பகவானின் லீலைகள்
பாமரனின் ஜப-தப ப்ரார்த்தனைகளுக்குப் புரியவில்லை.
கர்மா என்கின்றனர் .
பூர்வ ஜன்ம கர்மா , இந்த ஜன்ம கர்மா ,ஏழேழு ஜன்ம கர்மா
ஆனால் அனுபவ ரீதியில் பார்த்தால் எல்லாமே உண்மை.
இருப்பினும் கலியுக தர்மம் பொருளாதார மேம்பாட்டில்
மனக் கஷ்டம்.
பதவி வசதி புகழ்
ஆனால் பிரியமானவர்கள் பிரிந்து போகும் காட்சி.
பணம் இருந்தும் மன நிறைவு இல்லா காட்சி.
அன்புள்ள ஆண்டவனைக் காண
அருள் பெற அறிந்த பாவ மன்னிப்பு மீண்டும் செய்யாமை.
அறியா பாவ மன்னிப்பு.
உறவு நட்பு செய்யும் பாவங்களை சகித்தல் உதவுதல்
இப்படியே ஆராய்ந்தால் மனித துன்பங்களுக்கு
கர்மம் அதாவது நமது செயல் ,சிந்தனை ,எண்ணங்களே
காரணங்களாகத் தோன்றுகின்றன.
தசரத சக்கரவர்த்தியும் அழுதார் .
ராமனும் அழுதார்.
ஆட்சியில் இருந்தோர் உள்ளோர் அனைவருக்கும்
மன நிம்மதியில்லா வாழ்க்கைதான் பூமியில்.
No comments:
Post a Comment