Thursday, February 18, 2016

ஜகத்தினை வென்றீடுவேன்

வேண்டும்   வேண்டுதல்கள்  பல ,வேங்கடேசா .
திரு  வேங்கட வாசா.
திருமகள் அருள் வேண்டும் .
கலைமகள் அருள் வேண்டும் .
மலைமகள் சக்தி வேண்டும் .
இவ்வாறே  வேண்டுதல்கள்  .
உன்னருள் இருந்தால் போதும்
உலகியல்  துன்பம் இல்லை .
கலியுக தெய்வம் நீயே .
கந்தனின் மாமனே.--அவன் கலியுகவரதன்
நீயோ  சுந்தர வரதன்.

அவன் க்ஷேத்திரத்தில்  நான் பிறந்தேன் .
உன் க்ஷேத்திரத்தில்  உன் அருள் பெற்றேன் .
உன் க்ருபாகடாக்ஷம்  போதுமப்பா !

ஜகத்தினை வென்றீடுவேன் .

photo.JPG.jpg

No comments: