Sunday, October 13, 2013

எப்போது? உலகில் அநியாயங்கள் அளவு மீறி நடக்கும் போது; தர்மங்கள் முற்றிலும் அழியும் போது.

அலைமகள்  பணம் அலைகள் ஓய்வதில்லை
அலைமகள் கருணையின்றி
கலைமகள் கருணை இல்லை.
இரண்டும் இருந்தாலும்
இருவரையும் காக்க
மலைமகள் தேவை.
மூன்றிற்கும்   அறம் தேவை.
கர்ணனிடம் வீரம் இருந்தது.
துரியோதனிடம் திருமகள்  இருந்தாள்.
ஆனால் ஊழ் வினை சகுனிவடிவில் வந்தது.
பாண்டவர்களுக்கு வீரம் இருந்தது.
விவேகம் தருமரிடம் இல்லை;
சூதாட்டம் அவனைக்கவர்ந்தது.
தோல்வி !தோல்வி!கட்டிய மனைவியை
தோற்றபின்  ;அவருக்கு தர்மராஜ்;
கிருஷ்ணனின் சூழ்ச்சி ,
சகுனியின் பழிவாங்கும் நிலை
பீஷ்மரின்  வீரம்
விதுரனின் அறிவு
அர்ஜுனனின் ஆற்றல்
அனைத்தும் பயனில்லை
மகாபாரதப்போர்.
போரின் முடிவிலும் அழிவிலும்
வெற்றியிலும் மகிழ்ச்சி இல்லை;
தர்மம் வந்றதா?அது தர்ம யுத்தமா?
அபிமன்யு மரணம்;
கர்ணனின் மரணம்;
அஸ்வத்தாமன் கோபம்;
இதுதான் உலகியல்;
இராமாயண முடிவு
சீதையின்  முடிவு;
லவன் குஷன் அதன் பின் இல்லை இதிகாசம்.
அவர்கள் ஆட்சி ?கதை இல்லை;
இருக்கிறதா?
எனக்கு ஆள் ஞானம் இல்லை;
கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே..இது யாருக்கு
ஆள்பவர்களுக்கு இல்லையா?
ஆண்டவனின் அவதாரம் எப்போது?
உலகில்  அநியாயங்கள் அளவு மீறி நடக்கும் போது;
தர்மங்கள் முற்றிலும் அழியும் போது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

kankaatchi.blogspot.com said...

இன்பமும் துன்பமும் எதுவரை?
மனம் இருக்கும் வரை

இன்பத்தையும் துன்பத்தையும்
அனுபவிப்பது ஒரே மனமே

உறக்கத்தில் இந்த உலகம்
எங்கே போனது?
உடல் எங்கே போனது ?
எண்ணங்கள் எங்கே போனது ?
உயிர் எங்கே போனது?

எதுவும் எங்கேயும் போகவில்லை
மனம் எதில் உள்ளதோ அது
புலப்படுகிறது

மனதை இல்லாது செய்துவிட்டால்
எல்லாம் இருந்தும் நம்மை பாதிப்பதில்லை
நாம் யார்?

எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக்கொண்டிருப்பவன்

அகத்திலேயே இருந்துவிட்டால்
என்றும் மாறாத ஆனந்தம்

அகத்தை விட்டு வெளியே திரிந்தால்
நம்மை தொடரும் துன்பங்களும்
முதலில் இன்பமாக தோன்றி
துன்பத்தை தரும் இன்பங்களும்.

நாம் சாட்சி என்று உணர்ந்துவிட்டால்
அக்கணமே கிடைத்துவிடும் இறை காட்சி.

கடலில் மிதக்கும் கப்பலை சுற்றி
கடும் அலைகள் மோதலாம்

சுறாமீன்களும் திமிங்கலங்களும்
திரியலாம்.

ஆனால் அவைகள் கப்பலுக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.

உண்மையை உணர்ந்தோர் எந்த சூழ்நிலையிலும்
அமைதியாக் இருக்கின்றனர்

உண்மையை அறியாதோர் அமைதி கெட்டு அழிகின்றனர்.