Friday, July 8, 2016

அவனியில் உண்டு.

ஆண்டவன்   என்ற  அச்சமில்லை  ,

காசில்லாமல் காசினியில்


காசியும்  இல்லை   திருப்பதியும்  இல்லை.


காசி  விஸ்வநாதனுக்கும்  தெரியும்


காசு வாங்கும்  ஏழுமலையானுக்கும்   தெரியும்.


யாருக்கு   வழங்க  வேண்டும்  என்பதிலே  தான்


ஆண்டவனுக்கு  ஏற்ற  தாழ்வு.


வாரிவழங்கும்   கர்ணன்   ஏழை ,


அவனுக்கு  ராஜ  வாழ்வு.


குசேலனுக்கு      சந்தான  பாக்கியம்.


தசரதனுக்கு   இல்லை.


ஆஸ்தியளிப்பது  அவனருள் .

ஆஸ்தி  பெற்றும்   அளித்து  வாழ்வது  ஏற்றம்.

ஆஸ்தி   அழித்து  மாதவியிடம்  சென்ற  கோவலன்   நாஸ்தி .

பக்த  தியாகராஜர்     பாடலில்  அமரத்துவம்.


அவனருள்  இருந்தால்  ஞானம் .

அவனருளிருந்தால்    செல்வம்.

அவனருளிருந்தால்   வீரம்.

அவனருளிருந்தால்  இஷ்ட்  காம்ய  சித்தி.

அஷ்டமா  சித்திகள்  அவனியில்  உண்டு.






No comments: