Friday, August 21, 2015

தியாக வாழ்விற்கு வழி காட்டியது.

த்யானம்
த்யாகம்
ப்ரார்த்தனை
வடமொழியில் உயிர்மெய் எழுத்தால்
ஆரம்பிக்கும் சொற்கள்.
மெய் மெய்யாக
உயிராக
உத்தமனின் மீது மட்டும்
மனம் நிலை நிறுத்த
உயிர் மெய் ஒன்றுபட
ப்ராணாயாமம் .
உயிர் பிரிந்த உடல்
ஒருநாள் நிச்சயம்.
பிராணாயாமம் உயிரை
நாம் விரும்பும்  வரை
உடலில் இருந்து பிரியாமல்
உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஆணவம் காம க்ரோத மத லோபம்
இதெல்லாம் உடனிருந்தே  கொல்லும்  வியாதி .
இதற்கெல்லாம் மனதை அலையவிடாமல்
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம்
உறவு  வேண்டும் என்ற வள்ளலார் படி
மன ஒருமைப்பாட்டிற்கு
மூச்சை உள்வாங்கி வெளியிடுவதில்
ஒரு கட்டுப்பாடு  அது ஒரு பயிற்சி
நியந்திர பிராணாயாமம் .
ந்யந்திர    என்றால் கட்டுப்பாடு
மூச்சுப்பயிற்சி  அவசியம்.
தவவலிமையால்  நம் முன்னோர்கள் பெற்ற ஞானம்
தியாக வாழ்விற்கு வழி  காட்டியது.
இன்று அறிவியல் வளர்ச்சி
அமைதியில்லா மனத்தைத் தந்துள்ளது.
அதை அதாவது மனதை ஒரு நிலைப்படுத்த
ப்ராணாயாமம்   என்ற உயிர்  மூச்சுப் பயிற்சியில்
ஈடுபடுவது அவசியம்.


No comments: