Sunday, June 4, 2023

பசி.

 வணக்கம்.

சிறுகதை 

தலைப்பு --பசி.

 ஆறுமுகசாமி அறுபது வயதில் ஓய்வு பெற்றார். பசி என்பதை அறியாதவர்.

அறுசுவை உணவுப் பிரியர். அன்பு மனைவி  காலைச் சிற்றுண்டி மதியம் சாப்பாடு, மாலைச்சிற்றுண்டி,இரவு  சிறப்பான பலகாரம் என பசி என்பதை அறியாமல் வைத்திருந்தார். ஒரு நாள் கூட அவர் பசியோடு இருந்தது கிடையாது.  

    இன்று அவருக்கு பசி பற்றிய  பழமொழி நினைவில் வந்தது.

காரணம் காலை உணவு சற்று தாமதமாக வந்து தான்‌ . எட்டரை மணி காலை உணவு பத்து மணிக்கு.

 ஒன்பது மணி ஆனதும் பசியால் துடித்தார்.  மனைவி பங்களித்து பல முறை அழைத்தார்.   பசி வந்திட மற்றும் பறந்து போகுமாமே. பள்ளிப் பருவ ஔவையார் பாடல்‌ நினைவில் நின்றதாய் நினைவுக்கு வந்தது‌.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய்.   பசிக் அல்ல கொடுமை. பசி வயிற்றுப் பசி, உடல் பசி, அறிவுப்பசி,

இதில் பசிப்பிணி தான் முதலிடம். பசியுடன் இருப்பவனுக்கு அறிவு வேலை செய்யாது. செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்.  இது உண்மையா?

பசி நோக்கின் கருமமே கண்ணாயினார். இதெல்லாம் பொய்.

பசி இயற்கை என்று நினைத்தார். அப்பொழுது அவருக்கு  அவர் நண்பர் அருள்மொழி ஞாபகத்திற்கு வந்தார்.

அவர் இலக்கியப் பிரியர்‌ கையில் ஏதாவதொரு புத்தகம் இருக்கும் ‌ அலுவலகத்தில் அவர் சாப்பிட்டது கிடையாது ‌அவருக்கு இலக்கியப் பசி.

வீட்டில் பேரன் கைபேசியில் விளையாட்டு‌‌ பசி அறியாமல்  விளையாட்டு‌. மருமகளுக்கும்ஸ பேருக்கும் சாப்பாடு சண்டை.

பேரனிடம் இருந்து   அம்மா பசிக்கு என்ற குரல் இடி முழக்கமாக வெளி வரும்.   நண்பனும் பேரனும் எப்படி பசி உணராமல் இருக்கின்றனர்.  வேலை மும்முறத்தில் பசி தெரியாதாமே.

  இந்த சிந்தனையில் அவர்  பசியை மறந்து போனார். பசி என்பது வேலை இல்லாதவர்களுக்குத் தான். 

  வள்ளுவர் சொன்னதும் உண்மை தான் இனிமையான பாடல்கள் சொற்பொழிவுகள் அறிவுரைகள் பஜனைப் பாடல்கள் மணிக்கணக்கில் கேட்கும் போது பசிதெரிவதில்லை.

ஆராய்ச்சியாளர்கள் பசி உணர்வதில்லை. 

 பசித்துப் புசி என்கிறார் வள்ளலார்.

 தம்பதிகள் பல நாள் உணவருந்தும் தியானத்தில் ஈடுபடுகின்றனர்.

   புத்தர் தவத்தால் உடல் மெலிந்து களைப்புடன் காணப்பட்டார். அப்பொழுது படிக்காத மாடு மேய்க்கும் பெண் உணவருந்தாமல் உடலுக்கு சக்தி கிடைக்காது என்று தான் கொண்டு வந்த பல பாயாசத்தைக் கொடுத்தாள்.  புத்தர் பசி உணர்ந்தார் இல்லையா ? ஆனால் உணவு அவசியம் என்பதை அறிந்து கொண்டார்.

 உடல் ஆரோக்கியமாக இருக்க ஷா உணவு அவசியம். வேலைப் பளு வில் பசி தெரியாது.  

 காலை உணவுத் தாமதம் ஆறுமுகத்திற்கு இவ்வளவு சிந்தனை அளித்தது என்றால் பசி என்பதை அறியாமல் இருக்க  வேலையில்  ஈடுபடவேண்டும். தியானத்தில் ஈடுபடவேண்டும்.செவிக்கு உணவளிக்க வேண்டும். 

 செல்வத்துள் செல்வம் செழிக்க ஷா செல்வம் அச்சஎல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

 வள்ளுவர் சொன்னபடி சிந்தனைகள் இனிய பாடல்கள்  உபன்யாசங்கள் கேட்டால் பசியிருக்காது. அறுபது வயதில் ஒன்றரை மணி உணவு தாமதத்தால் பசி மறந்த ஆறுமுகசாமி யின் அனுபவமே  கதையாகி ஞானவழியாகும்.

சுய படைப்பாளர்.சுய சிந்தனையாளர்

சே.அனந்தகிருஷ்ணன்.


 


  .

No comments: