ராமர் ஆண்ட நாடு ,
அவர் ஆண்டவனின் அவதாரம்.
கிருஷ்ணன் ஆண்ட நாடு ,
அதுவும் ஆண்டவன் அவதாரம்.
புண்ணிய பூமி பாரதம் ,
வேதமும் பண்பும் ஒழுக்கமும்
அமைதியும் ,சத்தியமும் கடமையும்
தியாகமும் அஹிம்சையும்
வையகம் வாழவும் ,
வையகம் ஒரு குடும்பம்
,வந்தவர்கள்
தெய்வம் என்ற தத்துவம்
அவனிக்கு அறிவித்த நாடு.
அகில உலகமும் அறிவைத்தேடி ,
ஆன்மிகம் தேடி ,
அமைதி தேடி வந்தநாடு.
ஆஸ்தி அறிந்து ஆக்கிரமிக்க வந்தவர்கள்
அகிலத்தில்.
ஆன்மிகம் தெய்வீகம்
அந்த அரக்க இரக்கமற்றவர்களைப்
பொறுத்து மன்னித்து அழகு சிலைகளை
அலங்கோலப் படுத்தியவர்களையும்
ஆண்ட அனுமதித்த ஆண்டவன் நாடு.
கைலாயத்தில் சிவனும் ,
தென்னாட்டில் அவன் அருந்தவப் புதல்வனும்
ஆட்சி செய்யும் நாடு.
ஆன்மீகத்தில் இணைந்த
இணைக்கின்ற
இணைக்கும் நாடு.
ஆண்டவன் இல்லை என்ற அரசர்கள் ,
ஆண்டவனின் வரம் பெற்று ஆண்டவர்கள்,
ஆண்டவனையே அழிக்க ,அதன்
விளைவாக அழிந்த அசுரர்கள்,
ஆண்ட நாடு.
ஆண்டவன் ஆண்டவர்களின்
பெருமைகளுக்காக
வியத்தகு ஆலயங்கள் ,
சீரிய சிற்பக்கலைகள்,
கலியுகத்திலும் கோடிரூபாய்களும்
தங்க வெள்ளி கட்டிகளும்
தான தர்மங்களும்
மன முவந்து காணிக்கையாக கொட்டும்
பக்தியில் சிறந்த நாடு.
முற்றிலும் துறந்த துறவிகளை
ஆடை இன்றியும் ,அரைகுறை ஆடைகளுடனும்
பைத்தியக்காரன் போன்று சுற்றும்
ஆன்மீகவாதிகளை சரணடையும் நாடு.
ஊழலால் ஆட்சி செய்தாலும்
ஆண்டவனிடம் அவர்களைக்காப்பாற்ற
மொட்டை ,காணிக்கை,யாகம் செய்யும் நாடு.
ஆண்டவனிடம் நீதி கேட்கும் ஒரு சிறு கூட்டம் ,
ஆண்டவர்களின், ஆளுபவர்களின் தவறுகளை
தண்டனையிலிருந்து காப்பாற்ற தண்டமிடும் கூட்டம்.
மகாபாரதம் தான் ,
கௌரவர்கள் அணியிலிருந்தே
பாண்டவர்கள் நலம் விரும்பும் கூட்டம்,
ஆண்டவன் எவர் பக்கம் ,
மன நிம்மதி மன சாந்தி மன மகிழ்ச்சி
இதுவே வேண்டும் .
ஆண்டவன் ஆண்ட நாடு ,
ஆன்மீக சக்தி ஆளும் நாடு.
.