Thursday, May 3, 2012

mothers love

உலகில் அன்பு என்பது   மற்றவர்களுக்கு  நாம் வழங்குவது தான்.மற்றவர்கள்  நமக்குத்  தருவார்கள் என்று  எதிர்பார்க்கக் கூடாது.

நாம் பிறந்தது பெற்றோரின்  அன்பாலா  அல்லது  எதிர் பாரா விபத்தாலா அல்லது  கட்டாய சூழ்நிலையாலா  என்பது
தெரியாது.ஆனால் பிறந்ததும்  நமக்கு பலரிடம் இருந்து கொஞ்சல் மொழி கிடைக்கிறது.
சிலருக்கு   கம்சன் போன்ற  தொல்  லைகள்.
சிலருக்கு சித்தியின் கொடுமைகள்.
சிலருக்கு  கபீர்  போன்ற  இரக்கமற்ற தாய்.கர்ணன் போன்ற பிற.
துளசீதாசர் போன்று கெட்ட  நக்ஷத்திர பிறப்பால் வெறுத்து ஒதுக்கும் பெற்றோர்.
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுமை.
கருச்சிதைவுமாத்திரைகளை  மீறி அங்கஹீனக் குழந்தைகள்,
தாயின் அன்பு என்றாலும் அதைப் புகழ  சில உதாரணங்கள்.
இகழவும் சில உதாரணங்கள்.
கல்வியில்  உயர்ந் தோனை  தன் மக்களுள் தாய் அதிகம் விரும்புவாள்.
தாயின் அன்பு ஆராய்ச்சி செய்தால் சற்று வேற்றுமையாகவே காணப்படும்.
தன் குழந்தைகள் அனைவரிடமும் அன்பு செலுத்தினாலும் கொஞ்சும் விதம்
 சற்றே வேறுபடுகிறது.


No comments: