Saturday, April 8, 2023

துளசி இராமாயணம்--சுந்தரகாண்டம்-பகுதி-நான்கு-4

 துளசி இராமாயணம்--சுந்தரகாண்டம்-
பகுதி-நான்கு-4
=======================
இராவணனின் கோவம் நெருப்பு போன்றது. அவனுடைய கோபமான மூச்சு பயங்கரமானது.
அந்த கோபத் தீயை விபீஷணனின் நீதி நெறி அறிவுரை மேலும் பற்றி எரியச் செய்தது.இராவணன் கோவப் படும் போது விபீஷணன் அதிக மென்மையாகப் பேசுவதால் 
இராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது.இராவணனின் பயங்கரமான கோவத்தில் இருந்து விபீஷணனை இராமர் காப்பாற்றினார். இலங்கையின் அரசாட்சி தலைமை உரிமை விபீஷணனுக்கு வழங்கப்பட்டது.  இராவணனுக்கு அவன் தியாகத்தால் வழங்கப்பட்ட அனைத்து செல்வச் செழிப்புகளும் ஸ்ரீராமரால் விபீஷணனுக்கு வழங்கப்பட்டது.

அடைக்கலமாக வந்தவர்களை கருணையுடன்  காக்கும் இரக்கக் கடலான இராமனை வணங்காமல் மற்றவர்களை வணங்குபவர்கள் வாலும் கொம்பும் இல்லாத மிருகத்திற்கு சமமானவரகள்.சரியான நடுநிலையான உயரந்த இறைவனை வணங்காதவர்கள் நம்பாதவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள். இராமர் விபீஷணனைத்  தன் 
பணிக்காக ஏற்றுக்கொண்டார்.அனைத்து வானரங்களும் பிரபுவின் அன்பை விரும்பி்ன.
ஸ்ரீஇராம்பிரான்  அனைத்தும் அறிந்தவர்.அனைவரின் மனதிலும் இருப்பவர். அனைத்து வடிவங்களிலும் பகிரங்கமாக இருப்பவர்.அக்கரையற்றர்.அனைவரிலும் வேறுபட்டவர்.அனைத்து நடவடிக்கையிலும் பக்தி கொண்டவர்.நேர்மையற்ற அரக்கர்களை
வதம் செய்ய மனிதனாக அவதரித்தவர்.நீதி முறைகளைப் பின்பற்றுபவர்.நேர்மை  நெறிமுறைகளைக் காப்பவர்.பிரபு இவ்வாறு அனைவராலும் புகழப்படுபவர்.
இராமர் வானரங்களி்ன் அரசனான சுக்ரீவனிடம் எப்படி இந்த ஆழமான அகலமான கடலைக் கடப்பது எனவினவினார்.திமிங்கிலங்களும் பாம்புகளும் மீன்களும் வாழ்கி்ன்ற இந்த பெருங்கடலைக் கடப்பது அரிது.
இலங்கையின் அரசனான விபீஷணன் கூறினான் --ஸ்ரீரகுநாதனே! உங்கள் அம்புகளால் ஆயிரம் பெருங்கடல்களை வரட்சியடையச் செய்யமுடியும். ஆனால் இந்த பெருங்கடலைத் தலைமை தாங்கி இருக்கும் கடல் தெய்வத்தை அணுகி கேட்பது தான் நல்ல கொள்கையும் 
நெறிமுறையாகும். கடல் தெய்வத்திடம் கடலைக் கடந்து செல்ல வேண்டுங்கள்.முதல் முயற்சியில் ஆயுதங்களை பயன் படுத்தாமல் இருப்பதே நல்ல கொள்கையாகும்.அந்த முயற்சியில் நாம் முதலில் சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும்.
பிரபுவே! இந்தக் கடலைத் தலைமை தாங்குபவர் உங்கள் முன்னோர்களில் ஒருவர்.
கடல்  தேவதை கடலைக் கடக்க எளிய வழிகளை பரிந்துரை செய்யலாம்.அப்போது வானரப்படைகளும் கரடிப் படைகளும் எவ்வித கஷ்டமும் இன்றி கடலைக் கடக்க முடியும். 

அன்பு நண்பரே! நல்ல திட்டங்களை எனக்கு பரிந்துரை செய்துள்ளாய். முயற்சி செய்யலாம்ர்ர்
அதிருப்தி அடைந்தான். 
லக்‌ஷுமணன் ராமரிடம் சொன்னான்---எனக்கு விதியின் மீது நம்பிக்கை  கிடையாது.
தாங்கள் தங்கள் மனக்கசப்பை இந்த பெருங் கடலை வற்றவைத்துக் காட்டுங்கள்.
கடவுளையும் விதியையும் மன பலவீனமானவர்களும் கோழைகளும் தான் நம்புவார்கள்.
சோம்பேறிகள் தான் பகவானே!பகவானே! எனக்கு உதவுங்கள்! உதவுங்கள்! என்று வேண்டுவார்கள். ராமர் தம்பியின் பேச்சைக் கேட்டு சிரித்தார்.லட்சுமணனிடம் 
சொன்னார்-"பொறுமையாக இரு. அமைதியாக இரு.நீ சொல்வதை நான் செய்வேன்.
அரசியலில் பேச்சு வார்த்தையின் முக்கிய பங்கையும் ராமர் விளக்கினார். 
ராமர்  கடற்கரைக்குச் சென்று வணங்கி தர்ப்பைப் பாயில் அமரந்தார்.
விபீஷணனன் ஸ்ரீராமரிடம் அடைக்கலம் கேட்டுவிட்டு 
 இலங்கைக்குத் திரும்பினான்.

இராவணன் இராமரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள சில ஒற்றர்களை அனுப்பினான்.
அவர்கள்  மாறுவேடமிட்டு குரங்குகள் வடிவத்தில் இராமனின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.ஒற்றர்கள் இராமனை மனதி்ற்குள் புகழ்ந்து கொண்டிருந்தனர்.அவர் அடைக்கலம் வந்தவர்களை பாதுகாப்பதையும் கவனித்தனர்.அவர்களின் நட்பு ஆதரவு குணங்களை அவர்கள் மொழியில் 
புகழ்ந்து சத்தமாகப் பாடத்தொடங்கினர்.தாங்கள் வானரங்களாக மாறுவேடமிட்டு வந்ததையும் வந்த நோக்கத்தையும் மறந்துவிட்டனர். அவர்கள் மாறுவேடம் கலைந்தது.
வானரங்கள்  எதிரிகளி்ன் ஒற்றர்களை  அறிந்ததும் அவர்களைப் பிடித்துவிட்டனர். அவர்களைக் கட்டி வானரங்களின் அரசர் முன் நிறுத்தினர். சுக்ரீவன் மற்ற வானரங்களிடம் 
"இந்த அரக்க ஒற்றர்களை சிதைத்து விடுதலை செய்து அனுப்பிவிடுங்கள்.
தங்கள் அரசரின் ஆணையைக் கேட்டு வானரங்கள் அரக்க ஒற்றர்களை அடிக்க உதைக்க ஆரம்பித்தனர்.வலி  தாங்கமுடியாமல் ஒற்றர்கள் ராமன் மீது ஆணை, மூக்கையும் காதுகளையும் சிதைத்துவிடாதீர்கள்.நாங்கள் ராமரிடம்  குற்றம் சாட்டுவோம். 
வானரங்கள் சுக்ரீவனின் ஆணையைவிட ஸ்ரீராமரை அதிகம் மதித்து அரக்க ஒற்றர்களை 
சிதைக்காமல் விட்டுவிட்டனர். 
வெளியில் நடந்த சத்தத்தைக் கேட்டு இலக்குவன்   ஒற்றர்கள் நிலைகண்டு சிரித்தான்.
இலக்குமணன்  வானரங்களிடம் அரக்கர்களை விட்டுவிடும்படி சொன்னான்.பிறகு ஒற்றர்களிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சொன்னான் --"அரக்கர்கள் இனத்தை ஒழிக்கவந்தவனே! இந்த செய்தியைப் படி."என்று சொல்லச் சொன்னான்.
அந்தத்  திமிர்பிடித்தவனிடம்  கூறுங்கள்:-சீதையைத் திருப்பி அனுப்பிவிட்டு சமாதான ஒப்பந்தத்திற்கு ஸ்ரீராமரிடம் வரச்சொல்லுங்கள்.  இல்லை என்றால் மரணம் நெருங்கிவிடும்.
ஒற்றர்கள் இலக்குவனை வணங்கிவிட்டு இலங்கைக்குச் சென்றனர்.
செல்லும் வழி எல்லாம் இராமரின் புகழ்பாடிக்கொண்டே சென்றனர். இலங்கைக்குச் சென்று இராவணனை வணங்கி அறிக்கை சமர்ப்பித்தனர்.இராவணன் அவர்களைப் பார்த்து சிரித்தான். பிறகு அங்கு பாரத்தவைகளைப் பற்றி கேட்டான். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் விபீஷணனைப்பற்றி சொல்.சுகா! உங்கள் நலத்தைப்பற்றி சொல்.
முட்டாள் விபீடணன்  மகிழ்ச்சியும் அரசாங்க மரியாதையும் கிடைக்கும் இலங்கையில் இருந்து  சென்றுவிட்டான். அந்தத் துறவிகளுடன் சேர்ந்து அவனும் பார்லியில் இருக்கும் வண்டுகளைப் போல் நசுக்கி மாவாக்கப்படுவான். வானரங்களின் மற்றும் கரடிகளின் சேனைகள் எப்படி உள்ளன?எத்தனை பேர் இருக்கிறார்கள்?அவர்களின் வலிமை எப்படி உள்ளது?மிகப்பெரிய மரணப்பேரழிவு அவர்களை இங்கு வரத்தூண்டியுள்ளது.
இரக்கமுள்ள சமுத்திர தெய்வம்அவர்களின் உயிரைக் காத்துக் கொண்டிருக்கிறது.
அந்தத்  துறவிகள் பற்றிக் கூறவும் .என் மீதுள்ள அச்சத்தால்  அவர்கள் மனம்  ஒவ்வொரு நொடியும் பயந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அவர்களை சந்தித்தீர்களா?என்னுடய மகிமையையும் ஆற்றலையும் கேட்டு திரும்பிவிடுவார்களா?எதிரிகளின்  ஆற்றல்,திறமை,வலிமை பற்றி கூறுங்கள். நீங்கள் திகைப்படைந்து திரும்பியதாகத் தோன்றுகிறது?உங்கள்மனதில் நம் படைகளின் வலிமைமீது ஐயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதன்மை ஒற்றனான சுகா இராவணனிடம் சொன்னான்---தாங்கள் உற்சாகத்தில் பல கேள்விகள் கேட்கிறீர்கள்.கவனமாக நான் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டும்.நான் சொல்வதைக் கேட்டு  தயைகூரந்து கோபப்படக்கூடாது. தங்கள் தம்பி ராமரைப் பார்த்த்துமே ராமர் அவர் நெற்றியில் திலகம் வைத்து இலங்கையின் அரசனாக அறிவித்தார்.
வானரங்கள் எங்களை இராவணனின் ஒற்றர்கள் என்றறிந்ததுமே  கைது செய்துவிட்டனர்.
பிறகு பல வகைகளில் துன்புறுத்தினர். இறுதியில் எங்களது காதுகளயும் மூக்கையும் சேதம் செய்ய வந்தனர்.நாங்கள் ஸ்ரீராமர் மீது சத்தியம் செய்ததால் விட்டுவிட்டனர்.எங்களை விடுதலை செய்தனர்.தாங்கள் இராமரின்  இராணுவமுகாம் பற்றி கேட்டீர்கள்.அவர்  படை வீரர்களின் வீரம் மற்றும் பலம் பற்றி வர்ணிக்க கோடிக்கணக்கான சொற்கள்  போதாது.
பலவித முகத்தோற்றங்கள்  கொண்ட வானரங்கள்,பலவித வண்ணங்கள்,மிகப்பெரிய பயங்கர உருவங்கள் நிறைந்த கூட்டம்.இலங்கையை எரித்து உங்கள் மகன் அட்சயனைக் கொன்ற குரங்கை விடவலிமைமிக்கவை.எண்ணிக்கையில் அடங்கா வீர்ர்கள் ,பல பெயர்கள், வலிமை மிக்கவர்கள்,பயங்கரத் தோற்றமுடையவர்கள்.ஒவ்வொருவரும் பலயானைகளுக்கு சமமான  வலிமைமிக்கவர்கள்.அவர்களை வெல்வது கடினம்.
போரில் வாகைசூடிய வாகையான்கள்----திவிவிதா,மயங்கன்,நீலன்,நளன்.அங்கதன்,
கதன்,விகடாசயன்,ததி முகன்,கேகரி,நிசதன்,சதன்,ஜாமவந்தன் ஆகியோர்.அனைவருமே வலிமைமிக்கவர்கள்.இந்தவானரங்கள் சுக்ரீவனை விட வலிமைமிக்கவர்கள்.அவர்களைப்போல் கோடிக்கணக்கானவர்கள்.அவர்களை யாரால் என்ன முடியும். ஸ்ரீ ராமரின்  அருளால் மிக அதிக வலிமை பெற்றவர்கள்.மூன்று விண்ணுலக உருண்டைகளின் கண்ணாடிக் கத்திகளின் துண்டுபோன்றவர்கள்.அங்கு 18 லட்சம் கோடி இளம் குரங்குகள் உள்ளனர்.போர்களத்தில் உங்களால் ஒரு குரங்கைக் கூட வெல்லமுடியாது.அவர்கள் கைகளைத் தேயத்துக் கொண்டு முறுக்கிக் கொண்டு மிகவும் கோபமாக உள்ளனர்.ஆனால் இராமர் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்..
குரங்குகள் இப்படி பேசுகின்றன--நாங்கள்மலைகளைப் போட்டு கடலை வற்றச்செய்துவிடுவோம்.அனைத்து கடல் வாழ் மீன்கள்,கடல்பாம்புகள் அனைத்தையும் அழித்துடுவோம். இராவணனை நசுக்கி தூளாக்கிவிடுவோம். எவ்வித அச்சமும் இன்றி இலங்கையையே விழுங்கிவிடுவோம் .
அனைத்து குரங்குகளும் கரடிகளும் இயற்கையாகவே வீரமிக்கவை.மேலும் அவைகள் இராமனால் ஆசிகள் பெற்றவை. அவர்கள் உங்களைமட்டும் வெல்ல வில்லை.பல கோடி தேவர்களையும் மரணத்தில் இருந்துவெல்லப் போகிறார்கள்.

ஆதிசேஷனால் கூட ஸ்ரீராமரின் மதி நுட்பம்,வலிமை,மஹிமையை வர்ணிக்க முடியாது.ஒரே அம்பில் அவரால் நூறு சமுத்திரங்களின் 
தண்ணீரை வற்றவைத்து காயவைக்க முடியும்.அவர் நீதி நெறிமுறைகளை நன்கு அறிவார்.இருப்பினும் அவர் தங்கள் தம்பியிடம் இந்த ஆழமான அகலமான சமுத்திரத்தை எப்படி கடக்க முடியும் என்ற ஆலோசனையைக் கேட்டார். தங்கள் தம்பி ஆலோசனைப் படி  சமுத்திர பகவானை பிரார்த்தித்து சமுத்திரத்தைக்  கடக்கப்போகிறார்கள்.விபீஷணனின் மீது 
இராமரின்அருள் முழுவதுமாக இருக்கிறது.ஒற்றன் சுகனின் வார்த்தைகளைக் கேட்டு இராவணன் சிரித்தார். நான் இப்பொழுது
அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் புரிந்துகொண்டேன்.அதனால் தான் அவன் வானரங்களையும் கரடிகளையும் சேனையாக அமைத்துள்ளான்.விபீஷணன் இயற்கையாகவே கோழை.அதனால்தான் சமுத்திரதேவனிடம் வழி கேட்டு பிரார்த்திக்கும் ஆலோசனையை வழங்கியுள்ளான்.சகனே! முட்டாளே! நீ ஏன் அவன் பெருமையைப் புகழ்ந்து கொண்டிருக்கிறாய்.நான் விரோதியின் பலத்தையும் ஞானத்தையும் மதிப்பீடு செய்து விட்டேன்.விபீஷணன் போன்ற கோழைகளை ஆலோசகராக வைத்திருப்பவர்களால் மகிமையையும் வெற்றியையும்  உலகத்தில் பெறமுடியாது.
தன் தீய குணமுள்ள அரசனின் பேச்சைக் கேட்டு தலைமை ஒற்றனான சுகன் மிகவும் கோபம் அடைந்தான்.இதுதான் சரியான தருணம் என்று சுகன் லட்சுமணன் இராவணனுக்குக் கொடுத்த கடிதத்தை அளித்தான்.இந்த செய்தியைப் படித்து உன் மனதிற்கு ஆறுதல் பெற்றுக் கொள் என்றான்.  கொடிய இராவணன்  இடதுகையால் கடிதத்தைப் பெற்று தன் அமைச்சரிடம் கொடுத்து 
படிக்கச் சொன்னான். 
இலட்சுமணனின் செய்தி இதுதான்---இழிவான இராவணா!
பொய்யான நம்பிக்கை சரியல்ல.அரக்கர்கள் இனத்தைஅழித்துவிடாதே.இராமனை எதிரியாக்கிக் கொண்டால்எந்த சக்தியாலும், பிரம்மா,விஷ்ணு ,சிவ சக்தியாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.உன் தம்பி ஒரு வண்டு போல் 
ராமரி்ன் பாதாரவிந்தங்களில் அடைக்கலம் அடைந்துவிட்டார்.
அப்படி இல்லை என்றால் ஒரு பூச்சியை நெருப்பு சுட்டு எரிப்பதுபோல் ராமரின் வேகமான அம்புகள் பாழ்படுத்திவிடும்.
இலட்சுமணன் அனுப்பிய செய்தியைக் கேட்டு இராவணன் மிகவும் பயந்தான்.அவன் தன் அச்சத்தை மறைப்பதற்காக மேலோட்டமான புன்சிரிப்பு  சிரித்தான்.பிறகு அனைவரும் கேட்கும் படி உறையாற்றினான்--தரையில் படுத்துக் கொண்டு தன் கைகளால் ஆகாயத்தை பிடிக்க முயற்சிப்பது போல் இளம் துறவியின் செய்தி வீணானது  .ஆணவமிக்கது.
இதைக் கேட்டதும் தலைமை ஒற்றன்  சுகன்  இராவணனிடம் சொன்னான்--மாண்புமிகு அரசே! இலக்குவனின் செய்தியில் ஒவ்வொரு சொல்லும் உண்மையானது. தயவு செய்து ஆணவமின்றி ஆழ்ந்து சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள்.கோபத்தை கைவிட்டுவிட்டு,இராமனின் விரோதத்தையும் வி்ட்டுவிடுங்கள்.
அவர் பிரபஞ்சத்திற்கே  பகவான்.அவர் மிகவும் இரக்ககுணம் உள்ளவர்.நீங்கள் நீங்கள் விரைவாக சமாதானம் பேச செல்லுங்கள்.
அவர் உங்கள் தவறுகளை குற்றங்களை  மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். என்னுடைய  வேண்டுகோளை ஏற்று ஜனகரின் மகள் சீதையை மரியாதையுடன் ராமரிடம் அனுப்பிவிடுங்கள்.
சுகன் சீதையை அனுப்பிவிடுங்கள் என்றதுமே இராவணன் வெகுண்டெழுந்து இலக்குவணனை உதைத்தது போல் உதைத்துவிட்டான்.சுகன் இராவணனை வணங்கிவிட்டு தயாசாகரரான இராமன் முகாமிட்டிருக்கும் கடற்கரையை அடைந்தான்.மரியாதையுடன் இராமனின் பாதாரவிந்தங்களைத் தொட்டு வணங்கினான்.அவன் இராமனின் அருளால் புனிதனாகிவிட்டேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
சிவன் பவானியிடம் சொன்னான்---அவன் கடந்த பிறவியில் ஒரு முனிவர்.அகஸ்தியர் சாபத்தால் அரக்கனாக பிறந்தார்.அவர் இராமரை வணங்கிவி்ட்டு ஆஸ்ரமத்திற்குத் திரும்பினார்.
தன் அறியாமைனாலும் முட்டாள் தனத்தினாலும்அவனுடைய கொள்கைப் பிடிப்பாலும் மூன்று நாட்கள் வரை கடல் தேவதை ஸ்ரீராமரின் வேண்டுகோளைக் கேட்கவில்லை.அப்பொழுது இராமர்
கோபமாகப் பேசினார்.அச்சமின்றி நட்பும் இல்லை,அன்பும் இல்லை.
இராமர் லட்சுமணனிடம் அம்பையும் வில்லையும் எடுத்துவருமாறு கூறினார்.நான் எனது அக்னி பாணத்தால் இந்தக்கடலை காயவைத்து விடுவேன். 
பிடிவாதக்காரனுடன் பணிவு,அன்பு, தீயவர்களுடன் நட்பு,கஞ்சனிடம் தாராள குணம்,நியாயமான நெறிமுறைகள் அனைத்தும் வீண்தான். உலகத்தொடர்பு உள்ளவனிடம் பற்றற்ற மனம்,ஞானம்,எளிதில் காதல் கொள்பவர்கள்  ஆகியவைகளை எதிர்பார்ப்பது வீணே.இவை எல்லாம் விளையாத நிலத்தில் விதைவிதைப்பது போலாகும்.இவர்களுக்கு நீதி நெறிமுறைகளைக் கற்பிக்க முடியாது.இவ்வாறு சொல்லிக்கொண்டே இராமன் அக்னிபாணத்தைத் தன் வில்லில் வைத்து நாணை இழுத்து ஓசை எழுப்பினான். அண்ணன் ஸ்ரீராமனின் நடவடிக்கையால் இலக்குமணன் அகமகிழ்ந்தான்.அவன் துவக்கத்திலேயே  விபீஷணன் கூறிய கடல் தெய்வத்திடம் பிரா்த்தனை செய்வதை எதிர்த்தவன்.
இராமர் தன் புள்ளி இல்லாத அக்னிபாணத்தை எய்ததுமே சமுத்திரத்தின் இதயத்தில் விழுந்து தீச்சுடர்களை உமிழந்தது.
முதலைகள்,திமிங்கிலங்கள் ,மீன்கள் மற்றும் கடல் வாழ் ஜீவஜந்துக்கள் மிகவும்  பயந்து அமைதியற்ற நிலையை அடைந்தன.
அந்தணர்கள் ஒரு தங்கத் தட்டு நிறைய பலவிதமான நகைகளை
தங்கள் பெருமை பாரபட்சம் விடுத்து ராமர் முன் தோன்றினர்.
காகபுஷுண்டி முனிவர் கருடனிடம் கூறினார்--"ஒருவன் பல லட்சம் முறைகள் வாழைமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றினாலும் பழங்கள் உண்டாகாது.அவை வெட்டப்படவேண்டும்.அப்படியே தீயவர்கள் பணிவான வேண்டுகோள்களுக்கு இணங்கமாட்டார்கள்.
கடல் தெய்வம் ஸ்ரீராமரின் அக்னி பாணத்தால் பயந்து ஸ்ரீராமரின் பாதாரவி்ந்தங்களில் விழுந்து வணங்கியது. ஸ்ரீராமரிடம் தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டது.இயற்கையில் வாயு,அக்னி, நிலம்,நீர் ஆகியவை பிடிவாத குணம் கொண்டவை. நாங்கள் தங்கள் தெய்வீக மாய சக்தியால் படைக்கப்பட்டவர்கள்.பிரபஞ்ச வளர்ச்சிக்காக உங்கள் தூண்டுதல் ஆற்றலால் படைக்கப்பட்டோம்.
மாண்புமிகு மதிப்பிற்குறிய பிரபுவே! உங்கள் ஆணைப்படியே உலகில் தோன்றிய ஒவ்வொரு ஜீவனும் வாழ்கின்றன.அப்படி வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.பிரபுவே! தாங்கள் என்னை ஒழுக்கமுடையவனாக மாற்றிவிட்டீர்கள்.எனக்குத் தனிஉரிமை கொடுத்து கட்டுப்படான நடத்தையைக் கொடுத்துவி்ட்டீர்கள். என்னை அகலமாகவும் ஆழமாகவும் படைத்து ஒருவரும் என்னை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது என்பது தங்களது ஏற்பாடு. உங்களது ஆசிகளால் வாழ்த்துக்களால் எங்களுக்கு கிடைத்த இயற்கையான குணம். இப்பொழுது நான் தங்களின் திறனைத் தெரிந்துகொண்டுவிட்டேன்.நான் உங்களுக்கு கடலைக் கடக்க வழிகாட்டுகிறேன். ஒரு முரசு,சூத்திரர்கள்,ஒரு உயிரினம்,ஒரு பெண் ஆகியவை தவறான குற்றம் நிறைந்த முட்டாள் தனமான நடவடிக்கைகளால் தான் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.
முரசு உயிரற்றது.மற்ற நான்கு முட்டாள்கள் சூத்திரன்(பணியாட்கள்)
உயிரினங்கள் அசைபவை.உயிருள்ளவை.அசைபவை அசையாதவைஆனால் அவைகளுக்கு அசையக் கற்றுத்தரவேண்டும்.அவர்கள் அசையாமல் இருக்கும் குணத்தை விட்டுவிடவேண்டும். அவர்கள் தங்களது தனியுரிமைநடத்தையை புரிந்துகொள்ள வேண்டும். பிரபுவே! தங்களது சக்தியாலும் மகிமையாலும் தங்களது அக்னிபாணத்தால் நான் வறண்டுவிடுவேன்.
உங்கள் படை எளிதாக அக்கரையை அடைந்துவிடும்.அதனால்எனக்கு எவ்வித  நன்மதிப்பும் கிடைக்காது.
என் கண்ணியம் போய்விடும்.தாங்கள் உயர்ந்தவர் .ஆற்றல் மிக்கவர்.
உங்களை எதிர்த்து உயிருள்ளவை,உயிரற்றவை ஆகியவைகள் போராடமுடியாது என வேதங்கள் கூறுகி்ன்றன.ஆகையால்  நீங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கான காரியத்தை உங்கள் விருப்பப் படி செய்யுங்கள். சமுத்திரத் தேவதையின் பணிவான பக்தி சிரத்தையான
வேண்டுதலைக் கேட்டு பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற
இரக்கமும் கருணையும் உள்ள ஸ்ரீஇராமசந்திர பிரபு புன்னகையுடன்
சொன்னார்---நானும் எனது வானரப்படைகளும் கரடிப்படைகளும் சமுத்திரத்தைக் கடக்க வழி சொல்லுங்கள்.
சாகரா கடல் தெய்வம் ஸ்ரீராமரிடம் பணிவாக கடல் கடந்து செல்ல வழி கூறியது--நீலனும் நளனும் எனது வானர சகோதரர்கள். அவர்களுக்கு  ஒரு முனிவர் மூலம் பெரிய மலைகள் கூட அவர்கள் தொட்டால் தண்ணீரில் மிதக்கும் வரம் பெற்றுஇருக்கிறார்கள்.பிரபுவின்  மஹிமையை மனதில் கொண்டு 
என் சக்திக்கு முடிந்த அளவு உதவிசெய்வேன்.நீலன்,நளன் உதவியால் கடலில் பாலம் கட்டி கடந்துவிடலாம். பாலம் மூன்று கோளங்களாக மிதக்கும். உங்கள் அம்புகளால் எனது வடது கரையில் உள்ள எதிரிகளை அழித்துவிடலாம்.
இதைக் கேட்டதும் மனதில் கருணையும் இரக்கமும் உள்ள ஸ்ரீராமன் சாகராவின் அனைத்துத் துயரங்களையும் மனவலியையும் போக்கிவிட்டார்.
துளசிதாசர்அவரது ஞானத்தாலும் அனுபவத்தாலும் இராமர் தன் வீரதீர வினைகளால் கலியுகத்தின் பாவங்களில் இருந்து மக்களைக் காக்க அவரித்தவர் என்று புகழ் பாடுகிறார்.
அறத்தின் அவதாரம் ரகுபதியின் புகழ் பாடுவோர் மிகவும் மகிழச்சியாக இருப்பார்கள். அவரின் புகழ் பாடுவதுதான் எல்லாவித ஐயங்கள், மன அழுத்தங்களைப் போக்கும் பரிகாரமாகும்.முட்டாள் மனமே!ஸ்ரீராமரின் மீதுள்ள நம்பிக்கைதவிர மற்ற நம்பிக்கைகளை விட்டுவிட்டு அவரதுபுகழைப் பாடுங்கள்.ஸ்ரீரகுநாதர் நன்மைதருபவர்,
என்று அவர் ஜகம் புகழும் கதையைப் பாடுங்கள்.ஸ்ரீராமர் கதையை பாராயணம் செய்யுங்கள். அவரது புகழைக் கேட்பவர்கள், மரியாதைக் குரிய மஹிமையைக்  கேட்பவர்கள்  எந்த ஒரு கப்பலும் இன்றி
சாதரணமாக  எளிதாக வையகக் கடலைக் கடக்கமுடியும்.ஸ்ரீராமர் 
மஹிமையைக் கேட்டால் மறுபிறவியில் இருந்து முக்திகிடைக்கும்.
இவ்வுலக வாழ்விலும் மகிழ்ச்சிகிடைக்கும்.


ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!











No comments: