அறிஞன் யார்.
அவனியில் அமைதி அடைய ,
ஆனந்தமடைய,இன்பமடைய,
ஈகை குணம் பெருக,உள்ளம் அமைதி பெற,
ஊக்கம் பெற.எண்ணங்கள் தூய்மை பெற,
ஏழ்மை ஏற்றம் பெற,ஐயங்கள் அகல,
ஒருமைப்பாடு,ஊணாகி வளர,
மூன்றேழுத்து மந்திரம்,
அன்பு.அன்பு.அன்பு.
ஆண்டவன் மீது அன்பு.
சிவன் மூன்றேழுத்து,
விஷ்ணு மூன்றேழுத்து,
அல்லா மூன்றேழுத்து ,
ஜீசஸ் மூன்றேழுத்து ,
நம்பிக்கை யால்
அறம் வளர்த்து,
அன்பு செலுத்தினால்,
அவனியில் பேதமில்லை.
கபீர் கூறும் அன்பு காணீர்.
================================
நூல்கள் பல கற்று .
அறிஞர் யாரும் ஆவதில்லை.
அன்பு என்ற இரண்டரை எழுத்து,
அறிந்து தெளிந்தவனே அறிஞன்
================================.
,
No comments:
Post a Comment