தியான யோகப்பயிற்சி
செய்வதால் மனது
அலைபாயாமல்
பிரம்மத்திலேயே
அடங்கி இருக்கும்.
ஆத்மாவால் ஆத்மா கண்டு
மகிழுறும்.
தியான யோக நிலையில்
புலன்களுக்கு தென்படாத,
ஞானத்தால் கிரகித்து
அனந்த சுகத்தை அறியமுடியும்.
அந்த பிரம்மானந்த சுகத்தை அறிந்த பின் அவன் புலன்கள் அந்த பரபிரம்மத்தில் நிலைத்துவிடும்.
அவன் மனம் எவ்வித சஞ்சலமும் அடையாது. அந்த பிரம்ம
சொரூபத்தில் எவ்வித லாபத்தையும்
மனம் அசைபோடாது. துன்பத்திலும்
இன்பத்திலும் ஒரே உணர்வையே உணரும். இந்த நிலையை அடைவதே
யோகமாகும் . அதனால் மன உறுதியுடன் யோகத்தைப் பயிலவேண்டும்.
இப்படி தியான யோக நிலையை அடைய ஆசைகள் அனைத்தையும்
அறவே விட்டு விட வேண்டும்.
ஐம்புலன்களின் அனைத்து நுழைவாயில்களையும் அடக்க வேண்டும். இவ்வுலக நினைவுகள்
அறவே இருக்கக் கூடாது.
மனம் ஆழ்கடல் அமைதியாக வேண்டும். மனம் ஒரு நிலையை அடைய வேண்டும்.
தானே பிரம்மமான பேரின்ப நிலையை அடைபவனே யோகி. அப்படிப்பட்ட
யோகிக்கே பேரின்ப நிலை ஏற்படும்.
மனது, ஐம்புலன்களால் எவ்வித பாவங்களையும் செய்யாத நிலை தான் யோக நிலை. இந்நிலை அடைந்தவன் பிரம்ம ஞானம் பெற்று
பேரானந்தத்தை எளிதில் பெறுகிறான்.
No comments:
Post a Comment