Friday, October 24, 2025

சத்தியம் நிலை நாட்ட ப்படும்

 மாயை உலகம்


— எஸ். அனந்தகிருஷ்ணன், சென்னை


அன்பே ஆண்டவன்,

அறிவே ஆண்டவன்,

சத்தியமே சர்வேஸ்வரன்.


சத்திய ஹரிச்சந்திரன் பட்ட இன்னல்கள்,

பக்தி தியாகராசர் அனுபவித்த வறுமை —

பக்தர்களின் சோதனை முடிவில்லா பாதை.


ஊழல்வாதிகள் கையூட்டு வாங்கி

சுகபோகத்தில் மிதக்கிறார்கள்;

தீயவர்களுக்கு இரக்கம் இல்லை.


தேர்தலில் பணம் ஓடுது,

ஏழைகள் நீதிக்காக

நீதிமன்றம் போக முடியாத நிலை.


சாதி சலுகைகள், மதிப்பெண் சலுகைகள்,

வயது சலுகைகள் —

நியாயம் எங்கே? சமம் எங்கே?


ஆண்டவன் பெயரில் ஏமாற்றம்,

ஆலயம் சுற்றி ஆயிரம் ஊழல்,

வியாபாரம் ஆனது பக்தி வழி —

ஆலயமா அது, கடைத்தெருவா அது?


மாயை நிறைந்த உலகம் இது,

அநியாயம் எல்லை கடக்கிறது.

ஆண்டவன் எப்போது அவதரிப்பார்?

நீதி நேர்மை நிலைநாட்ட தாமதம்.


ஆனால்...

உண்மை மறையாது,

மாயை நீங்கும் நாள் வரும்.

ஆண்டவன் நியாயம் நிலைநிற்கும் —

அன்பே மீண்டும் விளக்கும் உலகம்.

No comments: