Tuesday, June 25, 2013

வீடு தேடி வருவான் விட்டலன்.


பொருளின்றி
 அருளா ? பொருளா?

அருள்  பொருள் உள்ளோருக்கா ?

ஆலயம்  ஆயிரம் வினாக்கள்.


இன்னல் தீர ஆலயம் .


ஈத்துவக்க ஆலயம்


எண்ணங்கள்   நிறைவேற  ஆலயம்.

ஏற்றம் பெற ஆலயம்.

ஐம்புலன்கள் அடக்க ஆலயம்.

ஒப்பில்லா   ஓவியமாய்

ஔஷதமாய்   அவன் க்ருபா கடாக்ஷம் பெற

ஆலயம் . ஆனால் ,இன்று  ஆலயம் என்பது

ஆஸ்தி உள்ளோருக்கு .

அந்தஸ்து உள்ளோருக்கு.

உண்மை அன்பர்கள் ஊர்ந்து செல்ல .

ஊர் செல்வாக்கு உள்ளோர்

  தத்கால்  தர்ஷனம்.

என்றுமே உண்மை பக்தர்களுக்கு

ஆண்டவன்  அருள் தாமதம் தான்.

அசுரர்களுக்கு வதம் செய்தபின்  மோக்ஷம்.

அன்பர்களுக்கு  உயிருடன் மோக்ஷம்.

உண்மை பக்திக்கு உள்ளத்தூய்மை.

ஆழமான அன்பு ,ஆழ்நிலை  தியானம்.

பக்திக்கு ஏகாந்தம்.

முக்திக்கு ஏகாந்தம்.

லௌகீகம் என்பதில்   பேரரவம் .

ஏகாந்த  இன்பம் இல்லை.



அலௌகீகம்   என்பதில்  ,

ஓம் சாந்தி !ஓம் சாந்தி.! ஓம் சாந்தி,!

ஏகாந்தத்தில்  ரமணர் மஹரிஷி  ஆனார்.

மௌனம்  காத்து  மௌன தவம்.

ஹீரா குகையின் ஏகாந்தம்  அல்லாவின் செய்தி,

முஹம்மது   பைகம்பர் ஆனார்.

ஏகாந்த தவம் வால்மீகி முனிவரானார்.

ஆடம்பர ஆரவார ஆஸ்ரமங்கள்  கோடியில் புரண்டு

கேடிகளாகும்  கதைகள்.

உத்தரகாண்ட்  சாமியார்கள் அடித்த கொள்ளை ,கற்பழிப்பு.

பக்தர்களே ! பக்தியின் பலன் ஆடம்பரத்தில் இல்லை.

ஆஷ்ரமங்களில்  இல்லை;

இறைவன் அங்கிங்கு எனாதபடி  எங்கும் உள்ளன்.

தூணிலும் துரும்பிலும்.

அவனைத்தேடிச் சென்று துன்பம் அடையாமல்,

உள்ளத்தூய்மையோடு   வழிபட்டு

ஆண்டவனை அன்புடன் அழைத்தால்

உங்களுக்கு அருள் புரிய

சேவை ஆற்ற உங்களிடம் வருவான்.

வீடு தேடி வருவான் விட்டலன்.

அன்பே ஆராதனை.

.






முதலில் அன்பு/பற்றுவை. நம்பிக்கை வை, ஐயம் அகற்று.அன்பே ஆண்டவன்.

அன்பே ஆண்டவன்.

 இந்த அன்பு  என்பதே இச்சை ஏற்படுத்தி

 ஞானத்தைக் கொடுத்து

 கிரியையில் ஈடுபடுத்தும்.

இதை ராமனுஜரிடம்  வந்த ஒரு பக்தனுக்கு விளக்குகிறார்.

பக்தன்  ராமாநுஜரிடம் ,
நான் இறைவனைக் காண வேண்டும்.

ராமானுஜன் அவனிடம் ,

 நீ யார் மீதாவது அன்பு  வைத்துள்ளாயா?

பக்தன்:
 அய்யா!நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்

.யாரையும் நான் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை

.எனக்கு யார்மீதும் அன்போ காதலோ கிடையாது.

இதே கேள்வியை மூன்றுமுறை ராமானுஜர் கேட்க ,

அவன் நான் யார் மீதும் அன்பு வைக்கவில்லை,

நான் உத்தமன்.குணசீலன் என்றான்.

இறுதியில் ராமானுஜர் ,

நீ இறைவனைக் காண முடியாது.

இறைவனைக்காண  அன்பு வேண்டும்.

அந்த அன்பில் நம்பிக்கை வேண்டும்.


அவநம்பிக்கை இருக்கக் கூடாது.

முக்கியமாக சந்தேகத்திற்கு

 இடம் அளிக்கக் கூடாது.

இல்லறத்தில் கணவன்-மனைவி

ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கவேண்டும்.


அங்கு சிறு சந்தேகம் இருந்தாலும் ,


அவநம்பிக்கை ஏற்பட்டாலும்  விரிசல் தான்.

அவ்வாறே நட்பு;பக்தி;

அன்புகாட்டாத உனக்கு ஆண்டவன் மீது அன்பு இருக்கவேண்டும்.


அதுவே இச்சையாக மாறி

 ஞானத்தைக் கொடுத்து

 இறைவனைக்காணும்

 நம்பிக்கையையும்

அதற்கான செயல் முயற்சியும் தரும்.

முதலில் அன்பு/பற்றுவை.

 நம்பிக்கை வை,

ஐயம் அகற்று.

 இல்லை எனில்  இறைவனைக் காண முடியாது.

அன்பே  ஆண்டவன்.

காதலாகி கசிந்துருகி  கண்ணீர் மகிழ்கி


அதுதான்  மீரா, ஆண்டாள்,ஆழ்வார்கள்,நாயன்மார்கள்

அடியார்கள்  காட்டும் பக்தி.


Sunday, June 23, 2013

அன்பே ஆண்டவன். பவித்திரமான பக்தியே ஆண்டவன் அருளாகும்.

ஆண்டவன்  அருள் ஆடம்பரத்தால் ,

பொன்னும் பொருளாலும்   கிட்டுமென்றால்,

வைரக்கிரீடத்தாலும் , பொன்-நகையாலும்

காணிக்கையால் காட்சி கிடைக்கும் என்றால் ,

வேள்விகள்-யாகங்கள்  ப்ராயச்சித்தத்தால்

இறைவன்   கருணை  கிட்டும் என்றால்,

நந்தனார் சரித்திரம் இல்லை.

கண்ணப்பர்  சரித்திரம் இல்லை.
துருவ நக்ஷத்திரக்   கதையோ,

பிரஹ்லாதன் கதையோ ,

அருணகிரிநாதர்,அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இல்லை.

ஆதி சங்கரர் இல்லை;துளசிதாசர் இல்லை.கபீர் இல்லை;

பாண்டுரங்கன் விட்டல்  இல்லை;பண்டரிபுரமே இல்லை;

ராமகிருஷ்ண பரமஹம்சர்

விவேகானந்தர் இல்லை. யாருமே இல்லை.

முஹம்மது நபி இல்லை; ஏசுநாதர் இல்லை.

உண்மையான அருளாளர்களுக்கு ,

இறை அன்பே போதுமன்றோ.

லௌகீக சுகங்களுடன் இன்றைய ஆஷ்ரமங்கள்.

பொன்னும் பொருளும் கறுப்புப்பணமும் குவிந்து கிடக்கும்

கருவூலங்கள். களங்கங்களின்  புகலிடங்கள்.

மெய்வழி பொய்வழி ஆன கதை.

நித்தியானந்தம்,பிரேமானந்தம்,சதுர்வேதி கதைகள்,

உள்ளத்தூய்மையுடனான  அன்பே ,

பவித்திரமான பக்தியே ஆண்டவன்  அருளாகும்.









Saturday, June 22, 2013

மண்னும் பொன்னும் ஒன்றே.


அன்பு  என்றால் என்ன?

இதை கபீர்தாசர்  ஹிந்தியில் இரண்டரை எழுத்து என்கிறார்.

ப்ரேம் ,இஷ்க் ,ப்யார்  என்ற ஹிந்தி வார்த்தைகள் 

அன்பைக்குரிக்கும். காதல் என்பதைக்குறிக்கும்.

அன்பு.காதல்  இரண்டரை எழுத்தே .


पोथी पढी -पढी जग मुआ ,पंडित भया  न कोय.
ढाई अक्षर प्रेम का ,सो पढ़े पंडित होय.    

என்கிறார் கபீர்.

 நூல்கள்  படிப்பதால் யாரும் மேதை யாவதில்லை.

அன்பிற்கு இரண்டரை எழுத்து அதை படிப்பவன் மேதை ஆகிறான்.

இது கபீர்  அன்பைப்பற்றி கூறுகிறார்.

இந்த அன்பு இறைவன் மேல்  இருக்கவேண்டும் .

மனிதர்கள் மேல் அன்பு வைத்தாலும் ,
இறைவன் மீது  அன்பு வைத்தாலும் 
எதையாவது அவர்களிடம் இருந்து
 எதிர்பார்த்தால்  மிஞ்சுவது துன்பமே.
இந்த அன்பு எதையும் எதிர்பாராமல் 
இருக்கவேண்டும்.
இது நிரந்தரமாக இருக்கவேண்டும்.

இதை சத்திய சாய்பாபா கூறும்போது  
நாம் இன்று ஒரு இறைவனை வழிபடுகிறோம்.
இன்றைய எனது பேச்சில் ராம மகிமை என்றால் 

ராமா ,ராமா என்று இங்குள்ள  பக்தர்கள்  கூறுவர்.

மாலையில் மற்றொரு தேவி உபாசகர்
 உபன்யாசம் கேட்டால் மனது  தேவியைநாடும்.
நண்பர்கள்,உற்றார் உறவினர்கள் 
இந்த இறைப்பற்றையும் அன்பையும் 
வெவ்வேறு நாமங்களில் ,வெவ்வேறு உபாசன முறைகளில் 
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
பல ஆஷ்ரமங்கள். பல ஆலயங்கள். பல மதங்கள்.

இந்த இறைவனின் மேல் உள்ள உண்மை அன்பு என்பதை மாற்றி.
அதில் ஒரு மன சஞ்சலம்.
*********
 இதைப்பற்றி நான் மிகவும் சிந்தித்தேன்.
இறைவன் மேல் உள்ள பற்று  இறைவனின் நாமங்களால் 
எப்படி எல்லாம் சஞ்சலப்படுகின்றது.

ஒரு ஜோதிடரிடம் தங்கள் குடும்பத்தின் துன்பம்
 தீர ஆலோசனை கேட்டார் ஒருவர்.
ஜோதிடர் சோழி உருட்டினார்.
ஜாதகம் பார்த்தார் .
பின்னர் உங்கள் மூதாதையர் செய்த குல தெய்வ வழிபாடு 
நீங்கள் செய்யவில்லை என்றார்.
தெய்வங்கள் பல. அதில் குலதெய்வம் பற்றி சிந்திக்காத குடும்பம் அது.
இப்பொழுது இறைவனை வழிபடவேண்டும்.
குலதெய்வம் எது என்பதில் குழப்பம்.

வீட்டில் உள்ளோரை விசாரித்தால் .
நாம எல்லாக் கோயிலுக்கும் தானே போறோம்.
பாட்டி  முருக,முருகா என்றே சொல்லுவார் என்று ஒருவர்.
மற்றவர்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு தெய்வம் கூற 

குல தெய்வம் எங்கே?யார்?எப்படி வழிபாடு செய்யவேண்டும் ?
என்ற பிரச்சனை தீர ஒரு ஜோசியரைத் தேட ஆரம்பித்தனர்.

இறுதியில் ஒரு கிராமதேவதை என்ற முடிவிற்கு வந்தனர்.

அது எங்கே? என்ற தெளிவு வரவில்லை.

இப்படி தெளிவில்லா பக்தி.

மற்றொரு ஜோதிடர் நீங்கள் வழிபட்ட கோவில் சரிதான்.

அங்குள்ள கோயிலில் கிழக்குப்பக்கத் தூணில் மேற்குப்பாத்த 

ஒரு அம்மன் சிலை உள்ளது..அது தான் அந்தக்  கோயிலைக்காக்கிறது.

அதை வழிபடவில்லை. அதை மீண்டும் சென்று வழிபட்டு வாருங்கள்  என்றார்.


இப்படி இறைவனை வழிபடுவதில் எத்தனை ஐயங்கள். குழப்பங்கள்.

இதற்கு ஒரு  பழமொழி 

मन चंगा तो कठौती  में गंगा.

மனத் தூய்மை இருந்தால்,

வீட்டுக் கிண்ணத்தில் உள்ள நீரில்

 கங்கை இருப்பாள். 

 இதற்கு ஒரு உண்மை  சம்பவம்.

 இந்திக் கவிஞர் ரைதாஸ்  ஒரு காலணி செய்யும் தொழிலாளி.

அவர் கங்கைக்கரையில் இந்த தொழில் செய்துவந்தார்.

தினந்தோறும் கங்கையில் நீராட வரும் அந்தணர்,

ஒரு நாள் ரைதாசிடம் ,

நீ கங்கையில் ஸ்நானம் செய்ய வில்லையா?என்றார்.

அதற்கு நான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் ,

எனது பக்தி தூய்மையானது என்றார்.

பின்னர்,அந்த அந்தணணிடம்  ,

கங்கை அம்மாவிடம் நான் சொன்னதாகச் சொல்லி 

 ஒரு வெகுமதி பெற்றுச் செல் என்றதும் 

அவ்வாறே அந்தணன்  நதியில் சென்று கேட்டதும் கங்கா தேவி 

 விலை மதிப்பில்லா ஒரு   கால் சலங்கை அளித்தாள்.

சுய நலமுள்ள  அந்தணன் மீண்டும் ரைதாசைப் பார்க்காமல் 

அந்த சலங்கையை தம் மனைவியிடம் கொடுத்தான்.

மனைவி மகிழ்ந்து ,

இந்த அபூர்வமான  சலங்கையை   அரசரிடம் கொடுத்தால்,

மகிழ்வார் என்றாள்.

அரசனின் மனைவி சலங்கையில் அதிகம் ஆசை கொண்டு 

 மற்றொரு சலங்கை வேண்டும் என்றதும் 

அந்தணன்  வேறுவழி இன்றி

 ரைதாசை மீண்டும் வேண்டினான்.

 அந்த காலணி தொழிலாளி

 மீண்டும் கங்கையிடம் பெற்றுச்செல் என்றார்.

அந்த உண்மையான இறைப்பற்று இருந்தால்.

கொடுக்குற தெய்வம் கூரையைப்பிய்த்துக் கொடுக்கும் 

என்ற தீவிர அன்பு,பக்தி இருந்தால் 

இறைவனை வழிபடுதலில் சஞ்சலம் இல்லாமல் இருந்தால்,

இயற்கையை நாம் வழிபட்டால்.

இறவன் அருள் நமக்குக் கிட்டும்.

துருவனின் பக்தி,பிரகலாதன்,கண்ணப்பன்,நந்தனார் ,விட்டல்தாஸ் 

எத்தனையோ பக்தர்கள்   இறைவன் மேல் மட்டும் அன்பு வைத்தவர்கள்.

பல சோதனையிலும் சாதனைகள் புரிய ,

குறைந்த பக்ஷம் நமது  வட்டத்தில் 

இறைவன் மேல் மட்டுமே அன்பு வைக்க வேண்டும்.

लाली मेरे लाल की ,जित देखो तित लाल.
लाली देखन मैं गयी ,मैं भी हो गयी लाल.

என் அன்பரைப் பார்க்க நான் சென்றேன்.

அங்கிங்கேனாதபடி எங்கும் அவரே காட்சி அளித்தார்.

நான் அன்பரைக் காணச் சென்றால்  நானே அன்பராகிவிட்டேன்.

கபீர் தன்னை பெண்ணாகவும்

 இறைவனைக் காதலனாகவும்

 எண்ணி  பாடிய  தோகை இது.

இப்படி இறவன் மேல் உள்ள காதல் ஒன்றாக ஐக்கியமாக வேண்டும்.

ஆண்டாள் போல்,மீரா போல்.

இவ்வித  பக்தியில் இறைவன் சக்தி மட்டுமே .

நாம பேதம்  வேண்டாம்.

இறவன் ஒருவனே.

மண்னும் பொன்னும் ஒன்றே.

அதனால் உருவாக்கப்படும் பண்டங்கள் வேறு.

ஆதி  மூலம் ஒன்றே.

அன்பே ஆண்டவன்.















Friday, June 21, 2013

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

நாத்திகம்  பேசும்  நாத்தீகர் களே!

இயற்கைப் பேர் அழிவிலிருந்து  பக்தர்களை ஆண்டவன் காக்க வில்லை

என்ற குற்றச்சாட்டு.

உண்மை -பொய் ,நியாயம் -அநியாயம்  நல்லது-கெட்டது

அறியும் அறிவு படைத்த பகுத்தறிவு படைத்த மனிதன்

இயற்கையை அழித்து  இன்னல் தேடிக்கொண்டால்  யார் குற்றம்.

திருடாதே  தண்டனை கிடைக்கும் என்றால் திருடி தண்டனை பெற்றால்  யார் குற்றம்?

மாற்றான் மனைவி /கணவன்  மேல் ஆசைப்பட்டு ,

கள்ளக்காதலனுடன் சேர்ந்து /காதலியுடன் சேர்ந்து கொலை செய்தால் யார் குற்றம்.

இருவருமே இறைவனை வழி படுவோர்தான்.

ஊழல்   அரசியல்  வாதிகளை வளர்த்துவிடும் மக்கள்,

பசுமை வயல்களை வீடுகளாக .பொறியியல் கல்லூரிகளாக

மாற்றும்   குற்றம் யார் குற்றம்?

ஏறி-குளங்கள்.மலைகள் காணாமல் போவது யார் குற்றம்.

பகுத்தறிவு பிரசாரம் செய்யும் நாட்டில் ,தந்தை பெரியார் பிறந்த நாட்டில்.

ஆண்டவனுக்கு பாலாபிஷேகத்தை வீண்,அதை ஏழைக்குழந்தைகளுக்கு

கொடுக்கலாமே  என்ற தலைவரைப் பின்பற்றி

தனிக்கட்சிகள் தொடங்கி  நாற்பத்து நான்கு ஆண்டுகள்

மாறி-மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி உள்ள நாட்டில்

நடிக-நடிகை கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்கள்

கோயில் கட்டும் வெறியர்கள் உள்ள நாட்டில்,

ஆலயங்களின் தெப்பக்குளங்கள்  வறண்டு கிடக்கும் நாட்டில்

ஆலயங்களின் சொத்துக்களை அமுக்கி வாழும் நாட்டில்.

உண்டியல் பணத்தை   கொள்ளை இடும் நாட்டில்,

ஆண்டவன் காப்பாற்றவில்லை என்பது பகுத்தறிவு வாதமல்ல.

இயற்கைச் சீற்றத்திற்கு சட்டத்திற்குப் புறம்பான

அரசியல் மற்றும் சுநல வாதிகளே காரணம்.

 இறைவனல்ல. இறைவனல்ல. இறைவனல்ல.

பழனி வையாபுரிக் கண்மாய்  பாதி பேருந்து நிலையமானது ,

கிரி வீதி கடம்பவனம் அழிந்து ,பழனி ஒரு

வணிக ஸ்தலமாக மாறுவது,

பேருந்து நிலையம் இறங்கினால்  பன்னீர் ஜவ்வாது வாசனை போய்

சிறுநீர் ,சாக்கடை துர்நாற்றம்.


இறைவன் ஏன் காப்பாற்றவில்லை என்றால்.

ரோப் கார் அங்கு நடக்கும் அராஜகம் ஆண்டவனுக்கே பொறுக்காது.

இறைவானா?இயற்கையா ?

மனிதனின் தவறா ?  பகுத்தறிவு மன சாட்சியுடன் சிந்திப்பீர்.

இயற்கை செயற்கையானால் இயற்கையின் சீற்றம் உலக அளிக்கும்.

விஞ்ஞான  உலகின் வெளிப்படை  சூத்திரம்.

வன போஜனம் ,வன மஹோத்சவம் என்பது போய்

வன அழிப்பு  ,

பகுத்தறிவுப் பாசறைகள் இதைப்பற்றி பேசுமா?

ஆண்டவன் ஆண்டவன் என்ற ஒரே இல்லை கோசம்.

இவர்கள் பிரச்சாரத்தினால் கட் அவுட் பாலாபிஷேகம்.

இதைப்பற்றி பேசா பகுத்தறிவுப் பிரசாரம்

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

Thursday, June 20, 2013

.உன் குழந்தை நான். காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.

அன்பே ஆண்டவன் 
அன்பு என்றாலே கொடுப்பதே.

பெறுவதற்காக  அன்பு
 என்றால் சுயநலமே.
இறைவனிடம் செலுத்தும் அன்பு ,
அவன் கருணைக்காக.

அதையும் நாம் ஒரு வேண்டுகோளாக இருக்கக் கூடாது.

நீ  படைத்த  உடல்.!புகழோ, இகழ்ச்சியோ,
ஏற்றமோ  , தாழ்வோ,

வறுமையோ ,வளமோ , எல்லாமே 

இறைவன் செயல்.

துன்பமும்  இன்பமும்  நீ தருபவையே!

உன் குழந்தை  நான்.

எனக்கு வரும் சிறுமையும் பெருமையும் 
ஆரோக்யமும் நோயும் 
அனைத்தும் உன்னால் எனக்கு வரக்கூடியவை.
அல்லது தீரக்கூடியவை.

நான் உன்னிடம்  அன்பும் ,பக்தியும் செலுத்துகிறேன்.

என்னை உலகில்  படைத்த நீ,
எப்படி என்னை ஆட்டிப்படைத்தாலும் 

பக்தியும் உன் மீது அன்பு செலுத்துவதும் என் கடன்.

உன் குழந்தை  நான்.
காப்பது பெருமை ஏற்படுத்துவது உன் அருள்.