Saturday, December 12, 2020

தர்மம் -அதர்மம்

 காலை வணக்கம்.

கடவுள் வணக்கம்.

கடவுளை வணங்கினால் போதுமா?

சத்தியம் வேண்டாமா ?

 தான-தர்மம் வேண்டாமா?

நேர்மை வேண்டாமா?

பொது நலம் வேண்டாமா?

பழைய கோட்டைகள்,

அகழிகள்,ஆடம்பர அந்தப் புரங்கள்

 எங்கே ? எங்கே? எங்கே?

அழியும் உலகம்  ஒரு ரூபாய் ஊதியம்

பல கோடிகள் சொத்து,

கொடை நாடு பங்களா

அனுபவிக்க நிம்மதி இல்லை.

 நிம்மதி ஜயம் இல்லை.

தனிமையில் நிம்மதி இல்லை.

 நேர்மையற்ற பொருள் குவிப்பு

ஏழைகளுக்கு உதவா பணம்

ஆலயம் பக்கத்தில் அழகு அரண்மனை.

39 வயதில் கட்டிய அரண்மனை பார்க்காமலேயே மன்னன் மரணம்.

பல கோடி ரூபாய் சில வில்

ஆட்சிக் கட்டில் ,பல கோடி ஊழல்

பதவி அதிகார துஷ்பிரயோகம்.

பலன்? முதுமை தடுக்குமா?

உயிர் தங்குமா?

குடிசை வாசிகளை குடி காரனாக்கி

திடீர் குடிசைகளாக்கி வாக்கு வங்கி.

வாக்கு வாங்கி பல குழுமங்கள்.

வாக்களித்தவர்கள் அதே கொசுக்கடி குடிசைகளில் சாக்கடை வெள்ளத்தில்


அமைதி எங்கே? ஆண்டவன் சட்டம்

அரிய பெரிய தண்டனைகள் 

அனுபவித்தும்

ஆண்டவனை முழுமுதற்கடவுளை

வருடம் ஒன்பது கோடி 

பதட்டமான விசர்ஜன ஊர்வலம்

அதை உதைத்து தள்ளி 

அழகு பதுமை களை 

சின்னா. பின்னமாக்கி

அவமதிக்கும் அந்தக பக்திக்கூட்டம்.

அறிவில்லா கூட்டம் 

விநாயகனின் சாபத்தால்

 விநாசமடையும் சத்தியம்.

இன்று இறைவன் அளித்த ஞானம்.

அஞ்ஞானம் போக்க.

No comments: