இறை வழிபாடு என்பது இதயத்தில் இருந்து வரவேண்டியது.
ஆடம்பர வழிபாடு என்பது அலௌகீகம் கிடையாது.
லௌகீக வழிபாட்டிற்கு மக்களைக்கவர
ஆண்டவன் அளித்த அறிவை தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
அனைவரையும் சமமாக பாவிக்கும் இறைவன்
அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும் பொழுது
இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைப்பதே பக்தி.
உண்மயான இறைப்பற்று உள்ளோர்
உள்ளத்தில் இருத்தி வழிபடுவர்.
பரிகாரம் செய்தால் பாவ விமோசனம் என்றால்
எத்தனை பேர் பரிகாரம் செய்து மன்னிப்பு பெற்றுள்ளனர்.
தசரதரின் யாகத்தின் பலன் புத்திர பாக்கியம் என்றால்
அது நேரடியாக கிடைத்திருக்கவேண்டும்.
அவர் செய்த பாவம் புத்திர சோக மரணம்.
பூஜைகள் செய்தாலும் சிறைவாசம் தப்பாது.
களங்கம் களங்கமே.
ஆகையால் பக்தி என்பது ஆழமான நேர்மை ,சத்தியம் .
அலௌகீக நாட்டம் மற்றுமே.
தங்கக்ரீடம் சாத்துவதால் அதை சம்பாதித்த விதம்
புண்ணியம் அல்லது பாவம் படிதான் ஆண்டவன்
அமைதியோ /மகிழ்ச்சியோ /மன நிறைவோ தருவான் .
இறைவன் அருள் பெற பொருள் தேவையில்லை.
பொருளுள்ள மெய்யான பக்தியே போதும்.
No comments:
Post a Comment