Monday, October 28, 2013

அதுவே சாந்தி மார்க்கம்.அமைதிக்கு வழி;மன ஒருமைப்பாட்டிற்கு வேலி

புரியாத புதிர் இந்த புவி வாழ்க்கை.

புதியதோர் புவி படைக்கும் அறிவியலாளர்கள்.

புவியில் புன்னகை யோடு மானிட ஒற்றுமைக்கோர் கூட்டம்.

தன்னலத்திற்காக  தரணியில் வேற்றுமை வளர்க்கும் கூட்டம்.

தன்  பதவி ,தன்  செல்வம் ,தன்  வளர்ச்சி என்றே வாழும் கூட்டம்.

தன்  செல்வம் ,தன்  பதவி நிலைக்க கடமை மறந்து ,நேர்மை மறந்து

தர்மம் மறந்து ,நியாயம் அழித்து  ,ஒழித்து வாழும் ஓர் கூட்டம்.

தன்  என்னாம் மறந்து பிறருக்காக வாழ்ந்து தொண்டாற்றும் கூட்டம

தன்  உழைப்பின்றி பிறர் உழைப்பில் வாழும் ஓர் கூட்டம்.

தன்  உழைப்பில் பிறர் வாழக்  கண்டு இன்புறும் ஓர் கூட்டம்.

விலங்குகளில் நாம் காணும்  வேறுபாடுகள் அனைத்தும்  கொண்ட

மனிதக் கூட்டம்.

சாதுக்களும் ,அரக்கர்களும் வாழும் புவி இது.

இங்கே மனித நேயம் வளர்க்க ,வையகத்தில் ஒற்றுமை வளர்க்க

ஒரே மார்க்கம்  ஆன்மிகம். அதுவே தன்னலம் மறந்து

பிறர் நலம்  காண வழிகாட்டும்.

ஜன்மம்  .....மரணம் நிச்சயம்  என்ற ஜீவிதக் கோட்பாடு

நாம் அணியும் விபூதி .ஒரு பிடி சாம்பல் மிச்சம்

நாம் வெறும் கையுடன் பிறந்தோம் ,வெறும் கையுடன் மறைவோம்.

வேற்றுமைகள் மறந்து வாழ்வோம் இதுவே ஆன்மீக சாரம்.
அதுவே ஆனந்தம் .அதுவே  இன்பம். அதுவே பிரம்மானந்தம்.
அதுவே சாந்தி மார்க்கம்.அமைதிக்கு வழி;மன ஒருமைப்பாட்டிற்கு வேலி .



 

No comments: