அரங்கனை போற்றிநின்றேன்.
ஆனந்தம் பிரம்மானந்தம் கண்டேன்.
இவ்வுலக சுகமும் பெற்றேன்.
அவ்வுலக சுகமும் கண்டேன்.
சுவர்க்கமும் நரகமும் வேறல்லஇந்த புவியே
என்றே உணன்ர்ந்தேன்.
முக்தி பெறவே இங்கு அவதரித்தவர்கள்,
துன்புறவே இங்கே அவதரித்தவர்கள்
மேலோகத்தில் சாபம் பூமியில்பிறப்பு
இங்கேயே நரகம் இளமை, மூப்பு.
அதுவே இந்த பாடல்.
இச்சுவைத் தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெரிதும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.
இந்திரன் ஆளும் சுவர்க்கம் இங்கே.
வினைப்பயன் தண்டனை இங்கே.
ஆற்றனாப்பெருநோயும் இங்கே,
ஆற்றும் மருத்துவமும் இங்கே.
ஸ்ரீ தேவி வாசம் இங்கே
மூதேவி தரித்திரம் இங்கே.
பதவியும் இங்கே, பதிவி இழப்பும் இங்கே.
அரங்கமா நகரில் வாழும் அச்சுவைத்தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும் இச்சுவைப்பெரிதும் வேண்டேன் .
No comments:
Post a Comment