Sunday, October 6, 2013

இயற்கையின் இறைவன் சக்தி. மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயம் ,ஒற்றுமை,இறை அன்பு

ஆண்டவன்  நம்மை ஆள்பவன்.நம்மை மட்டும் அல்ல.நம்மை ஆள்பவர்களையும் ஆட்டுவிப்பவன். இந்த மாபெரும் சக்தி/சர்வ வல்லமை படைத்த ஒரு இறை ஆற்றல்  உலக அளவில் போற்றப்படுகிறது.

அல்லா ,ஏசு,சிவா,விஷ்ணு,ராமா ,கிருஷ்ணா,மாரியம்மா ,மேரியம்மா,லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி ,துர்கா என்று தனிதனி பெயர்களில் வழிபட்டு,மனிதர்களுக்குள் ஒரு வேற்றுமை,வெறுப்பு,ஆணவம்,கொலைவெறி ,அன்பு,பண்பற்ற செயல்களில்
ஈடுபடும்  மத வெறியர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள்.

மனித நேயம் காக்கப்படவேண்டும் .பரோபகாரம்(மற்றவர்களுக்கு உதவுதல்).கடமை (இறைவன் அளிக்கும் தொழில் அதை முழு ஆத்மநிறைஉடன் தன்னலம் கருதாமல் செய்தல்,)பொறாமைப்படாமல் இருத்தல்,மதங்கள் தவறு செய்தால் அதை வெளிப்படுத்தி சீராக்குதல்,தங்கள் மதம் செய்யும் தவறுகளை மத நன்மைக்காக மூடி மறைத்து அதற்கு காரணம் கற்பித்தல்,அதை ஒரு மத உணர்வாக,இறைவன் பெயரால் அச்சத்தை உண்டாக்கி செய்யவைத்தல்  ஒரு மதம் வளர கை கொடுக்குமா?அல்லது
வேறுபாட்டை ஏற்படுத்துமா? என்பதை மதவாதிகள் உணரவேண்டும்.

நான் இறைபக்தன். நான் இந்து. நான் இறைவனால் காக்கப்பட்டுவருகிறேன்.
நான் பிரம்மானந்தத்தை உணர்ந்தவன்.ஸ்ரீ வெங்கடாசலபதியின் நேரடி உதவிகள் பெற்றவன். எனது  புற்று நோய் அறுவை சிகிச்சை.நோய் கண்டுபிடித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.நான் அறுவை சிகிச்சைக்குத் தகுதி என்று சான்றளித்தவர் கிறிஸ்தவர்.எனக்கு அறுவை சிகிச்சை செய்தவர்
பத்மஸ்ரீ/பத்மா விபூஷன் விருது பெற்ற நிபுணர் முஹம்மது அலி.
எனக்கு நான்கு பேரின் இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.அவர்கள் பெயர் மதம் ஜாதி தெரியா தெய்வீக புருஷர்கள்.கண்ணுக்குத்தெரியா உதவி செய்தவர்கள்.
மருத்துவமனை சேத்துப்பட்டில் உள்ள DR.மேத்தா மருத்துவமனை.எனக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்கியவர் பாபகுமாரி.மயக்கமருந்தளித்தவர் ஒரு பெண் மருத்துவர்.
இப்பொழுது சொல்லுங்கள்.?மனிதநேயம் பெரியதா?மதம் என்ற மமதை பெரிதா?இது ஒரு மருத்துவக்குழு.மதபேதமற்ற உயிர்காக்கும் சேவை.

இந்த உயிர் அளிக்கும் செயல் அனைத்து மதங்களின் சங்கமம்.இறைவனின் காக்கும் சக்தி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
இன்று அனைவரும் உயிர்வாழ ஆதாரம் ஆங்கில மருத்துவம்.அதை மனித சமுதாயத்திற்ககாக அர்பணித்தவர்கள்  ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக செய்யவில்லை.
விமானம் ,புகைவண்டி,பேருந்து ,சிற்றுந்து,மகிழுந்து, மின்சாரம் என்ற அனைத்தும் மதங்களுக்கு அப்பாற்பட்டு  மனிதநலம் என்ற பரந்த மனப்பான்மைக்காக. இவைகளை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் பயன்படுத்த வேண்டும்,அதை கண்டுபிடித்த குறிப்பிட்ட நாட்டை/இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பயன் படுத்தவேண்டும் என்றால் அது மனித சேவையாகாது.

இதே நிலையில் மதங்கள் வளரவேண்டும்.மதங்கள் செய்யும் சிலவுகள் அனைத்தும் ஆக்கப் பணிகளுக்கு,மனித சமுதாய ஒற்றுமைக்குப் பயன் படுத்தப்படவேண்டும்.அதைவிடுத்து கோடிக்கணக்கில் கடலில் கரைப்பது எவருக்கும் பயன்படாமல் வீணாவதாகும்

செல்வங்கள் குவிந்தால் மக்களுக்குப்பயன்படவேண்டும்.
வேதபாடசாலையில் படிப்பவர்கள் வறுமை உணர்ந்து படிக்கக்கூடாது.படித்தபின் நாமும் மற்றவர்கள் போல் வசதியாக இருக்கும் நிலை உள்ளது என்பதை உணரவேண்டும்.
அதற்காக ஒரு ஏழையின் வீட்டு மரணத்திற்கு பத்துநாள் காரியத்திற்கு ஐம்பதாயிரம் வாங்கி அப்பாவின் ஆத்மசாந்தி என்று கூறக்கூடாது.
இருக்கும் வரை சாப்பிட கஷ்டப்பட்ட ஆத்மா தன மகன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் வாழ்வதை இறந்த ஆத்மா கண்டு
திருப்தியடையாது. மேலும் வேதனைப்படும்.

மனிதநேயம் ,சேவை தான் இறைப்பணி.
அதுவே முக்திக்கும் ஆனந்தத்திற்கும் வழி.
சுனாமி,பூகம்பம்,வெள்ளம் ,வறட்சி,ஊழல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொது.அவ்வாறே இறைவன் பல மதங்களில் தன் வலிகாட்டிகளைப் படித்தாலும் இறைவன் ஒருவரே.அவர் உருவமும் அருவமும் ஆகி நம் வினைகளுக்கேற்ற பயனளித்து ஆட்டுவிக்கிறார்.
இறைவன் அன்பின் சேவையின் ஒற்றுமையின் வடிவம்.இந்த மதவேற்றுமைகள் முற்றிலும் சுயநலம்.உத்தரகாண்ட் வெள்ளம் ஏற்பட்டபோது சில வேற்றுமததவர்கள் சண்டன தர்மத்தை இகழ்ந்தனர்.பின் பாகிஸ்தான் இயற்கை சீற்றம்.இது தான் இயற்கையின் இறைவன் சக்தி.
மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயம் ,ஒற்றுமை,இறை அன்பு தான் மனித இனத்தைக் காக்கும்.

3 comments:

sury siva said...

அதற்காக ஒரு ஏழையின் வீட்டு மரணத்திற்கு பத்துநாள் காரியத்திற்கு ஐம்பதாயிரம் வாங்கி அப்பாவின் ஆத்மசாந்தி என்று கூறக்கூடாது.//
Say this One Hundred Times, The business people inn the garb of purohits will never understand, as they are now used to Maruti cars and smart phones.
The basic reason:
Today people who are by nature orthodox are more driven by fear than by faith.
subbu thatha.
Hats off to your posting.

இராய செல்லப்பா said...

"பத்துநாள் காரியத்திற்கு ஐம்பதாயிரம்" என்பது எந்த ஊரில் என்று சொன்னால் தேவலை. இங்கு, முதல் இரண்டு நாள் காரியத்திற்கே முப்பதாயிரம் கேட்கிறார்கள். இதில் பத்தாயிரம் ருபாய் இடுகாட்டு நிர்வாகிகளுக்கு லஞ்சமாம். (மின்சார எரியூட்டு). - அது சரி, எல்லா வாத்தியார்களுமே இப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை மறக்கவேண்டாம். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

Yaathoramani.blogspot.com said...

தற்காலச் சூழலில் அவசியத் தேவையான
விஷயத்தை விரிவாகப் பதிவிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்