Sunday, March 29, 2015

பொருளுள்ள மெய்யான பக்தியே போதும்.

இறை வழிபாடு என்பது  இதயத்தில் இருந்து வரவேண்டியது.

ஆடம்பர வழிபாடு என்பது அலௌகீகம் கிடையாது.

லௌகீக வழிபாட்டிற்கு  மக்களைக்கவர 

ஆண்டவன் அளித்த அறிவை  தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அனைவரையும் சமமாக பாவிக்கும் இறைவன் 

அங்கிங்கெனாதபடி  எங்கும் இருக்கும் பொழுது 

இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைப்பதே  பக்தி.

உண்மயான   இறைப்பற்று உள்ளோர் 

உள்ளத்தில் இருத்தி வழிபடுவர்.

பரிகாரம் செய்தால் பாவ விமோசனம் என்றால் 

எத்தனை பேர் பரிகாரம் செய்து  மன்னிப்பு பெற்றுள்ளனர்.

தசரதரின்  யாகத்தின் பலன் புத்திர பாக்கியம் என்றால் 

அது நேரடியாக கிடைத்திருக்கவேண்டும்.

 அவர் செய்த பாவம் புத்திர சோக மரணம்.

பூஜைகள்  செய்தாலும் சிறைவாசம் தப்பாது.

களங்கம் களங்கமே.

ஆகையால் பக்தி என்பது ஆழமான நேர்மை ,சத்தியம் .

அலௌகீக நாட்டம் மற்றுமே.

தங்கக்ரீடம் சாத்துவதால் அதை சம்பாதித்த விதம் 

புண்ணியம்  அல்லது  பாவம்  படிதான் ஆண்டவன் 

அமைதியோ  /மகிழ்ச்சியோ /மன நிறைவோ தருவான் .

இறைவன்  அருள்  பெற பொருள் தேவையில்லை.

பொருளுள்ள  மெய்யான  பக்தியே போதும்.





Sunday, March 22, 2015

மனது  என்பது  நிலநடுக்கம் ,
மனது என்பது   கடல் அலை.
மனது நதி நீர் ஓட்டம்.
மனம் ஒருநீர்குமிழ்.

மனம் அலைபாயும்
மனம்  தாவும் .
மனம் காதலிக்கும்
மனம் பேராசைப்படும்
மனம் பொறாமைப்படும்.

   இதெல்லாம்  இல்லா மனம்  வேண்டும் .

எப்படி ?
அதுதான்   இறை பயம்.

இறை தியானம் .

அது  பயிற்சியால்  வரும்.

முயற்சியால்  வரும்.

இறைவனின்  நாம ஜெபத்தால்  வரும்.

இறைவன் அருளால் வரும்.

இயற்கையாக வந்தால்  இறை அருள்.

முயன்று வந்தால் குரு அருள்.


Saturday, March 21, 2015

தொண்டரடிப்பொடி ஆழ்வார் .

வையகத்து விந்தைகள்   ,

அவனியின் அதிசயங்கள் 

அவன்  செய்யும்  மாயைகள் .

பூ என்றால்  பூவின் வகைகள்,

பூவை என்றால் அவளின் குணநலன்கள் ,

பூலோக விந்தைகள்.

பகவானின்  படைப்புகள் .

அவனியில்  அவன் படைப்புகள்
 அவன்  செய்யும்  லீலைகள்,

ஆணவத்தால் அழிந்தோர் பலர் .

அன்பால்  உயர்ந்தோர்  பலர் ,

உதவியதால்  ,தொண்டால் 

தெய்வமாகிறான்  மனிதன்.

மானுட சேவையே  மஹேசன்   சேவை.
தாசானுதாசன் .
தொண்டரடிப்பொடி  ஆழ்வார் .




Sunday, March 15, 2015

ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல். அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.

அன்பு  இருக்கும் இடத்திலே  பண்பு ,

அன்பு இருக்கும் இடத்தில் பணிவு

பணிவு  இருக்கும் இடத்தில் கல்வி

கல்வி இருக்கும் இடத்தில் செல்வம்

இதெல்லாம் இருக்கும் இடத்தில்  இறைவன் ,

அன்பு ,அறம்  இருந்தால் இல்லறம் நல்லறம்.
அன்பு இல்லை என்றால் அறக்கடவுள் சுட்டெரிப்பார் -- வள்ளுவர் .
இந்த  அன்பே  ராகத்திலே அனுராகம் எய்தினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா  --என்றார் கவிஞர்,

காதாலகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி  என்றார் சிவ பக்தர்.

அப்படி என்றால் அன்பிற்கும் ஆண்டவனுக்கும்

ஒரு தொடர்பு  உண்டு .நிச்சயம் உண்டு.

அந்த அன்பில் ஆண்டவன் ஒருவனே மனதில் நிகைக்கவேண்டும்.

மீரா பாடுகிறாள் --எனக்கு கிரிதர கோபாலனைவிட வேறு யாரும் இல்லை.

சத்சங்கத்தில் பாடுகிறேன் அதில் எனக்குந்த நாணமும் இல்லை.
அரண்மனை விட்டு வந்துவிட்டேன் , எனக்குத்தான் அவன் இருக்கிறானே,
எந்த ஆசையும் இல்லை; வெட்கமில்லை; ரோசமில்லை ; மானமில்லை ;

இறைவனே எல்லாம் எனக்கு . இந்த மனப்பக்குவமும்

பக்தியும் பாசமும் அன்பும் ,உலகியலில் பற்றற்ற நிலையும்

ஆண்டவனை அடையும் நிலை. இந்த நிலை உள்ளவருக்கு

பிரம்மானந்தம் கிடைக்கும்.

அந்த பரமானந்தம்  அனுபவிக்க முடியும் ; சொல்ல முடியாது.

அதை  கபீர் "गूंगा गुड खायिकै" என்கிறார்.
ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல்.
 அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.


Saturday, March 14, 2015

ஸ்மரணம் நாம ஸ்மரணம் செய்யும்போது

ஆண்டவன்  ஆனந்தமளிப்பவன் ,

                           ஆறுதல் தருபவன்

                             ஆற்றுப்படுத்துபவன்

                     
எப்போது ?

                        உண்மையாக  இருக்கும்போது ,

                       உபகாரம்  உதவிகள்  செய்யும்போது

                       ஆழ்மன தியானம் செய்யும்போது

                        ஆணவம் ஒழிக்கும்போது  
                       
                        ரௌத்திரம் அடக்கும் பொது

                      ஆசைகள் ,பேராசைகள் ஒழியும்போது

                       உலகில் ஒட்டியும் ஒட்டாமலும்

                       பரமனின் பாதமே சரணம் என்று

                        சரணாகதி  அடையும்போது.
                        சமயம்  கிடைக்கும் போதெல்லாம்
                       ஸ்மரணம் நாமஸ்மரணம்  செய்யும் போது.