Monday, January 1, 2018

இன்றைய சிந்தனைக்கு

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய சிந்தனைக்கு

நாடு தான் நமக்கு மட்டுமல்ல .
நம் எதிர்கால சந்ததியினருக்கும்.

நல்லாட்சி அமைய தொகுதியில்
இல்லாமல் வெளியில் எங்கோ
இருந்து வந்து போட்டியிடும் .

நடிகை நடிகர்கள் கட்சிகள் என்றும்,
பணம் வாங்கி ஓட்டுப் போடுவதும்
தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை.

நமக்குத்தெரிந்த நம் தொகுதியில்
இருக்கின்ற சேவை மனப்பான்மை

ஆன்மிகம் மிகவும் சிறந்த
நுண்ணிய ஞானம்.

ஆனால் அதில் இன்றைய காலங்களில்
மிகவும் ஆடம்பரமாக ,ஏழை எளிய
மக்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்
உதவாத வீண் ஆடம்பரமாக மாறிவருகிறது.
ஆலயங்கள் தூய்மை என்பது
ஆலயங்களின் வெளிப்புறமும்
இருக்கவேண்டும்.
ஆலயங்களில் அவசர தரிசனம் ,
குறுக்குவழி தரிசனம் என்றெல்லாம்
இல்லாமல் ஆலயம் செல்லும் நாளில்
தெய்வ சிந்தனைகள் மட்டுமே வேண்டும்.

இன்றைய நாளில் ஆலய தரிசனம்
ஆழ்மன தியான தரிசனமாக இல்லை.
வசதியாக தங்க வேண்டும்.
சாப்பாடு சாப்பிட வேண்டும் .
தூங்கவேண்டும்.
கடைக்குச் செல்லவேண்டும்
என்பதிலேயே மன அலைகள்.
இறைவனின் நாம ஜபமும் இல்லை.
இறைவனின் நினைப்பும் இல்லை.
சுற்றுலா ஆலய தரிசனம்
வெறும் பார்வை தான்.
அனைத்து ஆன்மீக உயர்ந்த
சிந்தனையாளர்கள்
சொல்வது கலியுகத்தில்
நாம ஜெபமே உயர்ந்தது என்கின்றனர்.
ஆனால் வால்மீகி ,துளசி ,
நபிகள் நாயகம் அனைவரும்
இறைநாம ஜெபத்தால்
ஞானம் பெற்றவர்கள்.
ஆகையால் இறைவனத்தேடி
நாம் செல்லாமல்
இறைவன் நம்மிடம்
வரும்படி பிரார்த்தனை
செய்யவேண்டும்.

No comments: