Wednesday, March 29, 2023

துளசிதாசர் இராமாயணம்-சுந்தர காண்டம்-பகுதி--இரண்டு-2-

 துளசிதாசர்  இராமாயணம்-சுந்தர காண்டம்-
பகுதி--இரண்டு-2-

ஹனுமானி்ன்  அறிவுரையால் இராவணன் அதிக கோபம் அடைந்தான். அங்குள்ளவர்களிடம் சொன்னான்---அடே!இந்த முட்டாளின் உயிரை உடனே எடுத்து விடுங்கள். இராவணனின் கட்டளையைக் கேட்டதுமே அரக்கர்கள் ஹனுமானைக் கொல்ல ஓடினர்.அப்பொழுது அங்கே விபீஷணன் தன் அமைச்சர்களுடன் வந்தான்.
அவன் இராவணனின் முன் தலைகுனிந்து பணிவாக வணங்கி கூறினான்--" தூதனைக் கொல்வது 
நீதிக்குப் புறம்பானது. அரசே! வேறு ஏதாவது தண்டனை கொடுங்கள். அவையில் உள்ள அனைவரும் 
விபீஷணனின் ஆலோசனையை சரி என்று ஆமோதித்தனர். 
இதைக் கேட்டதும் இராவணன் சிரித்துவிட்டு  குரங்கின் உடலை சின்னாபின்னமாக்கி அங்க ஹீனனாக 
அனுப்பலாம்.  குரங்கி்ற்குத் தன் வால் தான் மிகவும் பிரியம். எண்ணெயில்  துணியினை முக்கி நனைத்து 
அதன் வாலில் சுற்றி தீ  வைத்து விடுங்கள். வாலில்லா  முட்டாள் குரங்கு தன் தலைவனிடம் ்சென்று 
தன் தலைவனை   அழைத்துக் கொண்டுவரும். அது தன் தலைவனை அதிகமாகப் புகழ்ந்தது
நான் தலைவனின் சாமார்த்தியத்தை பார்க்கிறேன்.

இராவணனின்  சொற்களைக் கேட்டு ஹனுமான் புன்னகை பூத்தார். சரஸ்வதிதேவி இவனுக்கு 
இத்தகைய அறிவை  அளித்துஇருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். இராவணனி்ன் கட்டளையை ஏற்று அரக்கர்கள் வாலில்  நெருப்பு வைக்க ஏற்பாடு செய்யத் தொடங்கினர். வாலில் சுற்றத் துணியும்
எண்ணெயும் வாங்கியதில் இலங்கையி்ல்  தீர்ந்துவிட்டது.ஹனுமானின்  வால் நீண்டு கொண்டே சென்றது. நகர மக்கள் வேடிக்கை பாரக்கக் கூடினர். அவர்கள் அனுமானை காலால் உதைத்தனர்.
அவரை மிகவும்  கேலியும் கிண்டலும் செய்தனர். முரசு  அடித்தனர். கை தட்டினர். அனுமானை ஊர் முழுவதும் வலமாக அழைத்துச் சென்று பிறகு நெருப்பு வைத்தனர்.நெருப்பு எரிய ஆரம்பித்ததும் உடனே ஹனுமான் சிறிய உருவமெடுத்தார். கட்டிலிருந்து விடு  பட்டு மாடிகளில் ஏறினார்.பெண்கள் அனைவரும் பயந்தனர். ஹனுமான் அட்டகாசத்துடன்  கர்ஜித்துக் கொண்டே   ஆகாயத்தில் மறைந்துவிட்டார்.அவர் உடல் பெரிதாக இருந்தது. ஆனால் லேசாக சுறுசறுப்பாக இருந்தது.
அவர் ஒரு மாளிகையில் இருந்து மற்றொரு மாளிகைக்குத் தாவினார்.நகரமே பற்றி எரிந்தது.
மக்கள் நிலை மோசமாகியது. நெருப்பு ஜுவாலைகள் கோடிக் கணக்கில்  பரவிக் கொண்டிருந்தன.
நாலாப் பக்கங்களில் இருந்தும் "ஐயோ!அம்மா! என்ற கூக்குரல்கள் எழுந்தன. நம்மை யார் காப்பாற்றுவார்கள்? நாங்கள் முதலிலேயே சொன்னோம்.இது குரங்கல்ல.குரங்கு வடிவத்தில் வந்த தேவன் என்று. சாதுவை  அவமானம் செய்ததின் விளைவு ஒரு நொடியி்ல் நகரமே எரிந்துவிட்டது.
விபீஷணனின் வீடு மட்டும்  எரியவில்லை.
சிவன் பார்வதியிடம் கூறினார்--" தேவி பார்வதி! நெருப்பைப் படைத்தவனின் குமாரன் ஹனுமான்.
அதனால் தான் ஹனுமான்  நெருப்பில் எரியவில்லை.ஹனுமான் இங்கும் அங்கும் பாய்ந்து இலங்கையை எரித்துவிட்டான். பிறகு சமுத்தரத்தில் குதித்தார்.
 
வாலில் உள்ள நெருப்பை அணைத்து விட்டு தன்னுடைய உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு மீண்டும் 
சீதையின் முன் இரு கரங்கள் கூப்பிக் கொண்டு நின்றார். பிறகு சீதையிடம் ஸ்ரீராமர் கொடுத்தது
போல் எனக்கு ஒரு அறிமுக அடையாளச் சின்னம் கொடுங்கள். 
சீதை உடனே தன்னிடம் இருந்த சூடாமணியை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார். 
அனுமான் அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார்.
சீதை ஸ்ரீ ராமருக்கு தன் செய்தியாகக் கூறினார்---என் வணக்கத்தைக் கூறுங்கள்.பிரபு உங்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது. இருப்பினும் ஏழைகள் மீது இரக்கம் காட்டுவதில் நீங்கள் புகழ் பெற்றவர்.நான் ஏழை. அந்த புகழை நினைவுப் படுத்தி நிலை நாட்ட என் பெரும்  துன்பத்தைப் போக்குங்கள். என்று என் சார்பாகக்  கூறுங்கள். 
மகனே! அவருக்கு இந்திரனின் மகன்  ஜயந்தனின் கதையைக் கூறவும். அவனுடைய பாணத்தின் மகிமையை நினைவு படுத்தவும். ஒரு மாதத்தி்ல் பார்க்க வரவில்லை என்றால் என்னை உயிரோடு பாரக்க
முடியாது என்பதையும் கூறவும். 
மகனே! நான் எப்படி உயிரோடு இருப்பேன்.நீ வந்ததால்  மனம் குளிர்ந்தது. அவர் வருவார் என்று கூறுகிறாய். அவர் வரும்வரை எனக்கு இரவும் பகலும் ஒன்றே.
ஹனுமான் சீதைக்கு பலவிதங்களில்  தைரியம் கூறி ஸ்ரீராமருக்கு தகவல் கூறச் சென்றார்.
போகும் போது ஹனுமான் செய்த கர்ஜனையால் பல கர்பவதி அரக்கர்களின் கர்பம் கலைந்தது.
கடலைத் தாண்டி கடற்கரையை அடைந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்.மற்ற வானரங்கள் 
ஹனுமானைப் பார்த்து மகிழந்தனர். ஹனுமானின் முகத்தில் மகிழச்சியைக் கண்டு அவர் ராமரின் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டதை அறி்ந்து கொண்டனர்.  துள்ளும் மீன்களுக்கு தண்ணீர் கிடைத்தது  போல் மகிழ்ந்தனர். மகிழ்ச்சி அடைந்து  இலங்கை சம்பவங்களைக்  கேட்டுக் கொண்டே
அனைவரும் இராமரிடம் தகவல் சொல்ல சென்றனர்.

வழியில் மதுவனத்தை அடைந்தனர்.அது சுகரீவனின அழகான தோட்டம்.அதில் ருசிமிக்க இனிப்பான நறுமணமுள்ள பழங்களும் , பூக்களும் நிறைந்து இருந்தன.கிஷ்கிந்தாவின்  இளவரசனான  அங்கதனிடம் அனுமதி கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அரசனின் தோட்டத்தை
காவல் காப்பவர்கள்  பழங்கள் சாப்பிடுவதைத் தடுத்தனர். அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஓடும் வரை  அடித்தனர். மது வன காவலர்கள் தங்கள் அரசன் சுக்ரீவனிடம் வந்து இளவரசன்  மதுவனத்தை  சிதைத்துக் கொண்டிருப்பதாக புகார் அளித்தனர்.   கேட்டதுமே வானரங்கள் வெற்றியுடன் ராமரின்  பணியை முடித்துவிட்டனர் என முடிவெடுத்து சுக்ரீவன் மகிழ்ச்சி  அடைந்தார்.
சீதை எங்கு இருக்கிறாள் என்பதைக் கண்டு பிடிக்காமல் அவர்கள் பழங்கள் சாப்பிடுவதை நினைத்துக் கூட இருக்கமாட்டார்கள்  என்று சுகரீவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இப்படி காரணங்களை அரசன் சுக்ரீவன்  நினைத்துக் கொண்டிருக்கும் போதே வானரங்கள் அவர் முன் கூடினர்.
அவர்கள் அரசனின் பாதங்களில் விழுந்து வணங்கினர். வானரங்களின் அரசன் அவர்களை மனதார வரவேற்றான். அவர்களின் நலம் பற்றி விசாரித்தான்.  அப்பொழுது  வானரங்கள் கூறினர்--உங்கள் பாத தரிசனத்தால் எல்லோரும் நலமாக இருக்கிறோம். ஸ்ரீ ராமனின் கிருபையால் நாங்கள் எங்கள் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். ஹனுமான் எளிதாக பணியினை முடித்து அனைத்து வானரங்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டார்.சுக்ரீவன் அனைத்து விவரங்களையும் கேட்டு மகிழ்ந்தார்.அனைத்து வானரங்களுடன் சுக்ரீவன் ஸ்ரீ ராமனை சந்திக்கச் சென்றார்.இராமர் சுக்ரீவனையும் மகிழ்ச்சியோடு வந்த  வானரங்களையும் பார்த்து 
பணியை முடித்து விட்டனர் என்று புரிந்து கொண்டார். இரண்டு சகோதரர்களும் குகையில் இருந்து வெளியே வந்து பளிங்குக் கல்லில் அமர்ந்தனர். அரசன் சுக்ரீவனும் மற்றவானரங்களும் இராமனை வணங்கினர். 
கருணைக்கடலான இராமர் அனைத்து வானரங்களையும்  மகிழ்ச்சியாகசந்தித்து நலம் விசாரித்தார்.
வானரங்கள் அனைவரும் உங்கள் தாமரைப் பாதங்களை தரிச்சனம் செய்து நாங்கள் நலமாக இருக்கிறோம். ஜாமவந்தன் சொன்னான்--ரகுநாதரே! எங்கள் தலைவரே! உங்கள் அருள் பெற்றவர்கள் 
எல்லோருமே நிரந்தரமாக  எப்பொழுதும் நலமாகவும் சௌக்யமாகவும் உள்ளனர். தேவர்கள்,மனிதர்கள் ,
முனிவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர். அவன்  வெற்றி பெறுபவனாகவும்,பணிவுள்ளவனாகவும் குணமுள்ளவனாகவமெ ஆகிவிடுகிறான். அவனுடைய புகழ் மூன்று உலகங்களிலும் பரவுகிறது.பிரபுவின் கிருபையால் எல்லா பணிகளும் வெற்றிகரமாக முடி்ந்துவிட்டது.இன்று  எங்கள் பிறவி வெற்றிபெற்றுவிட்டது. நாதா! வாயு புத்திரன் ஹனுமான் இன்று செய்த பணியை ஆயிரம் வாய்களாலும் வர்ணிக்க முடியாது. ஜாம்பவான் ஸ்ரீராமரிடம்  ஸ்ரீஹனுமானின் பணிகளையும் குண நலன்களையும்  கூறினான். அவன் பணிகளை எல்லாம் கேட்டு இராமர்  மகிழ்ந்தார்.
அவர்  அனுமானை ஆரத்தழுவி ,சொல்!சீதை எப்படி இருக்கிறாள்?தன் உயிரை எப்படி காத்துக் கொள்கிறாள்? 
ஹனுமான் சொன்னார் _--உங்கள் பெயர் இரவும் பகலும் காவல் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் தியானம் தான் கதவாக காக்கிறது. கண்கள் உங்கள்  பாதங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது.அது தான் பூட்டு. அப்படி இருக்கும் போது உயிர் எந்த வழியில் போகும்?வரும் அவர் எனக்கு சூடாமணி கொடுத்தார். அதை அவர் தன் தலையி்ல் இருந்து எடுத்துக் கொடுத்தார்.உடனே ஸ்ரீராமர் அதைவாங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.
ஸ்ரீஹனுமான் சீதை கண்ணீரோடு இராமரு்க்கு சொன்ன செய்தியைச் சொன்னார்---எனதுபணிவான நமஸ்காரத்தை பிரபுவிற்கும் அவரது சகோதரருக்கும் அவர்களது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கவும்.
எனது இரக்கமுள்ள பிரபுவே! ஏழைகள் மற்றும் இன்னல்கள்அனுபவிப்போரின் இன்னல்களைப் போக்குபவரே!நான் சொற்களாலும்,மனதாலும் ,செயல்களாலும் உங்களது பாதாரவிந்தங்களை
காதலிக்கிறேன்.என்ன காரணங்களால் என்னைத் துறந்தீர்கள்?என்னை வன்முறையால் கடத்தப்பட்ட போதே உங்களைப் பிரிந்ததால் உயிரை விடாதது என் தவறு. என் பிடிவாதமான நம்பிக்கையுள்ள கண்கள் என் உயிரைப் போக்க அனுமதிக்கவில்லை.உன்னுடைய பிரிவு என்னைச் சுட்டெரிக்கும் தீ.
என் மூச்சு வீசும்  காற்று.அது உடனடியாகத்  தீயைப் பற்றிஎரியவைக்கும். என்உடல் எரியும் பஞ்சுக் குவியல்.எளிதில் தீ பற்றக் கூடியது.என் பிடிவாதமான கண்களில் இருந்து நீர் ஊற்று போல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உங்களுடைய பாதாரவிந்தத்தைப் பார்க்க மிகவும் பிடிவாதமாக இருப்பதால் உடலில் இருந்து உயிர் பிரியவில்லை .உங்களை  மீண்டும் பார்க்க முடியும் என்ற எண்ணத்தில் உயிர் வாழ்கிறேன். பிரிவுத்துயரத்தின் ஜ்வாலை இன்னும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. என்று சீதை கூறியதை அப்படியே அறிவித்து விட்டு ஹனுமான் தன் எண்ணங்களைக் கூறினார்---
சீதையின் ஆற்றொனாத் துயரத்தை  வர்ணிக்க முடியாது. தாங்கள் வேதனைப் படுவோர் மீது இரக்கப் படுவீர்கள்.இதற்கு மேல் எள்னால் எதுவும் வர்ணிக்காமல் இருப்பதே எனக்கு நல்லது. 

ஹனுமான் கூறினார்--நீங்கள் இரக்கத்தின் கருவூலம்.தாங்கள் வல்லமை மிக்கவர்.மதிப்பிற்குரிய பிரபுவே! உடனே  படை எடுத்துச் செல்ல வேண்டும்.உங்கள் புஜ பலத்தால்அந்த பொல்லாதவர்களை
வென்று சீதையை மீட்டு அழைத்து வரவேண்டும். ஹனுமானின் மூலம் சீதையின் துயரங்களை அறிந்து கமலக் கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.நினைவாலும்,சொல்லாலும்,செயலாலும் 
என்னை முற்றிலும் சார்ந்திருப்பர்களுக்கு கனவிலும் துயரம் வரக்கூடாது. 
 பிரபுவே ! பேரிடரில் பிரபுவை நினைக்காதவர்கள். தீயவர்கள்.அரக்கர்கள்.தங்கள் முன்னால் நிற்க அருகதை அற்றவர்கள். நாம் அவர்களை போரில் வென்று சீதையை மீட்டு வருவோம். 
ராமர்  சொன்னார்---ஹனுமானே கேள்! உனக்கு சமமான அருட்கொடையாளர் வேறு ஒருவரும் இல்லை.
வாழும் மனிதன்,கடவுள்.ரிஷி. உன்னுடைய கடமை உணர்விற்கானதை நான் எப்படி திருப்பி செலுத்துவேன்.உன்னை எதிர்கொள்ள நான் நாணம் அடைகிறேன்.  மகனே!மீண்டும் மீண்டும் சிந்தித்து
 நீ செய்த கடமை உணர்விற்கான கடனை நான் திருப்பிசெலுத்த வழி தெரியவில்லை.
பிரபு இராமர் ,கடவுள்களைக் காப்பவர். இன்று ஹனுமானுக்கு உதவி செய்ய அவரை மீண்டும் மீண்டும் பார்த்தார். இராமரின் கண்களில் அன்புக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் உடலும் மனதும்    உதவிசெய்ய துடித்தன.
இராமர் சொல்வதைக் கேட்டு ஹனுமான் மிகவும் மகிழந்தார்.மிகவும் மகிழ்ச்சியில் ஹனுமான் இராமரின் காலில் விழுந்து வணங்கி  ஆனந்தக் கண்ணீர் விட்டார். பிரபுவே! என்னைக் காப்பாற்று!என்னைக் காப்பாற்று என்றார்.
மீண்டும் மீண்டும்ஸ்ரீராமர் அனுமானை உயர்த்த விரும்பினார். ஹனுமான் பிரபுவின் அன்பில் மூழ்கிவிட்டார்.அவர் தன்னை உயர்த்துவதை விரும்பவில்லை.ஹனுமான் தலையில் தன் தாமரைக் கரங்களை வைத்து இராமர் ஆசிர்வாதம் செய்தார்.கௌரியின் பிரபு சிவன் ஹனுமான் உணர்ச்சிவசப்பட்ட நிலையை அடைந்தார். தன் உணர்ச்சி வசப்பட்ட நிலை சரியானதும் 
பார்வதியிடம் அந்த அழகான கதையைத் தொடர்ந்தார்.
பாதாரவிந்தங்களில் விழுந்து வணங்கிய ஹனுமானை ஸ்ரீராமர் தன் கைகளாலேயே தூக்கி மார்புடன் ஆரத்தழுவினார். இராமர் அவரின் கைகளைப் பற்றி தன் அருகில் அமரவைத்தார். 
பிரபு ஸ்ரீ ராமர்  ஸ்ரீஹனுமானிடம் நீ இலங்கையை எப்படி எரித்தாய்? ஆற்றல் மிக்க இராவணனின் 
காவல் கடுமையானது .மேலும் கோட்டைக்குள் நுழைய முடியாது. 
இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததை  அறிந்து ஸ்ரீஹனுமான் எவ்வித கர்வமுமின்றி பேசினார்---
வானரங்களின்  மிகப்பெரிய சொத்தே எளிதாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் எளிதாகத் தாவுவதே. அந்தத் திறமையைப் பயன்படுத்தி பெருங் கடலைத் தாண்டினேன். ஸ்வர்ண இலங்கையை எரித்தேன். மரங்களை வேரோடு பிடுங்கி  அசோகவனத்தை அழித்தேன். அப்படியே  அரக்கர்களைக் கொன்றேன். இதெல்லாம்  தங்கள்  அருளாலும் தெய்வீக ஆற்றலாலும் நிகழ்ந்தவை.இதில் என்னுடைய மகத்துவம் எதுவும் இல்லை. பிரபுவே! உங்களுடைய கிருபை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எந்த பணியும் கடினமல்ல. உங்களது சக்தி செய்வதற்கு அரிதான எந்த ஒரு செயலையும் 
எளிதாக்கிவிடும்.ஒரு சிறிய பஞ்சில் தீ பற்றினால் பெருங்கடல் நீர் முழுவதும் ஆவியாவது  போல.
ஸ்ரீஹனுமான் இராவணனிடம்  வேண்டினான்---தங்கள் பாதாரவிந்தங்களி் ல் அமைதியான பக்தியை  அருளுங்கள். அது தான் தங்களின் உயர்ந்த ஆசிகளுக்கு வளமாகும்.
பகவான் சிவன் பவானியிடம் சொன்னார்---இந்த எளிய ஆழ் மன வேண்டுகோளால் மகிழ்ந்து அப்படியே ஆகட்டும் என்று பிரபு ஸ்ரீஹனுமானை ஆசிர்வதித்தார். அன்பு உமா! இராமனின் இயற்கை குணம் அறிந்தவர்கள் அவர் மீதான பக்தியைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பமாற்றாகள்.ஆழ்மன உணர்ச்சிமிக்க பக்தி நிறைந்த வழிபாட்டைத் தவிர வேறு ஒரு ஆசையும் இருக்காது.இராமருக்கும் ஹனுமானுக்கும் நடந்த உரையாடலை ஆழ்ந்து புரிந்து கொண்டவர்கள் இராமரின் அருளாசி பெறுவார்கள். 
ஸ்ரீஇராமரின் வார்த்தைகளைக் கேட்டு கூடியிருந் வானரங்கள் மகிழ்ச்சி ஆராவரம் செய்தனர்.
குரங்குகளும் கரடிகளும் வருக! வருக! என்று கூறி எங்கள் மகிழ்ச்சிக்கு பெரிய வளமே ஸ்ரீஇராமர் என்றனர்.
பிறகு ஸ்ரீராமர்  வானரங்களின் தலைவனும் கிஷ்கிந்தாவின் மன்னனுமான சக்ரீவனை அழைத்து உடனே இலங்கை மீது போர் தொடுக்க படைகளைத் திரட்டச் சொன்னார். மேலும் தாமதிக்க வேண்டாம் என்றார்.
ஆர்வமுள்ள தேவர்கள் விண்னில் இருந்து பூமாரி பொழிந்துவிட்டு விண்னுலக மாளிகைக்குத்
திரும்பினர்.

வானரங்களின் அரசன் அனைத்துவித தலைமை சேனாதிபதிகளுக்கும்  தங்கள் தங்கள் படைகளைத் திரட்டும் படி  அழைப்பாணை விடுத்தான். குரங்குப் படைகளும் கரடிப் படைகளும் அதிக எண்ணிக்கையில் மகிழ்ச்சியுடன் வந்தனர். அவர்கள் பல விதமாகவும் பல நிறங்களிலும் இருந்தனர்.
அவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர்.
குரங்குகளும் கரடிகளும்  ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை வணங்கினர்.இராமர் அனைத்து வித படைகளையும் ஆய்வுசெய்தார்.அவைகளின் எண்ணிக்கை மற்றும் வலிமையை மதிப்பீடு செய்தார்.
அவைகளை மேலும் வலிமைப் படுத்த தன் கமலக் கண்களால் தன் அருட் பார்வையால் நோக்கினார்.
இராமரால்  ஊக்கம் பெற்றதும் குரங்குகள் தங்களை இறக்கையுள்ள  மலைகளாகக் கருதினர்.
தேவர்கள் இராமருக்காக போராட வானரங்களாகவும் கரடிகளாகவும் மாறுவேடமிட்டு வந்தனர்.
அவர்கள் முன்னால் நடந்த போரி்ல் இராவணனால் தோற்கடிக்கப்ப்டவர்கள். இப்பொழுது ஸ்ரீராமரின் அருள் பெற்று தைரியமும் வீரமும் உள்ளவர்களாகவும்  மலை போன்று அசையாமல் இராவணனுக்குஎதிராக போரிட முடியும் என்று நினைத்தனர்.ஸ்ரீஇராமுடன் மகிழ்ச்சியோடு இலங்கையை நோக்கி போரிடச் சென்றனர். அந்த நேரத்தில் அனேக  நல்ல சகுனங்கள் ஏற்பட்டன.
ஸ்ரீராமரின்  மதிநுட்பம் மங்களகரமானது. அவருடைய படைகள் புறப்படும் நேரத்தில் நல்ல சகுனங்கள் 
தானாகவே வெளிப்பட்டன. சகுனங்கள் தானாகவே  போர் தொடுக்கும் போது வெளிப்படுவது மகிழ்ச்சியின் வளம் .அது ஸ்ரீராமரின் மஹிமை.

ஸ்ரீராமர் இலங்கைமீது படை எடுக்க புறப்படும் போது சீதையின் இடது கைகால் உறுப்புகள் துடிக்க ஆரம்பித்தன.இடது கை-கால் உறுப்புகள் துடிக்க ஆரம்பித்ததுமே சீதை தான்அனுப்பிய தகவல் இராமருக்கு சேர்ந்து விட்டது. அவர் விரைவில் வந்து  தன்னை விடுவித்து தன் மன வேதனைகளை போக்கி விடுவார் என முடிவெடு்த்துவிட்டார். சீதைக்கு நல்ல சகுனங்கள் வெளிப்படும் போது இராவணனுக்கு இடது அங்கங்கள் துடித்து தீயசகுனங்கள் ஏற்பட்டன.
 பிரபுவின்  வானரப் படைகள் படை எடுத்துச் செலவதை யாரால் வர்ணிக்க இயலும்! எண்ணிக்கையில் அடங்காத வானரங்களும் கரடிகளும்  மகிழ்ச்சியால் கர்ஜித்துக் கொண்டே சென்றனர். கூறிய நகங்கள் தான் அவர்களின் ஆயுதங்கள்.அவர்கள்  பெரிய பெரிய மரங்களையும் பாறைகளையும் தூக்கிக் கொண்டு வந்தனர். சில வானரங்கள் தரையில்  தவழ்ந்து சென்றனர்.சிலர் ஆகாயத்தில் பறந்து வந்தன,
வழியில் வானரங்களும் கரடிகளும்  சிங்கம் போல் கர்ஜனை செய்தன. இடி முழக்கம் செய்து பூமியை  யானைகள்  பறை அடிப்பது போல் அதிர்ச்சியடையச் செய்தனர். 
யானைகள் பூமியை முரசாக அடித்துக் காத்தன.பாறைகள் அதிர்ந்தன.மலைகள் நடுங்கின.கடல்கள் ஆர்பரித்தன. விண்ணுலக இசை மேதைகளான கந்தர்வர்கள்,சூரியன்,சந்திரன்,இந்திரன்,அக்னி,வருணன்,ரிஷிகள்,முனிகள்,நாகர்கள்,கின்னரர்கள்,
ஆகியோர் மனமகிழ்ந்தனர்.கட்டாயமாக அவர்களுடைய இன்னல்கள்,மனத்துயர்கள்,விரைவில் விலக்கப்படும். எண்ணிக்கையில் அடங்காத வானரங்கள் தங்கள் பற்களைக் கடித்தன.நூறுகோடிக்கு மேல் வானரங்கள் சத்தம் போட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. 
வானரங்களும் கரடிகளும்  ஸ்ரீ ராமரின் பெரும் மகிமை,அவர் தெய்வம்.அயோத்தியாவின் பிரபு. என்று ஸ்ரீ ராமரின் புகழை முழங்கினர்.மற்றவர்களிடம் புகழ்பாடினர்.
படைகள் முன்னேறிச் செல்லும் போது அதிர்வலைகளை ஏற்படுத்தினர். நிலுலகைத் தாங்கும் ஆதிஷேசன் ்கஷ்டப்பட்டார்.பல முறை பெரும் வியப்பில் தலை அசைத்தது.நிலஅதிர்வைத் தடுத்து நிலத்தை இறுக்கமாக தெய்வீக ஆமைகள்  பிடித்துக் கொண்டன.ஆமைகளின் முதுகில் கீறல்கள் ஏற்பட்டன.ஸ்ரீராமர்  போருக்கு புறப்பட்ட மகிமையை  அவரின் படைகளின் பெருமைகளைப் பற்றி பிரபு ஆதிஷேஷன்  உறுதியான ஆமை ஓட்டில் எழுதிக்கொண்டிருந்தார். ஸ்ரீராமர் போர் புரிய புறப்பட்டு கடற்கரையை அடைந்தார். வீரமிக்க வானரங்களும்  கரடிகளும் வழியில் பலவித மரங்களின் பழங்களை ருசிபார்த்து மகிழந்தன.

ஸ்ரீஹனுமான் இலங்கையை எரித்ததில் இருந்தே அரக்கர்கள் அஞ்சிக் கொண்டிருந்தனர்.நகர மக்களும் குடும்பதில்  உள்ளோரும் தங்கள் தங்கள் கருத்தைக் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அரசர்கள் இனத்திற்கு எவ்வித பாது காப்பும் இல்லை. தூதனின் மதிநுட்பமும் உடல் வலிமையையும் வர்ணிக்க முடியாது.  அவனின் செயல்களால் ஏற்பட்ட பயமே இன்னும் அகலவி்ல்லை .
ஸ்ரீராமரே படையுடன் வந்தால் என்ன நடக்கும் ? இலங்கையில் உள்ள அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கும் இராவணனுக்கு அறிவுரை கூறும் துணிச்சல் இல்லை.

அரண்மனையின் பெண் ஒற்றர்கள் மூலம்  பெற்ற செய்திகளால் ராவணனின் முதல்  மனைவியும் ராணியுமான  மண்டோதரி கலக்கம் அடைந்தாள். மன அமைதி இல்லாமல் தன் கணவன் இராவணனை தனியாக சந்தித்து காலில் விழுந்து வணங்கினாள். இராவணன் அவளைப் பற்றி  மார்புடன் சாய்த்துக் கொண்டாள். அவள் அவனை அணைத்துக் கொண்டு இனிமையாக பேசினாள்.அவளுடைய அரசியல் மற்றும் நெறிமுறைகள் மிகவும் உறுதியாக  இருந்தன.மண்டோதரி இராவணனிடம்  ஸ்ரீஇராமனுடனான 
அனைத்து மோதல்களையும் விட்டுவிடுங்கள்.தயவு செய்து நான் கூறுவதை மனம்  திறந்துகவனியுங்கள்.
அனுமானின் செயல்களை நினைத்தால் பல  தீய அபசகுணங்கள் வெளிப்படுகின்றன.
மண்டோதரி   இராவணனுக்கு அறிவுறுத்தினாள்--உங்கள பாதுகாப்பிற்காகவும்,அமைதிக்காகவும் குடும்பம் மற்றும் இலங்கை மக்கள் நலத்திற்காகவும்  தங்கள் அமைச்சர் ஒருவரை தூதுவராக்கி 
சீதையை ஸ்ரீராமரிடம் சேர்ப்பித்துவிடுங்கள். அழகான தாமரைகள் குளிர் இரவில் பனியால் அழிவது போல் சீதை இலங்கையின் அழிவிற்குக் காரணமாவாள்.பிரபுவே!கேளுங்கள்.சீதையை மரியாதையுடன் அனுப்பவில்லை என்றால் நீங்கள் வழிபடும் சிவனாலும்பிரம்மாவாலும் உங்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற முடியாது. பாம்புகள் தவளையை விழுங்குவது போல் ஸ்ரீராமரின் அம்புகள் அரக்கர்கள் படைகளை அழித்துவிடும்.நியாயமற்ற அகங்காரத்தை விடுத்து ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்க இந்த புதிரில் இருந்து வெளியேறுங்கள்.
மனைவி மண்டோதரியின் அறிவுரைகளைக் கேட்ட  சூழ்ச்சிக்கும் ஆணவத்திற்கும்  புகழ் பெற்ற  இராவணன்  அட்டகாசமாக சிரித்து வீணான தற்பெருமைகளைப் பேசினான்.பெண்கள் எப்பொழுதுமே கூச்ச சுவபாவம் உள்ளவர்கள்.அவளுடைய மனம் பலஹீனமானது.மங்களகரமான சந்தர்பங்களிலும் 
அவள் பயந்தே இருந்தாள்.வானரங்கள் வருவதே எனக்கு ஐயமாக இருக்கிறது.அவர்கள் வந்தால் அரக்கர்கள் அவரகளைத் தன் உணவாக உண்பார்கள்.அனைத்து திசைகளிலும் உள்ள காவலர்கள்என் கனவால் நடுங்குகிறார்கள்.இருந்தாலும் என் மனவி வானரங்களுக்கும் மனித்களுக்கும் அஞ்சுகிறாள்.அவள் அஞ்சவது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியது.மனைவியின் அச்சம் கண்டு இராவணன் சிரித்தான்.அவளுக்கு ஆறுதல் அளிக்க மார்போடு  அணைத்துக் கொண்டான்.வீணான தற்பெருமை கொண்ட இராவணன் தன் அரசவையி்ல் இருந்து வெளியே சென்ஆன்.ஆனல் மண்டோதரி மனதில் வேதனை அதிகமாகியது.அவளுக்குள்ளே தானாகவே பேசிக்கொண்டாள்.--கடவுள் என் அன்பானவரை  அவருக்கு எதிராக மாற்றிக் கொண்டார். 
இராவணன் விவாதிக்கத் தன் அரசவையைக் கூட்டினார்.இராமனும் வானரப்படைகளும்கடலின் அக்கரைக்கு வந்துவிட்டனர் என்று ஒற்றர்கள் கூறினர். அவன் பாதுகாப்புக்  குழுவினர்களிடமும் அரசவைஉறுப்பினர்களிடமும்  முறையான தந்திர ஆலோசனைகளைக் கேட்டான்.அங்குள்ள யத்த தந்திர நிலைபற்றிக் கேட்டான்.
துதிபாடும்  அரசவையினர்கள்  சிரித்து முகஸ்துதி செய்தனர். அவர்கள் இராவணனிடம்--அமைதியாக இருங்கள்.தாங்கள் கடவுள்களையும்  வலிமை மிக்க அரக்கர்களையும் அதிக முயற்சியின்றி வென்றுவிட்டீர்கள். அவர்களை வெல்ல எந்த  கஷ்டங்களும் படவில்லை. நம்முடைய வலிமை மிக்க 
படைகளுக்கு முன்னால் வானரப்படைகளும் மனிதப்படைகளும் இணையாக மாட்டார்கள்.மதிப்பும்மாட்சிமையும்  மிக்கவரே!இந்த  முக்கியமற்ற குரங்குகளும் மனிதர்களும்  தங்களுக்கு எவ்வித இன்னல்களும் தரமுடியாது. 

ஒரு அரசரின்  எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும்  காரணம்  அவனுடைய அமைச்சர்கள், மருத்துவர் மற்றும் நெறியாளர்கள்.இவர்கள் தங்கள்  தன் நலத்திற்காகவும்,பதவிக்காகவும்,பணத்திற்காகவும் அரசனைப் புகழ்வார்கள்.அரசனிடம் உள்ள அச்சம் காரணமாக அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவார்கள். அவர்கள் சில நன்மைகள் பெறும் நம்பிக்கையாலும் அரசனுக்கு அனுகூலமான
அறிஉரைகள் வழங்குவார்கள்.அவர்களின் தவறால் அரசன் அரசாட்சி ,உடல் ஆரோக்கியம்,நம்பிக்கை,மரியாதை ஆகியவற்றை விரைவாக இழந்துவிடுவார்கள்.
அரசனின் செயலரோ அல்லது அமைச்சரோ உண்மையான அறிவுரை  சூழ்நிலைக்கேற்ப வழங்காமல் 
ஆமாம் சாமியாக இருந்தால் அரசன் தன் ஆட்சியை இழந்துவிடுவான்.ஒரு மருத்துவர் மன்னனை
மகிழ்விக்கவோ அல்லது பணத்தற்காகவோ நோயாளியின் விருப்பத்திற்கேற்ப மருந்தும் உணவு அளித்தல். அதன் விளைவாக ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.சிலசமயங்களில் உயிரைக்கூட இழந்துவிடலாம்.ஒரு ஆன்மீக  நெறியாளர் அல்லது மத குரு சரியான அறநெறி  நீதிக்கு வழிகாட்டவில்லை ,கற்றுத் தரவில்லை என்றால்  தாழ்வான வாழ்க்கை  இப்பிறவியில் மட்டுமல்ல
மறுபிறவியிலும் இழிந்த தாழ்ந்த வாழ்வைப்பெறுவர்.

இந்த  மூவரும் சேர்ந்த சக்தி ஒரு பெண்.ஒரு பெண் அமைச்சர்,மருத்துவர்,ஆலோசகர் மூன்றும் சேர்ந்தவர். குடும்பத்தில் நிதி நெருக்கடி காலத்திலும்,துயரமான சமயங்களிலும் பெண் ஆலோசகராகவும் அமைச்சராகவும் செயல்படுகிறார். அவள் தான் சரிவிகித உணவு சத்துணவு தரும் மருத்துவர்.குடும்ப மனக்கஷ்டங்களிலும் பணக்கஷ்டங்களையும் சரி செய்யும் இல்லத்தரசி.
கணவன் துயரப்படும் போது சரியான ஆலோசனை கணவன் மீதுள்ள பயத்தால் வழங்கவில்லை என்றாலோ அல்லது கணவன் அவளுடைய அறிவுரைகளையும் ஆலோசனையையும் கேட்கவில்லை என்றாலோ  நிர்வாகம்,ஆரோக்கியம் பொருளாதாரம்ஆகியவை பாதிக்கும்.
பெரும்பாலான சமயங்களில் ஆண் தான் குடும்பத் தலைவன்.மனைவிதான்  நல்ல அமைச்சரும் 
நண்பரும் ஆவாள். கடினமான சூழலில் மனைவியன் அறிவுரையையும்  ஆலோசனையையும் 
கேட்கவில்லை என்றால் வீட்டில் ஆரோக்கியம்,மகிழ்ச்சி ,அமைதி இருக்காது.கடினமான சூழலில் கணவன் மனைவியி் அறிவுரையையும் ஆலோசனையையும் கேட்வேண்டும்.
இதுதான் இராவணனின் வாழ்க்கையில் நடந்தது.அனைத்து அரசவையினரும் அவன் விரும்பும் படி அவன் மஹிமைபற்றியே பாடினர்.இது தான் சரியான தருணம் என்று இராவணன் தம்பி விபீஷணன் 
அரசவைக்கு வந்து தன் அண்ணனை சிரம் தாழ்த்தி வணங்கினான்.வணங்கிய பின் அவன் தன் ஆசனத்தில் அமர்ந்தான். இராவணனின் அனுமதி கேட்டு விபீஷணன் அவையில் பேசினான்.
என் மாட்சிமை பொருந்தியவரே!இந்த சந்தர்பத்தில் என் கருத்து கேட்டிருக்கிறீர்கள்.அன்பு சகோதரரே!நான் என் உணர்வுகளை என் அறிவிற்கு ஏற்றபடி உங்கள் நலனுக்காக கூறுகிறேன்.
 ஒருவர் தன் நலன்,தன் புகழ், தன்  ஞானம்,தன் முக்தி ஆகியவற்றை விரும்பினால் மற்றவர் மனைவி மீதுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும்.  வளர் பிறையின் நான்காவது நாள் நிலவைப் பார்ப்பது கெட்ட
சகுனம்.அதுபோல் மாற்றான் மனைவியை விரும்புவதும் கெடுதலை ஏற்படுத்தும்.இந்த விருப்பம் நல்ல புகழைக் கெடுக்கும்.அறிவைமயக்கும். எதிர்காலத்தைப் பாழாக்கும்.மகிழ்ச்சியையும் அறத்தையும் கெடுக்கும்.அந்த அரசு பேரரசானாலும்  வலிமை மிக்கதானாலும் வீழ்ச்சி உறுதி.
மனிதன் அறநெறி உள்ளவன் ஆனாலும்,கொடைவள்ளல் ஆனாலும்,ஞானவானாக இருந்தாலும் மிகச் சிறிய பேராசை, பெண்ணாசை இருந்தால் அவனுடைய மகிமையை புகழை ,குணத்தை, நன்நடத்தையை  அவனது பேராசை பாழ்படுத்திவிடும். 

காமம்(சிற்றின்பம்) ,கோபம்,ஆணவம்,பேராசை இவை அனைத்துமே  நரகத்திற்கு வேகமாக அழைத்துச் செல்லும் நெடுஞ்சாலையாகும். தயை கூர்ந்து  இவைளை விட்டுவிடுங்கள்.ஸ்ரீராமனின்  புகழ்பாடி வழிபடுங்கள்.  அனைத்து  ரிஷிகளும்  முனிகளும்,இராமனின் புகழ்பாடி வழிபடுகின்றனர்.
ஸ்ரீராமன் மனித அரசன் அல்ல.அவன் தான் பிரபஞ்சம்.அவன் ஆற்றல் மிக்கவன் .மரணத்திற்கே மரணம் அளிப்பவன். அவன் தான் இறைவன்.அவன் நோய்களில்லாதவன்.எவ்வித கோளாறும் இல்லாதவன்.பிறப்பு இறப்பு இல்லாதவன். சக்திமிக்க இறைவன்.   பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். ஒருவராலும் வெல்லமுடியாதவர். அவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர்.எல்லையற்றவர். அவர் பூமியின் நலம் விரும்புபவர். அந்தணர்களின் நலம் விரும்புபவர்.பசுக்களின் நலம் விரும்புபவர்.தேவர்களின் நலம் விரும்புபவர்.சமுத்திரம் போன்று எல்லையற்ற இரக்கமுடையவர்.பகவான் தான் தானே மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார்.
அன்பு சகோதரரே! இராமர் மக்களுக்கு நன்மை அளிப்பவர்.பொல்லாத அரக்கர்கள் கூட்டத்தை அழிக்கவந்தவர். அவர்வேதங்களைக் காப்பவர். அவர் நீதியைக் காப்பாற்றி நிலைநாட்டுபவர்.
தயவுசெய்து ராமரின்மீதுள்ள விரோத்த்தை  விட்டுவிடுங்கள்.ஸ்ரீராமரின் முன் தலை வணங்குங்கள்.அவரிடம் சரணாகதி அடைந்தவரின் மீது இரக்கப்பட்டு அவர்களின் மனத்துயரங்களைப் போக்குபவர். தயவு செய்து சீதையை பிரபுவிடம் திருப்பி அனுப்பிவிடுங்கள்.ஸ்ரீராமரை வணங்குங்கள்.
அவர் அனைவரையும் நேசிப்பவர்.அனைவரின் மீதும் கருணைகாட்டுபவர்.
நீங்கள் அவரை சரண்டைந்தால்,உங்களை விட்டுவிடுவார்.உலகத்திற்கே பாவம் செய்த ஒரு மனிதனை கைவிட்டுவடுவார். மூவித துயரங்களையும்  போக்குபவர் ஸ்ரீராமன் என்று பயபக்தியுடன் அனைவரும் மதித்து நினைவுபடுத்துபவர். அவர் மனிதவடிவத்தில் அவதரித்து வந்துள்ளார்.மீண்டும் மீண்டும் வணங்குகிறேன் அன்பு அண்ணா இராவணா! என்று கைகூப்பி வேண்டும் போதே  மாலயவந்தா ராவணனின் மனதைப் புரிந்து கொண்டு திமிர்பிடித்த இராவணன் விபீஷணின்  அறிவுரைகளை கவனிக்கவில்லை என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
விபீஷணன்  மேலும் இராவணனிடம் சொன்னான் --அறிவும் முட்டாள்தனமும் இரண்டும் மனதில் இருக்கும். அனைத்து விதமான செல்வமும் மகிழ்ச்சியும் இதயத்தில் இருக்கும். ஆனால் அங்குள்ள முட்டாள் தனம் எந்த பேரளிவையும் கண்டு தெளிவதில்லை. முட்டாள் தனமான முடிவுகள் எல்லாவிதமான துன்பங்களுக்கும் தலைமை ஏற்றுச் செல்லும். ஞானம் நிறைந்த முடிவுகள் எல்லாவித மகிழ்ச்சியும் செல்வங்களும் குடும்பத்திற்கும் அரசாங்கத்திற்கும்  தரும். இப்பொழுது தீய எண்ணங்கள் 
உங்கள் மனதில் இருக்கின்றன. தாங்கள் எனது அறிவுரைக்கு எதிராக  விளக்கமளித்துக் கொண்டிருக்கிறீர்கள். எது சரி,எது தவறு என்பது உங்களுக்குப் புரியவில்லை,அதை அறியவும் விரும்பவில்லை.உங்களுக்கு நண்பர்கள் யார் ,எதிரிகள் யார் என்றும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.நீங்கள் நண்பர்களை எதிரியாகவும் எதிரிகளை நண்பர்களாகவும் கருதுகிறீர்கள்.
சீதை அரக்கர்கள்  கூட்டத்தை அழிக்க வந்த அழிக்க வந்த காலராத்திரி.அவளது அழகு உங்களைக் கவர்ந்திருக்கிறது.என் மதிப்பிற்குறிய அண்ணா!உங்களை வணங்கி கால்களைப் பிடித்து கெஞ்சுகிறேன்--சீதையை ராமனிடம் திருப்பி அனுப்புங்கள். இதனால் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.  என் மீதுள்ள அன்பிற்கு அடையாளமாக என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

விபீஷணன்  புராணங்களிலும் வேதங்களிலும் உள்ள ஆதாரங்களுடன் கூடிய நீதி நெறிமுறைகளை விவரமாக அறிவு பூர்ணமாகக் கூறினான். எது தவறு எதுசரி என்ற நீதிநெறிகளைக் கூறியதும் 
இராவணன் கோபமாக அரியணையில் இருந்து எழுந்தான்.விபீஷணனிடம் இராவணன் கூறினான்---

துஷ்டனே! உனக்கு மரணம் நெருங்கிவிட்டது. வஞ்சகனே! என்னால் நீ மிக வசதியாக வாழ்ந்துவிட்டாய்.அது என் பெருந்தன்மை.நீ முட்டாள்தனமாக எதிரியின் சார்பாக பேசுகிறாய்.சூழ்ச்சி
மிக்கவனே! இந்த உலகில் என்புஜபலி  பராக்கிரமத்தால் நான் வெல்லாதவர் யார்?என்று சொல்.
நீ இந்த நகரத்தில் வாழ்ந்து கொண்டே எதிரியைப்  புகழ்கிறாய்.அவர்களை நேசிக்கிறாய். இழிவானவனே! நீ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு  வேதங்களின் நெறிமுறைகளைக் கூறு.
பகவான் சிவன் பார்வதியிடம் கூறினான்--இராவணன் விபீஷணனிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டேஉதைத்தான்.அப்பொழுதும் விபீஷணன் அண்ணனின் கால்களைப்  பற்றிக் கொண்டு 
அவரை விட்டுவிடும்படி சொல்லிக் கொண்டே  இருந்தான்.இது தான் நல்லவர்களின பெருந்தமையாகும்.
அவர்கள் தீய குணத்தில் இருந்து நல்லவர்கள் பக்கம் வந்துவிடுவார்கள்.புனிதமானவர்கள் அவர்களுக்கு 
தீமைகள் செய்பவரகளுக்கும் நல்லதே செய்வார்கள்.
விபீஷணன் இராவணனிடம் சொன்னான்----தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். எனக்குத் தண்டனை கொடுப்பது நன்மைக்கே.எனது தெய்வம் நான் வழிபடும் தெய்வம் தங்களுக்கு நன்மையே செய்யட்டும்.
இராவணனால் அவமதிக்கப்பட்ட விரும்பாத விபீஷணன் இலங்கையை விட்டுச் செல்ல முடிவெடுத்தான்.
வானூர்தி மூலம் தன் அமைச்சர்கள் அனலா,பனசா,சம்பாதி,பிரமாதி ஆகியோர்களுடன் இலங்கையை விட்டுச் சென்றான். இதை இராவணனின் அரசவையில்  சத்தமாக அறிவித்தான் .மேலும் சொன்னான்--
ஸ்ரீராமர்  அங்கிங்கெனாதபடி  பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர். அனைத்து ஆற்றலும் பெற்றவர்.
தன் தீர்மானத்தில் உறுதியானவர்.உண்மையானவர். நீங்களும் உங்கள் அவையினரும் தீயவற்றை ஆராதிக்கிறீர்கள்.நான் இப்பொழுது இராமரின் பாதுகாப்பிற்காகச் செல்கிறேன். அவரிடம் பாதுகாப்பும் தங்குவதற்கு இடமும் தேடிச் செல்வதை குறையாகவோ குற்றமாகவோ ஒருவரும் கூறமாட்டார்கள்.
பகவான் சிவன் தன் பிரிய பார்வதியிடம் கூறினாள்-----இவ்வாறு கூறிவிட்டு லட்சுமணன் அரக்கர்களின் வாழ்க்கை அழியப்போகிறது அவர்களுக்கு மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து சென்றுவிட்டான்.பவானி! புனிதர்களை அவமரியாதை செய்தால் உடனே தர்மமும் பாக்கியமும் எதிர்காலமும் பாழாகிவிடும். இராவணன் விபீஷணனைஅவமதித்த்துமே தன் மஹிமையையும் 
இழந்துவிட்டான்.அவன் தலைவிதி தீயவிதியாகிவிட்டது.

நான் இராமனைப் பார்த்த்துமே,அவருடைய மென்மையான மாணிக்கம்  போன்ற பாதங்ளைப் பார்ப்பேன். அது பக்தர்களுக்கு மகிழ்ச்சி வளம் தருவதாக அமையும்.  கௌதம முனிவரின் மனைவி அகல்யாவிற்கு  மோட்சம் அளித்த பாதங்களை நான் பிடித்துக் கொள்வேன்.அந்த பாதங்கள் தண்டகாரண்யவனத்தை சுத்தமாக்கின.கரண்,தூஷன் மற்றும் அரக்கர்களை அழித்தார்.பயங்கரவாத ஆட்சியில் இருந்த  சபிக்கப்பட்ட வனம் புனிதமாகியது.ஜனக மஹாராஜரின் மகள் ஜானகி தன் மனதில் பிடித்துவைத்திருக்கின்ற அந்த பாதாரவிந்தங்ளை என் பார்வையில் பதித்து வைத்துக் கொள்கிறேன்.
அந்த கால்கள் பொன் மானைத் துரத்திச் சென்றன. அந்த பாதங்கள் பகவான் பரமேஸ்வரரின் இதயத்தில் குளத்தில் உள்ள தாமரை ஜோடிகள் போலவசிக்கின்றன.என் கண்களால் இந்த பாதாரவிந்தங்களை பார்த்தால்  நன்றியுள்ளவனாகவும்ஆசிர்வதிக்கப்பட்டவனும்  ஆவேன்.
ஸ்ரீராமன் அணிந்த  சந்தனமர பாதுகை பாதணி பாத ரட்சை  பரதனின் இதயத்தில் உள்ளது.
எனது  பாக்கியம் ,இன்று என் கண்களால் அவர் பாதாரவிந்தங்களை தரிசனம் செய்வேன். 
இவ்வாறு மனதில் பலவித எண்ணங்களுடனும் நம்பிக்கையுடனும் விபீஷணன் சமுத்திரத்தைக் கடந்து 
ஸ்ரீராமன் முகாமிட்ட கரையை அடைந்தான். 


.












 




No comments: