இந்நிலவுலகில் அனைத்துமே
இருவகை நல்லது கெட்டது.
ருசி மட்டும் ஆறு.
இயற்கை மணம் இதுவரை
வரையருக்கப்படவில்லை
உப்பு இனிப்பு புளிப்பு கசப்பு
துவர்ப்பு காரம் அனைத்தும் கலந்த பச்சடியும் உண்டு.
ஆனால் மணம் என்பது தனி.
அது கலக்கப்படுவது இல்லை.
மல்லிகை மணம் ரோஜா மணம்
கலக்க முடியாது .
வண்ணத்தில் கலவைஉண்டு.
இப்படி தனித்துவம் காட்டும் உலகில்
மனித மனத்தில் ஒருவரை இப்படித்தான் என்று நிர்ணயிக்க முடியாது.
கொடுங்கோலர்களுக்கும் சில நல்ல குணம் உண்டு. திடமனதிலும் சில பலஹீன இச்சைகள் உண்டு
இராவணண் பலஹீனம் சகோதரி மீது கொண்டபாசம்.
சகோதரியை அவமதித்த சீதையை பலிவாங்குவதுதான் .சீதையின் அழகில் மயங்கினாலும் மனமாற்றம் செய்ய விரும்பினானே ஒழிய பலாத்காரமாக அடைய விரும்பவில்லை. இந்த ஒரே ஆணவமும் சபலமும் அவனது பலஹீனமாகியது. சூர்ப்பணகா இல்லையேல் ராமாயணம் இல்லை.
த்ரௌபதி இல்லை என்றால் மஹாபாரதம் இல்லை.
சம்ராட் அசோக் கொடியவன்.
ஆனால் அவன் நல்லவனாக மாற புத்தமதம் காரணமாகியது.
கர்ணணிடம் செஞ்சோற்றுக்கடன் மட்டுமல்ல தாயின் பற்றற்ற நிலை அவனை வேதனக்கு ஆளாக்கியது.
தாயன்பு பெண்ணின் கல் நெஞ்சம்
மகன் என்று அறிந்தும் அமைதி காத்தது பெண்ணின் குணம் இதுதான் என்று வரையருக்கமுடியா நிலை
மணமும் மனமும் என்ற பொழுது
மணக்கலலை கிடையாது .மணமும் மனமும் இப்படித் தான் என்று வரையறுக்கமுடியாது. இது இயற்கையில் இறைவனின் சூக்ஷ்மம்.
~
Wednesday, February 3, 2016
இறைவனும் மனிதனும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment