Tuesday, February 21, 2017

ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று

   ராமசரிதமானஸ பாலகாண்டம் -எண்பத்திமூன்று


         ஜானவாசம் (மாப்பிள்ளை விட்டார் தங்குமிடம் )

இடத்தில் தேவலோகத்தில் கிடைக்கும் அனைத்தும் எளிதாகக் கிடைத்தன. இப்படிப்பட்ட ஐஸ்வர்யங்கள் எப்படி
வந்தன என்ற ரகசியத்தை யாரும் அறியமுடியவில்லை.
எல்லோரும் ஜனகரின் பெருமையையே பேசினார்கள்.
  ஸ்ரீ ராமச்சந்திரர் எல்லாமே சீதையின் செயல் என அறிந்து
சீதை  தன்மேல்  வைத்துள்ள  அன்பால்  மிகவும் மகிழ்ந்தார்.
தந்தை தசரதரின் வருகை அறிந்து இரண்டு சகோதரர்களின்
இதயத்தில் ஆனந்தம் பொங்கியது.
ஆனால்  தயக்கத்தின் காரணமாக ரிஷி விஸ்வாமித்திரரிடம்
எதுவும் கூறவில்லை. ஆனால் தந்தையைப் பார்க்கவேண்டும்
என்ற ஆசை மனதில் இருந்தது.
விஷ்வாமித்திரர் இருவரின் பணிவையும் அடக்கத்தையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். மகிழ்ந்து இரண்டு சகோதரர்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டார்.
அவருடைய உடல் ஆனந்தமடைந்தது . கண்களில் அன்புடன் கூடிய ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவர் தசரதர் தங்கியிருந்த ஜானவாசத்திற்குச் சென்றார்.
அவர் சென்றது ஏறியே தாகம் எடுத்தவனிடம் சென்றதுபோல்
இருந்தது.
மகன்களுடன் ரிஷி விஷ்வாமித்திரர் வருவதைப் பார்த்து
தசரதர் மகிழ்ச்சியுடன் எழுந்தார். சுகம் என்ற சமுத்திரத்தின் ஆழத்தை அறியச் சென்றார்.


ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -எண்பத்திரண்டு

 அரசர் மணமகன் வீட்டார் மகிழ ,
தங்க கலசங்களில்  பால்,சர்பத்,குளிர்ந்தநீர் .
குளிர்பானங்கள் , அமிர்தத்திற்குச் சமமான எல்லாவித
பலகாரங்கள் ,பலவித அழகான பாத்திரங்களில் அனுப்பினார். உத்தமமான பழங்கள், பலவித பொருள்களை அன்பளிப்பாக அனுப்பினார்.
நகைகள், துணிகள், பலவித விலைஉயர்ந்த ரத்தினங்கள் ,
பலவித பறவைகள், மிருகங்கள், குதிரைகள், யானைகள் , பலவித சாவாரிகள் அனுப்பிவைத்தார்.

இவைகளைத்தவிர  பலவித வாசனைப் பொருட்கள் , மங்கள திரவங்கள் அனுப்பினார்.

தயிர் ,அவுல் , பலவித பரிசுகள் காவடியில் நிரப்பி
வேலையாட்கள் கொண்டுவந்தனர்.

வரவேற்பு குழுவினருக்கு , மணமகன் வீட்டார் ஊர்வலம்
தென்பட்டதும் மிகவும் மகிழ்ந்தனர். வரவேற்பாளர்களின்
அணிவகுப்பைக்கண்டு மணமகன் வீட்டார் மகிழ்ந்தனர்.முரசுகள் முழங்கின.

சிலர் பரஸ்பர சந்திப்புக்காக மிகவிரைவாக ஓடிவந்தனர்.
இரண்டு சமுத்திரங்கள் ஆனந்தமாக சந்தித்ததுபோல் இருந்தது.

தேவலோக அழகிகள் பூ மழைபொழிந்து  பாடிக்கொண்டிருந்தனர். தேவர்கள் மிக மகிழ்ந்து
முரசுகளை வாசித்தனர்.
வரவேற்புக்  குழுவினர் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை    தசரதருக்கு  முன்னால்  வைத்தனர். மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டினர்.

அரசர் தசரதர் அன்புடன் அந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார்.  பிறகு அவர்களுக்கு அன்பளிப்புகள் அளித்தார். பிறகு யாசிப்பவர்களுக்கு
கொடுக்கப்பட்டது.
பிறகு பூஜை மரியாதையுடன் வரவேற்பாளர்கள் அவர்களை
திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் .
அங்குள்ள பொருட்கள் கண்டு குபேரனே தான் தான் செல்வந்தன் என்ற கர்வத்தை விட்டுவிட்டார்.
மிக அழகான ஜானவாசம். எல்லோருக்கும் எல்லாவித வசதிகளுடன்.
சீதை  மணமகன் ஊர்வலம் ஜனகபுரிக்கு வந்தது தெரிந்ததும்
தன்னுடைய மகிமையைக் காட்டினார்.
 பிரார்த்தித்து  எல்லாவித சித்திகளையும் அழைத்து ,
அவர்களை ராஜா தசரதருக்கு விருந்து உபசார பணிவிடைகள்  செய்ய அனுப்பினார்.
சீதையின் கட்டளைபெற்றதும் , அனைத்து சித்திகளும்
மாப்பிள்ளை மற்றும் ஊர்வலத்தார்  உள்ள இடத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைத்துவித சம்பத்துக்களும்
இந்திரபுரியின் கேளிக்கை களையும் எடுத்துச்சென்றனர்.



Thursday, February 16, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

        ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எண்பத்தொன்று

          மணிகள் -மணி ஓசைகளை வர்ணிப்பது  இயலாது.
நடந்து செல்லும் சேவகர்கள்  உடற்பயிற்சி செய்துகொண்டே
வந்தனர் .  சிரிக்க வைப்பதில் சிறந்த  நிபுணர்களான  கோமாளிகள்  வித-விதமான வேடிக்கைகள்  காட்டிக்கொண்டிருந்தனர்.
அழகான அரசகுமாரர்கள்
மிருதங்கம் -முரசொலிகளுக்கு ஏற்ப  குதிரைய நடனமாடவைத்தனர் . தாளத்திற்கேற்றவாறு கால்கள் ஆடின. சிறந்த நட்டுவனார்கள் ஆச்சரியத்துடன் இந்த ஆட்டத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
மணமகன் ஊர்வலம் வர்ணிக்கமுடியாது.
அழகான சுபம் தரும் சகுனங்கள் தென்பட்டன.
மயில் ஒருபக்கம் உணவு பொறுக்கிக் கொண்டிருந்தது.
சிலர் கீரிப்பில்லையையும் பார்த்தனர்.
மூன்றுவித காற்று( குளிர்ந்த ,மந்த,மணமுள்ள )
அனுகூலமான திசையில் இருந்து வந்துகொண்டிருந்தது.
பெண்கள் நிறைந்த பானைகள் மடியில் குழந்தைகளுடன்
வந்துகொண்டிருந்தனர்.
ஓநாய்கள் அடிக்கடி தென்பட்டன. பசுக்கள் தன் கன்று குட்டிகளுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தன.
மான் கூட்டம் இலதுபக்கம் சுற்றி வலது பக்கமாக வந்தது.
இவை எல்லாம் சுப சகுனங்கள்.
வெள்ளை கழுத்துள்ள பருந்து வட்டமிட்டு நல்ல சகுனத்தையும் , குயில் களும் இனிய இசை எழுப்பின .
 மங்களமான,நல்லது செய்யக்கூடிய, மனம் விரும்பிய பலன்கள்  தரக்கூடிய சகுனங்கள்  உண்மையான நிகழ்ச்சிகளுக்காக  ஒன்று சேர்ந்துள்ளன. பகவானே
புத்திரனாகப் பெற்றவர்களுக்கு சுப சகுனங்கள் எளிதுதான்.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மணமகன் . சீதை மணமகள்.
ஜனகரும் தசரதரும்  புனித  சம்பந்திகள்.

 
  இப்படிப்பட்ட  திருமணம் கேட்டு சுப சகுனங்கள் எல்லாம் நடனமாடின. இவ்வாறு முரசுகள் முழங்க  ஊர்வலம் புறப்பட்டது .
  சூரிய வம்சத்தின் கொடிபோன்ற தசரதர் வருவதைப் பார்த்து  ஜனகர் நதியில் பாலம் கட்டினார்.
வழியில் தங்குவதற்கு அழகான கூடாரங்கள் அமைத்தார்.
அதில் தேவலோகம் போன்றே அனைத்தையும் ஏற்பாடு  செய்தார்.
அனைவருக்கும்  தங்கள் மன விரும்பியபடியான
உயர்ந்த சாப்பாடு, படுக்கை ,ஆடைகள் கிடைத்தன.
அங்கு மணமகன் வீட்டாருக்கு செய்த மரியாதையால்
அனைவரும் தன் தன் வீடுகளை மறந்துவிட்டனர்.
மிகவும் ஓசையுடன் அடித்த முரசொலி கேட்டு ,
மணமகன் ஊர்வலத்தை வரவேற்க யானை,குதிரை, தேர் ,
காலாட்படைகளின் அணிவகுப்பு நடந்தது.


Wednesday, February 15, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

     தசரத மகாரா மாப்பிள்ளை ஊர்வலம் அனைவரையும்

வியக்க வைத்தது. குதிரைகள், ரதங்கள், யானைகள் ஒவ்வொன்றும் மிக தெய்வீக அழகுபெற்று விளங்கின.

அழகான யானைகளின் மேல் அம்பாரிகள் இருந்தன,   ஆவணி மாத  மேகக்கூட்டங்கள்  செல்வதுபோல்
மணி ஓசைகளுடன் சென்றன.
அழகான பல்லாக்குகள், சுகமாக அமர இருக்கைகள்
இவைகளில் உயர்ந்த அந்தணர்கள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . வேதங்களின் பாடல்களே வடிவம் எடுத்ததுபோல் இருந்தன.
பாடகர்கள், இசைப்பவர்கள் ,கவிகள் தங்கள் தகுதிக்கான சவாரியில் சென்றனர்.
பல இனத்தைச் சேர்ந்த கோவேறிக்கழுதைகள்,
ஒட்டகங்கள் ,காளைமாடுகள்  ஆகியவற்றில்
எண்ணிக்கையிலடங்கா பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன.
வேலைக்காரர்கள் காவடிகளில் பல பொருள்கள் எடுத்துச் சென்றனர். எல்லோரும் தன் தன் சமூகத்துடன் சென்றனர்.
  எல்லோருடைய இதயத்திலும் அளவில்லா ஆனந்தம் .
எல்லோருக்கும் நீண்ட நாட்களாகாக் காணாத ராம-லக்ஷ்மன்னரை பார்க்கவேண்டும் என்ற ஆசை. பார்க்கப்பூகிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
யானைகளின் பிளிறல்,அவைகள் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை ,நாலாபக்கங்களிலும் தேரோடும் கட-கட சத்தம் ,
குதிரைகளின் கனைப்பு ஒலிகள், முரசொலிகள் மிக ஆனந்தமாக இருந்தன. எங்குமே வேற்றுமை    காணவில்லை .
 மகாராஜா தசரதரின் வாயிலில் அதிகக் கூட்டம் .
அதில் கல் எறிந்தால் அது அறைக்கப்ப்ட்டுவிடும்.
மாடியில் ஏறிய பெண்கள் மங்கள தாம்பாளத்தில்  ஆரத்தி
எடுத்துக்கொண்டிருந்தனர்.
 பலவிதமான மனங்கவரும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது மந்திரிகள் இரண்டு தேர்கள் அலங்கரித்து
சூரியனின் குதிரைகளையே தோற்கடிக்கும்
குதிரைகளைப் பூட்டினர்.
இரண்டு தேர்களையும் அரசரிடம் கொண்டுவந்தனர். ஒரு தேரில் அரசாங்கப்போருட்கள் ஏற்றப்பட்டன.
அடுத்தது சக்தியின் உருப்பெற்று மிக அழகாக இருந்தது.
அந்த அழகான தேரில்  ராஜா குரு வசிஷ்டரை மகிழ்வுடன் அமரவைத்து சிவன்,பார்வதி, கணேஷ் ,குரு அனைவரையும்
நினைத்து வணங்கி தேரில் ஏறி அமர்ந்தார்.

வசிஷ்டருடன்  மகாராஜா அமர்ந்திருக்கும் அழகு தேவகுரு
ப்ரஹஸ்பதியுடன் இந்திரன் அமர்ந்திருந்ததுபோல் இருந்தது.
 வேதங்களின் முறைப்படி குழப் பழக்க வழக்கப்படி எல்லா காரியங்களும் செய்துவிட்டு , எல்லோரும் எல்லாவிதத்திலும்
அலங்கரித்து வருவதைப் பார்த்து ,
ஸ்ரீ ராமச்சந்திரரை ஸ்மரித்து  ,குருவின் அனுமதி பெற்று
பூமிபதி தசரதர் சங்கு முழங்கினார். அந்த மாப்பிள்ளை ஊர்வலம் பார்த்து தேவர்கள் மகிழ்ந்தனர்.
அழகான மங்களம் தரும் மலர்கள் எடுத்துத் தூவினர்.
 குதிரைகள் கனைத்தன. யானைகள் பிளிறின .
ஆகாயத்திலும் ஊர்வலத்திலும் இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன,
தேவலோகத்துப்  பெண்களும் பூலோகப் பெண்களும் அழகான மங்களம் தரும் பாடல்கள் பாடினர். இனிமையான ரகத்தில்  சஹானாய் வாத்தியம் வாசிக்கத் தொடங்கினர்.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது


      ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தொன்பது 

 அரசர் பரதனை அழைத்து , குதிரை ,யானை ,தேர் முதலியவைகளை அலங்கரிக்கும்படி கூறினார்.
 பரதன் மகிழ்ச்சியுடன் சென்று  குதிரை  லாயத்தின் தலைவரைக் கூப்பிட்டு  குதிரைகளை அலங்கரித்து
அழைத்துவர ஆணையிட்டான்.
பலவண்ணங்களில் உத்தமமான
 குதிரைகள் அழகாக காட்சி அளித்தன.
அனைத்துகுதிரைகளும்  மிகவும் அழகாகவும் ,
கம்பீரமாகவும் காட்சியளித்தன.
அவைகள் கால்கள் எரியும் இரும்பில்  மிதித்து
எழுவதுபோல் சஞ்சலமாக இருந்தன.
அவைகள் காற்றைவிட வேகமாக ஓடக்கூடியன.

அந்த குதிரைகளில் பரதனுக்கு ஒத்த வயதுடைய மிக அழகான அரசகுமாரர்கள் சவாரி செய்தனர்.
அவர்கள் கைகளில் பாணமும்வில்லும் இருந்தன.
இடுப்பில் மிகப்பெரிய
அம்பராத்தூண் கட்டப்பட்டிருந்தது.
எல்லோருமே தேர்ந்தெடுக்கப்பட்ட ,
மிக அழகான திறமைவாய்ந்த இளைஞர்கள் .
வீரனின் ஆடைகள் அணிந்து கொண்டு
போர்வீரர்கள்  காலாட்படைகள் ,
அனைவரும் அணிவகுத்து
நின்றனர்.
அனைவருமே வாட்போரில் நிபுணர்கள்.
அனைவரின் அணிவகுப்பும்
முரசுகளும் போர்முரசுகளும் ஒலித்தன.
தேரோட்டிக்கள் தேர்களை கோடி, தோரணம் ,பதாகைகள்
கொண்டு மிகவும்  லக்ஷணமாக அலங்கரித்திருந்தனர்.
அதில் அழகான சாமரங்களும் இருந்தன.
அதில் கட்டப்பட்டிருந்த மணிகள்
மிக இனிமையாக ஒலித்தன.
 
அந்த ரதங்களின் அழகு  சூரியதேவனின் ரத அழகை
பறித்துக்கொண்டதுபோல் இருந்தன.
அந்த தேர்களின் மிக அழகான
 கருப்பு நிறக் குதிரைகள்   பூட்டப்பட்டிருந்தன.
அந்த அலங்கரிக்கப்பட்ட தேர்கள்
முனிவர்களின் மனத்திலும்
ஆசைகளை உண்டாக்கின.




Tuesday, February 14, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --எழுபத்தெட்டு.

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --எழுபத்தெட்டு.
 
   அந்தப்புரத்துப் பெண்கள் ஜனகரின்
கடிதத்தைக் கையில் எடுத்து     மார்புடன் அணைத்து
தங்கள் மகிழ்ச்சியே வெளிப்படுத்தினர்.
அரசர்களில் மென்மையான தசரதர் ராம-லக்ஷ்மனர்களின்
புகழையும் செயல்களையும் அடிக்கடி வர்ணித்துக்கொண்டிருந்தார்.

 இதெல்லாம் விஷ்வாமித்திர முனிவரின் செயலே என்றனர்.

ராணிகள் அந்தணர்களை அழைத்து தானங்கள் கொடுத்தனர்.
அனைத்து அந்தணர்களும் ஆசிகள் வழங்கினர்.
பிறகு பிக்ஷுக்களை அழைத்து தானங்கள் வழங்கப்பட்டன.
"சக்கரவர்த்தித்  திருமகன்கள் நால்வரும் சிரஞ்சீவியாக இருக்கட்டும்" என வாழ்த்தி அழகான ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர்.
ஆனந்தமாக பெரிய பெரிய முரசுகளை வாசித்தனர்.
எல்லோரும் இந்த செய்தியைக்கேட்டு தங்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
ராமரின் ஜன்மபூமி அயோத்யா அழகான நகரம்.
அன்பான நகரத்தில் அன்பு கூடியதால் மேலும் மெருகு கூடியது.
கொடிகள்,பதாகைகள்,திரைகள்,அழகான சாமரங்கள்
கடைத்தெருவில் அதிகமாகக் காணப்பட்டன.
தங்க கலசம், தோரணங்கள், மணிகள் கட்டிய அலங்காரத் திரைசீலைகள் ,மஞ்சள், துபங்கள் ,தயிர் ,அக்ஷதைகள் ,
மாலைகள் முதலியவைகளால்  வீடுகள் அலங்கரிக்கப்பட்டு
மங்களமயமாக்கப்பட்டன.
சந்தனம் , கஸ்தூரி,கேசர், கற்பூரம் கலந்த நான்கு ரசப்பொருளால்  தெருக்கள் மணந்தன.
    மின்னல் போன்று ஒளிமிக்க ,
 நிலவுமுகம் கொண்ட ,
மான்குட்டிகளின் விழிகள்  கொண்ட ,
தன்  அதிக அழகால்
மன்மதனின் மனைவியே நாணம்
 அடையும்படியான அழகு  மிக்க
சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து மங்களப் பாடல்கள் பாடினர்.

அரண்மனை அழகு உலகமே மோகிக்கும் அளவுக்கு இருந்தது.
அனேகவித அழகான மங்கலப் பொருட்கள்  அழகை
அதிகப்படுத்திக்கொண்டிருந்தன.
அநேக முரசுகள் முழங்கப்பட்டன.
பாட் பாடகர்கள் குலப்பெருமைக்கான பாடல்கள் பாடினர்.
அந்தணர்கள் வேதங்களை முழங்கினர்.
அழகான பெண்கள் ரமாருடைய சீதையினுடைய அழகையும்
குணத்தையும் புகழ்ந்து பாடினர்.
அங்கு நாலாபக்கங்களிலும்  ஆனந்தம் பெருக்கெடுத்தது.
  தேவர்களின் சிரோமணியான
 ராமர் அவதாரமெடுத்த
அந்த தசரதரின்  அரண்மனை அழகை
  வர்ணிக்க முடியுமா ?

ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி எழுபத்தேழு

 ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி  எழுபத்தேழு

               ஜனகரின் தூதர்கள் ஸ்ரீ ராமச்சந்திரரின் பவித்திர நகரமான   அயோத்தியாவை அடைந்தனர். அழகான நகரைப் பார்த்து மகிழ்ந்தனர். அரண்மனை நுழைவாயில் சென்று தாங்கள் வந்த செய்தியை அனுப்பினர், அரசர் கேட்டு உடனே அவரை அழைத்துவரச் சொன்னார்.
          தூதர்கள் வணங்கி கடிதத்தைக்  கொடுத்தனர்.
மகிழ்ச்சி அடைந்து அரசர் கடிதத்தைத் தாமே வாங்கினார்.
கடிதத்தைப் பிரிக்கும் போதே அவர்களில் அன்பும் ஆனந்தக்கண்ணீரும் பெருக்கெடுத்தன.
உடல் மகிழ்ந்தது.
 உள்ளம் மகிழ்ச்சியால் குதுகூலம் அடைந்தது.
இதயத்தில் ராமர் -லக்ஷ்மணர் இருவரும் .
கையில் அழகான கடிதம் ,  இனிப்பு -புளிப்பாக எதுவும் சொல்லமுடியவில்லை. பிறகு தைரியத்தை வரவழைத்து
தைரியமாக கடிதத்தைப் படித்தார். அந்த செய்தி கேட்டு அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
கடிதம் மூலம் வந்த செய்தி அறிந்து  பரதனும். சத்துருக்கனனும்  மகிழ்ந்தனர்,
 விளையாடிக்கொண்டிருந்த பரதனும் லக்ஷ்மணரும்  அங்கே வந்தனர்.
 அப்பாவிடம் , "கடிதம் எங்கிருந்துவந்துள்ளது?இரண்டு சகோதரர்களும் நலமா ?எந்த நாட்டில் உள்ளனர்?
 இந்த அன்புநிறைந்த வினாக்களைக் கேட்டு
தசரதர் மீண்டும் ஒருமுறை கடிதத்தைப் படித்தார்.
   இதைக்கேட்டு பரதனின் அளவில்லா மகிழ்ச்சியால்

சபையே மிக ஆனந்தமடைந்தது .

  அரசர் ராஜதூதர்களை அருகில் அமரவைத்து ,
" சொல்லுங்கள் ! இரண்டு குழந்தைகளும் நலமா ?
நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்களா ?
அவர்களில் ஒருவர் கருப்பு , மற்றவர் சிவப்பு.
தனுஷும் வில்லும் கையில் வைத்திருப்பார்கள்.
அம்பராத்தூண் முதகில் இருக்கும்.
முனி விஷ்வாமித்தரருடன் சென்றனர்.
நீங்கள் அவர்களை அறிந்திருந்தால் சொல்லுங்கள்.
அவர்கள் சென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு
இன்றுதான்  நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்.
மகாராஜா ஜனகருக்கு  அவர்களுடைய அறிமுகம் எப்படி ?
யாரால் நடந்தது. ?
ஜனகர் அவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்?

ஜனகரின் இந்த அன்பான விசாரணையால் ,
தூதர்கள் மகிழ்ந்து    , அரசர்களின்   மகுடமணியே! உங்களுடைய புத்திரர்கள் இருவரும் உலகின் ஆபூஷன்கள்.
ராம-லக்ஷ்மணனைப்போல  புத்திரர்களைப் பெற்றதால்,
நீங்கள் பாக்யவான் . உங்களுடைய பையன்கள் ஆண் சிங்கங்கள். மூவுலகிலும் பிரகாஷிப்பவர்கள்.
அவர்களின் புகழுக்கு முன் நிலவி
மங்கிகாணப் படுகிறது.
அவர்களின் திறமை ,மகிமைக்கு முன்னாள் சூரியன் குளிர்ந்து    தோன்றுகிறது .
அரசே !அவர்களை எப்படி அறிந்தீர்கள் ?
என்று வினவுகிறீர்கள்.
சூரியனை விளக்குவைத்தா பார்ப்பார்கள் ?
சீதையின்  சுயம் வரத்திற்கு அநேக அரசர்களும் ,
ஒருவரைவிட ஒருவர்  சிறந்த வீரர்களும் வந்திருந்தனர்.

ஆனால் யாராலும் சிவதனுஷை
நகற்றக்கூடமுடியவில்லை.
அதிக பலமுள்ள வீரர்களும் தோற்றுவிட்டனர்.
மூவுலகத்திலும் , வீரத்திற்குப் புகழ்பெற்ற அகங்காரிகளும் ,
சிவதனுஷின் சக்திக்கு முன் தோற்றுவிட்டனர்.

     சுமேரு மலையையே தூக்கும் சக்திகொண்ட ,
பானாசூரனும் தோற்று வில்லை சுற்றிவந்தான்.
விளையாட்டாக கைலாசத்தையே தூக்கிய ,
ராவணனும் தொல்வியடைந்துவிட்டான்.

ஆனால் மகாராஜா! தங்கள் ரகுவம்ச சிரோமணி ராமச்சந்திரன்  முயற்சியே இன்றி  ,
யானை தாமரைதண்டை முறிப்பதுபோல்
சிவனின் வில்லை
 முறித்தே விட்டான்.
வில்லை முறித்த செய்தி கேட்டு
பரசுராமர் அதிக கோபத்துடன் வந்தார்.
பல விதத்தில்  தன்  கோபத்தை வெளியிட்டார்.
இறுதியில் ராமரின் வலிமை அறிந்து தன்
வில்லையே ராமருக்கு அளித்துவிட்டார்.
 உங்கள் இரண்டு பாலகர்களையும்  பார்த்த பிறகு ,
பார்த்தவர்கள் கண்களை  இமைக்கவில்லை.

அன்பும் ,பெருமையும் வீரமும் உள்ள புதல்வர்களின்
 ஆற்றலைக்கேட்டு  எல்லோருக்கும்
 மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.
தூதர்களை அனுப்பும்  மரியாதைகண்டு
தூதர்கள்  இது நீதிக்குப் புறம்பானது.
என்ற தர்மமான பேச்சைக் கேட்டு
எல்லோரும் மகிழ்ந்தனர்.
 பின்னர் அரசர் வசிஷ்டரைப் பார்த்து
அந்த கடிதத்தைக் கொடுத்தார்.
மரியாதையுடன்  சொன்னார்
 எல்லா செய்தியும்  சொன்னார்.
எல்லா கதையையும் கேட்டு குரு சொன்னார் --"புண்ணியாத்மாக்களுக்கு
 பூமி சுகம் நிறைந்து காணப்படுகிறது.
நதிகள் சமுத்திரத்தை நோக்கி ஓடுகிறது.
ஆனால்  சமுத்திரத்திற்கு , நதியின் மேல் எந்த ஆசையும் இல்லை.
 அப்படியே   தர்மாத்மாக்களுக்கு  புகழும் செல்வமும்   இயற்கையாகத்  தானாகவே வந்துவிடும் .
 நீ எப்படி குரு , அந்தணர்கள், பசுக்கள் மற்றும் தேவதைகளுக்குச் சேவை  செய்கிறாயோ ,
அப்படியே கௌசல்யா தேவியும்   சேவை செய்கிறார்.

உன்னைப்போன்ற   புண்ணிய  ஆத்மாக்கள் இருந்ததில்லை ;
இப்பொழுது இல்லை , எதிர்காலத்திலும்  இருக்கமாட்டார்கள்.  ராமனைப் போன்ற மகனைப்பெற்ற புண்ணிய ஆத்மா தங்களைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள் ?
உங்களுடைய  நான்கு பாலகர்களும் வீரர்கள் ,
குண முள்ளவர்கள், பணிவானவர்கள் , தர்மத்தை விரதமாகக்
கொண்டவர்கள்,குணக்கடல். உனக்கு எல்லா காலங்களிலும்
நன்மை அளிப்பவர்கள். அதனால் இப்பொழுது மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய். சீக்கிரமாகச் செல்.
 குருவின் வார்தகளைக்கேட்டு  வணங்கி அப்படியே ஆகட்டும் என்றார்.
  அந்தப்புரம் சென்று ராணிகளுக்கு ஜனகரின்  கடிதச்செய்தியை அரசர் சொன்னார் .
ராணி கள்   மயில்கள்  கருமேகம் கண்டு  ,
மேக கர்ஜனை  கேட்டு மகிழ்வதுபோல்  மகிழ்ந்தனர்.
வயனா பெண்கள் ஆசிகள் வழங்கினர்.




 

Monday, February 13, 2017

राचारित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தாறு

राचारित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தாறு

  நகரங்களை அலங்கரிக்க  நீலமணியை எடுத்து அழகான மா இலைகள் செய்யப்பட்டன. தங்கத்திலேயே மாம்பூக்கள்,

பட்டுக்கயிற்றினால் கட்டப்பட்ட
விலைஉயர்ந்த கற்களால் செய்யப்பட்ட
பழக்கொத்துக்கள்,அழகான தோரணங்கள் ,
காமதேவனின் வலைகள் அலங்கரிக்கப்பட்டது   போல் இருந்தது. அநேக மங்கள கலசங்கள், அழகான கொடிகள்,
பதாகைகள், திரைச்சீலைகள், சாமரங்கள் இவை எல்லாமே
மிக கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்டன,
  மணி விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட  மண்டபம் மிக
அதிசயமாக இருந்தது. அந்த மண்டபத்தில் மணமகள் சீதை .
வர்ணிக்கின்ற அளவிற்கு ஞானம் கவிஞர்களுக்கு இல்லை.
அதே மண்டபத்தில் குணக் கடலான ஸ்ரீ ராமச்சன்திரர் மணமகன் . அப்படிப்பட்ட மண்டபம் மூவுலகங்களிலும்
புகழ்  பெற்றதாகத்தான் இருக்கவேண்டும்.
ஜனகரின் அரண்மனைக்கு இணையாக அழாகாக ஒவ்வொருவீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஜனகபுரியின் அழகுக்கு  ஈடாக   பதினான்கு லோகங்களிலும்
எந்த   நகரமும்  இல்லை.  அந்த அழகில்  இந்திரனும் மயங்கிவிடுவான்.
 சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே பெண்ணாக உருவெடுத்து ,
வசிக்கும் நகரத்தின் அழகைசரஸ்வதி தேவியாலும் சேஷனாலும்  கூட   வர்ணிக்க முடியாது.




Sunday, February 12, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தைந்து

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்தைந்து

  ராமர் பணிவாக பேசினாலும் ,
பரசுராமரின் கோபம் தணியவில்லை.
ராமா!என் கோபம் எப்படி போகும் ?
இப்பொழுதும் உன் தம்பி என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. என்னுடைய கோடரியால் அவன் தலையை வெட்டாமல்
என்  மனம் அமைதி அடையாது.
என்னுடைய கோடரியின்  பயங்கர செயல்களைக் கேட்டு ,
ராணிகளின் கர்ப்பங்கள் கலைந்துவிடும் .
அந்த கோடரியைக் கையில் எடுத்து ,
கோபத்தை  காட்டி என்ன  பயன் ?
சிரம் வெட்ட கரத்தின் வேகம் தணிந்துவிட்டது.
ஆனால் கோபத்தால் நெஞ்சு எரிகிறது.
என்னுடைய குணம் மாறிவிட்டது.
என் மனத்தில் இந்த தயை எப்படி வந்தது?
 இப்பொழுது  இரக்கம் சகிக்க முடியா துன்பத்தை
சஹித்துக்கொண்டிருக்கிறது.
ராமா  உங்களுடைய உருவத்திற்கு  ஏற்ற
கிருபை , உங்கள் பேச்சின் மேன்மை பூக்கள் உதிர்வது போல் .
கிருபை காட்டுவதால் உங்கள் உடல் எரிகிறதென்றால்
கோபம் வந்தால் தான் நம்முடலைக் கடவுளே காப்பாற்றுவார்
என்று லக்ஷ்மன் கூற மீண்டும் பரசுராமருக்கு கோபம் வந்து
இவனின் தலையை வெட்டிவிடுவேன்.இவன் பணிவில்லாதவன்.பண்பில்லாதவன்.
ராமா! நீ  சிவதுரோகி, சிவனின் வில்லை உடைத்து விட்டு
எனக்கே உபதேசம் செய்கிறாய் .
உன் தம்பி உன்னுடைய ஆதரவாலும் சம்மதத்தாலும்  தான் இப்படி பேசுகிறான்.
என்னுடன் நீ போருக்குவந்து  வெற்றிகொள்.
இல்லையென்றால் உன்பெயரை விட்டுவிடு.
 ராமர் சிரித்துக்கொண்டார்.
தம்பி செய்த தவறு,
முனிவர் தன்  கோபத்தை என் மீது
காட்டுகிறார்.
கோபமுள்ளவனை  யாராவது வணங்குவார்களா ?
நிலவை ராஹு கூட தீண்டுவதில்லை.  இவ்வாறு எண்ணிக்கொண்டே ,
முனிவரிடம் வெளிப்படையாக ---
"தாங்கள் தங்கள் கோபத்தை விட்டுவிடுங்கள்.
தங்கள் கையில் கோடரி  உள்ளது.
என்தலை உங்களுக்குமுன்னால் .
உங்கள் கோபம் தணிய
உங்கள் செயலைச் செய்யுங்கள்.
நீங்கள் சுவாமி ,நான் தொண்டன். சுவாமிக்கும் தொண்டனுக்கும்  போர் நடக்குமா ?

மேன்மைமிக்க அந்தணரே!
கோபத்தை விட்டுவிடுங்கள்.
உங்களுடைய தோற்றம்  கையில் வில் அம்பு ,கோடரி போன்றவைகள்  ஆகியவற்றைப்
பார்த்துதான் பாலகன் எதோ பேசிவிட்டான்.
 அவனுடைய தவறு எதுவும் இல்லை.
அவனுக்கு தங்கள் பெயர் தெரியும் , ஆனால்
உங்களை அவன் அறியவில்லை.
தன் ரகுகுல பழக்கவழக்கப்படி
அவன் தங்களுடன் பேசியிருக்கிறான்.
நீங்கள் முனிவரின் தோற்றத்திலேயே வந்திருந்தால்
உங்களுடைய பாதங்களில் தலைவைத்து வணங்கி இருப்பான்.
தெரியாததால் தவறு செய்துவிட்டான்.
மன்னிக்க  வேண்டும்.
அந்தணர் மனதில் அதிகமாக தயை  இருக்கவேண்டும்.
 நாங்களும் தாங்களும் சமமாக முடியுமா ?
கால் எங்கே? தலை எங்கே?
என்னுடைய ராமா என்ற பெயர்  சிறியது.
உங்கள் பெயர் கோடரியுடன் சேர்ந்து பெரியது.
தேவரீர்! எங்களுடைய ஒரே குணம் வில் மட்டுமே.
தங்களிடம் நவநிதியான குணங்கள் உள்ளன.
அமைதி, தண்டனை,தவம், தூய்மை, மன்னிப்பு, எளிமை,
ஞானம் , அறிவியல் ஞானம், ஆஸ்தீகத்தன்மை  ஆகிய நவ குணங்களால்  உயர்ந்தவர் தாங்களே!
ஆனால் ராமர் அடிக்கடி பிரயோகித்த  முனிவரே!அந்தணரே!
என்ற சொற்களால் மீண்டும்
முனிவருக்கு  கோபம் அதிகமாகியது.
முனிவர் கோபமாக ,
"நீயும் உன் தம்பி போன்றே தான்  இருக்கிறாய்"  என்றார்.

நீ என்னை வெறும் அந்தணனாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறாய் .
நான் எப்படிப்பட்ட அந்தணன் என்பதைச் சொல்கிறேன்.
வில்  ஆரம்பம், பாணம் யாகப்பொருள் ,என் கோபம் மிக பயங்கர நெருப்பு. நான்குவகைப்படைகள் யாகத்தில் போடப்படும் சமித்துக்கள், பெரிய பெரிய அரசர்கள்
பலிகொடுக்கப்படும் மிருகங்கள்.பலி மிருகங்களைப் போல்
இவர்களை என் கோடரியால் வெட்டிப்போடுகிறேன்.
இப்படிப்பட்ட  கோடிக்கணக்கான ஜபத்துடன் கூடிய யாகங்கள் செய்துள்ளேன்.
ஸ்வாஹா!சொல்லுடன் அரசர்களின் பெயர்களை சேர்ப்பேன்.

என்னுடைய மகிமை அறியாமல் , என்னை அந்தணன் என்று
அவமதிக்கிறாய். வில்லை முறித்த தால் உனக்கு
தலைக்கனம் அதிகமாகிவிட்டது. உலகத்தையே வெற்றிகொண்ட அகங்காரம் வந்துவிட்டது.
ராமர் ,--"முனிவரே! உங்களது கோபம் மிகப்பெரியது,
                  எங்களுடைய தவறு மிகச் சிறியது. பழைய வில்.
                  தொட்டதும் உடைந்துவிட்டது.இதில்
                 என்னுடைய வீரம் ,ஆணவம் எதுவும் இல்லை". என்றார்.

பிருகுகுல திலகரே!  உண்மையிலேயே அந்தணர் என்று அவமதித்தால் ,  உலகத்தில் நாங்கள் தலை வணங்கும் வீரர்கள் வேறு யார் இருக்கிறார்கள்.
 எங்களுடன் போர் புரிய தேவர்கள், அரக்கர்கள், அரசர்கள்,
போர்வீரர்கள், பலத்தில் எங்களுக்கு சமமானவர்கள்
போருக்கு அழைத்தால் போரிடுவோம்.
காலனே வந்தாலும் போரிடுவோம்.
  க்ஷத்திரியனாகப் பிறந்து , போரிட பயந்தால் ,
அந்த நீசனால்  க்ஷத்திரிய  குலம் களங்கப்பட்டு விடும்.

   நான் எங்கள் குளத்தின் புகழுக்காக அல்ல , குலத்தின்இயற்கை குணத்தைச் சொல்கிறேன் ,
ரகு வம்சத்தைச் சேர்ந்தவன் எமனுடன் போர்புரியவும்
அஞ்சமாட்டான்.
உங்களிடம் அஞ்சுபவன் எல்லோரைக்காட்டிலும்
அச்சமின்றி வாழ்பவன் அதுதான் அந்தணர் குல மகிமை.
  ராமரின்  மென்மையான , ரகசிய பொருள் நிறைந்த
பேச்சால் பரசுராமரின்  அறிவுத் திரை விலகியது .
பரசுராமர் ராமரிடம் சொன்னார்,--
ராமா!லக்ஷ்மிபதியே!பரசுராமர் வில்லை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். என் ஐயங்கள் போகட்டும்.
பரசுராமர் வில் கொடுக்க எடுத்தபோதே
 வில் தானாகவே ராமரிடம் சென்றது.
பரசுராமர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அப்பொழுது அவருக்கு ராமரின் மஹிமை தெரிந்தது.
அவருடைய உடல் சிலிர்த்தது, ஆனந்தமடைந்தது.
அவர் இருகரம் கூப்பி , அன்பு ததும்ப  ராமரிடம் சொன்னார்."ரகுகுலம் என்ற தாமரைவனத்தின்  சூரியனே!
அரக்கர்கின் குலம்  என்ற அடர்ந்த காடுகளை
அளிக்க வந்த  அக்னியே!
நீங்கள் வாழ்க!
தேவர்கள், அந்தணர்கள், பசுமாடுகள்  ஆகியவற்றை
காப்பவரே!நன்மை செய்பவரே! நீங்கள் வாழ்க!
ஆணவம்,மோகம்,கோபம் ,பிரமை
ஆகியவற்றை போக்குகின்றவரே !
நீங்கள் வாழ்க!
பணிவு, ஒழுக்கம்,கிருபை முதலிய குணக்கடலே!
சொல்லின் செல்வரே!நீங்கள் வாழ்க!
தொண்டர்களுக்கு சுகமளிப்பவரே!
எல்லா அங்கங்களும் அழகும் காமதேவனின்
அழகை ஏற்றவரே!  நீங்கள்  வாழ்க!
நான் என் வாயால் எப்படிப் புகழ முடியும் ?
மகாதேவரின் மனம் என்ற மானசரோவரில் நீந்தும்
அன்னமே! தாங்கள் வாழ்க!
நான் அறியாமையால் தங்களிடம் தகாதவார்த்தைகளை
கூறியுள்ளேன்.
நீங்கள் இரண்டு சகோதரர்களும் மன்னிப்பின்
ஆலயமான இரண்டு சகோதரர்கள்.
என்னை மன்னித்துவிடுங்கள்.

ரகுகுலத்தின் பதாகை போன்ற ராமரே!
தாங்கள் வாழ்க !
இவ்வாறு பரசுராமர்  ராமரை  வாழ்த்திவிட்டு ,
காட்டிற்கு தவம் செய்ய சென்றுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியைக்கண்ட துஷ்ட அரசர்கள் அஞ்சி .
கோழைகள் போல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
பரசுராமரே தோல்வி அடைந்துவிட்டார். நான் அவமத்திதுவிட்டோமே  என்ற பயத்தால் ஓடிவிட்டனர்.

தேவர்கள் முரசொலி  எழுப்பினர். பூமாரி பொழிந்தனர்.
ஜனகபுரியின் ஆண்களும் பெண்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடைய அறியாமையால் ஏற்பட்ட பயம் நீங்கியது.
 மிகவும் அதிகமான  இசைக்கருவிகள் முழங்கின.
எல்லோரும் அழகான   மங்கள  அலங்காரம் செய்தனர்.
அழகான முகங்களும் இனிய குரல்வளமும் கொண்ட பெண்கள்   ஒன்றுசேர்ந்து குழுக்கள் அமைத்து பாடத் தொடங்கினர்.
ஜனகரின் மகிழ்ச்சி வர்ணனைக்குள்
அடங்காததாக இருந்தது.
பிறப்பிலேயே ஏழையாக இருந்தவனுக்கு புதையல் பொக்கிஷம்  கிடைத்தது போல் ஆனந்தமடைந்தார்.
சீதையின் பயம் போய்கொண்டே  இருந்தது.
நிலவைக்கண்ட சக்ரவாகப் பறவைபோல் மகிழ்ச்சி அடைந்தார்.
ஜனகர் விஷ்வாமித்திரரை வணங்கினார் .
உங்கள் கிருபையால் தான் ஜனகர் வில்லை ஒடித்தார் .
இரண்டு ச்கொதரகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.
நீங்கள் எது நல்லதோ அதைச் சொல்லுங்கள் என்றார்.

  முனிவர் சொன்னார் --வில்லை முரித்ததுமே விவாஹம் ஆகிவிட்டது. தேவர்கள், மனிதர்கள், நாகர்கள் எல்லோருக்குமே இது தெரியும் .
இருந்தபோதிலும் நீ உங்கள் குல வழக்கப்படி ,
அந்தணர்கள், வீட்டின் முதியோர், குரு  ஆகியோரிடம் கேட்டு  அவர்கள் சொற்படி நடந்துகொள் என்றார்.
  ராஜா தசரதருக்கு அழைப்பு விடுக்க தூதர்களை அனுப்பு.
சரி என்று ஜனகர் உடனே அயோத்தியாவிற்கு தூதர்களை அனுப்பினார் .
எல்லா பெரியவர்களையும் அழைத்தார்.
அனைவரும் வந்தி அரசரை வணங்கினர்.
கடைத்தெரு, சாலைகள், வீடுகள், தேவாலயங்கள்,
நகரங்களின் நான்கு புறங்களும் நன்கு அலங்கரிக்க ஆணையிட்டார்.
எல்லோரும் மகிழ்வுடன் சென்றனர்.
பிறகு அரசர் வேலைக்காரர்களை அழைத்து
விசித்திரமான மண்டபம் அமைக்க ஆணையிட்டார்.
மிகவும் திறமைமிக்க அணைந்து மண்டபம் அமைக்கும் தொழிலார்களை அழைத்தார்.
அந்தணர்களை வணங்கி
 காரியங்கள் செய்யத்தொடங்கினர் .
தங்கத்தாலான  வாழைமரத் தூண்கள் அமைக்கப்பட்டன.
பச்சை மணிகளால் நேரான முடிச்சுகளுடன் தொடுத்த
அழகான மணிகள் உண்மையான மாநிக்கம்போன்றே இருந்தன. தங்கத்தாலான வெற்றிலைக்கொடி ,இலைகளுடன் அசலா ,நகலா என்று தேயாதபடி மிளிர்ந்தன.
கலைநயம் மிகுந்த தோரணங்கள் அமைக்கப்பட்டன.
மாணிக்கம், நவரத்தினங்களுக்கும் வர்ணம் தீட்டி  தாமரை மலர்கள் செய்யப்பட்டன. வண்டுகள். பலவித வண்ணங்களின்  பறவைகள்,  செய்யப்பட்டன. அவைகள் காற்றின்  வேகத்தால்  அந்த அந்த
பறவைகளுக்கு ஏற்றபடி ஒலிகளை எழுப்பின.
தொங்கலில் தேவதைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எல்லா தேவதை  மூர்த்திகளும்  மங்கள திரைவங்கள் பொடிகள் ஏந்தி நின்றன.
யானை  முத்துக்கள்  மிகவும் அழகாக இருந்தன.

Wednesday, February 8, 2017

रामचरित मानस --बालखांड-ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்திநான்கு

  रामचरित मानस --बालखांड-
ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்திநான்கு
                                      
ராமரின் சொல்லைக்கேட்டு  
பரசுராமர் கோபத்துடன்
     சொன்னார் ---
"அரசே! சிவதனுஷை உடைத்தவன்
உங்கள் தாசனே ஆவான்.
என்னிடம் ஏன் சொல்லவில்லை.
சேவை செய்பவன் தான் சேவகன்.
எதிரியின் வேலையைச்
செய்தால்,
சண்டைதான் போடவேண்டும்.
இந்த சிவதனுஷை முறித்தவன் ,
சஹஸ்ரபாஹுவைப் போன்று என் விரோதிதான்.
அவன் இந்த சமுதாயத்தை விட்டுவிட்டு
 தனியாக இருக்கவேண்டும்.
இல்லை எனில் அனைத்து அரசர்களும்
கொல்லப்படுவார்கள்.
முனி இவ்வாறு சொல்வதைக் கேட்டு ,
லக்ஷ்மணன் புன்முறுவல் பூத்து ,
பரசுராமரை அவமத்தித்துச் சொன்னான்--
" கோசாயீ!குழந்தைப்பருவத்திலேயே
நாங்கள் பல  விளையாட்டு வில்லுகளை உடைத்துவிட்டோம்.
ஆனால் நீங்கள் இவ்வாறு கோபிக்கவில்லை. 
இந்த வில்லின் மேல் இவ்வளவு அன்பு ஏன்?
இதைக் கேட்டு  பரசுராமர்  சொன்னார் ---
அடே !அரசகுமாரா!
நீ எமனின் வசத்தில் இருப்பதால் ,
நீ சுய அறிவின்றி பேசுகிறாய்.
உலகப்  புகழ்பெற்ற  சிவனின் இந்த வில்
விளையாட்டு வில் போன்றதா ?

லக்ஷ்மணன் சிரித்துவிட்டு சொன்னார்--தேவே!
நாங்கள் அறிந்தமட்டும் எல்லா வில்லும் ஒன்றே!
பழைய வில்லை உடைப்பதால் ,
என்ன  லாபம் ?ஸ்ரீ ராமர் இதை நவீனமான வில் என்றே பார்த்தார் . ஆனால் இது ராமர்
 தொட்டதுமே உடைந்துவிட்டது.
இதில்  ராமரின் தவறு  எதுவும் இல்லை.
முனிவரே! நீங்கள் காரணமின்றி ஏன்
கோபமடைகிறீர்கள் ?
பரசுராமர் தன்  கையிலுள்ள
 கோடரியைப்  பார்த்துவிட்டு ,
அடே! துஷ்டா!உனக்கு என் குணம் தெரியாதா ?
நான் உன்னை பாலகன் என்றறிந்து,
கொல்லாமல் இருக்கிறேன். அடே முட்டாளே!
நீ என்னை ஒன்றுமறியாத முனிவர் என்றா நினைத்தாய் ?
நான் பாலபிரம்மச்சாரி !
மிகவும்  கோபமுள்ளவன் .
நான் க்ஷத்திரிய குல விரோதி என்று
உலகப் புகழ் பெற்றவன்.
என் புஜ பலத்தால்  புவியில்
அரசர்களே இல்லாமல் செய்துவிட்டேன்.
அந்த ராஜ்யங்களை பிராமணர்களுக்கு
 கொடுத்துவிட்டேன்.
அரசகுமாரா!சஹஸ்ரபாஹுவின்  புஜங்களை
வெட்டுகின்ற இந்த கோடரியைப் பார்.
அடே!ராஜகுமாரா!என்னுடைய
இந்த கோடரி  பயங்கரமானது.
இது  கர்பத்தில் உள்ள சிசுவையும்
கொல்லும்  சக்திவாய்ந்தது.
லக்ஷ்மணன் சிரித்து மென்மையான
குரலில் சொன்னார் ---
"நீங்கள் உங்களை பெரிய போர்வீரர்
 என நினைக்கிறீர்கள்.
அடிக்கடி கோடரியைக் காட்டுகிறீர்கள்.
வாயில் ஊதி மலையை
பறக்கவைக்க  நினைக்கிறீர்கள்.
இங்கு யாரும் பூசணிக்காய் கிடையாது.
ஆள்காட்டி விரல் காட்டியதும் ,
இறந்துவிடுகிறது.
கோடரியும் அம்பும்வில்லும் பார்த்து
நான் சற்று அபிமானத்துடன் சொன்னேன்.
 நீங்கள் பிருகு முனிவர் வம்சத்தைச் சேர்ந்தவர் ,
மற்றும் பூணூல் அணிந்துள்ளீர்கள்.
இதை எல்லாம் நான் பார்த்து என் கோபத்தை
அடக்கிக்கொண்டு பொறுத்துக்கொள்கிறேன்.
எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் ,
தேவதைகள், பிராமணர்கள் ,பகவானின் பக்தர்கள்,
பசுமாடுகள் ஆகியவர்களிடம் தன்
வீரத்தைக் காட்டமாட்டார்கள்.
ஏனென்றால் இவர்களைக் கொல்லுவதால்,
பாவம் ஏற்படுகிறது.
இவர்களிடம் தோற்றால்  இழுக்கு ஏற்படுகிறது.
ஆகையால் நீங்கள் அடித்தாலும்
உங்கள் காலில் விழவேண்டும் .
உங்களின் ஒவ்வொரு சொல்லும் கோடி இடிக்கு சமம்.
வில்லும் அம்பும் நீங்கள் வைத்திருப்பது வீண்தான்.
உங்கள் கையில் கோடரியும்
அம்பு-வில்லும் பார்த்து
ஏதாவது தவறாகச் சொல்லிருந்தால் ,
என்னை மன்னித்துவிடுங்கள்.

இதைக்கேட்டதும்  பிருகு முனியின்
வம்சத்தைச் சேர்ந்த பரசுராமர் கோபத்துடன்
கம்பீரமான குரலில்  சொன்னார் ---
"விஸ்வாமித்திரரே  கேளுங்கள் ! இந்தபாலகன்
கெடுமதி உடையவன் . கபடன்.
காலத்தின் வசத்தால் , இவன் தன்
 குலத்தின்  துரோகி. இவன் சூரிய வம்சம் என்ற
முழுநிலவின்  களங்கம் . இவன் முற்றிலும் முட்டாள்,
அச்சமற்றவன். அடங்காதவன் .
இப்பொழுது ஒரே நொடியில் எமனுக்கு
 கவளமாகிவிடுவான்.
நான் உங்களை அழைத்துச் சொல்கிறேன் .
என் மேல் குறை சொல்லாதீர்கள்.
 இவனைக் காப்பாற்ற   விரும்பினால் ,
என்னுடைய பெருமை ,பலம் ,கோபம் ஆகியவற்றை
சொல்லி தடுத்துவிடுங்கள்.
 உடனே ,லக்ஷ்மணன் ,
முனிவரே!உங்கள் நற்புகழை
உங்களைத்தவிர , மற்றவர்கள் எப்படி ,
யார்  வர்ணிக்க  முடியும்?
நீங்கள் உங்கள் செயல்களை ,
தங்கள் வாயாலேயே பலமுறை பலவிதமாக
வர்ணனை செய்திருக்கிறீர்கள் .
உங்களுக்கு திருப்தி  இல்லை  என்றால் ,
மீண்டும் ஏதாவது சொல்லுங்கள்.
நீங்கள் வீரத்தின் விரதம் செய்பவர்.
தைரியவான்.அமைதியானவர்.
 திட்டுவது அழகாகாது.
சூரவீரரர்கள் போர்க்களத்தில்
போர் புரிவார்கள்.
தன் புகழைப் புகழ்ந்து கொண்டு
இருக்கமாட்டார்கள்.
விரோதியை போர்க்களத்தில்  பார்த்து
கோழைகள் தான் தன் பெருமையை
தற்புகழ்ச்சி செய்து கொண்டிருப்பார்கள் .
நீங்கள் காலனை  உரக்க எனக்காக அழைக்கிறீர்கள்.
லக்ஷ்மணனின் சொற்களைக் கேட்டதுமே,
பரசுராமர், தன் பயங்கரமான கோடரியை கையில் எடுத்துக்கொண்டார்.
பிறகு சொன்னார் --
"நீங்கள் என்னை குறை சொல்லாதீர்கள்.
இந்த கசப்பான வார்த்தைகள் பேசும்
பாலகன் கொல்லத்தகுதியானவன்.
இவனை பாலகன் என்று
 நினைத்து மிகவும் காப்பாற்றினேன்.
ஆனால் இவன் உண்மையிலேயே
சாவதற்கு வந்துவிட்டான்.
அப்பொழுது விஷ்வாமித்திரர் சொன்னார்---
குற்றத்தை மன்னித்துவிடுங்கள்.
பாலகனின் குற்றத்தை குணத்தை ,
சாதுக்கள் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
பரசுராமர்  சொன்னார் --இந்த கூர்மையான
கோடரி ,நான் இரக்கமற்றவன்.
கோபக்காரன். இவன் குரு துரோகி.
எனக்கு முன் இவன் குற்றவாளி .
எனக்கு பதில் பேசுகிறான்.
விஸ்வாமித்திரரே!
உங்களுக்காக இவனை உயிருடன் விடுகிறேன்.
உங்களின் மேல் உள்ள என் அன்பு தடுத்துக்கொண்டிருக்கிறது.
இல்லை என்றால் இவனை கோடரியால் வெட்டி ,
என் குருவின் கடனிலிருந்து விடுபட்டுவிடுவேன்.

விஸ்வாமித்திரர் மனதில் நினைத்தார் --
இவர் எல்லா இடத்திலும் வெற்றி  பெற்றதால்
ஸ்ரீ ராமரையும் லக்ஷ்மணனையும்
சாதாரண க்ஷத்ரியனாக நினைக்கிறார்.
ஆனால் இவர்கள் இரும்பினால்  செய்த
வாள் போன்றவர்கள்.
கரும்புத் துண்டு கிடையாது.
பரசுராமர் இன்னும்
 புரியாதவராக இருக்கிறார்.
இவர்களின் மகிமையை
அறியாதவராக இருக்கிறார்.

லக்ஷ்மணன் மீண்டும் சொல்கிறார் :--
ரிஷி அவர்களே !உங்கள் ஒழுக்கத்தைப்
பற்றி தெரியாதவர்கள்  உண்டா ?
நீங்கள் உலகப் புகழ் பெற்றவர்.
நீங்கள் பெற்றோர்களின் கடனை
 நன்றாக முடித்துள்ளீர்கள்.
இப்பொழுது குருவின் கடன் உள்ளது.
மனதில் மிகவும் கவலையாக உள்ளது. அந்தகடன் தீர்ப்பது எங்கள் தலையில் சுமத்தியுள்ளார்
நீண்ட நாட்கள் முடிந்துவிட்டன.
அதனால் வட்டியும் அதிகரித்திருக்கும்.
இப்பொழுது கணக்கரை
அழைத்தால் உடனே பையிலிருந்து எடுத்துக் கொடுத்துவிடுவேன்.
லக்ஷ்மணனின் கசப்பான வார்த்தைகளைக்கேட்டு
பரசுராமர் தன கோடரியை எடுத்தார்.
சபையில் உள்ளோர் அபயக்குரல் எழுப்பினர்.
லக்ஷ்மணன் சொன்னான் --நீங்கள்
அந்தணர் என்பதால் பேசாமல் இருக்கிறேன்.
உங்களுக்கு இன்றுவரை போரின்
 மஹாவீரர்கள் கிடைக்கவில்லை.
பிராமண தேவரீர்!
நீங்கள் வீட்டில் தான் பெரியவர்.
இதைக்கேட்டு அனைவரும்
இப்படி சொல்வது சரியில்லை என்று
 எல்லோரும் சொன்னார்கள்.
அப்பொழுது ஸ்ரீ ராமர் தம்பியைத் தடுத்தார்.
அவர் சொன்னார்--தலைவரே!
பாலகன் மேல் தயை காட்டுங்கள்.
இந்த எளிய பால்முகம் மாறா
 இந்த சிறுவனின்  கோபப்படாதீர்கள்.
இவன் உங்களுடைய மகிமையை அறியாதவன்.
இவன் எப்படி உங்களுக்கு சமமானவன் ஆவான்?.
பாலகன் சஞ்சலமானவனாக  இருந்தால்,
குரு,பெற்றோர்கள் மனதில் ஆனந்தப்படுவார்கள்.
அதனால் இவனை சின்ன குழந்தைஎன்றும்
தங்கள் சேவகன்  என்றும் கிருபை காட்டுங்கள்.
நீங்கள் எல்லோரையும் சமமாகக் கருதுபவர்.
நல்லொழுக்கம்  உடையவர், ஞானி. முனிவர்.
ராமரின் பேச்சால் பரசுராமர் கோபம் தணிந்தது.
மனம் குளிர்ந்தது. இதற்குள்
லக்ஷ்மணன் சிரித்துவிட்டான்.
சிரித்ததுமே உச்சிமுதல் பாதம் வரை
கோபம் கொப்பளித்தது.
ராமா! உன்னுடைய தம்பி ,பெரிய பாவி.
இவன் உடல் வெள்ளை. ஆனால் மனம் கருப்பு.
இவன் விஷ முகம் உடையவன்.
பால்முகம் கிடையாது.
குணம் சரிகிடையாது.
உங்களை பின்பற்றுவதில்லை .
இவன் மிகவும் நீசன்,என்னை
 எமன்போன்று பார்க்கவில்லை.
லக்ஷ்மணன் சிரித்துவிட்டு சொன்னான்---
முனிவரே!கோபம்  பாவத்திற்கு ஆணிவேர்!
கோபத்தின் காரணமாக தகுதி அற்ற
செயல்  செய்துவிடுகிறார்கள்.
உலகம் முழுவதற்கும்
தீமையைச் செய்துவிடுகிறார்கள்.
முனிவரே! நான் உங்களுக்கு அடிமை.
இப்பொழுது கோபத்தை விட்டுவிட்டு ,
இரக்கம் காட்டுங்கள்.
உடைந்த வில் கோபத்தால்
ஒட்டாது. நின்றுகொண்டிருந்தால்
கால் வலிக்கும். அமருங்கள்.
இந்த வில் மிகவும் உங்களுக்குப்
பிரியமானால், ஒரு நல்ல தொழிலாளியை அழைத்து
சரிசெய்யுங்கள்.
லக்ஷ்மணன் பேசுவதைக்கேட்டு ,
ஜனகர் பயந்து , பேசாமல் இரு என்றார்.
இப்படி முறையற்றுப் பேசாதீர்கள்.
ஜனகபுரியில் உள்ள
 ஆண்களும் பெண்களும் நடுங்கினர்.
மனதில் இந்த சின்ன ராஜகுமாரன்
சரியில்லை என்றனர்.
லக்ஷ்மணனின் அச்சமற்ற வார்த்தைகளால்,
பரசுராமருக்கு, கோபம் அதிகரித்தது.ஆனால்
அவரின் பலம் குறைந்து கொண்டிருந்தது,

ராமரிடம் நன்றியுணர்வுடன்  பரசுராமர் சொன்னார் --
"உங்கள் தம்பி என்பதால் இவன் உயிருடன் இருக்கிறான்.
இவன் உடலழகன்.ஆனால் மனம் அழுக்கானது.
இவன் விஷம்  நிறைந்த தங்கக் குடம்.
இதைக்கேட்டதும் லக்ஷ்மணன் மீண்டும் சிரித்தார்.
அப்பொழுது ஸ்ரீ ராமர் ஓரக்கண்ணால்
அவனைப் பார்த்தார்.
லக்ஷ்மணன் எதிர்த்துப் பேசாமல்
குருவிடம் சென்றுவிட்டான்.
ஸ்ரீ ராமர் இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன்
மென்மையான  ,சாந்தமான சொற்களைப்  பயன்படுத்தினார்.
தலைவரே!நீங்கள் குணத்தால் நல்லவர்.
நீங்கள் பாலகனின் பேச்சை
 கேட்காததுபோல் இருங்கள்.
உயர்ந்த குரலில் பேசுவது
 பாலகனின்  இயற்கை குணம்.
நல்லவர்கள் குறை ஒன்றும்
 சொல்லமாட்டார்கள்.
லக்ஷ்மணன் எதுவும் தவறு செய்யவில்லை.
தவறு செய்தது நான் தான்.
ஆகையால் கோபம் ,வதம் கட்டுதல் எதிருந்தாலும்
எனக்குக் கொடுங்கள். உங்கள் கோபம் எதனால்
 விரைவில்  தணியுமோ ,
அதை என்னிடம் தணித்துக்கொள்ளுங்கள் .





















Tuesday, February 7, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் எழுபத்தி மூன்று --துளசிதாஸ்


ராமசரிதமானஸ் -பாலகாண்டம்
 எழுபத்தி  மூன்று --                துளசிதாஸ் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீதை ஸ்ரீ ராமருக்கு  வரமாலை அணிந்த பின்னும் சீதையைப்பார்த்து சில மன்னர்களுக்கு ஆசை உண்டாகியது.
அவர்கள் துஷ்டர்கள். 
கெட்ட புத்திரர்கள்,
 முட்டாள் அரசர்கள்.
அவர்கள் மனதில் மிகவும்
கோபம் கொண்டனர்.
அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.
அவர்கள் எழுந்து தற்புகழ்ச்சி பேசி
உளற ஆரம்பித்தனர்.
சிலர் கத்தினர் --
"சீதையை எடுத்துக்கொண்டு ,
இரண்டு  அரசகுமாரர்களையும் கட்டி வையுங்கள்.
வில் முறித்ததால் மட்டும்
 அவர்கள் ஆசை நிறைவேறாது.
நாம் உயிருடன் இருக்கும் வரை சீதையை எப்படி
அவர்கள் மணக்க முடியும்.
போர் புரிந்து  இரண்டு சகோதரர்களுடன்
ஜனகரையும் தோற்கடித்து வென்றுவிடுங்கள்.
சாதுவான அரசர்கள் சொன்னார்கள் ---
"இந்த ராஜசபையில் நடப்பதைப் பார்த்து
நாணமே நாணிக் குனிகிறது. "
உங்களுடைய பலம் ,வீரம், பெருமை,பிரதாபம் ,
கௌரவம் எல்லாமே வில்லோடு சென்றுவிட்டது.
அந்த வீரம் போய்விட்டது. 
மீண்டும் எப்படி வந்தது?
இந்த துஷ்டத்தனமான  அறிவால்  தான்,
உங்கள் முகத்தில் பகவான்  களங்கம் ஏற்படுத்தி விட்டார்.
பொறாமை,கர்வம்,கோபம் அனைத்தையும்
விட்டுவிட்டு ஸ்ரீ ராமரை பாருங்கள்.
லக்ஷ்மணனின் கோபம் என்ற நெருப்பில் விழும் விளக்குப்பூச்சி ஆகி மாண்டுவிடாதீர்கள்.

சிலவற்றை விரும்பினாலும் பெற முடியாது.
இறைவன் படைப்பு அப்படி.
கருடனின் வேகத்தை காகம் பெற முடியாது.
சிங்கத்தை போன்று முயல் ஆக முடியாது.
காரணமின்றியே கோபப்படுபவன்
நலம் பெற முடியாது.
சிவபகவானை விரோதித்து ,
எல்லாவித செல்வங்களும் பெறமுடியாது.
பேராசை உடையவன்  நற்புகழ் பெற முடியாது.
காமுகன் களங்கமற்று இருக்கமுடியாது.
ஸ்ரீ ஹரியை விரும்பாத மனிதன்
 மோக்ஷத்தை அடைய முடியாது.
அவ்வாறே அரசர்களே!சீதையை அடைய நினைக்கும் உங்களுடைய பேராசை வீணானது.
அங்கு நடந்த இரைச்சலைக் கேட்டு
சீதைக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அப்பொழுது தோழிகள் சீதையை
அவள் அம்மாவிடம்  அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீ ராமர் மனதில் சீதையின் அன்பை வர்ணித்து
இயற்கையாக குருவிடம் சென்றார்.
 ராணிகளுடன் சேர்ந்து  சீதை வருத்தப்பட்டு
இறைவனின் சித்தம் என்ன ? என்று
சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அரசனின் சொல்லைக்கேட்டு ,
லக்ஷ்மணன் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால் ராமரின் மீதுள்ள மரியாதை கலந்த
அச்சத்தால் பேச முடியவில்லை.
லக்ஷ்மணனின் கண்கள் சிவந்தன.
புருவம் வளைந்தது.
மதம் பிடித்த யானைக் கூட்டம்
பார்த்து  சிங்கக் குட்டிக்கு உற்சாகம்
வந்ததுபோல் இருந்தது.
அங்குள்ள கலவரம் குழப்பங்களைப் பார்த்த
ஜனகபுரி பெண்கள் கவலைப்பட்டனர்.
அவர்கள் அந்த துஷ்ட அரசர்களைத் தட்டத் துவங்கினர்.
அந்த சந்தர்பத்தில் சிவதனுஷ் முறிந்ததைக் கேட்டு
பிருகு குலத்தின் தாமரையின் சூரியன் பரசுராமர்  வந்தார்.
பரசுராமரைப்  பார்த்து அனைத்து அரசர்களும்
கழுகைப் பார்த்து காடை பயந்து ஒளிந்ததுபோல்
நடுங்கினர்.
வெண்மையான உடலில் விபூதி மிகவும் அழகாய்த் தோன்றியது. அகன்ற நெற்றியில் விபூதியின் மூன்று
பட்டைகள் அழகை மெருகூட்டின.
தலையில் ஜடா முடி.
அழகான முகம் கோபத்தின்
 காரணமாக சிவந்திருந்தன.
 புருவங்கள் வளைந்து கண்கள் சிவந்திருந்தன.
 அவர் மிகவும் கோபமாக இருப்பதை
 அவர் தோற்றம் தெளிவாக்கியது.
காளைமாடு போன்று உயர்ந்த உறுதியான தோள்கள்,
மார்பும் புஜங்களும் அகன்று பெரியதாக இருந்தன.
அழகான பூணூல் அணிந்திருந்தார்.
 மாலை போட்டிருந்தார்.
மான் தோல் இருந்தது.
இடுப்பில் முனிவர்களுடைய மரவுரி தரித்திருந்தார்.
கையில் கோடரி இருந்தது.
அமைதியான தோற்றம் ,
ஆனால் செய்வது மிக
 கொடூர மானமான செயல்.
வீரரசமே முனிவர் உருவத்தில் வந்தது
போன்ற தோற்றம்.
பரசுராமரின் அச்சம் தரும் தோற்றம் கண்டு
அனைத்து அரசர்களும் எழுந்து நின்றனர்.
அவர்கள் பயந்து
அப்பாவின் பெயரையும் சொல்லி வணங்கினர்.
அனைவருமே பரசுராமரின்
பார்வையில் தங்கள்
 ஆயுள் முடிந்துவிட்டாதாகக் கருதினர்.
பிறகு ஜனகர் வந்து வணங்கினார்.
 சீதை அழைத்து வணங்க வைத்தார்.
பரசுராமர் சீதையை வாழ்த்தினார்.
தோழிகள் மகிழ்ந்தனர்.
அவர்கள் சீதையை அழைத்துச் சென்றனர்.
அங்கே விஷ்வாமித்திரர் வந்து
ராமரையும் இலக்ஷ்மணரையும்
வணங்கச் சொன்னார்.
அவர் இருவரையும் பரசுராமருக்கு
அறிமுகப் படுத்தினார்.
இவர்கள் தசரதரின் குமாரர்கள் என்றார்.
அந்த சகோதர ஜோடிகளின் அழகு
 அவருக்குப் பிடித்துவிட்டது.
அவர் இருவருக்கும் ஆசிகள் வழங்கினார்.
 காமனின் ஆணவத்தை அடக்கும் அழகான
தோற்றமுடைய ராமரைப் பார்த்து
பிரமிப்புடன் நின்றார்.
 அனைத்தும் அறிந்திருந்தும்
ஒன்றும் அறியாதவர்போல்
ஜனகரிடம்  ,
இங்கு ஏன் கூட்டம் சேர்ந்துள்ளது ?
என்று கேட்டார்.
கேட்கும் போதே கோபக்கனல் தெரித்தது.
ஜனகர் அனைத்தையும் விவரமாகக் கூறினார்.
ஜனகர் சொன்னதைக் கேட்டுத் திரும்பினால்
சிவதனுஷ் உடைந்து கீழே கிடப்பது தென்பட்டது.
அதைப்பார்த்ததும் கோபம் அதிகரித்துவிட்டது.
உடனே ஜனகரை ,
முட்டாளே!இதை யார் உடைத்தது?
சொல்! என்றார்.
என்னுடைய அரசாங்க எல்லை வரை உள்ள பூமியை திருப்பிவிடுவேன்.
அரசர் பயத்தின் காரணமாக பதில் பேசவில்லை.
இதைக்கேட்டு கொடிய  அரசர்கள் மனதில் மகிழ்ந்தனர்.
நகரத்தில் உள்ளவர்கள், ரிஷிகள்முனிவர்கள்,
எல்லோரும் பயந்தனர். கவலைப்பட்டனர்.
சீதையின் தாயார் மிகவும் வருந்தினார்.
கடவுள் செய்த வேலையை கெடுத்துவிட்டாரே
என்று நினைத்தார்.
பரசுராமரின் குணத்தைக்கேட்டு,
சீதைக்கு அரை நொடி போவது
 ஒரு யுகத்திற்கு இணையாக இருந்தது.
ராமர் அனைவரும் பயந்து இருப்பதைப் பார்த்து ,
 சீதையின் பயத்தையும் அறிந்து சொன்னார் --என்னுடைய மனதில் மகிழ்ச்சியும் இல்லை .  வருத்தமும் இல்லை. 

Monday, February 6, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்திரண்டு.

श्री ராமர் எல்லோரையும் பார்த்தார். அவர்கள் எல்லோரும் சித்திரத்தில் எழுதப்பட்டதுபோல் இருப்பதைப் பார்த்து சீதையைபார்த்தார். சீதையின் முகத்தில் படர்ந்திருந்த கவலையைப் பார்த்தார். சீதையின் கவலையால் ஒரு நொடியும் ஒரு பெரிய   யுகம் போல் தோன்றியது.
 தாகமுள்ள  மனிதன் தண்ணீரின்றி உயிரைத் துறந்துவிட்டால்  அவனின் மரணத்திற்குப்பின் அமிர்தமான தண்ணீருள்ள  குளம் என்ன செய்யமுடியும் ?

வயல்கள் காய்ந்த பிறகு மழையால் என்ன பயன் ?
காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன் ?
மனதில் இவ்வாறு நினைத்து ஸ்ரீ ராமர் சீதையைப் பார்த்தார்.
அவருடைய சிறப்பான அன்பைப் பார்த்து ஆனந்தமடைந்தார்.
 மனதில் குரூ வணக்கம் செய்து  விட்டு  வில்லை எடுத்தார்.
அவர் வில்லை கையில் எடுத்ததும் வில் மின்னல் போல் மின்னியது. பிறகு ஆகாயத்தில் ஒரு மண்டலம் போல் தோன்றியது.
எடுத்ததை,  ஏற்றியதை  ,பலமாக இழுத்ததை யாரும் பார்க்கவில்லை. அவ்வளவு விரைவாக ராமர் செயலில் ஈடுபட்டார். எல்லோரும் வில்லுடன் இருக்கும் ராமரைப் பார்த்தனர். உடனே ராமர் வில்லை இரண்டாக உடைத்தார்.
பயங்கரமான ஓசை உலகம் முழுவதும் கேட்டது.
அந்த ஓசை கேட்டு சூரியனின் ரதத்தின் குதிரைகள் அதிர்ந்து திசை மாறி சென்றன. திக்குகளின் யானைகள் பிளிறின.
பூமி அசைந்தது. சேஷன், வராஹன், ஆமை  போன்றவை துடித்தன. ராமர் வில்லை உடைத்ததுமே
ராமரின் ஜயகோஷம் முழங்கியது என துளசிதாசர் சொல்கிறார்.
  சிவனின் வில்  கப்பல். ராமரின் புஜபலம் கடல். வில்லை முறித்ததுமே, மோகத்தின்  வசத்தால் அதில் ஏறியவர்கள் அனைவரும்   மூழ்கிவிட்டனர்.

ஸ்ரீ ராமச்சந்திர பிரபு வில்லின் துண்டுகளை பூமியில் போட்டுவிட்டார். இதைப்பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
  ராமர் என்ற முழு நிலவைப்பார்த்து ஆனந்த அலைகள் முன்னேறின.  விண்ணில் முரசுகள் முழங்கின. தேவலோகத்து தேவ கன்னிகள் பாட்டுப்பாடினர்.நடனம் ஆடினர். பிரம்மா முதலிய தேவர்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள்,அனைவரும் ஸ்ரீ ராமரைப் புகழ்ந்தனர். அவர்கள் பலவண்ண பூக்களின் மாலைகளை பொழிந்தனர். சிவகணங்கள் ரசமான பாடல்களைப் பாடினர். பிரம்மாண்டம் முழுதும் ஜெயா கோஷங்கள் முழங்கின.
எல்லோரும் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் கூறினார்--ஸ்ரீ ராமர் சிவதனுஷை முறித்துவிட்டார். தீரமும் ஆய்வும் உள்ள பாடகர்கள்  இசைப்பவர்கள் ,கவிஞர்கள் ராமரின் புகழை வர்ணிக்கத் தொடங்கினர். ஜால்ரா, மிருதங்கம்,சங்கு ,மிருதங்கம்,சஹாநாயி ,முரசு ,பெரிய மத்தளங்கள்  போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் பெண்கள் மங்கள இசை இசைத்தனர்.
தோழிகளுடன் ராணி மிக மகிழ்ந்தாள். காய்ந்த நெல் செடியில் தண்ணீர் பாய்ச்சியதுபோல்  மகிழ்ந்தனர். நீந்தி நீந்தி களைத்த மனிதனுக்கு கரை கிடைத்ததுபோல்
மகாராஜா ஜனகர் மகிழ்ந்தார்.
  வில்லை முறித்ததும்  போட்டிக்கு வந்த அரசர்கள் முகக்கலை   இழந்தனர். அவர்கள் முகம் பகலில் விளக்கு வெளிச்சம் அழகை இழப்பதுபோல் அவர்கள் முகம் ஒளி இழந்தது.
சாதகப் பறவை சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர்  பெற்றது போன்ற  ஆனந்தம்   சீதைக்கு . அந்த பேரானந்தத்தை
எப்படி வர்ணிப்பது?

நிலவை  சக்ரவாகப் பறவையின் குஞ்சு பார்ப்பதுபோல்
லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரை பார்த்துக்கொண்டிருந்தான்.
  அப்பொழுது சதானந்தனின் கட்டளை பெற்று சீதை ராமரை நோக்கிச் சென்றாள்.
 சீதையுடன் அவளின் கெட்டிக்காரியான  தோழிகள்
மங்களமான பாட்டுக்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
 சீதை அன்னப்பறவையின் குஞ்சு நடை நடந்துகொண்டிருந்தாள்.
அவரின் அங்கங்களில் அபூர்வமான அழகு மிளிர்ந்தது.
   அழகான   தோழிகளுக்கு நடுவில்  சீதை மிக அழகாகக் காட்சி அளித்தார். கையில் அழகான வெற்றிமாலை  ,அதில்
வையகத்தை வென்ற அழகு தென்பட்டது.
 சீதையின் உடலில்  வெட்கம் ,தயக்கம் , ஆனால்  மனதில்
அதிக மிகவும் உற்சாகம் இருந்தது.
அவருடைய இந்த கடுமந்தண அன்பு  வெளியில் தெரியவில்லை.
ஸ்ரீ ராமருக்கு  அருகில்  சென்று , ஓவியத்தில்  வரையப்பட்ட ஓவியம் போல் பிரமித்து நின்றாள். அப்பொழுது தோழிகள் சீதையிடம்  ஜெயமாலை  அணிவிக்கும் படி கூறினர்.
இதைக் கேட்டும் சீதை ஜெயமாலையை அன்பின் அதிக தாக்கத்தால் அணிய வில்லை. அப்பொழுது சீதையின் அழகு
    இரு  தாமரை  மலர்கள்  தாமரைத்தண்டுகளுடன்
ஜெயமாலை  கொடுப்பதுபோல்  சீதையின் கரங்கள் அழகாக இருந்தன.
இந்த அழகை  வர்ணித்து தோழிகள் பாட்டுப்பாடினார்.
அப்பொழுது சீதை ஸ்வயம்வர வெற்றிமாலையை ராமருக்கு
அணிவித்தார்.
ராமரின் மார்பில் வெற்றி மாலை விழுந்ததுமே  தேவர்கள்
பூ மாரி பொழிந்தனர். மற்றாரசர்கள் முகம் சூரியனைப்பார்த்த அல்லி மலர்கள் போல் வாடின.
நகரத்திலும் ஆகாயத்திலும்  வாத்தியங்கள் முழங்கின.
துஷ்டர்கள் வருத்தப்பட்டனர். நல்லவர்கள் மகிழ்ந்தனர்.
தேவர்கள் ,கின்னரர்கள்,மனிதர்கள், நாகர்கள், முநீஸ்வரர்கள் அனைவரும் ஆசிகள் வழங்கினர்.
தேவர்களின் மனைவிகள் நடனமாடிப்பாடினர். அவர்கள் கைகள்   பூக்கள்  அர்ச்சனை  செய்தன. பிராமணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். பாடகர்கள் கவிஞர்கள்
புகழ்ப்பாடலில்  வர்ணித்துக் கொண்டிருந்தனர்.
 பூமி ,பாதாளம் ,சுவர்க்கம் மூன்று  உலகங்களிலும்
ராமர் வில் முறித்த  செய்தியும் ,சீதை வைரமாலை போட்ட செய்தியும்  புகழாகப் பரவியது. நகர ஆண்களும் ,பெண்களும் ஆரத்தி எடுத்தனர். தனது தகுதிக்கு மீறி
பொருள் கொடுத்தனர்.
  அழகும் சிருங்காரரசமும் இணைந்த ஜோடியாக ராமரும் சீதையும்  மிக எழிலாகக் காட்சி அளித்தனர்.
தோழிகள் சீதையிடம் ராமரின் சரணங்களை  தொடுவதற்கு வற்புறுத்தினர். ஆனால் சீதை அச்சத்தின் காரணமாகத் தொடவில்லை.
கௌதமரின் மனைவி அகல்யாவின்  கதி அறிந்து சீதை தன்
கரங்களால் கால்களைத் தீண்டவில்லை.
சீதையின் அலௌகீக  அன்பு கண்டு ராமர் மனதில் சிரித்தார்.

रामचरित मानस --துளசிதாஸ் -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தொன்று


रामचरित मानस --
துளசிதாஸ் -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தொன்று

சீதையின் தாயார் ஸ்ரீ ராமரை வாத்சல்யத்துடன்(தாய்ப்பாசத்துடன் }
பார்த்துவிட்டு,
அன்புடன் அழுதுகொண்டே
 தோழிகளை அருகில் அழைத்து
சொன்னாள்---
அவர்கள் நமக்கு நன்மைக்காகத்தான் என்று
சொல்கிறார்கள்.
சொல்பவர்களும்  வேடிக்கைதான்  பார்க்கிறார்கள்.
ராமர் பாலகர்.
 ராவணன் போன்ற உலகை வென்றவர்களாலும்
 இந்த வில்லை தொட்டு அசைக்கக் கூட முடியவில்லை.
 அவ்வாறிருக்க ராமரை மேன்மையானவரை
வில் உடைக்க அனுப்பவேண்டாம் என்று
ஒருவரும்
விஷ்வாமித்திரரிடம் சொல்லவில்லை.
புரியவைக்கவும் இல்லை.

ராவணன் மற்றும் பானாசூர்,
 அந்த வில்லை தொடக்கூட இல்லை.
எல்லா அகங்கார அரசர்களும் தோற்றுவிட்டனர்.
அதே வில்லை இந்த பாலகன் கையில் கொடுத்துள்ளனர்.
அன்னத்தின் குஞ்சு
மந்திராச்சல மலையைத்
தூக்கமுடியுமா ?
அரசராவது ரிஷியிடம்
இந்த வில்லின் தன்மையைச் சொல்லவேண்டும்.
பகவானின் திருவிளையாடல்
ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது ஒரு தோழி ராணிக்கு
ஆறுதல் சொன்னாள்---
"அதிக புத்திசாலிகள் வீரமுள்ளவர்கள் ஆகியோர்
சிறியோராய்  உருவத்தில் வயதில் இருந்தாலும்,
அவர்களின் ஆற்றலை
குறைவாக மதிக்கக் கூடாது.
அகஸ்த்தியர் பானையிலிருந்து தோன்றியவர்.
கடல் மிகப்பெரியது. ஆனால்
அகஸ்த்தியர்  கடலை வற்றச் செய்துவிட்டார்.
அவர் செய்த செயலின் புகழ்
 வையகம்முழுவதும்
பரவி உள்ளது.
சூரியமண்டலம் பார்க்க மிகவும் சிறியது. ஆனால்
 அது உதயமானதும் மூவுலகத்தின்  இருளையும் போக்குகிறது.
எல்லா தெய்வங்களையும் ,
சிவன் ,விஷ்ணு ,பிரம்மா  ஆகியோரை
வசத்தில் கொண்டுவர
நாம்  சொல்லும்  மந்திரமும் சிறியது தான்.
மிகப்பெரிய மதம் பிடித்த  யானையை
சிறிய அங்குசம் தான்  வயப்படுத்துகிறது.
காமதேவன் மென்மையான பூக்களை
வில் அம்பாக்கி உலகையே  ஆட்டிப் படைக்கிறான்.
இப்பொழுது சிந்தியுங்கள்!
ராமர்  கட்டாயம் வில்லை உடைப்பார்.
தோழியின் சொல்  கேட்டு ,
 ராணிக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
அவருடைய வருத்தம் போய்விட்டது.
ராமரின் பொருட்டு அவர் அன்பு அதிகரித்துவிட்டது .
அப்பொழுது சீதை பயந்து தேவர்களிடம்
தேவதைகளிடம் பிரார்த்தனை
செய்து கொண்டிருந்தாள் .
தேவி  பவானி!
 என்னுடைய சேவைக்கு மகிழ்ந்து
என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
என் மேல் இரக்கப்பட்டு வில்லின்
சுமையை குறைத்துவிடுங்கள்.
சீதையின் கண்களில் இருந்து
ஆனந்தக்கண்ணீர் வந்து கொண்டிருந்தது,
மெய்  சிலிர்த்துக்கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமரைப்பார்த்து  சீதைக்குத் தைரியம் வந்தது.
சீதைக்கு அப்பாவின்  பிரதிக்ஞையை
 நினைத்து கோபம் கோபமாக வந்தது.
ஐயோ! அப்பாவின் பிடிவாதம்  மிகவும் கடினமானது.
அவர்கள் லாபம்-நஷ்டம் எதுவும்
அறியாமல் இருக்கிறார்.
அங்கு அமைச்சர்கள்,பண்டிதர்கள்  அனைவரும்
எல்லோருமே  இந்த மென்மையான உடலுடைய பாலகன்
வஜ்ரத்தை விட மிக கடினமான வில்லை எப்படி உடைக்கப்போகிறார்கள்  என்று
அஞ்சிக்கொண்டிருந்தனர்.
சீதை  மனதில் மிக வேதனை அடைந்தாள்.
பகவானே!நான் எப்படி தைரியமாக இருப்பேன்.
பூவின் காம்பால் வைரத்தை துளைக்க முடியுமா ?
இங்குள்ள சபையில் உள்ளவர்களுக்கு அறிவு பயித்தியமாகிவிட்டது.
ஆகையால்  சிவதனுஷே!
நீதான் எனக்கு உதவி செய்யவேண்டும்.
நீ ராமரைப் பார்த்து மிக மென்மையாகிவிடு.
ஸ்ரீ ராமரைப்பார்த்து,
 பூமியைப் பார்த்த  சீதையின் கண்கள்
சந்திரமண்டலக் குழுவில் இரண்டு மீன்கள் விளையாடிக்கொண்டிருந்ததுபோல் இருந்தன.
சீதையின் குரல்  என்ற  வண்டை,
 வாய்  என்ற தாமரை
தடுத்து பேசாமல் இருக்க வைத்துவிட்டது.
வெட்கம் என்ற இரவைப்பார்த்து
அது வெளிப்படவில்லை.
கண்களின் கண்ணீர்
 கஞ்சனின் தங்கம் போல்
 மூலையில் பதிந்து கிடந்தது.
மிகவும் பதிந்துள்ள கண்ணீர் ,
கவலை  அனைத்தையும் மறந்து
  சீதை தைரியத்தை வரவழைத்து  ,
என்னுடைய பிரதிக்ஞை உண்மை என்றால்,
ராமரின் சரணகமலங்களில்
என்மனது உண்மையிலேயே
பற்று இருந்தால்,
உடல்.மனம் ,சொல் மூன்றுமே
ராமரையே நினைப்பது
உண்மையானால் ,
எல்லோருடைய இதயத்தில்
வசிக்கின்ற பகவான் ரகுநாதருக்கு
  என்னை ராமருக்கு மனைவி ஆக்கிவிடும்.

உண்மையான அன்பு  இருந்தால்
 அது நிச்சயம் கிடைத்துவிடும்.
இதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
இறுதில் சீதை ராமரைப்பார்த்து ,
இந்த உடல் ராமருக்காக இருக்கும்.
இல்லையென்றால்
இருக்காது என்று உறுதி மொழி எடுத்தாள்.
கிருபையின் நிதியான ராமர் அனைத்தும் அறிந்துகொண்டார்.

ராமர் சீதையைப்பார்த்துவிட்டு ,
வில்லைப் பார்த்தபார்வை
 பாம்பைப் பார்த்த கருட பார்வை.
ராமரின் வில்லை நோக்கிய பார்வையை ,
லக்ஷ்மணன்  பார்த்ததுமே,
அவர் ஆமை,சேஷன்,வராஹர் ஆகிய அனைத்துக்கும்
ராமர் வில்லைப் பார்த்துவிட்டார்.
முறிக்கப்போகிறார்.
பூமியை அசையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்  என்று
எச்சரிக்கைவிடுத்தார்.

ராமர் வில்லுக்கு அருகில் சென்றதுமே ,
ஆண்கள்,பெண்கள், அனைவரும் தேவர்களையும்,
புண்ணிய ஆத்மாக்களையும் வேண்டினர்.
அனைவரும் சந்தேகங்கள்,
அறியாமை, தாழ்ந்த அரசர்களின் ஆணவம் ,
 பரசுராமரின் கர்வத்தின் மேன்மை,
தேவர்கள் மேலும் மகான் ரிஷிகளுடைய பயம் ,
சீதையின் கவலை,
ஜனகரின் வருத்தம்,
ராணிகளின் துன்பம் என்ற காட்டுத்தீ,
இவை எல்லாமே,
சிவனின் வில் என்ற கப்பலைப்பெற்று
கூட்டாமாக அதில் ஏறினர்.
ராமரின் புஜ பலத்தைக்கொண்டு
 கடக்க விரும்புகின்றனர்.
ஆனால் கப்பலோட்டி யாரும் இல்லை.

Saturday, February 4, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபது.


ஸ்ரீ ராமச்சந்திரர் ,சீதை இருவரின் அழகையும் அனைவரும்

இமை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரும்  இறைவனிடம்  வேண்டினர் :---
பகவானே!ஜனகர் பிரதிக்ஞை என்ற
முட்டாள்தனத்தை விட்டுவிட்டு
சீதையின் விவாஹத்தை ராமருடன் செய்ய அருள்புரியுங்கள்.
இந்த விஷயம் எல்லோருக்குமே பிடித்துள்ளது. எல்லோரின் மனதிலும் இந்த கருநீலவண்ணன் தான் சீதையின் மணாளன் என்ற எண்ணமே மேலோங்கியது. ஜனகரின் பிடிவாதத்தால் இறுதியில் மனவேதனை தரும் என்று எண்ணினர்.
 
அப்பொழுது அரசர் பாடகர்களை அழைத்தார். அவர்கள்
புகழ்ந்து பாடிவிட்டுச் சென்றனர். அரசர் சொன்னார் --போய் ,என்னுடைய சங்கல்பத்தைச் சொல்லுங்கள். அவர்கள் மிக ஆனந்தத்துடன் அரசனின் அறிவிப்பைச் சொல்ல சென்றனர்.

  பாடகர்கள்  அறிவித்தனர்--"புவி  ஆளும் அரசர்களே!
நாங்கள்  எங்களுடைய புஜங்களை உயர்த்தி
ஜனகரின்  சபதத்தைச் சொல்கிறோம்.
அரசர்களின் புஜவலிமைக்கு   சந்திரன். சிவனின் வில் ராஹு.
அது மிகவும் கனமானது. கடினமானது   என்பதை
அனைவரும் அறிந்ததே.
மிகப்பெரிய போர்வீரர்களான  ராவணன் ,பாணாசூரன்
போன்றவர்களால் இந்த வில்லைத் தூக்கக் கூட  முடியவில்லை. அவர்களுக்கு மூச்சுத் திணறியது.

 அவர்களால்  ஒடிக்க முடியாத வில்லை  இன்று யார் உடைப்பார்களோ , அவர்கள் மூவுலகையும் வென்றவரகளாவது மட்டுமல்ல, சீதையும் அவர்களுக்கு எவ்வித  தடையுமின்றி மாலை சூடுவாள்.

 ஜனகரின் பிரதிக்ஞையைக்  கேட்டு ,எல்லோரும் ஆசைப்பட்டனர். வீரத்தில் ஆணவம் கொண்ட அரசர்கள் ஆர்ப்பரித்தனர். தங்கள் இஷ்ட  தெய்வத்தை வழிபட்டு ,
வில்லை எடுத்து ஓடிக்கச் சென்றனர்.

  மிகவும் ஆவலுடன் வில்லைப் பார்த்துவிட்டு ,
அதை எடுத்து முறிக்க பலவிதத்திலும் முயன்றனர்.
ஆனால கடும் முயற்சிகுப் பின்னும்   தோல்வியே கண்டனர்.
விவேகமுள்ளவர்கள் வில்லிற்கு அருகிலே கூட செல்லவில்லை.
  அந்த முட்டாள் அரசர்கள் முயன்று தோற்று நாணத்துடன் சென்றுவிட்டனர்.
வீரர்களின் புஜவலிமையை விட ,  வில்லின் சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
பத்தாயிரம் அரசர்கள் ஒன்று சேர்ந்து முயன்றும் வில்லை
நகர்த்தக் கூட முடியவில்லை. வில் எப்படி அசையும் ?
 முயன்ற அனைத்து அரசர்களும் பரிகாசத்திற்கு ஆளாகினர்.
புகழ், வீரம் , வெற்றி அனைத்தையும் வில்லினால் இழந்து சென்றனர்.
அரசர்கள் கலை இழந்து அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தனர்.
அரசர்களின் தோல்வி கண்டு ஜனகர் பயந்தார்.
கோபமாகப் பேசினார்.

நான் செய்த சபதத்தால் ஒவ்வொரு தீவிலிருந்தும் அரசர்கள் வந்தனர். தேவர்களும் அரக்கர்களும்  மனித வடிவத்தில்  வந்தனர்.  மேலும் பல யுத்த வீரர்கள்  வந்தனர்.
ஆனால் வில்லை ஒடித்து வெற்றி பெற்று தன கான்னியை மணக்கும் ஒருவரை பிரம்மா சிருஷ்டிக்கவில்லை.
 வில் ஒடிப்பதால் வரும் பயனை அனைவரும்  அறிவர்.
ஆனால் சிவதனுஷை யாராலும்  முறிக்க  முடியவில்லை.

  எள்ளின்  அளவு கூட  நகர்த்த முடியவில்லை.
எந்த ஆணவமுள்ள வீரர்களும் கோபப்பட வேண்டாம். பூமி வீரர்களில்லாமல் போய்விட்டது.

  எல்லோரும் நம்பிக்கையை விட்டு விட்டு  தங்கள் வீட்டிற்குச் சென்றுவிடுங்கள். பிரம்மா சீதைக்கு திருமணம் என்பதை
எழுதவில்லை.

    நான் சபதத்தை விட்டுவிட்டால், எனது புண்ணியம் போய்விடும்.  நான் என்ன செய்ய முடியும் ?
எனது கன்னி  கன்னியாகவே  இருக்கட்டும். என்ற  ஜனகரின் உதடுகள் துடித்தன. இந்த பூமி வீரர்களின்றி  சூன்யமாகிவிட்டது என்பது  தெரிந்திருந்தால் ,
நான் இப்படிப்பட்ட சபதம் செய்திருக்க  மாட்டேன் என்றார்.
ஜனகரின்  கண்கள் சிவந்தன.

ஜனகரின் புலம்பல் கேட்ட அனைவரும்
 சீதையைப் பார்த்து வேதனை அடைந்தனர்.
ஆனால் லக்ஷ்மணனின் முகம் கோபத்தால் சிவந்தது.
புருவங்கள் வளைந்தன. உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்தன.  ஆனால் ரகுவீரரின் மீது கொண்ட மரியாதையாலும் அச்சத்தாலும் அமைதியாக இருந்தார்.

  அவர் இறுதியில் பொறுமை இழந்து சொன்னார்--
ஜனகர் சொன்ன சொற்கள் தவறானது.
ரகுவம்சத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும்போது ,
ராமர் இங்கு இருக்கும்போது இவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது.

  இவர் சூரியகுலத்தின் தாமரையின் சூரியன். நான் இயற்கையாகச் சொல்கிறேன் நீங்கள் அனுமதி அளித்தால் இந்த வில்லை பந்துபோல் தூக்கிவிடுவேன்.
  அதை பச்சைக்களிமண் பானை போன்று உடைத்துவிடுவேன். நான் சுமேரு  மலையையே தூள்தூளாக்கி விடுவேன்.
இறைவா!உங்கள்  பிரதாபத்திற்கு முன்  இந்த பழைய வில்
ஒரு பொருட்டே அல்ல.
பகவானே!அனுமதி கொடுங்கள். வில்லை தாமரைத் தண்டை முறிப்பதுபோல் நூறுமைல் தூரத்திற்கு தூக்கிக்கொண்டு ஓடும் விளையாட்டைக் காட்டுகிறேன்.
உங்கள் பலத்தால் வில்லை  காளான் போன்று உடைத்துவிடுவேன்.
இவ்வாறு என்னால் செய்யமுடியவில்லை என்றால்
நான் வில்லையும் அம்பையும் தொடமாட்டேன்.
லக்ஷ்மணனின் இந்த வார்த்தைகளால்  சீதை மகிழ்ந்தாள்.
இலக்குமணனின் கோபத்தால் பூமி நடுங்கியது.
திக்குகள் அனைத்தும் நடுங்கின. யானைகள் நடுங்கின. அனைத்து அரசர்களும் பயந்துவிட்டனர். ஜனகர் நாணத்தால் குறுகிப்போனார்.
ராமர், ரிஷிகள் ,முனிவர்கள் மிகவும்  மகிழ்ந்தனர்.
ராமர் லக்ஷ்மனரை பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டினார். அவரைத்தடுத்து தன்னருகில் அமரவைத்தார்.
நாலநேரம்  அறிந்து விஷ்வாமித்திரர் ராமரிடம்  சொன்னார்---
"ராமா!எழுந்திரு. வில்லை உடைத்து ஜனகரின் மன வேதனையைப் போக்கிவிடு.

  குருவின் கட்டளையை ஏற்று ராமர் குருவை வணங்கினார்.
அவர் மனதிலும் மகிழ்ச்சியுமில்லை. துக்கமும் இல்லை. அவர் மிகவும் கம்பீரமாக சிங்கமும் நாணும்படி , எழுந்து நின்றார்.

  அரங்கம் என்ற மலையில் ரகுநாதர் என்ற இளம் பரிதி உதய மானதுமே , சாதுக்கள் என்ற தாமரைகளின் முகங்கள்  மலர்ந்தன .

  கண்கள் என்றவண்டுகளும்  மகிழ்ந்தன.
ஆணவம் கொண்ட அல்லி போன்ற அரசர்களின் முகங்கள் வாடின. கட அரசர்கள் என்ற ஆந்தைகள் மறைந்துவிட்டன.
  முனிவர்களும் தேவர்களும் சக்ரவாகு பறவை போன்று
மகிழ்ந்தனர். அவர்கள் பூமாரி பொழிந்து  தங்கள் சேவையைக் காட்டினர்.
அன்புடன் குருவின் சரணங்களை வணங்கி ராமர் ரிஷியிடம் அனுமதி கேட்டார்.

  அனைத்து உலகிற்கும்  ஸ்வாமியான ராமர் அழகான மதம் கொண்ட  யானை போன்று நடந்து சென்றார். ராமர் அரங்கத்திற்குச் சென்றதுமே நகர மக்கள்  மகிழ்ந்தனர்.
அவர்கள் ரோமங்கள் சிலிர்த்தன.
   அவர்கள் தங்கள் முன்னோர்களையும் தெய்வங்களையும்
ராமர் வாழைத்தண்டு போல் வில்லை முறிக்க  வேண்டும் என வேண்டினர்.

Friday, February 3, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - அ றுபத்தொன்பது

   ராமசரிதமானஸ் -பாலகாண்டம்  -  அ றுபத்தொன்பது
..................................................................................................................................

   சீதையை அழைக்க தோழிகள் சென்றனர்.

சீதை   அழகின்  மற்றும் குணத்தின்  சுரங்கம் .
ஜகஜ்ஜனனி  ஜானகியின் அழகை வர்ணிக்க முடியாது.
துளசிதாசருக்கு  காவியத்தின் அனைத்து உவமான உவமேயங்களும் மிகவும் துச்சமாக இருந்தன,  ஏனென்றால்

லௌகீகப் பெண்களின் எல்லா உவமைகளும் தெய்வீகத்திற்கு  சரியாகாது.
 காவியத்தின் உவமைகள்
எல்லாமே மாயை உலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
முக்குணங்களைக் காட்டுபவை.
அவைகளைக் கொண்டு
தெய்வத்தின் ஸ்வரூப சக்தியான
 ஸ்ரீ ஜானகியின் இயற்கைக்கு ஒவ்வாத,
தெய்வீக அங்கங்களுக்கு ஒப்பிடுவது
இறைவனை அவமானப்படுத்துவது.
அவ்வாறு வர்ணித்தால்  கெட்ட கவி ஆகிவிடுவார் .
இகழ்ந்து  விடுவார்கள் .
மற்ற பெண்களுடன் ஒப்பிடும்
அளவிற்கு அழகானவர்கள்
 இந்த  ஜகத்தினில் இல்லை.
இந்த புவியில்  மட்டுமல்ல  
தேவலோகத்திலும் கிடையாது.

சரஸ்வதியுடன்  ஒப்பிட நினைத்தால்  சரஸ்வதி வாயாடி.
பார்வதியுடன்  ஒப்பிட நினைத்தால் ,
தேவியின் பாதி அங்கம் ஆண்களுடையது.
ரதியுடன் ஒப்பிட நினைத்தாலும் அவள் கணவன்
அங்கமில்லாததால் மிகவும்  வருத்தப்படுபவள் .
விஷம்-மது போன்ற சகோதரர்கள்  லக்ஷ்மிக்கு இருப்பதால்
லக்ஷ்மி போன்று ஜானகியை ஒப்பிடமுடியாது.
லக்ஷ்மி தோன்றியது உப்புள்ள சமுத்திரத்தில் இருந்து.
சமுத்திரத்தைக்   கடைய  கடினமான முதுகைக் கொண்ட உருவமாக பகவான்  மாறினார்.
கடைய கயிறாக விஷமுள்ள வாசுகி மாறியது.
 அதை கடைந்தவர்கள்  அரக்கர்களும் தேவர்களும்.
அதிசய அழகின் சுரங்கம் ஒப்பில்லா அழகி லக்ஷ்மி ,
அவர் வெளிப்பட காரணங்கள் இந்த அழகற்ற ,கடினமான உபகரணங்கள். இப்படிப்பட்ட உபகரணங்களால் உண்டான இலக்குமியை சீதையுடன்  ஒப்பிட முடியாது.
அழகான ஆமை, அழகான கயிறு , சிருங்கார ரச மலை யாக காமதேவன் கடைந்து எடுத்தாலும் அழகான பொருட் செல்வமுள்ள  லக்ஷ்மி தோன்றினாலும் கவிஞர்கள் லக்ஷ்மியை சீதைக்கு  சமமாக  சொல்லமாட்டார்கள்.

   தோழிகள் பாட்டுப்பாடிக்கொண்டே சீதையை அழைத்துவந்தனர். சீதை ஜகத் ஜனனி  அழகான புடவை உடுத்தி வந்தாள்.  அந்த  மேன்மை பொருந்திய அழகு
ஒப்பிடமுடியாதது.
ஒவ்வொரு அங்கத்திற்கும் உரிய ஆபரணங்களைத்  தோழிகள்   மிக நேர்த்தியாக அணிவித்திருந்தனர் .
அந்த ஸ்வயம் வர மண்டபத்தில்  சீதை வந்ததுமே ,
அவருடைய தெய்வீகமான தோற்றம் கண்டு ஆண்களும் பெண்களும் அவர் மீது மோகம் கொண்டனர்.
 தேவர்கள்  மகிழ்ந்து  முரசு வாசித்தனர். தேவகன்னிகைகள் மலர் தூவி பாடினர்.
  சீதை ஆச்சரியத்துடன்  ராமரைப் பார்க்கத்   தொடங்கினார். .
அப்பொழுது எல்லா அரசர்களும் மோகவசத்தில் இருந்தனர். இரண்டு சகோதரர்களையும் சீதை
கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் குரு மற்றும் சபை மரியாதையால்  நாணம் அடைந்து  தோழிகளின் பக்கம் திரும்பி ,
மனக்கண்ணால் ராமனைப் பார்த்து ரசித்தார்.
   









ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தெட்டு -துளசிதாஸ்



 துளசிதாஸ் 
          ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --அறுபத்தெட்டு -  

        ஜனகரின் அழைப்பைக் கேட்டு
          முனிவர்  சொன்னார் ---" வில்போட்டி நடக்கும்        இடத்திற்குச் சென்று ஸ்வயம் வரத்தைப்  பார்க்கவேண்டும்".
   கடவுள் யாருக்கு பெருமைதருகிறார்
   என்பதைப் பார்க்கவேண்டும்.
லக்ஷ்மணன் சொன்னார்---
"நாதா! உங்களின்  கிருபைக்கு
பாத்திரமானவர்கள் வில் உடைத்து வெற்றி பெறும்
பெருமைக்குப் பாத்திரமாவார்கள்".
இவ்வாறு லக்ஷ்மணர் சொல்லக்கேட்டு
 முனிவர்கள் மகிழ்ந்தனர்.
எல்லோரும் மகிழ்ந்து ஆசி  வழங்கினர்.
முனிவர்களுடன்  கிருபை நிறைந்த ராமச்சந்திரரும்
வில் வேள்வி  சாலைக்குச் சென்றனர்.
   இரண்டு  சகோதரர்களும்  அந்த வேள்விச்சாலைக்கு
  வந்தது அறிந்து நகத்தில் உள்ளவர்கள்  அனைவரும்
  பாலகர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் ,
  ஆண்கள் ,பெண்கள்   என  அனைவரும் தங்கள் வீட்டை யும்
  வேலைகளையும் விட்டு  வந்து விட்டனர்.

   ஜனகர் அதிக கூட்டம் வந்தது தெரிந்ததும்  ,
 நம்பிக்கையுள்ள பணியாட்களை அழைத்து  அனைவருக்கும்
 தகுந்த இடம் அளித்து , அமரவைக்க உத்தரவிட்டார்.

  அந்த பணியாட்கள் வந்த கூட்டத்தை  ,
உத்தமர்கள்,நடுத்தரமக்கள்,தாழ்ந்தவர்கள், சிறியவர்கள்  எனப் பிரித்து
அவர்களுக்கேற்ற இடத்தில்
மென்மையாக ,பணிவாகப் பேசி
அமரவைத்தனர்.
   அந்த நேரத்தில் அழகின் உருவமாக கருநீல ராமரும் ,
வெள்ளையாக இருக்கும் லக்ஷ்மணரும் அங்கு வந்தனர்.

அவர்கள் இருவருமே குணங்களின் கடலாகவும் , திறமைசாலிகளாகவும் ஒப்பற்ற வீரர்களாகவும் இருந்தனர்.
 அவர்கள்  இருவரும் மற்ற அரசர்களுக்கு மத்தியில்
நட்சத்திரங்களுக்கு நடுவில் உள்ள  முழு நிலவுகள் போன்று
காட்சி அளித்தனர்.
ஒவ்வொருவரும் தங்கள் மனோபாவத்திற்கு ஏற்ப ராமரைப்
புகழ்ந்தனர். போரில் திறமை உள்ளவர்கள் ,
வீர ரசமே உடலெடுத்து வந்துள்ளதாக நினைத்தனர்.
கொடிய அரசர்கள் பயங்கரமாக நினைத்து பயந்தனர்.
வஞ்சிப்பதற்காக  அரச வேடத்தில் வந்த அரக்கர்கள்,
நேரடியாக எமனே வந்ததாக நினைத்தனர்.
நகரமக்கள் இருவரையும்  மனிதர்களின் ஆபரணமாகவும்
மகிழ்ச்சியும் நன்மையையும் தரக்கூடியவர்கள்  என்று எண்ணினர்.
பெண்களும் அகமகிழ்ந்து தன்தன் விருப்பம்
 ருசிக்கு ஏற்றவாறு  பார்த்துக்கொண்டிருந்தனர்.
சிங்காரரசமே உருவெடுத்து அழகாக வந்துள்ளது என்று  நினைத்தனர்.

     படித்தவித்வான்களுக்கு   மிகப்பெரிய உருவமாக,
அதிக முகங்கள், கைகள், கால்கள் ,கண்கள் தலைகள் கொண்ட பரபிரம்மமாகத் தோற்றமளித்தார்.
ஜனகரின் குடும்பத்தவர்கள் தங்களுடைய சம்பந்திபோன்று
அன்பானவராகப் பார்த்தனர்.
    ஜனகரும் , ராணிகளும் அவரைத் தன் மகன்போல  பார்த்தனர். அவர்களின் அன்பு வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
   யோகிகளுக்கு அவர் சாந்தமான, சுத்த ,ஒளிமயமான பரம
 தத்துவமாகக்  காட்சி அளித்தார்.
 ஹரியின் பக்தர்கள் அவரை இஷ்ட தெய்வமாகப் பார்த்தனர்.  சீதை ராமரை  அன்பின் சுகத்தின் இணைப்பாகக் கண்டாள். அந்த எண்ணங்களை வர்ணிக்க முடியாது.
அந்த சீதையின் அன்பை உணரத்தான் முடியும்.
ஒரு கவிஞனால் வர்ணிக்க முடியாது.
இவ்வாறாக கோசல மன்னன் ஸ்ரீ ராமச்சந்திரன் அந்த வேள்விச் சாலையில்  மிக ரம்யமாகக் காட்சி அளித்தார்.

   இருவருமே தன் நன்னடத்தையால் ,
இயற்கையான அழகால்
அனைவரின் மனதையும் கவர்ந்தனர்.
 கோடிக்கணக்கான
காமதேவர்களும் அவருடன் உவமையாகச் சொல்லமுடியாது.
அவர்களுடைய அழகு முகம்
  முழு நிலவின் அழகைக் குறைத்துவிடும்.
அவர்களது  தாமரைக்  கண்கள்
அனைவருக்கும்  மிகவும் பிடிக்கும்.

   அகிலத்தினரின்   மனத்தைக் கவரும்  அழகு கமதேவனையே  கவரும் அழகு.
அழகான கன்னங்கள் , காதுகளில் அசையும் குண்டலங்கள் ,
அழகான உதடுகள், தாடைகள் ,மென்மையான குரல்
அகிலத்தினரைக் கவரும் அழகு.
ராமரின் அழகு. அவர் தம்பி லக்ஷ்மணன் அழகு.
ஈடு இணையற்ற அழகு.

      அவர்களைப் பார்த்து அனைவரும்  மகிழ்ந்தனர்.
கண் இமைக்காமல் பார்த்தனர்.
 கண்பாப்பா அசையவில்லை.
ஜனகர்  இரு சகோதரர்களையும்  பார்த்து மகிழ்ந்தார்,
பிறகு முனிவரை வணங்கி , வேள்வி சாலையை காண்பித்தார்.
அவர்களுடன் சென்ற  ராமரையும் ,
லக்ஷ்மணனையும்  ஒவ்வொருவரும்
 ஆச்சரியமாகப் பார்த்தனர்.
அனைவருக்கும் ராமர் அவர்களையே பார்ப்பது போல்  இருந்தது.
ஆனால் இதன் ரஹசியத்தை  அதாவது ராமர் மூலப் பரம்பொருள்  என்பதை அறியவில்லை.
முனிவர் சொன்னார் --"போட்டி நடக்கும் அரங்கம் மிகவும்
அழகாக இருக்கிறது."
 முனிவரே  புகழ்ந்ததால்  அரசர்  மிகவும்
மகிழ்ந்தார்.
  ஒவ்வொரு மேடையும்  ஒன்றைவிட
  ஒன்று அழகாக இருந்தது.
அதில் எல்லாவற்றையும் விட மிக அழகான.பெரிய   மேடையில்   அரசர் முனிவரையும் இரண்டு சகோதரர்களையும்  உட்கார வைத்தார்.
  ராமச்சந்திர பிரபுவைப்  பார்த்ததுமே ,
 மற்ற அரசர்கள்  நிராசையடைந்து
 உற்சாகத்தையும் இழந்து விட்டனர்.
அவர்களின் நிலை முழுநிலவுக்கு முன் நட்சத்திரங்கள்
பிரகாசத்தை இழந்ததுபோல் ஆயிற்று.
அனைவருக்கும் சந்தேகமின்றி  ராமர் தான்  வில்லை உடைப்பார்  என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

சிலருடைய மனதில் ராமரின் அழகைக்கண்டு ,
சிவதனுஷை உடைக்காமலேயே சீதை ராமருக்கு
வரமாலை போட்டுவிடுவாள் என்ற எண்ணம்  ஏற்பட்டது.


அனைவரும் எப்படியும்  நமக்குத் தோல்விதான். ஆகையால்
திரும்பிச் சென்றுவிடுவோம் என்று சொல்லத் தொடங்கினர்.

  ஆணவமுள்ள , அறியாமையால் குருடனான அரசர்கள், இதைக்கேட்டு சிரித்தனர்.
வில்லை ராமர் உடைத்தாலும்
திருமணம் நடப்பது கடினம்.
 நாங்கள் அவ்வளவு எளிதாக சீதையை விடமாட்டோம்  என்றனர்.
 அந்த நிலையில் வில்லை உடைக்காமல் எப்படி திருமணம் நடக்கும்? என்றனர்
சீதைக்காக நாங்கள் எமனுடனும் போரிட்டு வெல்வோம் என்றனர். இந்த கர்வமான பேச்சைக்கேட்டு ,
தர்மாத்மாக்களும், ஹரி பக்தர்களும்  புன்சிரிப்பு சிரித்தனர்.

    அரசர்களின் கர்வத்தைப் போக்கி  ராமர் சீதையை மணப்பார் என்றனர்.
வீரமுள்ள தசரத குமாரர்களை யாரால் வெல்ல  முடியும்  என்றனர்.
வீணாக உளறாதீர்கள்.
மனதில் லட்டு சாப்பிடாதீர்கள். அது பசிபோக்காது.  எங்களுடைய புனிதமான ஆலோசனையைக் கேட்டு  சீதையை தங்கள் மனதில் உலக மாதாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அவரை வேறு மாதிரி நினைக்காதீர்கள்.
ஸ்ரீ ராமரை உலகின் தந்தையாக , பரமேஸ்வரனாக ஏற்று
அவரைப் பாருங்கள்.
இந்த இரண்டு குணமுள்ள சகோதரர்கள்
 சிவனின் இதயத்தில் உள்ளனர்.
சிவனே வழிபடும் பரமேஸ்வரர்
உங்களுக்குமுன் வந்துள்ளார்.
அருகில் உள்ள அமுதக் கடலை விடுத்து
கானல் நீரைக்கண்டு ஓடி ஏன் உயிர் துறக்கவேண்டும் ?
  இறைவனின் காட்சியைக்கண்டு தர்சிக்காமல் ,
கானல் நீரைப் பார்த்து ஓடி ஏன் உயிரைவிடுகிறீர்கள் .
உங்களுக்கு  எது நன்றாக உள்ளதோ , அதைச் செய்யுங்கள்.
நாங்கள் ராம சந்திரரைப் பார்த்து அந்த புண்ணியத்தால் எங்கள் பிறவிப்பயனை அடைகிறோம்.அடைந்துவிட்டோம்.
இப்படி நல்ல அரசர்கள் அன்பில் மூழ்கி ராமரின் ஒப்பிடமுடியா  அழகை தரிசிக்கத் தொடங்கினர்.
  மனிதர்கள் மட்டுமா ? தேவர்களும் விமானத்தில் ஏறி ,
தர்ஷித்துக்கொண்டு , அழகான பாடல்கள் பாடி பூ மழை
பொழிந்துகொண்டிருந்தனர்.

  நல்ல நேரம் வந்ததை அறிந்து ,
ஜனகர் சீதையை அழைத்தார்.
சீதையை அழைத்துவர கெட்டிக்கார
அழகான  தோழிகள் சென்றனர்.





     .

 


   

Thursday, February 2, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --அறுபத்தேழு

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --அறுபத்தேழு

  சீதையும் தோழிகளும்   பேசிக்கொண்டிருக்கும் போதே ,

இரண்டு சகோதரர்களும் கொடி மண்டபத்தில்  இருந்து

வெளிப்பட்டனர்.
 அவர்கள்  இருவரும்  இரண்டு களங்கமற்ற நிலவுகள் மேகங்களின்  திரையை  விலக்கி வந்தது போல் இருந்தனர்.
இருவருமே அழகின் எல்லை. அவர்களின் உடலழகு  நீலத்தாமரை மஞ்சள் தாமரை போன்றிருந்தனர்.
தலையில் அழகான மயிலிறகு அழகாக இருந்தது . நடுநடுவில்  பூக்களின் மொட்டுக்கள் பதிக்கப்பட்டிருந்தன.
நெற்றியில் திலகமும் வேர்வைத்துளிகளும்  அழகுக்கு மெருகூட்டின.காதுகளில் மிக அழகான காதணிகள் ,வளைந்த புருவங்கள் , சுருட்டை முடி , புதிய செந்தாமரைபோல் சிவந்த கண்கள் என அழகின் திருஉருவாய் காட்சி அளித்தனர்.
தாடை,மூக்கு,கன்னங்கள் ஆகியவை மிக அழகாக இருந்தன.
சிரிப்பின் அழகு மனதை விலைக்கிவாங்கிவிடும்.
முகத்தின் அழகைக் கண்டு அநேக காமதேவதைகள்
நாணிவிடும்.

மார்பில் மணிமாலை . சங்கு போன்ற கழுத்து,காமதேவனின் யானைக்குட்டியின் தும்பிக்கை போன்ற கைகள், அவை பலத்தின்இறுதி எல்லையாகக் காட்சி அளித்தன.

இடதுகையில் பூவுடன் கூடிய பூக்கூடை.  அந்த கருநீல குமாரன் உண்மையிலேயே அதிக அழகு உள்ளவன்.
சிங்கம் போன்று  இடுப்புள்ளபட்டாடை அணிந்துள்ளவர்கள்,
அழகும் ஒழுக்கமும் நிறைந்த சூர்யகுலத்தின் ஆபரணங்கள் .
ஸ்ரீ ராமச்சந்திரரைப் பார்த்து தோழிகள் தன்னையே மறந்து நின்றனர். .
ஒரு கெட்டிக்கார தோழி சீதையின் கைபிடித்து சொன்னாள்--
கிரிஜா தேவியை பிறகு தியானம் செய்யலாம். ராஜகுமாரனை முதலில் பார்க்கலாம்.

அப்பொழுது  சீதை தயங்கிக்கொண்டே கண்களைத் திறந்தாள். ரகுகுல திலகங்கள் இருவரும் தனக்கு முன்னால்
நிற்பதைப் பார்த்தாள்.நகம் முதல் சிரம் வரை ராமரின்
அளகைப்பார்த்தாள். பின்னர் தந்தையின் சபதத்தை   நினைத்து  மிகவும் வருத்தமடைந்தாள்.
அப்பொழுது தோழிகள் சீதையின்  பரவசத்தைக் கண்டனர்.
அப்பொழுது எல்லோரும் பயந்து  ,  நேரமாகிவிட்டது. நாளை இதே நேரத்தில் இங்கு வருவோம்  என்று சொல்லி மனதிற்குள்
சிரித்தனர்.
தோழிகளின் இந்த ரஹசியமான சொல்லைக்கேட்டு சீதை நாணமடைந்தாள் . வெகுநேரமானதால் அம்மா திட்டுவாளே என்ற பயம் பற்றியது. தான் அப்பாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து ஸ்ரீ ராமரை நினைத்துக்கொண்டே
வீட்டிற்குச் சென்றாள். மான்,பறவைகள் மரங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் சாக்கில் ராமரைப் பார்க்க அடிக்கடி வந்தாள். பார்க்கப்பார்க்க காதல் மிகவும் அதிகரித்தது.
  சிவதனுஷ் மிகவும் உறுதியானது என்று அறிந்து மனதில் ராமரை நினைத்து மனதிற்குள்ளேயே  வருந்தினாள்.
இந்த ராமர் வில்லை எப்படி முறிப்பார்?ஆனால் இறைவனின் நினைவு வந்ததுமே நம்பிக்கையால் மகிழ்ச்சியடைந்தாள்.

ராமரும் அன்பு,அழகு,அடக்கம்,ஒழுக்கம் நிறைந்த  சீதை போவதைப் பார்த்து அன்பு என்ற மென்மையான மையால்,
சீதையின் உருவத்தை தன்னுடைய அழகான மனம் என்ற
திரைச்சீலையில் தீட்டிக்கொண்டார்.
     சீதை பவானி கோவிலுக்குச் சென்று, கரங்களைக் கூப்பி வேண்டினாள்---
"மேன்மை பொருந்திய மலையரசனின் மகளே!
தாங்கள் வாழ்க!
மகாதேவனின் முகம்  என்ற  நிலவை
கண் இமைக்காமல் பார்க்கும் சகோரி பறவை போல் இருக்கும் தேவியே!
 தாங்கள்  வாழ்க! யானை முகமுள்ள கணேசன் மற்றும் ஆறுமுகம் கொண்ட சுவாமி கார்த்திகேயனின் தாயாரே!ஜகஜ்ஜனனியே!
மின்னல் போன்று ஒளிமிக்க தேஹம் உடைய  தேவியே!! தாங்கள் வாழ்க!
தங்களுக்கு ஆரம்பம், நடு,முடிவு என்று எதுவுமே இல்லை.
உங்கள் எல்லையில்லா மகிமையை வேதங்களும் அறியா.
தாங்கள் உலகைப் படைத்து அழிப்பவர்.
உலகைத்தைக் கவருபவர். சுதந்திரமாக சுற்றுபவர்.
கணவனை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட பெண்களில் ,
அன்னையே!உங்களுக்கு முதலிடம்.
உங்களுடைய எல்லையில்லா பெருமையை ஆயிரம் சரஸ்வதி களாலும். சேஷன் களாலும்  வர்ணிக்க இயலாது.

பக்தர்கள் கேட்கும் வரம்  அளிக்கும்  தேவியே!
மூன்றுலகு க்கும் தேவன் சிவனின் பத்தினியே!
தங்களுக்குத் தொண்டுபுரிந்தால் தர்ம,அர்த்த,காம,மோக்ஷம் என்ற நான்கு பலன்களும்   எளிதாக  கிட்டும்.
தேவியே! உங்கள் சரணகமலங்களை  பூஜித்து ,
தெய்வம், மனிதன்,முனிவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைவார்கள்.
  என்னுடைய மப விருப்பத்தை  நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் எல்லோருடைய இதயம் என்ற நகரத்தில் வசிக்கிறீர்கள். இந்த காரணத்தால் நான் என் விருப்பத்தை  வெளியிடவில்லை. இவ்வாறு சொல்லி தேவியின் பாதங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
 தேவி பார்வதி , சீதையின் பணிவிற்கும் அன்பிற்கும் வயப்பட்டு ,  தன மாலையை நழுவவிட்டாள். பின் புன்னகை பூத்தாள்.
சீதை மிகவும் சிரத்தையுடன் அந்த பிரசாதத்தை தலையில் சூட்டிக் கொண்டாள். கிரிஜா மகிழ்ந்து சொன்னாள்--"சீதா!
என்னுடைய உண்மையான ஆசிகளைக் கேள் .
உன்னுடைய மன விருப்பம் நிறைவேறும். ராரதரின் வார்த்தைகள் சத்தியமானது. சாத்தியமாகக் கூடியது. யாரை உன் மனது விரும்புகிறதோ ,அவரே உன் மணவாளன் ஆவார். அவர் இரக்கத்தின் கஜானா. (பொக்கிஷம் }சகலமும் அறிந்தவர். உன்னுடைய  நல்ல ஒழுக்கத்தையும், அன்பையும் நன்கு அறிந்தவர். இவ்வாறு ஸ்ரீ கிரிஜா தேவியின் ஆசிர்வாதம்
கேட்டு ஜானகியும் தோழிகளும் மிகவும் மகிழ்ந்தனர்.

துளசிதாசர்  சொல்கிறார் ---"பவானி யை   மீண்டும் மீண்டும் வணங்கி   சீதை மிக மகிழ்ச்சியுடன்  அரண்மனைக்குத்
திரும்பினாள், கௌரியின் அனுகூலமான ஆசிகளை நினைத்து சீதையின் மனத்தில் அதிக ஆனந்தம் ஏற்பட்டது.
அழகான நன்மையின் அடையாளமாக இடது அங்கங்கள்
துடிக்கத்தொடங்கின.

ராமரும் லக்ஷ்மணனும் சீதையின் அழகைப் புகழ்ந்து கொண்டே   குரு  இருந்த மாளிகைக்குச்  சென்றனர்.
ஸ்ரீ ராமர் விஷ்வாமித்திரரிடம் எல்லாமே சொன்னார்.
அவருடைய எளிய சுவபாவம் . எதையும் மறைக்கவோ,
யாரையும் ஏமாற்றவோ விடாது.
புஷ்பங்களைப் பெற்று முனிவர் பூஜை செய்தார்.
பிறகு இரண்டு சகோதரர்களையும் ஆசீர்வதித்தார்.
உங்கள் மனவிருப்பம் வெற்றிபெறும் என்றார்.
இருவரும் மகிழ்ந்தனர்.
ரிஷி உணவருந்தி விட்டு சில
பழமையான கதைகளைச் சொன்னார்.
பகல் பொழுது கழிந்தது.
 குருவின் அனுமதி பெற்று இருவரும்
 சந்தியா வந்தனம் செய்யச் சென்றனர்.
கிழக்கில் நிலவு தோன்றியது.
 ராமர் நிலவை சீதையின் முகம்  என்று
  நினைத்து மகிழ்ந்தார்.
 பிறகு அவரின்னா எண்ணம் மாறியது
இந்த நிலவு சீதையின் முகம் போல்
அழகாக இல்லையே என்று நினைத்தார்.
 இந்த  நிலவு உப்பான சமுத்திரத்தில் இருந்து தோன்றியுள்ளது.
விஷமே இதன் சகோதரன்.
 கருப்பான களங்கமும் உள்ளது.
 இந்த  நிலவு சீதையின் முக அழகுக்கு ஈடாகாது. இணையாகாது.
சீதையின்  முகத்தை நிலவோடு ஒப்பிட்டால்
என்னுடைய உவமை சரியில்லாமல் ,
நான் ஒரு குறை உள்ளவனாகிவிடுவேன் .
இவ்வாறு சீதையின் முகத்தையும் ,
நிலவையும் ஒப்பிட்டுவர்ணித்து
 சிந்தித்தே இரவு வெகு நேரமாகிவிட்டது.   ரிஷியிடம்

அனுமதி  பெற்று ஓய்வெடுக்கச் சென்றார்.
 இரவு முடியும்  போதும் அண்ணன் விழித்திருப்பதைக்
கண்டு  லக்ஷ்மணன் இருகரங்கள் கூப்பி
  பிரபுவின் மகிமையைப்  புகழ்ந்து சொன்னான் ---
சூரியோதயம் ஆனதுமே அல்லி வாடுவதுபோல் ,
நக்ஷத்திரங்கள் ஒளி இழப்பதுபோல் ,
உங்கள் வருகையைக் கேட்டு அனைத்து அரசர்களும் தங்கள்
பலத்தை இழந்துவிட்டனர்.
எல்லா அரசர்களும் ஒளி இழந்து கலை இழந்து காணப்பட்டனர்.

  இரவு முடிந்ததும்  தாமரை,சக்ரவாகைப் பறவை, வண்டுகள், மற்றும் பலவிதப் பறவைகள் மகிழ்கின்றன.
அவ்வாறே நீங்கள் தனுஷை உடைத்ததும் ,
உங்களுடைய அனைத்து பக்தர்களும் மகிழ்வார்கள்.
சூரியோதயம் ஆனதும் இருள் விலகுகிறது.
நக்ஷத்திரங்கள் மறைந்து விட்டன. உலகம் மிக பிரகாசமாகிவிட்டது.
அண்ணா ரகுநாதரே!சூரியன்  உதயமாகி  ,எல்லா அரசர்களுக்கும்  தங்கள் பிரதாபத்தைக் காட்டியிருக்கிறது.
உங்கள் பசங்களின் வலிமையைக் காட்டவே  , இந்த வில்
உடைக்கும்  போட்டி உருவாகிஉள்ளது.
 சகோதரரின் கூற்றைக்  கேட்டு  பிரபு புன்சிரிப்பு சிரித்தார்.
பிறகு காலைக் கடன்களை முடித்துவிட்டு ,
ஸ்நானம் செய்துவிட்டு ,  குருவிடம் சென்றார்.
 குருவின் சரணங்களில் தலை வணங்கினார்.
   இங்கே ஜனகர்  சதானந்தத்தை  அழைத்து ,
அவரை விஷ்வாமித்திரரிடம் அனுப்பினார்.
அவர் விஷ்வாமித்திரரிடம்   ஜனகரின்
 வேண்டுகோளைச் சொன்னார்.
  விஷ்வாமித்திரர் மகிழ்ந்து இரண்டு
சகோதரர்களையும்   அழைத்தார்.
     ராமர் சதானந்தரை  வணங்கி
 ரிஷியின் அருகில் அமர்ந்தார்.
 முனிவர் ராமரிடம்  ஜனகரின் அழைப்பைச்
சொன்னார்.