Wednesday, April 5, 2023

துளசிதாசர் இராமாயணம்-சுந்தர காண்டம்- பகுதி--மூன்று-3

  துளசிதாசர்  இராமாயணம்-சுந்தர காண்டம்-

                           பகுதி--மூன்று-3-

     
   விபீஷணன் தன் அமைச்சர்களுடன்  வந்து கொண்டிருப்பதை வானரங்கள் பார்த்தன.
அவர்கள் அவர்களை சிறப்பு ராஜதூதர்கள் என்று நினைத்தனர். விபீஷணனையும் அமைச்சர்களையும் நிறுத்திவைத்துவிட்டு  தங்கள் அரசன் சுக்ரீவனனிடம் தகவல் அறிவிக்கச் சென்றனர். பிறகு சுக்ரீவன்இராமரை சந்தித்தான்.ஸ்ரீஇராமரை வணங்கி இராவணனின் தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறான்.இராமர் சுக்ரீவனிடம் ,அன்பு நண்பரே!  இது சம்பந்தமாக உங்களுடைய ஆலோசனை
என்ன ?என்று கேட்டார். 
சுக்ரீவன் வானரங்களின் அரசன் இராமரை வணங்கி ,மனிதர்களின் ஆட்சியாளரே! கேளுங்கள்.
இந்த அரக்கர்களின் விருப்பத்தை ஒருவராலும் அறிந்துகொள்ள முடியாது. இந்த அரக்கர்கள் அவர்கள் விரும்பிய வடிவத்தை எடுக்கமுடியும். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. இந்த வஞ்சகர்கள் நமது இரகசியத்தை அறிந்து கொள்ள வந்திருக்கலாம். அதனால் இவர்களை கைது செய்யவேண்டும் என்றான். 
இராமர் சொன்னார்---
 அன்பு நண்பரே !  நீங்கள்  அரசியல் கொள்கைப்படி நல்ல எண்ணம் தான். ஒரு அரசன் எதிரியை நம்பும் வரை சந்தேகப்படவேண்டும்.அல்லது அவருடைய நோக்கம்  புரியும் வரை .உங்களது ஆலோசனை மிகவும் நட்பு ரீதியானது மற்றும் நீதி நெறிமுறையானது.  நான் என்னிடம் அடைக்கலமாக வந்தவர்களின்
மனதில் உள்ள அனைத்துத் துயரங்களையும் விரட்டிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளேன்.
ஒருவர்  தனக்கு சிறிது நஷ்டம் வந்தாலும் அடைக்கலமாக வந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

  ஸ்ரீ இராமர்  சொல்வதைக் கேட்டு  ஹனுமான் மிகவும் மகிழ்ந்தார். ஹனுமான் தனக்குத் தானே பேசிக் கொண்டார் ----அடைக்கலமாக வந்தவர்களை தந்தை மகனை நேசிப்பதுபோல் நேசிக்கிற இரக்ககுணமுள்ளவர் எனதுபிரபு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி. ஸ்ரீராமர்  அடைக்கலமாக வந்தவருக்கு முழுபாதுகாப்பும்  அளிப்பவர் என்பது   ஹனுமானுக்குத் தெரியும். ஹனுமானுக்கு சீதை இருப்பிடத்தை 
எளிதாக அடைய உதவியவர்  விபீஷணன். விபீஷணனை சுக்ரீவன் கைதுசெய்யவேண்டும்  என்றதும் ஹனுமான் வேதனைப்பட்டார்.  
அடைக்கலம் கேட்பவர் தீங்குவிளைவிப்பவராகவும்,பாவிகளாகவும் இருந்தால் விட்டுவிடவேண்டும்.அத்தகையவர்களிடம்  நட்புபாராட்டக்கூடாது. 

இராமர் கூறினார்--- லட்சக்கணக்கானவர்களைக் கொலை செய்த பிராமணன் அடைக்கலமாக வந்ததும் அவனைக் கைவிடவில்லை. மனிதன் மனம் மாறி என்னை நோக்கி வந்தால் இப்பிறவியில் செய்தபாவங்களும் முற்பிறவியில் செய்த  பாவகர்ம துயரங்கள் உடனே போய்விடும்.இயற்கையாகவே பாவ குணமுள்ளவர்கள் என்னை வணங்க விரும்பமாட்டார்கள். அயோக்கியர்கள், குறும்புத்தனமுள்ளவர்களுக்கு என்னை அணுகவும்  எதிர்க்கவும் துணிச்சல் இருக்காது.தூய்மையுள்ள இதயம் மட்டும் உள்ளவன் தான் என்னை அணுகமுடியும். வஞ்சிப்போர்கள் ,இழிவானர்கள் ,குற்றம் கண்டுபிடிப்பவர்கள் ஆகியோரை என்றுமே நான் விரும்பமாட்டேன். விபீஷணனன் மனதில் தீய எண்ணங்கள்  இல்லை. அதனால் தான் அவன் என்னைத் தேடி வந்திருக்கிறான். 
வானரங்களின் அரசே!இராவணன் இரகசியங்களை அறிய விபீஷணனை அனுப்பியிருந்தாலும் பயப்படவேண்டியதில்லை.இழப்பதற்கு எதுவும் இல்லை. அன்பு நண்பரே! என் தம்பி இலட்சுமணன் 
ஒருவனே ஒரு நொடியில் அரக்கர்களைக் கொன்றுவிடுவான். இந்த ஜோடி அரக்கர்கள் எம் மாத்திரம்.
இராவணனின் மேல் உள்ள அச்சமின்றி விபீஷணன் என்னிடம் அடைக்கலமாக வந்துள்ளான்.நான் என் உயிரைப் போல் விபீஷணனின் உயிரைக் காப்பாற்றுவேன்.இரக்க முள்ள இராமன் புன்னகையுடன் சுக்ரீவனிடம்   அவர்கள்  ஒற்றர்களோ அல்லது அடைக்கலம் கேட்டு வந்தவர்களோ ,அவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்.  
   வானரங்கள் விபீஷணனிடம் ஸ்ரீராமனை சந்திக்க அழைத்தனர்.விபீஷணனை தன் தலைவனாக ஏற்று மரியாதை செலுத்தினர்.ஆனால் அவனை மூன்று பக்கங்களிலும் ,இடது,வலது மற்றும் பின்னால் சுற்றி வந்தனர். ஸ்ரீராமன் இருக்கும் இடத்திற்கு விபீஷணனும் குரங்குகளும் சென்றனர். 
ஒரு பாதுகாப்பான முன் எச்சரிக்கையாக  விபீணனுக்கும் ராமனுக்கும் மிகவும் மரியாதை செலுத்தினான். விபீஷணனுக்கு  மற்றொரு மரியாதையாக  அவனை வரவேற்க  வானரங்களின் முதன்மைத் தளபதியும்  அரசனாகும் இளவரசனான அங்கதனை நியமித்தான்.
   விபீஷணன் தொலைவில் வரும்போதே தொலைவில் வரும்போதே  இராமனனையும் லட்சுமணனையம்  பார்த்தான்.  இராமனின் அழகான கண்கள் விபீஷணனைக்  கவர்ந்தன.ராமரின் மீது அன்பு கொண்டு சிறிது தூரத்தில்  நின்று கண்களை இமைக்காமல் ராமனனையே பார்த்துக் கொண்டிருந்தான்.இராமனின்  கைகள் நீளமாக இருந்தன. கண்கள் சிவப்புத் தாமரை இதழ்கள் போலிருந்தன. அவரின் அழகான கைகால்கள் கருணை நிறைந்த பார்வை அவரிடம் அடைக்கலம் வந்தவர்களின் அச்சத்தை போக்கும் .
ஸ்ரீராமரின் சிங்கம் போன்ற புஜங்கள்,அகன்ற மார்பு மிகவும் தரிசிப்போரை அதிகம் கவரும். அவரின் அழகான்ன முகமும்,முகத்தோற்றமும் மிகவும் கவர்ச்சியாக இருந்ததால் காமதேவன் மன்மதனுக்கே மனதில்  மயக்கம் ஏற்படும்.விபீஷணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடு்த்தது.உடல் நடுங்கியது.பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு மிகவும் மென்மையான குரலில் தன்னை அறிமுகப்படுத்தினான். நான் இராவணனின் சகோதரன். நான் அரக்கர் முகத்தோடு பிறந்திருக்கிறேன்.
தேவர்களை பாதுகாப்பவரே!எனது உடல் தாமச தத்துவங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.ஆந்தை இருட்டை விரும்புவது போல எனக்கு இயற்கையாகவே பாவங்களையே விரும்பும் குணம்.  தாங்கள் தங்கள் கருணைக்காக புகழ்பெற்றவர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பண்பானவர்.நேர்மையானவர். மறுபிறவி என்ற அச்சத்தைப் போக்குபவர். பாதிக்கப்பட்டவரின் துயரங்களைப் போக்குபவர்.தங்களிடம் சரணாகதி அடைந்தவரை மகிழ்விப்பவர்.இவைகளை எல்லாம் கூறி விபீஷணன் இராமரின் கால்களில் விழுந்து வணங்கினான்.பிரபு விபீஷணனின் வேறுபட்ட வணக்கத்தைக் கண்டும் பணிவான பேச்சைக் கண்டும்  மனமகிழ்ந்தார். ஸ்ரீராமர் தன் கரங்களால் விபீஷணனை ஆரத்தழுவினார். 
விபீஷணன் ஸ்ரீராமரின் தம்பி லட்சுமணனையும் சந்தித்தான். இராமர் அவனை அருகில் அமரவைத்தார்.
விபீஷணனின் மனதில் உள்ள பயம் முழுவதும் போகும் படியான ஊக்கம் அளிக்கும் வாரத்தைகளைப் பேசினார்.
இலங்கையின் அரசே! தங்கள் மற்றும் தங்களின் குடும்பநலம் பற்றியும் கூறுங்கள். நீஇரவும் பகலும் ஊழல்வாதிகளாலும் தீயவர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய்.   இருப்பினும் நீ நீதி நெறியோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. நான் உனது நீதி நெறி முறை நடவடிக்கைகளை நன்கு அறிவேன்.நீ மிகவும் அறிவுள்ளேன்.வேதசாஸ்திரங்களை நன்கு அறிந்தவன். நீ எந்த ஒரு சூழ்ச்சி தந்திரங்களையும் 
விரும்பாதவன்.நரகத்தில் இருப்பது நலம்.ஆனால் பகவான் தீயவர்களின்  இழிவானவர்களின் தோழமையை விடுவதில்லை என்று இராமர் கூறினார். 
 விபீஷணன் இராமரிடம் -மதிப்பிற்குறிய ராமா! நான் தங்களது பாதரவிந்தங்களில் சரணடைந்ததால்
எனக்கு அனைத்துமே நல்லதே நடக்கிறது.நீங்கள் என் மீது கருணை காட்டியதால் நான் பெரும் அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டேன்.தாங்கள்என்னை சொந்த வேலைக்காரனாக ஏற்றுக் கொண்டது என் பாக்கியமே.  பிரபுவே! தங்களை வணங்காதவர்கள் கனவில் கூட மகிழ்ச்சியாகவும் வேதனையின்றியும் இருக்கமுடியாது.அனைத்து இன்னல்களுக்கும் மூலமான ஆசைகளை விடவில்லை என்றால் துன்பங்கள் எப்படி விலகும்.?ஒருமனிதனின் மனதில்பேராசை,காமம்,ஆணவம்,பெருமிதம் ஆகிய அனைத்து தீயகுணங்களும் இருக்கின்றன. இராமர் அவர்களுக்கு எதிராக வில்லும் அம்பும் எடுத்தால் எதிரிகள் நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். 
தீயவர்களை அவர் மன்னிக்கமாட்டார். உலக மகிழ்ச்சியில் இணைந்திருப்பதால்  சந்திரமாசம் முதல் நாள் போல்  வாழக்கை இருண்டுவிடும். உலக மகிழ்ச்சி என்பது  இரவில் ஆந்தைகளுக்கும் தீயவர்களுக்கும்  தான் கவர்ச்சிகரமாக  இருக்கும். தீயவர்களுக்கு கதிரவன் கதிர்கள் போன்ற வெளிச்சமான ஞானம் மனதில் வராது.பகவான் அவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தரும் வெளிச்சத்தைத் தரமாட்டார்.நான் பிசாசு. இழிந்தவன்.இவை தான் எனது இயற்கை குணம்.நான் இதுவரை எந்த நற்பணியும் செய்ததில்லை. பகவானின் அழகு, இயற்கை குணம் ஆகியவை புரிந்து கொள்ளவில்லை. முனிவர்களின் மிக எளிமையையும் பார்க்கவில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக பகவானின் பாதார விந்தங்களை தரிசித்து விட்டேன். பகவான் தன் இரு கரங்களால் அணைத்து அன்பு காட்டும் பாக்கியத்தைப் பெற்றேன். பகவானைதரிசித்தேன். பேரானந்தத்தைஅடையும் பேறுபெற்றேன்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.என் விதி எல்லையற்றது. பிரம்மாவாலும் சிவனாலும் வணங்கப்பட்ட பகவானையும்  அவரதுபாதாரவிந்தங்களையும்  என் கண்களால் தரிசித்துவிட்டேன். என்றெல்லாம் விபீஷணன் மனதில் எண்ணி புலகாங்கிதமடைந்தான். 
ஸ்ரீராமன் விபீஷணனிடம்  நண்பனே! புசுண்டி,சம்பு,கிரிஜாஆகியோரிடம் என்  இயற்கை குணங்களைப் பற்றி  கேள்வி்ப்பட்டதைக் கூறவும்.
அனைத்துத்  தீயவர்களும்  என்னைஉணர்ந்தவர்களும் உணராதவர்களும்  அச்சத்தின் காரணமாக என்னிடம் அடைக்கலமாக வருகின்றனர். அவர்களை நான் மன்னித்துஏற்றுக் கொள்வதுடன் அவ்களுடைய மாயை,மோசடிகள்,வஞ்சகம் முதலியவைகளைப் போக்கிவிடுகிறேன்.அவர்களை முனிவர்களாக மாற்றிவிடுகிறேன்.
ஒரு மனிதன் தன் தாய்,தந்தை,சகோதரன்,மகன்,மனைவி ,உடல்,செல்வம்,நல்ல நண்பர்கள் ,மேல் அன்பு உள்ளவன். ஒரு மனிதன் பற்றுகளைத் துறந்து என்னையே சரணாகதியாக அடைந்தவன் என்று ராமர் கூறினார்.மேலும் ராமர் கூறினார்---நடுநிலையான மனிதர்கள்,ஆசைகளைத் துறந்தவர்கள்,மகிழ்ச்சி,துயரம்,அச்சம் ஆகியவை இல்லாதவர்கள்,என்மனதில் பேராசைஉள்ளவரகள் மனதில் பணமாசை இருப்பதுபோல நிலைத்து இருப்பார்கள். நான் பற்றற்றவர்களை ,ஆசையற்றவர்களை ஆழ்மனதில் வைத்து விரும்புகிறேன்.விபீஷணனே! நீ எனக்கு முனிவர்கள் போன்று 
அன்பானவன். உன்னைப் போன்ற பக்தர்களை அதிகமாக விரும்புகிறேன்.
 உருவ வழிபாடு செய்பவர்கள்,கருணைஉள்ளவர்கள்,நாணயமுள்ளவர்கள்,நேர்வழியில் செல்பவர்கள்,சொன்னசொல் தவறாதவர்கள்,ஞானமுள்ள  நீதி நெறிகளைக் கற்றுத் தரும்அந்தணர்கள் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அன்பானவர்கள்.
விபீஷணனா! நான்விரும்பும் அனைத்து நற்பண்புகளும் உன்னிடம் இருப்பதால் நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.

  ராமர் சொல்வதைக்கேட்டு கூடியிருந்த அனைத்து வானரங்களும் கருணை மிக்க இராமரே வாழ்க! என்று கோஷமிட்டனர்.வீபீஷணன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான்.அவன்ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை மீண்டும் மீண்டும் வணங்கினான்.
விபீஷணன்  இராமரிடம் வேண்டினான்--பிரபுவே!அசைவன-அசையாதன என அனைத்துபடைப்புகளின்
மீது ஆட்சி செய்பவரே!சரணாகதி அடைவோரைக் காப்பவரே! அனைத்து ஆன்மாக்களையும் 
மனதில் வைத்திருப்பவரே!எனக்கு சில உலக ஆசைகள் இருந்தன.ஆனால்  பக்தி வெள்ளத்தில் அந்த உலக ஆசைகள் அடித்துச் செல்ல்பட்டுவிட்டன.இப்பொழுது. என் மனதில் எவ்வித ஆசையும் கிடையாது.எனது மனம் தூய்மையாகிவிட்டது. எனது பக்தியை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
8.45காலை.
 விபீஷணனின்  கோரிக்கையை அப்படியே ஆகட்டும் என்றார் ஸ்ரீராமர். பிறகு கடல் நீர் வேண்டும் என்றார்.
ஸ்ரீராமர் விபீஷணனிடம் -"தற்சமயம் உன்மனதி்ல் எவ்வித ஆசைகளும் இல்லை. என் பார்வையில் இந்த எண்ணம் பயனற்றது.நிலவுலக  ஆசைகள் முன்பு இருந்தவை போலவே  உனக்கு  இருக்க வேண்டும் என்ற வெகுமதியை  உனக்கு அளிக்கிறேன். உன்மனதில் ஆசைகள் இல்லை என்றாலும் இதைஎன் அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொள்.  என்று சொல்லிக் கொண்டே அவனுடைய  நெற்றியில்  கடல் நீரால் புனித குறியிட்டார். விபீஷணனை இலங்கையின் அரசனாக்கினார்.அப்பொழுது அனைத்து தெய்வங்களும் விண்ணில் இருந்து மலர்களைத் தூவினர்.
=================================================================


`






  
  

No comments: