இறைவன் எளியவனா?
எளிமை விரும்பியா?
ஆடம்பரப்பிரியரா?
பலர் பட்டினியால் வாட
அவர்களுக்கு அன்ன தானம்
பால் குடிக்க வாய்ப்பு என்றே
அபிஷேகம் . ஆனால் இன்று
ஒரு ஆடம்பரம் தான்
இங்கு காணப்படுகிறது.
பக்தி என்பது எளிமை எபதற்குத்தான்
மஞ்சள் பிள்ளையார் வைத்து முதல் பூஜை.
இன்று மக்களிடம் வசதிகள் பெருக பெருக
பக்தி என்பது ஒரு வெளி ஆடம்பரமிக்க
பூஜைகள் ,யாகங்கள்,வைரக்கிரீடங்கள் ,
பொற்கோயில் ,விரைவு தரிசனம்,முக்கியஸ்தர் தரிசனம்
கட்டண தரிசனம் என்று நாளுக்குநாள்
பக்தி என்ற பரந்த மனப்பான்மை
குறிகிய வட்டமாக மாறிவருகிறது.
கூட்டத்தை சமாளிக்க இந்த ஏற்பாடுகள் தேவை என்றாலும்
இறைவழிபாட்டில் இந்த ஏற்றத்தாழ்வுகள்
தொன்று தொட்டு காணப்படுகின்றது.
இது ஏன்? என்ற சிந்தனைகள் இறைவனை நோக்கி
எழும்போது அவன் அனைவரையும் பத்துமாதங்கள்
கருவறையில் இருக்கச் செய்கிறான்.
இறப்பிலும் ஒரே மாதிரிதான்.
பிறப்பு --இறப்பு இரண்டுக்கும் நடுவில் உள்ள வாழ்க்கை
முறையில் தான் இந்த வேறுபாடுகள்.
இதுதான் கர்ம வினைகள்.
பாப புண்ணியங்கள் ,தான தர்மங்கள்.
கடமை ,நேர்மை தவறுதல்
இறைவன் வழிபாட்டில் நேர்மை இன்மை.
இருப்பதை கொண்டு இனிதாக வாழாமை.
இறைவன் மனிதனை படைத்ததுமுதலே
இந்த வேறுபாடு.
இதுவே புரியாத தேவரகசியம்.