ஆன்மிகம் என்றால் தியாகம் வேண்டும் .
ஆடம்பரம் அறத்திற்கு மறத்திற்கு வேண்டுமா?
ஆண்டவனைக் கண்டோர் ,ஆண்டவன் செய்தி சொன்னோர்
ஆடம்பரம் என்றால் வெறுத்து ஒதுங்கியவர்கள்.
கானகவாசம் குடிசை வாசம் தவம் தியானம்.
ஆனால் இன்றைய ஆன்மிகம் ஆஸ்தி சேர்க்கிறது.
ஆசார்யர்கள் சாமியார்கள் பொற்கிரீடம் ,
பொன்னாசனம் கேட்கின்றனர்.
கொடுப்பவர்களுக்கு பணம் வரும் விதம் என்ன ?
கொடுப்பவர்கள் வாழ்க்கைத்தரம் என்ன ?
கொடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் என்றால்,
ஏழைகளுக்கு இறைவன் வரம் /அருள் கிட்டாதா/?
அரசபோகம் துறந்து கானகம் சென்றார் சித்தார்த்தர்
ஞானம் பெற்றார். புத்தர் ஆனார்
அதில் ஆடம்பரம் கருத்துவேறுபாடு
இரண்டுபட்டது புத்த மதம்.
தோற்றுவித்தவர்கள் மனித நேய ஒற்றுமைக்கு என்றால்
பின்னால் வந்தவர்கள் இரண்டுபடுத்தும் காட்சி .
இஸ்லாம் என்றாலும் கிறிஸ்தவம் என்றாலும்
ஹிந்து என்றாலும் மனித ஒற்றுமை இல்லா வேற்றுமைகள்.
உருவமில்லா இறைவன் உருவமற்ற இறைவன் ,
ஒரேமதத்தில் இந்த வேறுபாடு .
இறைவனின் பல உருவங்கள் ,மந்திரங்களில் சில மாற்றங்கள்
சிவா விஷ்ணு வேறுபாடு.
சியா சன்னி என்ற வேறுபாடு
காதொலிக் ப்ரோடேஸ் டாண்டு
இன்னும் எத்தனையோ இறைவன் வழிபட ஒற்றுமை இல்லா
வையகம் ,இதற்கு அடிதடி குத்து வெட்டு கொலைகள்
எந்த மத ஆ ண்டவன் சொன்னான்
என்னை வழிபடா ,என் வழி வரா ,மனிதனைக் கொன்று குவி .
அன்பில்லா ஆண்டவன் இரக்கமில்லா
ஆண்டவன் இல்லை வையகத்தில்
மனித ஒற்றுமைகாணா மதவாதிகள்
ஆன்மிகம் புரியா தெளியா மேதைகள்
உள்ளவரை உலகில் இல்லை அமைதி.
வெறுப்பில் வேதனை தானே மிஞ்சும்.
அன்பு ,மனிதநேயம் மனித ஒற்றுமையே
ஆன்மிகம் ஆடம்பரமல்ல .