ஆண்டவன் இருக்கிறான் இல்லை என்ற விவாதத்தைவிட மனிதநேயம் என்பது உள்ளது .
மனித என்றால் மிருகம் தான் .
மனிதத்தன்மை என்பதால் தான்
அவன் மற்ற மிருகங்களிலிருந்து வேறுபடுகிறான்.
அந்த மனிதம் என்பது எங்கே /?மனிதகுணம் /நேயம் மறைந்து விடுமோ என்ற பயம் மனித இனத்திற்கு உண்டு.
அதனால் தான்ஆன் மிக வாதிகள், திருவள்ளுவர்,நாலடியார்,,திரிகடுகம்,மற்றும்
எண்ணற்றவர்கள் அறவுரைகள் கூறிச்சென்றுள்ளனர். சுவர்க்கம் நரகம் என்ற
சொற்களால் நேர்மை,சத்தியம் ,தானம்,பரோபகாரம்,தியாகம்,,தேசபக்தி,
குருபக்தி,சகோதரத்துவம்,பத்தி பக்தி,பித்ருக்கடன்,அன்னை சேவை என்பவற்றை
பாவ-புண்ணிய கண்ணோட்டத்தில் விளக்கினர்.
இருப்பினும் உலகவாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதால்
நன்னெறிகள் அறிந்தும் அறியாமல் விட்டு விடுகின்றனர்.
உலகில் மன சாட்சி உள்ளவர்கள் ,சிந்தனை சிந்தனை அறிவாற்றல் உள்ளவர்கள்
அரசாங்க வழக்குமன்ற தீர்ப்புகள்,பணவசதிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு
இன்னல்கள் அனுபவிக்கின்றனர்.இருப்பினும் நீதிகள்,நேர்மைகள் சாகடிக்கப்படுகின்றன.
அப்பொழுது தான்மனிதன் ஆண்டவன் மேல் ஐயப்படுகிறான் .
அதைவினைப்பயன் என்பதை நம்பாதவர்கள் நாத்திகவாதிகலாகின்றனர்.
ஆனால் தண்டநை ஒன்று அப்பாற்பட்டு மனிதனுக்கு கிடைக்கிறது என்பது தான் உண்மை.மெய்வழி .
No comments:
Post a Comment