम् 

 தொழில்மயமாக--औद्योगीकरण में = 

तोऴिल्मयमाक

 மாற மாற =परिवर्तन होते होते  माऱ माऱ

 அநாசாரம்  =अनाचार   =अनाचारम्

அதிகமாக  बढ़ते  --अधिकमाक

 போலிகள்  नक्सलियों का  पोलिकल् 

आनंदम्ஆனந்தம். आनंद।

 மெய்யன்பர்கள்--यथार्थ भक्त 

 मॆय्यन्वर्कल् 

 பக்த தியாகராஜர்   भक्त त्याग राज  भक्त त्याग राज 

போல். जैसे।= पोल।

தியாகராஜர் त्यागराज  =त्यागराज 

 கீர்த்தனைகள்  कीर्तन  कीर्तनैकळ् 

 பாடுவோர் -गायक-पाडुवोर

 வளமாக -संपन्न -वळमाक।

நலமாக. सुखी। -नलमाक।

சாயீபாபா  साईं बाबा  साईबाबा

வறுமை  ग़रीबी  वऱुमै

 இன்று   आज  इन्ऱु

சாய்பாபா  साईं बाबा  साईबाबा 

ஆலயம் -मंदिर =मंदिर 

 பலரின்  अनेकों के  पलरिन्

வாழ்விற்கு  जीवन का  वाऴ्विऱ्कु 

ஆதாரம். आधार। =आधारम्।

நல்லார் -अच्छा  -नल्लार्

 ஒருவர்  உளரேல் --एक रहें तो =ऒरुवर उळरेल्

அவர் பொருட்டு  -उनके कारण  -अवरपोरुट्टु

எல்லோருக்கும்  =सबको ऍल्लोरुक्कुम् 

பெய்யும் மழை. पानी बरसता। पॆय्युम मऴै।

 கணக்கன்பட்டி  कणक्कन पट्टी  कणक्कन पट्टी 

சுருட்டு  சாமியார்  चुरुट स्वामी

चुरुट्टु सामियार

 பழனி पलनी  पऴनि

 சாக்கடை =मोरे नाले  -चाक्कडै

स्वामी சாமியார்  सामियार

 வறுமையுடன்--गरीबी में। =वऱुमैयुडन्

 இன்று --आज  इन्ऱु

அவர்களின்  =उनके  अवर्कलिन

நினைவாலயங்கள்यादगार मंदिर 

निवालयंकळ्।

 பலருக்கு  अनेकों का पलरुक्कु

ஜீவனாதாரம்जीवन आधार। जीवनाधार्


 மேதினியில்  संसार में  =मेदिनियिल्

பகவானின் லீலை  भगवान की लीला=

भगवानिन् लीला।ो

புரியாத புதிரே. ना समझ पहेली है।

 पुरियां पुतिरे।।

சே. அனந்த கிருஷ்ணன்.

 एस. अनंतकृष्णन 

Saturday, May 17, 2025

இன்பம் நம்முள்.

 கடவுள் கிருபையும்

 கடின உழைப்பும்

 நம் ஞானம் தனம்  ஆரோக்கியம் 

 இறைவன் அளித்தவை என நினைத்து அவன் தான் அனைத்தும்

 என்று சரணடைந்தால் 

 வாழ்வில் இன்னலின்றி இன்பமாக வாழலாம்.

 மற்றவர்கள் 

போல் வாழவேண்டும் என்று எண்ணாமல் 

 நாம் இயல்பாக

 நம் அறிவுப்படி

 ஆண்டவன் அளித்ததை 

ஆனந்தமாக ஏற்று வாழவேண்டும்.


ஓம்சிவசிவஓம் ஓம் ஓம் ஓம் 

ஜய் ஜய சங்கர.

Friday, April 4, 2025

மொழி அரசியல்

 






தமிழகம் ஆங்கிலம் விரும்பும் மாநிலம்.

  தமிழுடன் ஆங்கிலம் கலப்பதை ஹிந்தியுடன் ஆங்கிலம் கலப்பதை 

 கௌரவமாக  மக்கள் விரும்பு கின்றனர்.

 தமிழகம் தவிர தென்னிந்திய  மொழிகளில் வடமொழி சொற்கள் அதிகம்.

 தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் பெயரை வடமொழியில் தான் வைக்கிறார்கள்.

கருப்பையா வெள்ளையம்மாள் 

 குண்டு என்ற பெயரை கௌரவமாகக் கருதுவதில்லை. காரணம் தெய்வீக மொழியாக சம்ஸ்கிருதம் ஏற்றப்படுகிறது.

தமிழக முகலாய சகோதரர்கள் 

அரபு மொழிப் பெயரையும் 

கிறிஸ்தவ சகோதரர்கள் அந்த மதம் சார்ந்த பெயரையும்

 ஆரோக்ய ராஜ் அற்புதராஜ் என்ற பெயரையும் ஜார்ஜ் ஜான் தாமஸ் என்று வைக்கின்றனர்.

 அதனால் தமிழக மக்கள் பெயர் சூட்ட 

மும்மொழி பயன்படுத்தி வருகின்றனர்.

அரபு மொழி பெயர்கள் பைபிள் பெயர்கள் வடமொழி தெய்வீகப் பெயர்கள்.

 தூய தமிழ் பெயர் வைக்க அரசு சட்டம் இயற்ற முடியாது.

 அரசு அலுவலகங்கள் பணியாற்றுபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஊழியர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது.

 அரசியல் வாதிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தான்.

 தமிழ் என்பது அரசியல் நடத்த.

 தமிழ் வளர்க்க அல்ல என்பது

திராவிட மாடல் உதயசூரியன் என்பதில் உள்ள ஆழ்மன சத்தியம் 

மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பாரத யாத்திரை செய்பவர்களுக்கும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ம் ஹிந்தி அறிவு அவசியம் என்பது மனசாட்சிக்குப் புரியும்.

 இந்த மொழி அரசியல் மக்களை திசை திருப்ப.

 மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

 சே. அனந்த கிருஷ்ணன்.