மந்திரமும் தெரியவில்லை ,
எந்திரமும் பதிக்கவில்லை
கண் மூடி தியானமும் செய்யவில்லை
அலைபாயும் மனம் நிலையாகவில்லை.
அலை என்று ஓயும் ,மனம் என்று நிலையாகும்
அலைகளுக்கு நடுவில் குளியல் போல்
அலைபாயும் மனத்தின் நடுவில்,
அன்பே ஆண்டவரே!
உன் மீது நினைவலைகளும் சேர்ந்தே பாயும்.
அடியேனின் பிழை அலைகள் பொறுத்து
நினைவலைகள் கண்டு உன் அருள் அலைகள்
வீச வந்த அலை அன்பே ஆண்டவன்.
அலைகளுக்கு இடையில் அன்பலையா?
அலைகளிலும் உண்டாம் ஆண் அலை ,பெண் அலை.
அதனால் அன்பலைக்கும் அங்கே இடம் உண்டு.
பன்பலை யும் உண்டு. என்பிழையும் உண்டு.
அறியாப் பிழையும் உண்டு ,அறிந்த பிழையும் உண்டு.
சிறு பிழையும் உண்டு ,பெரும் பிழையும் உண்டு.
மன்னிக்கும் பிழையுண்டு ,மன்னியா பிழையும் உண்டு.
நீ படைத்த பிள்ளை நான். பிழை பொறுத்துக் காத்தல் உன் குணம்.
அன்பலை அறிந்து , அருள் அலை அளிக்க உன் நாமம் ஒலிக்க
உன் அன்புப் பார்வைஎன்மேல் செலுத்துக
அன்பரின் ஆண்டவரே! அருட் கடலே.!

2 comments:
அன்பலை அறிந்து , அருள் அலை அளிக்க உன் நாமம் ஒலிக்க
உன் அன்புப் பார்வைஎன்மேல் செலுத்துக
அன்பரின் ஆண்டவரே! அருட் கடலே.!
எங்கள் மேலும் என வேண்டிக் கொள்கிறோம்
மனம் தொட்ட கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி
Post a Comment