Wednesday, December 19, 2018

தயை =இரக்கம் =ரஹம் =மெர்ஸி

 ஞானக் கதிர்கள்  ஜைன ஆராய்ச்சிக்   கழகம்  வெளியிட்ட நூலில்  தமிழாக்கம் .ஹிந்தி மூலத்தில் இருந்து. 

   மனதில் இரக்கமில்லை என்றால் உனக்கு இதயமே இல்லை.
என அறிந்துகொள்.

   அமேரிக்கா  ஜனாதிபதி  ஆப்ரஹாம் லிங்கன்  தன்  நண்பருடன்  ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு பன்றி குட்டி ஒரு பள்ளத்தில் சகதியில் சிக்கியிருப்பதைப்  பார்த்தார். அவர் உடனே தன் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த பன்றிக் குட்டியை சகதியில் இருந்து வெளியில் எடுத்தார். கூட்டம் ஆரம்பிக்கும்
நேரம் குறைந்தது. அவருடைய ஆடை அழுக்காகிவிட்டது.
அவர் ஆடைகள் மாற்றாமல் கைகால்களைக் கழுவிக்கொண்டு கூட்டத்திற்கு நேரத்தில் சென்றார்.ஒவ்வொருவரும் அவர் ஆடை ஆளுக்கு சேறு பற்றியே விசாரித்தனர்.  நடந்த நிகழ்வறிந்து அனைவரும்
லிங்கனின் இரக்க  குணத்தைப் பாராட்டினர் .
அப்பொழுது லிங்கன் சொன்னார்--
அங்கு பன்றிக்குட்டி துடித்தது.அதனால் நான் செயல் படவில்லை. அந்த பன்றிக்குட்டியின் நிலை அறிந்து என் மனம் துடித்தது. நான் அதற்கா பள்ளத்தில் இறங்கவில்லை
எனது வேதனைத் துடிப்பைப்  போக்க பள்ளத்தில் இருந்து
எடுத்தேன். இப்படி மற்றவர் வேதனை கண்டு நாம் துடித்தல் தான்  இரக்க   இயக்கமாகும்.
  துளசிதாசர் :-
உங்கள் மனம்  துடித்தால் ,மற்றவர்கள் மேல் இரக்கம் வரும்.
உன்னை  யாராவது அடித்தால் தான் ,நீ மற்றவரை அடிப்பாய்.



இளைஞர்கள் சிந்திக்க

வணக்கம் நண்பர்கள் அனைவருக்கும் .
மனிதர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி
மனித வெறியர்கள் சுயநல மதத்தத்தலைவர்கள் ,
துணை ஜாதிகள் , அரசியல் வாதிகள் இன -மத -ஜாதி -பேதங்களை மட்டுமல்ல கடவுளையும் வீர சைவம் , சைவம் ,லிங்கக்கட்டி சைவம் ,வடகலை ,
தென்கலை , புரொட்டஸ்டண்ட் ,கத்தோலிக் ,சுன்னி சியா , லெப்பை , மதம் மாறியவர்கள் ,என அப்பாவி
மக்களை கூறுகளாக்கி வசதியாக வாழ்கிறார்கள்.
இதை அறிவுள்ள தொண்டர்கள் மூடத்தனமாக ஏற்று அடிவாங்குதல் ,கொலை செய்தல் ,மத இன
காக்க தற்கொலை ,போராட்டம் என அமைதியற்ற நிலை.தலைவர்கள் குளிர்சாதன அறை , குளிர் கால
வே.சாதனை மகிழுந்து இதை மக்கள் சிந்திக்க வேண்டும். பெரியார் அனைத்து மத மூடநம்பிக்கைகள் பற்றி சாடி இருந்தால் அவர் பூஜிக்கப்படவேண்டிய ஈ. வே .ரா.
கபீர்தாசர் உண்மையான சிந்தனை யாளர்.
ஹிந்து ,இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு பாடு பட்டவர்.பிறப்பால் அந்தணர்.
வளர்ப்பால் முகமதி யர் .
இரண்டு மதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
-அவர் சொல்கிறார் :- வேதம் ,குரான் படிக்கிறார்கள்.பூஜை,தொழுகை யில் ஈடுபடுகிறார்கள் . ஆனால் கடவுளை அறியவில்லை. மனித நேயமற்ற நிலையில்
ஏழைகள் மீது இரக்கமற்ற நிலையில்
ஊழல் ,லஞ்சம் 40%வாக்கில் ஆளும் கட்சியினர்
இதை சிந்திக்கா நாட்டுமக்கள் .இதை வறிய கவிஞர்கள் ,ஞானிகள் , சித்தர்கள் சொல்லி வருகின்றனர். சிந்திக்க வேண்டிய இளைஞர்கள்
சிந்திக்க வேண்டும்.
மத ,இன ,ஜாதி கலவரங்களில் ஈடுபடாமல்
மனித ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.
வையகம் வாழ்க .
வையகம் ஒருகுடும்பம் .
இதில் பங்காளிப் பகை , மதவெறி , மாற்றான் மனைவி மகனை கடத்தல், மாற்றாள் கணவனைக் கொன்று மனைவியாக ஏற்று காதல் மஹால் கட்டுதல், மாற்று மத ஆலயங்கள் நாச மாக்குதல் ,
துப்பாக்கி கலாச்சாரம் , குழந்தைகளை குண்டு துளைத்து இரக்கமின்றி கொலை .
இதன் விபரீதங்களை சிந்தித்து
வையகத்தை அன்பு ,அஹிம்சை ,அறச்செயல்களில்
ஈடுபடுத்துதல் தான் இளங்கலை ,முதுகலை ,
முனைவர் பட்டம் பெற்றோர் செய்யும் உயர் பணி .
நாடு தான் முக்கியம் .

Saturday, December 1, 2018

பணம்

காசேதான் கடவுளடா ,
அரசமரத்தடி பிள்ளயார்   ஏழைகள் இடம்.
வைரக்கிரீடம் வைத்தாலே அங்கே கூட்டம் .
ஆயிரம் கொடுத்தால் அண்மை  தரிசனம்
பொது தரிசனம் விரட்டல் தரிசனம் .
மூலஸ்தானத்துக்கு இரண்டடி முன்னாள் ரூபாய் நீட்டினால்
விரட்டா தரிசனம்.
அகவை 70 ,பணமே ஆண்டவன் அருள் என்றால்
அந்த அருளே வேண்டாம் .
விழுந்தாலும் பல கோடி உண்டியில் 

அவசரமாக செல்ல தூய கழிப்பிடமில்லை.
ஆலய மதில் சுவர் சுற்றி மூத்திர நாத்தம்
பழனி யில் பேருந்து நிலையம் இறங்கினால்
பழம் -பால்-பன்னீர்  மணக்கவில்லை ,
சிறுநீரே  மணக்கிறது.