Friday, May 4, 2012

yaar kutram.yaar kaaranam?

 தவறு  செய்த ஒருவர் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்.அவர் பதவியும் 

பறிக்கப்பட்டது.அந்நிலையில் அவர்  வருத்தப்படுவார்  என நினைத்தேன்.

அவரிடம்  நான் கேட்டேன்---தாங்கள்  ஆண்டவன் அருளால்   பெரிய பதவியில் இருந்தும்  தவறு  செய்து  விட்டீர்களே ?

அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் கேட்டார்----- என்னை யார் படைத்தார் ?
யார் பதவி அளித்தார் ?
அனைத்தும் ஆண்டவன் .
என் மனதில் தவறு  செய்ய தூண்டியது  மட்டும் கடவுள் இல்லையா/?

மேன்மை யான செடியில் அழகு மலர் அதில் முள்.இது ஆண்டவன் படைத்தது.
இது யார் குற்றம்./?

ஒவ்வொன்றும்  ஆண்டவன் செய்த தவறு தானே!!!

பெரிய மீன் சிறிய மீனை விழுங்கு கிறது.

என் தவறுக்கு யார் காரணம்.?நானா !!!

மனிதன் அறிவு  ஆண்டவனையே குற்றவாளி ஆக்கும்.

ஒருகதை எங்கோ படித்தது.
மனிதன்  தன சக்தி தன் சக்தி பதவி அதிகரிக்கும்  வரை இறைவனை
மிக உயுயர்ந்தவனாக வழிபடுகிறான்.சக்தி அதிகரித்ததும் தன்னை
 சர்வ வல்லமை படைத்த இறைவனாக கருதுகிறான்.
நல்ல சிந்தன கள் ,செயல்கள் ,பரோபகாரம்,பிறருக்கு நன்மைசெய்தல்,
சமுதாயத்தொண்டு,சத்தியம்,நேர்மை இருப்பவனை சமுதாயமே
பகவானாக ஏற்றுக்கொள்ளும்.
  அதுவே பேராசை ,ஆணவம்,காமம் ,சுயநலம் என்று  மாறும் தருணத்தில்
அவன் தரம் தாழ்ந்து போகிறது.

இறைப்பற்று மட்டும் இருந்தால் ஆசைகள் அடங்கும்.
மரணம் என்பது நிச்சயம் என்ற நிலை வரும்   என்ற நிலை இருக்கும் போது
மனிதன் தவறு செய்யமாட்டான்.ஆனால் ஒரு மாயை இந்த நிலைத்த
 உண்மையை  மறைத்து விடுகிறது.
இதுவே அவன் இன்னல்களுக்கு  இடைவிடா காரணமாகிறது.




No comments: