Wednesday, April 19, 2023

தொடரும் பக்தி சிந்தனைகள்.

  தொடரும் பக்தி சிந்தனைகள்.

  சத்சங்கம் என்பது இன்றும் பல பெயர்களில் நடக்கின்றன. அங்கு பகவானை ப் பற்றியும் சத்திய மார்க்கங்கள் பற்றியும் தான தர்மங்கள் பற்றியும் பிரசாரங்கள் செய்தாலும் ஆடம்பரங்கள் அதிகமாக காலத்திற்கு ஏற்ப மாறும் போது  சத்சங்கம்  முதியவர்கள் கூடும் இடமாக மாறாமல் இளைஞர்கள்  சிறார்கள் சிறுமிகள் கூடும் இடமாக மாறவேண்டும். இன்றைய காலகட்டத்தில்  படிப்பு என்பது எளிதாக கடினமானதாக மாறுகிறது. படிக்க பல வசதிகள் இருந்தாலும் குழந்தைகள் இயந்திர கதியில் இயங்குகிறார்கள்.  

 

மூன்று வயதில் துவங்கும் கல்வி  முடிய 22வயதாகிறது. சிலருக்கு30வயதுகூட ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் பணம் சேர்த்து செட்டில் ஆகி இல்வாழ்க்கை ஆரம்பிக்க சிலருக்கு 30வயதாகிறது.  ஒரு டாக்டர் 35வயதில் எம். டி  முடித்து வெளிநாட்டில் சிறப்பு பட்டங்கள் பெற்று 38வயதில் திருமணமாம். நமது முன்னோர்கள் 38வயதில் பேரன் பேத்திகள் பெற்று தானும் கர்பம் தரித்து  மகள் அல்லது மருமகள் மாமியார் அம்மா அனைவரும் ஒரே காலத்தில் பிரசவகால  சிகிச்சை‍.  இன்று கருத்தரிப்பு உதவி மையங்கள் பெருகுவதுடன் இளைஞர்கள் இளைஞர்கள் எந்திரகதியில் பொருளாதார வளர்ச்சி பெற்று முதுமையில் அநாதைகளாக வாழும் சூழல்‌ . இதற்கு அமைதிக்கான சத்சங்கங்கள் அவசியமாகின்றன.

அதில் ஆண்டவன் பெயரால் ஏமாற்றும் சத்சங்கங்கள் வேறு.

சிந்தனைகள் தொடரும்.


[

 3. தொடரும் பக்தி சிந்தனைகள் .



3. தொடரும் பக்தி சிந்தனைகள் .

 மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.

தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள் 

 யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.

 இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும். 

சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,

அறிவுரைகள் 

ஆன்மீக சொற்பொழிவுகள் 

இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.

தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.

 நம் வினைகள்,நம் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்,சமுதாயம் , உலகம் ஆகியவற்றின் நிகழ்வுகள்,ஏற்படும் நல்லவை கள் ,தீயவைகள், ஆக்கங்கள்,அழிவுகள் ஆகியவற்றை அசைபோடுதல் . அசைபோடுதல் என்றால் 

நாம் கண்டவை,படித்த வை, மற்றவர்களின் இன்பங்கள்,துன்பங்கள், ஆரோக்கியங்கள், நோய்கள்,அந்த  நோய்களில் குணம் அடைபவை ,தீராதநோய்கள்,அகாலமரணம், மரணாவஸ்தை அனைத்தையும்  அறிந்து புரிந்து தெளிதல். அதுதான் ஞானம். 

ஆனால் நம்மில் பலர் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் ஞானம் பெறுவதில்லை  விளைவு துயரங்கள். 

  கபீர் படிக்காதவர். அவர் மனம் சத்சங்கத்தால் தெளிவு பெற்றது. தன் குரு மந்திரம் ராம். ராம். அதை தன் குரு இராமானந்தரிடம் பெறவில்லை. குரு குளிக்கும் கரையில் படியில் படுத்துக் கொண்டார். இராமானந்தர் பாதங்கள் அவரை மிதித்தன. அவர் ராம்,ராம் என்றதை மந்திரமாக ஏற்றார். இது தான் கபீரின் சத்சங்கம்.

  தனிப்பட்ட முறையில் நேரில் குரு மந்திரம் பெற்றவர்கள் மனதில் மனிதம் மனிதநேயம் ஏற்படுமா? ஏற்படாது. மனிதர்களை வேறுபடுத்தும். 

 வேறுபடுத்தாமல் ஒற்றுமை ஏற்படுத்த அவர் ஞானமார்கத்தைத் தோற்றுவித்தார். ராமரை வழிபடுவோர் ராம சம்பிரதாயம். கிருஷ்ணனை வழிபடுவோர் கிருஷ்ண உபாசகர். அல்லாவை வழிவோர் முஸ்லிம். இறைதூதர் ஏசு வழி செல்பவர்கள் கிறிஸ்தவர்கள். 

மனிதர்களுக்குள் பிரிவுகள். மதக் கலவரங்கள். இனக்கலவரங்கள்.

ஜாதி சம்பிரதாயக் கலவரங்கள். இவைகளைத் தூண்டும் மத கலாசாரம் தெய்வீகம் கிடையாது‌ .

 தெய்வத்தைக்காண ஞானம் தான் வேண்டும். 

ஞானம் வந்தால் பஞ்ச தத்துவங்கள் புரியும். அவை உருவ மற்றவை.

 உயிர் தருபவை.

 காற்று பிரதானம்‌ ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் உயிர் போகும் நிலை. ஞானம் பெறததால் காற்றை மாசுபடுத்தும் பட்டதாரி மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது. புகைப் பழக்கம்,குடிப்பழக்கம், தாசி வீட்டுப் பழக்கம் படித்தவர்களுக்கும் அதிகாரத்தில்  உள்ளவர்களையும் முட்டாள் களையும் 

எளிதில் பற்றிக் கொள்ளும்.

 ஏனென்றால் அவர்கள் ஞானம் பெறவில்லை. 

காற்று உருவ மற்றது. உயிர் தருவது.

  அரசியல் அஞ்ஞானம்.

தனி நபர் ஸ்துதி.  சோனியா கிறிஸ்தவர். ராஜீவ் கான். ஆந்திராவில் சோனியா ஹிந்து ஆலயம். எதிர்காலத்தில் பல சோனியா கோவில்கள் ஏற்படும்.  ஒரு காங்கிரஸ் என்ற சுயநலக் கும்பல்  ஏற்படுத்தும் சம்பிரதாயம் இன்று அது சோனியாகட்சி

வழிபடு வது. அவ்வாறே மோடி ஜெயலலிதா எம்ஜி ஆர் நடிகை குஷ்பு‌ மம்தா. இதெல்லாம் மாயை. மனிதர்களின் ஒற்றுமையை வேற்றுமை படுத்தி தங்கள் அதிகாரத்திற்காக மக்கள் மனத்தை மாசு படுத்துபவை. 

கபீரின் ஞானமார்க்கம் ஒன்றே. 

கடவுளால் காப்பாற்றப்படும் ஒருவன்,அருளுக்குப் பாத்திரமானவன் தனி ஒருவனாக உலகமக்கள் அனைவரையும் எதிர்த்து வாழமுடியும்‌ . அதற்கு ஞானம் தேவை.

 தொடரும் பக்தி சிந்தனைகள்.

சே. அனந்த கிருஷ்ணன். பாகம் மூன்று.

தொடர் பக்தி சிந்தனைகள். பாகம் நான்கு. 

 கபீர் ராம் ராம் என்ற  குருமந்திரத்தை    குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.

பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும் 

 பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர்.  மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.

 பக்தி  ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர

வீண்  ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி 

குரானோ வேதங்களோ  படிப்து  இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…

Excellent writing! Very thought provoking words…thank you

தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.

நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?

 என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள்  கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு  தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஞாயிறு  கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.

 ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும் 

இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ  பேதமில்லை.  

அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன். 

   மதம் மனிதர்களை  ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.

      மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு  கோவில் கொள்ளை அனைத்தும் 

எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.

தொடரும் பக்தி  சிந்தனைகள் .

பாகம் ஆறு. 

  மனித வாழ்க்கையில் பக்தி தான் பிரதானம்.

ஆனால் பக்தர்கள் உலக பந்தங்களை   அனுபவிப்பதில்லை.

அவர்களுக்கு தாய் தந்தை மனைவி நண்பர்கள்,

ஆலோசகர் கள்

மருத்துவர்

பணம் கொடுத்து உதவுபவர்கள் என அனைவரும் 

கடவுள் /இறைவன்/பகவான் தான். ரமணர் பதினாறுவயதில் வீட்டை விட்டு திருவண்ணாமலை சென்று மௌனசாமி ஆனார். அவருக்கு இறைவன் தான் அனைத்தும் என்ற ஞானம் .அவருக்கு  தன் இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லை.  இறைவனைத் தேடி காசி இராமேஸ்வரம்  கைலாசம் அமரநாந் பத்ரிநாத் என்ற புண்ணியஸ்தலங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை.  திருவண்ணாமலை  ஈஸ்வரேனே சரணம் என்று தவம். அவரைத்தேடி வெளிநாட்டினர் வந்தனர். ஆதிசங்கரர் காலடியில் பிறந்து கால்  நடையாக பாரதம் முழுவதும் சென்று சாஸ்த்ர வாதவிவாதம் செய்தவர்.இல்லறம் பற்றி அறியகூடுவிட்டு கூடுபாய்ந்து இல்லறம் பற்றிய மண்டனமிஸ்ரர் வினாக்களுக்கும்ன  விடை அளித்து பல தெய்வீக இலக்கியம் படைத்து ஆன்மீக சாதனை புரிந்து  ஜகத்குரு ஆனவர். இந்த இருவரும்  உலகப் புகழ் பெற்றவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து  ஞானம் பெற்றவர்.  இறுதிவரையில்  திருவண்ணாமலை தான். இவரைப் பின்பற்றி  கோவணத்துடன் தவத்தில் ஈடுபடும்  தவநிலை மனப்பக்குவம் வருவதரிது. சங்கரரைப் போல் நடந்தே சென்று தன் கொள்கைகளைப் பரப்பி அஹம் பிரம்மாஸ்மி நானே கடவுள் என்ற அத்வைத்துவம்ஆத்மா பரமாத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்.  பக்தி என்பது  இதுதான்  என்ற வரையறை  வகுக்கப்பட்ட முடியாது.   பல சித்தர்கள் பைத்தியக்கார னைப் போல வாழ்ந்தவர்கள். பழனியில் ஈஸவரபட்டர் சாக்கடை சித்தர்கணக்கன் பட்டி சித்தர் இவர்களை அலட்சியமாக பார்த்தவர்கள். இவரிடம்  அருள்வாக்கு பெற காத்த இருந்தவர்கள்.. இவர்கள் முக்தி அடைந்த பின் பெரும் ஆலயங்கள். .சென்னை பாம்பன் சவாமிகள். இருந்த இடத்திலேயே முருகப்பெருமான்  வந்து காட்சி அளித்து ஆட்கொள்ளப்பட்டவர்.  பக்தி இறைவன் அருள் என்பது  ஆடம்பர ஆஸ்ரமங்களா? சாக்கடையில்  அமர்ந்து  மக்களைக் கவர்ந்தவர்களா?      பக்தி வழி இதுதான்  என்று சொல்ல முடியுமா?இவர்கள்  பல மொழி வித்தகர்கள்.இவர்களை நேரில் பேட்டி கண்ட பல வெளிநாட்டு அறிஞர்கள் இவர்களின்  பதிலால் இவருக்கு அடிமையானவர்கள்.   . பக்தி சிந்தனைகள் தொடரும்.  சே. அனந்தகிரு ஷ் ணன்

மனிதனுக்கான புண்ணியகாரியம் உண்மையை ஏற்பது.முன்னேற முயற்சிப்பது தான் பக்தி.வெற்றிக்குப் பிறகும் பணிவாக இருப்பதே பூஜை.

மனிதனுக்கான புண்ணியகாரியம் உண்மையை ஏற்பது.முன்னேற முயற்சிப்பது தான் பக்தி.வெற்றிக்குப் பிறகும் பணிவாக இருப்பதே பூஜை.

नमस्ते।वणक्कम्।வணக்கம்.

    आ सेतु हिमाचल तक,  இமயம் முதல் குமரிவரை

      आश्चर्य जनक  एकता,

வியக்கத்தக்க ஒற்றுமை.

      आध्यात्मिक  एकता।।

ஆன்மீக ஒற்றுமை.

     यह चमत्कारिक  शक्ति 

இது அதிசய சக்தி.

      एकता दे  रही है।

ஒற்றுமை அளித்துக் கொண்டிருக்கிறது.

   हिंदु,जैन,बौद्ध    ஹிந்து ஜான் பௌத்தர்கள் 

    पैदल ही 

  भारत भर  भ्रमण करते

 பாரதம் முழுவதும் நடந்தே சுற்றி 

  विचारात्मक எண்ணங்களின் 

  स्थाईநிலையான 

एकता की स्थापना  की है।

ஒற்றுமையை  நிறுவினர்.

चेंगिस्कान, मंगोल, मुगल,पटान, फ्रांसीसी, डा,पोर्तकीस, 

ग्रीक, इटाली, अंग्रेज 


செங்கிஸ்கான்,மங்கோலிய ர்,முகலாயர்,பிரஞ்சுக்காரர்கள், பட்டானியர்,

டச்சுக்காரர்கள்  கிரேக்கர்கள்,

 न जाने  தெரியவில்லை

कितने  எத்தனையோ

आक्रमण करके आये।

படைஎடுத்து வந்தனர்.

 पर एक आध्यात्मिक  बल ,

ஆனால் ஒரு ஆன்மீகபலம்

  नंगे,अर्द्ध न…

 மனிதன் சத்சங்கத்தில் எப்பொழுதும் இருக்கவேண்டும்.சத்சங்கம் கவலை களைப் போக்கும்.மன சஞ்சலம் தீர்க்கும். சுயநல எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்தும். மண் ஆசை,பெண் ஆசை பொன்னாசை,சுயநலம்,ஆணவம்,தலைக்கவனம் ஆகியவை போக்கி மனதை பொது நலம்,தானம்,தர்மம் ஆகிய புண்ணிய வழிகளில் சிந்திக்கத் தூண்டும். உலகம் அழியக்கூடியது. நிலையற்றது.

தான் சேர்த்து வைக்கும்சையும் அசையா சொத்துக்கள் 

 யார் அனுபவிப்பார்கள் என்பது தெரியாது. யாருக்காக சேர்த்து வைக்கிறோமோ அவர்கள் தான் அனுபவிப்பார்கள் என்பது நிச்சயமல்ல.

 இந்த உயர்ந்த எண்ணங்கள் சத்சங்கத்தால் தான் உண்டாகும். 

சத்சங்கம் என்பது நல்ல நூல்களைப் படிப்பது,நல்லறிஞர்கள் அறவுரைகள்,

அறிவுரைகள் 

ஆன்மீக சொற்பொழிவுகள் 

இவைகளை விட உயர்ந்தது ஏகாந்தம்.

தனிமை. தனிமையில் ஒரு நிமிடம் தியானம்.

 நம் வினைகள்,நம் …

 பாகம் நான்கு. 

 கபீர் ராம் ராம் என்ற  குருமந்திரத்தை    குருவிடம் அதிகாலை இருட்டில் பெற்று மன ஒளி பெற்றார். இந்த ராமர் பரந்த ராமர்.

பரந்த மனப்பான்மை உடைய ராமர். குகனையும் சபரியையும் ஏற்று உயர்வு தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் ராமர்.பறவைகள் வானரங்கள் கரடிகளின் சேனையால் மிருகங்களுக்கும் ஞானம் அளித்தவர். வைஷ்ணவ சைவ ஒற்றுமைக்கு ஆதாரமானவர். ஜாதிமத பேதங்களை மறந்தவர். பகவானாக இருந்தாலும் 

 பணிவு அன்பு வேண்டுதல் அதற்கும் அடிபணியாத தீயர்களை அளிப்பவர்.  மனித நேயமே பிரதானம் என்ற உயரிய கோட்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.

 பக்தி  ஆடம்பரமற்று காட்சிப் பொருளற்று இருக்கவேண்டும் தவிர

வீண்  ஆடம்பரங்களைக் கண்டிப் பவர்.உண்மையான பக்தி உணர்வுகளின்றி 

குரானோ வேதங்களோ  படிப்து  இறைவனை அறிந்து புரிந்து தெளியாதஞானம் என்பவர். எல்லை காணமுடியாத அளவு கருணை மிக்க ஆண்…

[9:25 pm, 16/04/2023] Suresh Kannan: Excellent writing! Very thought provoking words…thank you

[10:40 pm, 16/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி சிந்தனைகள் .. பாகம் ஐந்து.

நாம் இறைவனை ஆலயம் சென்றுதான் வழிபட வேண்டுமா ? என்ற கேள்வி எழுவது நியாயமா? அநியாயமா?

 என்பதில் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எவ்வித ஐயங்களும் ஏற்படாது. அவர்கள்  கட்டாயம் மசூதி ,சர்ச் செல்லவேண்டும். முஸ்லீம்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு  தொழுகிறார்கள். புகைவண்டியில் பயணம் செய்யும் போதும் தொழுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் ஞாயிறு  கட்டாயம் சர்ச் செல்கிறார்கள்.

 ஆனால் ஹிந்துக்களுக்கு எவ்வித கட்டாயமும் கட்டுப்பாடும் 

இல்லை. சாய் பக்தர்களுக்கும் ஹிந்து முஸ்லீம் கிறிஸ்தவ  பேதமில்லை.  

அங்கிங்குஎனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் இறைவன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பவன் இறைவன். 

   மதம் மனிதர்களை  ஒன்று சேர்க்கிறதா?துண்டாடுகிறதா? புரியவில்லை.

      மதக் கலவரங்கள் மத வெறித்தன தாக்குதல்கள் சிலைகள் உடைப்பு  கோவில் கொள்ளை அனைத்தும் 

எதிர்த்து மீண்டும் ஆலயங்கள் புத்த உயிர் பெறுகின்றன என்றால் அங்கே ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை யும் ஆகத்து தன்னை ச் சேர்ந்தவர் களையும் காக்கிறது.

[3:38 am, 18/04/2023] sanantha .50@gmail.com: தொடரும் பக்தி  சிந்தனைகள் .

பாகம் ஆறு. 

  மனித வாழ்க்கையில் பக்தி தான் பிரதானம்.

ஆனால் பக்தர்கள் உலக பந்தங்களை   அனுபவிப்பதில்லை.

அவர்களுக்கு தாய் தந்தை மனைவி நண்பர்கள்,

ஆலோசகர் கள்

மருத்துவர்

பணம் கொடுத்து உதவுபவர்கள் என அனைவரும் 

கடவுள் /இறைவன்/பகவான் தான். ரமணர் பதினாறுவயதில் வீட்டை விட்டு திருவண்ணாமலை சென்று மௌனசாமி ஆனார். அவருக்கு இறைவன் தான் அனைத்தும் என்ற ஞானம் .அவருக்கு  தன் இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லை.  இறைவனைத் தேடி காசி இராமேஸ்வரம்  கைலாசம் அமரநாந் பத்ரிநாத் என்ற புண்ணியஸ்தலங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை.  திருவண்ணாமலை  ஈஸ்வரேனே சரணம் என்று தவம். அவரைத்தேடி வெளிநாட்டினர் வந்தனர். ஆதிசங்கரர் காலடியில் பிறந்து கால்  நடையாக பாரதம் முழுவதும் சென்று சாஸ்த்ர வாதவிவாதம் செய்தவர்.இல்லறம் பற்றி அறியகூடுவிட்டு கூடுபாய்ந்து இல்லறம் பற்றிய மண்டனமிஸ்ரர் வினாக்களுக்கும்ன  விடை அளித்து பல தெய்வீக இலக்கியம் படைத்து ஆன்மீக சாதனை புரிந்து  ஜகத்குரு ஆனவர். இந்த இருவரும்  உலகப் புகழ் பெற்றவர்கள். ஒருவர் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து  ஞானம் பெற்றவர்.  இறுதிவரையில்  திருவண்ணாமலை தான். இவரைப் பின்பற்றி  கோவணத்துடன் தவத்தில் ஈடுபடும்  தவநிலை மனப்பக்குவம் வருவதரிது. சங்கரரைப் போல் நடந்தே சென்று தன் கொள்கைகளைப் பரப்பி அஹம் பிரம்மாஸ்மி நானே கடவுள் என்ற அத்வைத்துவம்ஆத்மா பரமாத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்.  பக்தி என்பது  இதுதான்  என்ற வரையறை  வகுக்கப்பட்ட முடியாது.   பல சித்தர்கள் பைத்தியக்கார னைப் போல வாழ்ந்தவர்கள். பழனியில் ஈஸவரபட்டர் சாக்கடை சித்தர்கணக்கன் பட்டி சித்தர் இவர்களை அலட்சியமாக பார்த்தவர்கள். இவரிடம்  அருள்வாக்கு பெற காத்த இருந்தவர்கள்.. இவர்கள் முக்தி அடைந்த பின் பெரும் ஆலயங்கள். .சென்னை பாம்பன் சவாமிகள். இருந்த இடத்திலேயே முருகப்பெருமான்  வந்து காட்சி அளித்து ஆட்கொள்ளப்பட்டவர்.  பக்தி இறைவன் அருள் என்பது  ஆடம்பர ஆஸ்ரமங்களா? சாக்கடையில்  அமர்ந்து  மக்களைக் கவர்ந்தவர்களா?      பக்தி வழி இதுதான்  என்று சொல்ல முடியுமா?இவர்கள்  பல மொழி வித்தகர்கள்.இவர்களை நேரில் பேட்டி கண்ட பல வெளிநாட்டு அறிஞர்கள் இவர்களின்  பதிலால் இவருக்கு அடிமையானவர்கள்.   . பக்தி சிந்தனைகள் தொடரும்.  சே. அனந்தகிரு ஷ் ணன்



Saturday, April 8, 2023

துளசி இராமாயணம்--சுந்தரகாண்டம்-பகுதி-நான்கு-4

 துளசி இராமாயணம்--சுந்தரகாண்டம்-
பகுதி-நான்கு-4
=======================
இராவணனின் கோவம் நெருப்பு போன்றது. அவனுடைய கோபமான மூச்சு பயங்கரமானது.
அந்த கோபத் தீயை விபீஷணனின் நீதி நெறி அறிவுரை மேலும் பற்றி எரியச் செய்தது.இராவணன் கோவப் படும் போது விபீஷணன் அதிக மென்மையாகப் பேசுவதால் 
இராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது.இராவணனின் பயங்கரமான கோவத்தில் இருந்து விபீஷணனை இராமர் காப்பாற்றினார். இலங்கையின் அரசாட்சி தலைமை உரிமை விபீஷணனுக்கு வழங்கப்பட்டது.  இராவணனுக்கு அவன் தியாகத்தால் வழங்கப்பட்ட அனைத்து செல்வச் செழிப்புகளும் ஸ்ரீராமரால் விபீஷணனுக்கு வழங்கப்பட்டது.

அடைக்கலமாக வந்தவர்களை கருணையுடன்  காக்கும் இரக்கக் கடலான இராமனை வணங்காமல் மற்றவர்களை வணங்குபவர்கள் வாலும் கொம்பும் இல்லாத மிருகத்திற்கு சமமானவரகள்.சரியான நடுநிலையான உயரந்த இறைவனை வணங்காதவர்கள் நம்பாதவர்கள் மிருகத்திற்கு இணையானவர்கள். இராமர் விபீஷணனைத்  தன் 
பணிக்காக ஏற்றுக்கொண்டார்.அனைத்து வானரங்களும் பிரபுவின் அன்பை விரும்பி்ன.
ஸ்ரீஇராம்பிரான்  அனைத்தும் அறிந்தவர்.அனைவரின் மனதிலும் இருப்பவர். அனைத்து வடிவங்களிலும் பகிரங்கமாக இருப்பவர்.அக்கரையற்றர்.அனைவரிலும் வேறுபட்டவர்.அனைத்து நடவடிக்கையிலும் பக்தி கொண்டவர்.நேர்மையற்ற அரக்கர்களை
வதம் செய்ய மனிதனாக அவதரித்தவர்.நீதி முறைகளைப் பின்பற்றுபவர்.நேர்மை  நெறிமுறைகளைக் காப்பவர்.பிரபு இவ்வாறு அனைவராலும் புகழப்படுபவர்.
இராமர் வானரங்களி்ன் அரசனான சுக்ரீவனிடம் எப்படி இந்த ஆழமான அகலமான கடலைக் கடப்பது எனவினவினார்.திமிங்கிலங்களும் பாம்புகளும் மீன்களும் வாழ்கி்ன்ற இந்த பெருங்கடலைக் கடப்பது அரிது.
இலங்கையின் அரசனான விபீஷணன் கூறினான் --ஸ்ரீரகுநாதனே! உங்கள் அம்புகளால் ஆயிரம் பெருங்கடல்களை வரட்சியடையச் செய்யமுடியும். ஆனால் இந்த பெருங்கடலைத் தலைமை தாங்கி இருக்கும் கடல் தெய்வத்தை அணுகி கேட்பது தான் நல்ல கொள்கையும் 
நெறிமுறையாகும். கடல் தெய்வத்திடம் கடலைக் கடந்து செல்ல வேண்டுங்கள்.முதல் முயற்சியில் ஆயுதங்களை பயன் படுத்தாமல் இருப்பதே நல்ல கொள்கையாகும்.அந்த முயற்சியில் நாம் முதலில் சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும்.
பிரபுவே! இந்தக் கடலைத் தலைமை தாங்குபவர் உங்கள் முன்னோர்களில் ஒருவர்.
கடல்  தேவதை கடலைக் கடக்க எளிய வழிகளை பரிந்துரை செய்யலாம்.அப்போது வானரப்படைகளும் கரடிப் படைகளும் எவ்வித கஷ்டமும் இன்றி கடலைக் கடக்க முடியும். 

அன்பு நண்பரே! நல்ல திட்டங்களை எனக்கு பரிந்துரை செய்துள்ளாய். முயற்சி செய்யலாம்ர்ர்
அதிருப்தி அடைந்தான். 
லக்‌ஷுமணன் ராமரிடம் சொன்னான்---எனக்கு விதியின் மீது நம்பிக்கை  கிடையாது.
தாங்கள் தங்கள் மனக்கசப்பை இந்த பெருங் கடலை வற்றவைத்துக் காட்டுங்கள்.
கடவுளையும் விதியையும் மன பலவீனமானவர்களும் கோழைகளும் தான் நம்புவார்கள்.
சோம்பேறிகள் தான் பகவானே!பகவானே! எனக்கு உதவுங்கள்! உதவுங்கள்! என்று வேண்டுவார்கள். ராமர் தம்பியின் பேச்சைக் கேட்டு சிரித்தார்.லட்சுமணனிடம் 
சொன்னார்-"பொறுமையாக இரு. அமைதியாக இரு.நீ சொல்வதை நான் செய்வேன்.
அரசியலில் பேச்சு வார்த்தையின் முக்கிய பங்கையும் ராமர் விளக்கினார். 
ராமர்  கடற்கரைக்குச் சென்று வணங்கி தர்ப்பைப் பாயில் அமரந்தார்.
விபீஷணனன் ஸ்ரீராமரிடம் அடைக்கலம் கேட்டுவிட்டு 
 இலங்கைக்குத் திரும்பினான்.

இராவணன் இராமரின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள சில ஒற்றர்களை அனுப்பினான்.
அவர்கள்  மாறுவேடமிட்டு குரங்குகள் வடிவத்தில் இராமனின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.ஒற்றர்கள் இராமனை மனதி்ற்குள் புகழ்ந்து கொண்டிருந்தனர்.அவர் அடைக்கலம் வந்தவர்களை பாதுகாப்பதையும் கவனித்தனர்.அவர்களின் நட்பு ஆதரவு குணங்களை அவர்கள் மொழியில் 
புகழ்ந்து சத்தமாகப் பாடத்தொடங்கினர்.தாங்கள் வானரங்களாக மாறுவேடமிட்டு வந்ததையும் வந்த நோக்கத்தையும் மறந்துவிட்டனர். அவர்கள் மாறுவேடம் கலைந்தது.
வானரங்கள்  எதிரிகளி்ன் ஒற்றர்களை  அறிந்ததும் அவர்களைப் பிடித்துவிட்டனர். அவர்களைக் கட்டி வானரங்களின் அரசர் முன் நிறுத்தினர். சுக்ரீவன் மற்ற வானரங்களிடம் 
"இந்த அரக்க ஒற்றர்களை சிதைத்து விடுதலை செய்து அனுப்பிவிடுங்கள்.
தங்கள் அரசரின் ஆணையைக் கேட்டு வானரங்கள் அரக்க ஒற்றர்களை அடிக்க உதைக்க ஆரம்பித்தனர்.வலி  தாங்கமுடியாமல் ஒற்றர்கள் ராமன் மீது ஆணை, மூக்கையும் காதுகளையும் சிதைத்துவிடாதீர்கள்.நாங்கள் ராமரிடம்  குற்றம் சாட்டுவோம். 
வானரங்கள் சுக்ரீவனின் ஆணையைவிட ஸ்ரீராமரை அதிகம் மதித்து அரக்க ஒற்றர்களை 
சிதைக்காமல் விட்டுவிட்டனர். 
வெளியில் நடந்த சத்தத்தைக் கேட்டு இலக்குவன்   ஒற்றர்கள் நிலைகண்டு சிரித்தான்.
இலக்குமணன்  வானரங்களிடம் அரக்கர்களை விட்டுவிடும்படி சொன்னான்.பிறகு ஒற்றர்களிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சொன்னான் --"அரக்கர்கள் இனத்தை ஒழிக்கவந்தவனே! இந்த செய்தியைப் படி."என்று சொல்லச் சொன்னான்.
அந்தத்  திமிர்பிடித்தவனிடம்  கூறுங்கள்:-சீதையைத் திருப்பி அனுப்பிவிட்டு சமாதான ஒப்பந்தத்திற்கு ஸ்ரீராமரிடம் வரச்சொல்லுங்கள்.  இல்லை என்றால் மரணம் நெருங்கிவிடும்.
ஒற்றர்கள் இலக்குவனை வணங்கிவிட்டு இலங்கைக்குச் சென்றனர்.
செல்லும் வழி எல்லாம் இராமரின் புகழ்பாடிக்கொண்டே சென்றனர். இலங்கைக்குச் சென்று இராவணனை வணங்கி அறிக்கை சமர்ப்பித்தனர்.இராவணன் அவர்களைப் பார்த்து சிரித்தான். பிறகு அங்கு பாரத்தவைகளைப் பற்றி கேட்டான். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் விபீஷணனைப்பற்றி சொல்.சுகா! உங்கள் நலத்தைப்பற்றி சொல்.
முட்டாள் விபீடணன்  மகிழ்ச்சியும் அரசாங்க மரியாதையும் கிடைக்கும் இலங்கையில் இருந்து  சென்றுவிட்டான். அந்தத் துறவிகளுடன் சேர்ந்து அவனும் பார்லியில் இருக்கும் வண்டுகளைப் போல் நசுக்கி மாவாக்கப்படுவான். வானரங்களின் மற்றும் கரடிகளின் சேனைகள் எப்படி உள்ளன?எத்தனை பேர் இருக்கிறார்கள்?அவர்களின் வலிமை எப்படி உள்ளது?மிகப்பெரிய மரணப்பேரழிவு அவர்களை இங்கு வரத்தூண்டியுள்ளது.
இரக்கமுள்ள சமுத்திர தெய்வம்அவர்களின் உயிரைக் காத்துக் கொண்டிருக்கிறது.
அந்தத்  துறவிகள் பற்றிக் கூறவும் .என் மீதுள்ள அச்சத்தால்  அவர்கள் மனம்  ஒவ்வொரு நொடியும் பயந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அவர்களை சந்தித்தீர்களா?என்னுடய மகிமையையும் ஆற்றலையும் கேட்டு திரும்பிவிடுவார்களா?எதிரிகளின்  ஆற்றல்,திறமை,வலிமை பற்றி கூறுங்கள். நீங்கள் திகைப்படைந்து திரும்பியதாகத் தோன்றுகிறது?உங்கள்மனதில் நம் படைகளின் வலிமைமீது ஐயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதன்மை ஒற்றனான சுகா இராவணனிடம் சொன்னான்---தாங்கள் உற்சாகத்தில் பல கேள்விகள் கேட்கிறீர்கள்.கவனமாக நான் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டும்.நான் சொல்வதைக் கேட்டு  தயைகூரந்து கோபப்படக்கூடாது. தங்கள் தம்பி ராமரைப் பார்த்த்துமே ராமர் அவர் நெற்றியில் திலகம் வைத்து இலங்கையின் அரசனாக அறிவித்தார்.
வானரங்கள் எங்களை இராவணனின் ஒற்றர்கள் என்றறிந்ததுமே  கைது செய்துவிட்டனர்.
பிறகு பல வகைகளில் துன்புறுத்தினர். இறுதியில் எங்களது காதுகளயும் மூக்கையும் சேதம் செய்ய வந்தனர்.நாங்கள் ஸ்ரீராமர் மீது சத்தியம் செய்ததால் விட்டுவிட்டனர்.எங்களை விடுதலை செய்தனர்.தாங்கள் இராமரின்  இராணுவமுகாம் பற்றி கேட்டீர்கள்.அவர்  படை வீரர்களின் வீரம் மற்றும் பலம் பற்றி வர்ணிக்க கோடிக்கணக்கான சொற்கள்  போதாது.
பலவித முகத்தோற்றங்கள்  கொண்ட வானரங்கள்,பலவித வண்ணங்கள்,மிகப்பெரிய பயங்கர உருவங்கள் நிறைந்த கூட்டம்.இலங்கையை எரித்து உங்கள் மகன் அட்சயனைக் கொன்ற குரங்கை விடவலிமைமிக்கவை.எண்ணிக்கையில் அடங்கா வீர்ர்கள் ,பல பெயர்கள், வலிமை மிக்கவர்கள்,பயங்கரத் தோற்றமுடையவர்கள்.ஒவ்வொருவரும் பலயானைகளுக்கு சமமான  வலிமைமிக்கவர்கள்.அவர்களை வெல்வது கடினம்.
போரில் வாகைசூடிய வாகையான்கள்----திவிவிதா,மயங்கன்,நீலன்,நளன்.அங்கதன்,
கதன்,விகடாசயன்,ததி முகன்,கேகரி,நிசதன்,சதன்,ஜாமவந்தன் ஆகியோர்.அனைவருமே வலிமைமிக்கவர்கள்.இந்தவானரங்கள் சுக்ரீவனை விட வலிமைமிக்கவர்கள்.அவர்களைப்போல் கோடிக்கணக்கானவர்கள்.அவர்களை யாரால் என்ன முடியும். ஸ்ரீ ராமரின்  அருளால் மிக அதிக வலிமை பெற்றவர்கள்.மூன்று விண்ணுலக உருண்டைகளின் கண்ணாடிக் கத்திகளின் துண்டுபோன்றவர்கள்.அங்கு 18 லட்சம் கோடி இளம் குரங்குகள் உள்ளனர்.போர்களத்தில் உங்களால் ஒரு குரங்கைக் கூட வெல்லமுடியாது.அவர்கள் கைகளைத் தேயத்துக் கொண்டு முறுக்கிக் கொண்டு மிகவும் கோபமாக உள்ளனர்.ஆனால் இராமர் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்..
குரங்குகள் இப்படி பேசுகின்றன--நாங்கள்மலைகளைப் போட்டு கடலை வற்றச்செய்துவிடுவோம்.அனைத்து கடல் வாழ் மீன்கள்,கடல்பாம்புகள் அனைத்தையும் அழித்துடுவோம். இராவணனை நசுக்கி தூளாக்கிவிடுவோம். எவ்வித அச்சமும் இன்றி இலங்கையையே விழுங்கிவிடுவோம் .
அனைத்து குரங்குகளும் கரடிகளும் இயற்கையாகவே வீரமிக்கவை.மேலும் அவைகள் இராமனால் ஆசிகள் பெற்றவை. அவர்கள் உங்களைமட்டும் வெல்ல வில்லை.பல கோடி தேவர்களையும் மரணத்தில் இருந்துவெல்லப் போகிறார்கள்.

ஆதிசேஷனால் கூட ஸ்ரீராமரின் மதி நுட்பம்,வலிமை,மஹிமையை வர்ணிக்க முடியாது.ஒரே அம்பில் அவரால் நூறு சமுத்திரங்களின் 
தண்ணீரை வற்றவைத்து காயவைக்க முடியும்.அவர் நீதி நெறிமுறைகளை நன்கு அறிவார்.இருப்பினும் அவர் தங்கள் தம்பியிடம் இந்த ஆழமான அகலமான சமுத்திரத்தை எப்படி கடக்க முடியும் என்ற ஆலோசனையைக் கேட்டார். தங்கள் தம்பி ஆலோசனைப் படி  சமுத்திர பகவானை பிரார்த்தித்து சமுத்திரத்தைக்  கடக்கப்போகிறார்கள்.விபீஷணனின் மீது 
இராமரின்அருள் முழுவதுமாக இருக்கிறது.ஒற்றன் சுகனின் வார்த்தைகளைக் கேட்டு இராவணன் சிரித்தார். நான் இப்பொழுது
அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் புரிந்துகொண்டேன்.அதனால் தான் அவன் வானரங்களையும் கரடிகளையும் சேனையாக அமைத்துள்ளான்.விபீஷணன் இயற்கையாகவே கோழை.அதனால்தான் சமுத்திரதேவனிடம் வழி கேட்டு பிரார்த்திக்கும் ஆலோசனையை வழங்கியுள்ளான்.சகனே! முட்டாளே! நீ ஏன் அவன் பெருமையைப் புகழ்ந்து கொண்டிருக்கிறாய்.நான் விரோதியின் பலத்தையும் ஞானத்தையும் மதிப்பீடு செய்து விட்டேன்.விபீஷணன் போன்ற கோழைகளை ஆலோசகராக வைத்திருப்பவர்களால் மகிமையையும் வெற்றியையும்  உலகத்தில் பெறமுடியாது.
தன் தீய குணமுள்ள அரசனின் பேச்சைக் கேட்டு தலைமை ஒற்றனான சுகன் மிகவும் கோபம் அடைந்தான்.இதுதான் சரியான தருணம் என்று சுகன் லட்சுமணன் இராவணனுக்குக் கொடுத்த கடிதத்தை அளித்தான்.இந்த செய்தியைப் படித்து உன் மனதிற்கு ஆறுதல் பெற்றுக் கொள் என்றான்.  கொடிய இராவணன்  இடதுகையால் கடிதத்தைப் பெற்று தன் அமைச்சரிடம் கொடுத்து 
படிக்கச் சொன்னான். 
இலட்சுமணனின் செய்தி இதுதான்---இழிவான இராவணா!
பொய்யான நம்பிக்கை சரியல்ல.அரக்கர்கள் இனத்தைஅழித்துவிடாதே.இராமனை எதிரியாக்கிக் கொண்டால்எந்த சக்தியாலும், பிரம்மா,விஷ்ணு ,சிவ சக்தியாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது.உன் தம்பி ஒரு வண்டு போல் 
ராமரி்ன் பாதாரவிந்தங்களில் அடைக்கலம் அடைந்துவிட்டார்.
அப்படி இல்லை என்றால் ஒரு பூச்சியை நெருப்பு சுட்டு எரிப்பதுபோல் ராமரின் வேகமான அம்புகள் பாழ்படுத்திவிடும்.
இலட்சுமணன் அனுப்பிய செய்தியைக் கேட்டு இராவணன் மிகவும் பயந்தான்.அவன் தன் அச்சத்தை மறைப்பதற்காக மேலோட்டமான புன்சிரிப்பு  சிரித்தான்.பிறகு அனைவரும் கேட்கும் படி உறையாற்றினான்--தரையில் படுத்துக் கொண்டு தன் கைகளால் ஆகாயத்தை பிடிக்க முயற்சிப்பது போல் இளம் துறவியின் செய்தி வீணானது  .ஆணவமிக்கது.
இதைக் கேட்டதும் தலைமை ஒற்றன்  சுகன்  இராவணனிடம் சொன்னான்--மாண்புமிகு அரசே! இலக்குவனின் செய்தியில் ஒவ்வொரு சொல்லும் உண்மையானது. தயவு செய்து ஆணவமின்றி ஆழ்ந்து சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள்.கோபத்தை கைவிட்டுவிட்டு,இராமனின் விரோதத்தையும் வி்ட்டுவிடுங்கள்.
அவர் பிரபஞ்சத்திற்கே  பகவான்.அவர் மிகவும் இரக்ககுணம் உள்ளவர்.நீங்கள் நீங்கள் விரைவாக சமாதானம் பேச செல்லுங்கள்.
அவர் உங்கள் தவறுகளை குற்றங்களை  மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். என்னுடைய  வேண்டுகோளை ஏற்று ஜனகரின் மகள் சீதையை மரியாதையுடன் ராமரிடம் அனுப்பிவிடுங்கள்.
சுகன் சீதையை அனுப்பிவிடுங்கள் என்றதுமே இராவணன் வெகுண்டெழுந்து இலக்குவணனை உதைத்தது போல் உதைத்துவிட்டான்.சுகன் இராவணனை வணங்கிவிட்டு தயாசாகரரான இராமன் முகாமிட்டிருக்கும் கடற்கரையை அடைந்தான்.மரியாதையுடன் இராமனின் பாதாரவிந்தங்களைத் தொட்டு வணங்கினான்.அவன் இராமனின் அருளால் புனிதனாகிவிட்டேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
சிவன் பவானியிடம் சொன்னான்---அவன் கடந்த பிறவியில் ஒரு முனிவர்.அகஸ்தியர் சாபத்தால் அரக்கனாக பிறந்தார்.அவர் இராமரை வணங்கிவி்ட்டு ஆஸ்ரமத்திற்குத் திரும்பினார்.
தன் அறியாமைனாலும் முட்டாள் தனத்தினாலும்அவனுடைய கொள்கைப் பிடிப்பாலும் மூன்று நாட்கள் வரை கடல் தேவதை ஸ்ரீராமரின் வேண்டுகோளைக் கேட்கவில்லை.அப்பொழுது இராமர்
கோபமாகப் பேசினார்.அச்சமின்றி நட்பும் இல்லை,அன்பும் இல்லை.
இராமர் லட்சுமணனிடம் அம்பையும் வில்லையும் எடுத்துவருமாறு கூறினார்.நான் எனது அக்னி பாணத்தால் இந்தக்கடலை காயவைத்து விடுவேன். 
பிடிவாதக்காரனுடன் பணிவு,அன்பு, தீயவர்களுடன் நட்பு,கஞ்சனிடம் தாராள குணம்,நியாயமான நெறிமுறைகள் அனைத்தும் வீண்தான். உலகத்தொடர்பு உள்ளவனிடம் பற்றற்ற மனம்,ஞானம்,எளிதில் காதல் கொள்பவர்கள்  ஆகியவைகளை எதிர்பார்ப்பது வீணே.இவை எல்லாம் விளையாத நிலத்தில் விதைவிதைப்பது போலாகும்.இவர்களுக்கு நீதி நெறிமுறைகளைக் கற்பிக்க முடியாது.இவ்வாறு சொல்லிக்கொண்டே இராமன் அக்னிபாணத்தைத் தன் வில்லில் வைத்து நாணை இழுத்து ஓசை எழுப்பினான். அண்ணன் ஸ்ரீராமனின் நடவடிக்கையால் இலக்குமணன் அகமகிழ்ந்தான்.அவன் துவக்கத்திலேயே  விபீஷணன் கூறிய கடல் தெய்வத்திடம் பிரா்த்தனை செய்வதை எதிர்த்தவன்.
இராமர் தன் புள்ளி இல்லாத அக்னிபாணத்தை எய்ததுமே சமுத்திரத்தின் இதயத்தில் விழுந்து தீச்சுடர்களை உமிழந்தது.
முதலைகள்,திமிங்கிலங்கள் ,மீன்கள் மற்றும் கடல் வாழ் ஜீவஜந்துக்கள் மிகவும்  பயந்து அமைதியற்ற நிலையை அடைந்தன.
அந்தணர்கள் ஒரு தங்கத் தட்டு நிறைய பலவிதமான நகைகளை
தங்கள் பெருமை பாரபட்சம் விடுத்து ராமர் முன் தோன்றினர்.
காகபுஷுண்டி முனிவர் கருடனிடம் கூறினார்--"ஒருவன் பல லட்சம் முறைகள் வாழைமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றினாலும் பழங்கள் உண்டாகாது.அவை வெட்டப்படவேண்டும்.அப்படியே தீயவர்கள் பணிவான வேண்டுகோள்களுக்கு இணங்கமாட்டார்கள்.
கடல் தெய்வம் ஸ்ரீராமரின் அக்னி பாணத்தால் பயந்து ஸ்ரீராமரின் பாதாரவி்ந்தங்களில் விழுந்து வணங்கியது. ஸ்ரீராமரிடம் தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டது.இயற்கையில் வாயு,அக்னி, நிலம்,நீர் ஆகியவை பிடிவாத குணம் கொண்டவை. நாங்கள் தங்கள் தெய்வீக மாய சக்தியால் படைக்கப்பட்டவர்கள்.பிரபஞ்ச வளர்ச்சிக்காக உங்கள் தூண்டுதல் ஆற்றலால் படைக்கப்பட்டோம்.
மாண்புமிகு மதிப்பிற்குறிய பிரபுவே! உங்கள் ஆணைப்படியே உலகில் தோன்றிய ஒவ்வொரு ஜீவனும் வாழ்கின்றன.அப்படி வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.பிரபுவே! தாங்கள் என்னை ஒழுக்கமுடையவனாக மாற்றிவிட்டீர்கள்.எனக்குத் தனிஉரிமை கொடுத்து கட்டுப்படான நடத்தையைக் கொடுத்துவி்ட்டீர்கள். என்னை அகலமாகவும் ஆழமாகவும் படைத்து ஒருவரும் என்னை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது என்பது தங்களது ஏற்பாடு. உங்களது ஆசிகளால் வாழ்த்துக்களால் எங்களுக்கு கிடைத்த இயற்கையான குணம். இப்பொழுது நான் தங்களின் திறனைத் தெரிந்துகொண்டுவிட்டேன்.நான் உங்களுக்கு கடலைக் கடக்க வழிகாட்டுகிறேன். ஒரு முரசு,சூத்திரர்கள்,ஒரு உயிரினம்,ஒரு பெண் ஆகியவை தவறான குற்றம் நிறைந்த முட்டாள் தனமான நடவடிக்கைகளால் தான் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.
முரசு உயிரற்றது.மற்ற நான்கு முட்டாள்கள் சூத்திரன்(பணியாட்கள்)
உயிரினங்கள் அசைபவை.உயிருள்ளவை.அசைபவை அசையாதவைஆனால் அவைகளுக்கு அசையக் கற்றுத்தரவேண்டும்.அவர்கள் அசையாமல் இருக்கும் குணத்தை விட்டுவிடவேண்டும். அவர்கள் தங்களது தனியுரிமைநடத்தையை புரிந்துகொள்ள வேண்டும். பிரபுவே! தங்களது சக்தியாலும் மகிமையாலும் தங்களது அக்னிபாணத்தால் நான் வறண்டுவிடுவேன்.
உங்கள் படை எளிதாக அக்கரையை அடைந்துவிடும்.அதனால்எனக்கு எவ்வித  நன்மதிப்பும் கிடைக்காது.
என் கண்ணியம் போய்விடும்.தாங்கள் உயர்ந்தவர் .ஆற்றல் மிக்கவர்.
உங்களை எதிர்த்து உயிருள்ளவை,உயிரற்றவை ஆகியவைகள் போராடமுடியாது என வேதங்கள் கூறுகி்ன்றன.ஆகையால்  நீங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கான காரியத்தை உங்கள் விருப்பப் படி செய்யுங்கள். சமுத்திரத் தேவதையின் பணிவான பக்தி சிரத்தையான
வேண்டுதலைக் கேட்டு பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற
இரக்கமும் கருணையும் உள்ள ஸ்ரீஇராமசந்திர பிரபு புன்னகையுடன்
சொன்னார்---நானும் எனது வானரப்படைகளும் கரடிப்படைகளும் சமுத்திரத்தைக் கடக்க வழி சொல்லுங்கள்.
சாகரா கடல் தெய்வம் ஸ்ரீராமரிடம் பணிவாக கடல் கடந்து செல்ல வழி கூறியது--நீலனும் நளனும் எனது வானர சகோதரர்கள். அவர்களுக்கு  ஒரு முனிவர் மூலம் பெரிய மலைகள் கூட அவர்கள் தொட்டால் தண்ணீரில் மிதக்கும் வரம் பெற்றுஇருக்கிறார்கள்.பிரபுவின்  மஹிமையை மனதில் கொண்டு 
என் சக்திக்கு முடிந்த அளவு உதவிசெய்வேன்.நீலன்,நளன் உதவியால் கடலில் பாலம் கட்டி கடந்துவிடலாம். பாலம் மூன்று கோளங்களாக மிதக்கும். உங்கள் அம்புகளால் எனது வடது கரையில் உள்ள எதிரிகளை அழித்துவிடலாம்.
இதைக் கேட்டதும் மனதில் கருணையும் இரக்கமும் உள்ள ஸ்ரீராமன் சாகராவின் அனைத்துத் துயரங்களையும் மனவலியையும் போக்கிவிட்டார்.
துளசிதாசர்அவரது ஞானத்தாலும் அனுபவத்தாலும் இராமர் தன் வீரதீர வினைகளால் கலியுகத்தின் பாவங்களில் இருந்து மக்களைக் காக்க அவரித்தவர் என்று புகழ் பாடுகிறார்.
அறத்தின் அவதாரம் ரகுபதியின் புகழ் பாடுவோர் மிகவும் மகிழச்சியாக இருப்பார்கள். அவரின் புகழ் பாடுவதுதான் எல்லாவித ஐயங்கள், மன அழுத்தங்களைப் போக்கும் பரிகாரமாகும்.முட்டாள் மனமே!ஸ்ரீராமரின் மீதுள்ள நம்பிக்கைதவிர மற்ற நம்பிக்கைகளை விட்டுவிட்டு அவரதுபுகழைப் பாடுங்கள்.ஸ்ரீரகுநாதர் நன்மைதருபவர்,
என்று அவர் ஜகம் புகழும் கதையைப் பாடுங்கள்.ஸ்ரீராமர் கதையை பாராயணம் செய்யுங்கள். அவரது புகழைக் கேட்பவர்கள், மரியாதைக் குரிய மஹிமையைக்  கேட்பவர்கள்  எந்த ஒரு கப்பலும் இன்றி
சாதரணமாக  எளிதாக வையகக் கடலைக் கடக்கமுடியும்.ஸ்ரீராமர் 
மஹிமையைக் கேட்டால் மறுபிறவியில் இருந்து முக்திகிடைக்கும்.
இவ்வுலக வாழ்விலும் மகிழ்ச்சிகிடைக்கும்.


ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே!











Wednesday, April 5, 2023

துளசிதாசர் இராமாயணம்-சுந்தர காண்டம்- பகுதி--மூன்று-3

  துளசிதாசர்  இராமாயணம்-சுந்தர காண்டம்-

                           பகுதி--மூன்று-3-

     
   விபீஷணன் தன் அமைச்சர்களுடன்  வந்து கொண்டிருப்பதை வானரங்கள் பார்த்தன.
அவர்கள் அவர்களை சிறப்பு ராஜதூதர்கள் என்று நினைத்தனர். விபீஷணனையும் அமைச்சர்களையும் நிறுத்திவைத்துவிட்டு  தங்கள் அரசன் சுக்ரீவனனிடம் தகவல் அறிவிக்கச் சென்றனர். பிறகு சுக்ரீவன்இராமரை சந்தித்தான்.ஸ்ரீஇராமரை வணங்கி இராவணனின் தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறான்.இராமர் சுக்ரீவனிடம் ,அன்பு நண்பரே!  இது சம்பந்தமாக உங்களுடைய ஆலோசனை
என்ன ?என்று கேட்டார். 
சுக்ரீவன் வானரங்களின் அரசன் இராமரை வணங்கி ,மனிதர்களின் ஆட்சியாளரே! கேளுங்கள்.
இந்த அரக்கர்களின் விருப்பத்தை ஒருவராலும் அறிந்துகொள்ள முடியாது. இந்த அரக்கர்கள் அவர்கள் விரும்பிய வடிவத்தை எடுக்கமுடியும். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. இந்த வஞ்சகர்கள் நமது இரகசியத்தை அறிந்து கொள்ள வந்திருக்கலாம். அதனால் இவர்களை கைது செய்யவேண்டும் என்றான். 
இராமர் சொன்னார்---
 அன்பு நண்பரே !  நீங்கள்  அரசியல் கொள்கைப்படி நல்ல எண்ணம் தான். ஒரு அரசன் எதிரியை நம்பும் வரை சந்தேகப்படவேண்டும்.அல்லது அவருடைய நோக்கம்  புரியும் வரை .உங்களது ஆலோசனை மிகவும் நட்பு ரீதியானது மற்றும் நீதி நெறிமுறையானது.  நான் என்னிடம் அடைக்கலமாக வந்தவர்களின்
மனதில் உள்ள அனைத்துத் துயரங்களையும் விரட்டிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளேன்.
ஒருவர்  தனக்கு சிறிது நஷ்டம் வந்தாலும் அடைக்கலமாக வந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

  ஸ்ரீ இராமர்  சொல்வதைக் கேட்டு  ஹனுமான் மிகவும் மகிழ்ந்தார். ஹனுமான் தனக்குத் தானே பேசிக் கொண்டார் ----அடைக்கலமாக வந்தவர்களை தந்தை மகனை நேசிப்பதுபோல் நேசிக்கிற இரக்ககுணமுள்ளவர் எனதுபிரபு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி. ஸ்ரீராமர்  அடைக்கலமாக வந்தவருக்கு முழுபாதுகாப்பும்  அளிப்பவர் என்பது   ஹனுமானுக்குத் தெரியும். ஹனுமானுக்கு சீதை இருப்பிடத்தை 
எளிதாக அடைய உதவியவர்  விபீஷணன். விபீஷணனை சுக்ரீவன் கைதுசெய்யவேண்டும்  என்றதும் ஹனுமான் வேதனைப்பட்டார்.  
அடைக்கலம் கேட்பவர் தீங்குவிளைவிப்பவராகவும்,பாவிகளாகவும் இருந்தால் விட்டுவிடவேண்டும்.அத்தகையவர்களிடம்  நட்புபாராட்டக்கூடாது. 

இராமர் கூறினார்--- லட்சக்கணக்கானவர்களைக் கொலை செய்த பிராமணன் அடைக்கலமாக வந்ததும் அவனைக் கைவிடவில்லை. மனிதன் மனம் மாறி என்னை நோக்கி வந்தால் இப்பிறவியில் செய்தபாவங்களும் முற்பிறவியில் செய்த  பாவகர்ம துயரங்கள் உடனே போய்விடும்.இயற்கையாகவே பாவ குணமுள்ளவர்கள் என்னை வணங்க விரும்பமாட்டார்கள். அயோக்கியர்கள், குறும்புத்தனமுள்ளவர்களுக்கு என்னை அணுகவும்  எதிர்க்கவும் துணிச்சல் இருக்காது.தூய்மையுள்ள இதயம் மட்டும் உள்ளவன் தான் என்னை அணுகமுடியும். வஞ்சிப்போர்கள் ,இழிவானர்கள் ,குற்றம் கண்டுபிடிப்பவர்கள் ஆகியோரை என்றுமே நான் விரும்பமாட்டேன். விபீஷணனன் மனதில் தீய எண்ணங்கள்  இல்லை. அதனால் தான் அவன் என்னைத் தேடி வந்திருக்கிறான். 
வானரங்களின் அரசே!இராவணன் இரகசியங்களை அறிய விபீஷணனை அனுப்பியிருந்தாலும் பயப்படவேண்டியதில்லை.இழப்பதற்கு எதுவும் இல்லை. அன்பு நண்பரே! என் தம்பி இலட்சுமணன் 
ஒருவனே ஒரு நொடியில் அரக்கர்களைக் கொன்றுவிடுவான். இந்த ஜோடி அரக்கர்கள் எம் மாத்திரம்.
இராவணனின் மேல் உள்ள அச்சமின்றி விபீஷணன் என்னிடம் அடைக்கலமாக வந்துள்ளான்.நான் என் உயிரைப் போல் விபீஷணனின் உயிரைக் காப்பாற்றுவேன்.இரக்க முள்ள இராமன் புன்னகையுடன் சுக்ரீவனிடம்   அவர்கள்  ஒற்றர்களோ அல்லது அடைக்கலம் கேட்டு வந்தவர்களோ ,அவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்.  
   வானரங்கள் விபீஷணனிடம் ஸ்ரீராமனை சந்திக்க அழைத்தனர்.விபீஷணனை தன் தலைவனாக ஏற்று மரியாதை செலுத்தினர்.ஆனால் அவனை மூன்று பக்கங்களிலும் ,இடது,வலது மற்றும் பின்னால் சுற்றி வந்தனர். ஸ்ரீராமன் இருக்கும் இடத்திற்கு விபீஷணனும் குரங்குகளும் சென்றனர். 
ஒரு பாதுகாப்பான முன் எச்சரிக்கையாக  விபீணனுக்கும் ராமனுக்கும் மிகவும் மரியாதை செலுத்தினான். விபீஷணனுக்கு  மற்றொரு மரியாதையாக  அவனை வரவேற்க  வானரங்களின் முதன்மைத் தளபதியும்  அரசனாகும் இளவரசனான அங்கதனை நியமித்தான்.
   விபீஷணன் தொலைவில் வரும்போதே தொலைவில் வரும்போதே  இராமனனையும் லட்சுமணனையம்  பார்த்தான்.  இராமனின் அழகான கண்கள் விபீஷணனைக்  கவர்ந்தன.ராமரின் மீது அன்பு கொண்டு சிறிது தூரத்தில்  நின்று கண்களை இமைக்காமல் ராமனனையே பார்த்துக் கொண்டிருந்தான்.இராமனின்  கைகள் நீளமாக இருந்தன. கண்கள் சிவப்புத் தாமரை இதழ்கள் போலிருந்தன. அவரின் அழகான கைகால்கள் கருணை நிறைந்த பார்வை அவரிடம் அடைக்கலம் வந்தவர்களின் அச்சத்தை போக்கும் .
ஸ்ரீராமரின் சிங்கம் போன்ற புஜங்கள்,அகன்ற மார்பு மிகவும் தரிசிப்போரை அதிகம் கவரும். அவரின் அழகான்ன முகமும்,முகத்தோற்றமும் மிகவும் கவர்ச்சியாக இருந்ததால் காமதேவன் மன்மதனுக்கே மனதில்  மயக்கம் ஏற்படும்.விபீஷணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடு்த்தது.உடல் நடுங்கியது.பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு மிகவும் மென்மையான குரலில் தன்னை அறிமுகப்படுத்தினான். நான் இராவணனின் சகோதரன். நான் அரக்கர் முகத்தோடு பிறந்திருக்கிறேன்.
தேவர்களை பாதுகாப்பவரே!எனது உடல் தாமச தத்துவங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.ஆந்தை இருட்டை விரும்புவது போல எனக்கு இயற்கையாகவே பாவங்களையே விரும்பும் குணம்.  தாங்கள் தங்கள் கருணைக்காக புகழ்பெற்றவர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் பண்பானவர்.நேர்மையானவர். மறுபிறவி என்ற அச்சத்தைப் போக்குபவர். பாதிக்கப்பட்டவரின் துயரங்களைப் போக்குபவர்.தங்களிடம் சரணாகதி அடைந்தவரை மகிழ்விப்பவர்.இவைகளை எல்லாம் கூறி விபீஷணன் இராமரின் கால்களில் விழுந்து வணங்கினான்.பிரபு விபீஷணனின் வேறுபட்ட வணக்கத்தைக் கண்டும் பணிவான பேச்சைக் கண்டும்  மனமகிழ்ந்தார். ஸ்ரீராமர் தன் கரங்களால் விபீஷணனை ஆரத்தழுவினார். 
விபீஷணன் ஸ்ரீராமரின் தம்பி லட்சுமணனையும் சந்தித்தான். இராமர் அவனை அருகில் அமரவைத்தார்.
விபீஷணனின் மனதில் உள்ள பயம் முழுவதும் போகும் படியான ஊக்கம் அளிக்கும் வாரத்தைகளைப் பேசினார்.
இலங்கையின் அரசே! தங்கள் மற்றும் தங்களின் குடும்பநலம் பற்றியும் கூறுங்கள். நீஇரவும் பகலும் ஊழல்வாதிகளாலும் தீயவர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய்.   இருப்பினும் நீ நீதி நெறியோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது. நான் உனது நீதி நெறி முறை நடவடிக்கைகளை நன்கு அறிவேன்.நீ மிகவும் அறிவுள்ளேன்.வேதசாஸ்திரங்களை நன்கு அறிந்தவன். நீ எந்த ஒரு சூழ்ச்சி தந்திரங்களையும் 
விரும்பாதவன்.நரகத்தில் இருப்பது நலம்.ஆனால் பகவான் தீயவர்களின்  இழிவானவர்களின் தோழமையை விடுவதில்லை என்று இராமர் கூறினார். 
 விபீஷணன் இராமரிடம் -மதிப்பிற்குறிய ராமா! நான் தங்களது பாதரவிந்தங்களில் சரணடைந்ததால்
எனக்கு அனைத்துமே நல்லதே நடக்கிறது.நீங்கள் என் மீது கருணை காட்டியதால் நான் பெரும் அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டேன்.தாங்கள்என்னை சொந்த வேலைக்காரனாக ஏற்றுக் கொண்டது என் பாக்கியமே.  பிரபுவே! தங்களை வணங்காதவர்கள் கனவில் கூட மகிழ்ச்சியாகவும் வேதனையின்றியும் இருக்கமுடியாது.அனைத்து இன்னல்களுக்கும் மூலமான ஆசைகளை விடவில்லை என்றால் துன்பங்கள் எப்படி விலகும்.?ஒருமனிதனின் மனதில்பேராசை,காமம்,ஆணவம்,பெருமிதம் ஆகிய அனைத்து தீயகுணங்களும் இருக்கின்றன. இராமர் அவர்களுக்கு எதிராக வில்லும் அம்பும் எடுத்தால் எதிரிகள் நடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். 
தீயவர்களை அவர் மன்னிக்கமாட்டார். உலக மகிழ்ச்சியில் இணைந்திருப்பதால்  சந்திரமாசம் முதல் நாள் போல்  வாழக்கை இருண்டுவிடும். உலக மகிழ்ச்சி என்பது  இரவில் ஆந்தைகளுக்கும் தீயவர்களுக்கும்  தான் கவர்ச்சிகரமாக  இருக்கும். தீயவர்களுக்கு கதிரவன் கதிர்கள் போன்ற வெளிச்சமான ஞானம் மனதில் வராது.பகவான் அவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தரும் வெளிச்சத்தைத் தரமாட்டார்.நான் பிசாசு. இழிந்தவன்.இவை தான் எனது இயற்கை குணம்.நான் இதுவரை எந்த நற்பணியும் செய்ததில்லை. பகவானின் அழகு, இயற்கை குணம் ஆகியவை புரிந்து கொள்ளவில்லை. முனிவர்களின் மிக எளிமையையும் பார்க்கவில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக பகவானின் பாதார விந்தங்களை தரிசித்து விட்டேன். பகவான் தன் இரு கரங்களால் அணைத்து அன்பு காட்டும் பாக்கியத்தைப் பெற்றேன். பகவானைதரிசித்தேன். பேரானந்தத்தைஅடையும் பேறுபெற்றேன்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.என் விதி எல்லையற்றது. பிரம்மாவாலும் சிவனாலும் வணங்கப்பட்ட பகவானையும்  அவரதுபாதாரவிந்தங்களையும்  என் கண்களால் தரிசித்துவிட்டேன். என்றெல்லாம் விபீஷணன் மனதில் எண்ணி புலகாங்கிதமடைந்தான். 
ஸ்ரீராமன் விபீஷணனிடம்  நண்பனே! புசுண்டி,சம்பு,கிரிஜாஆகியோரிடம் என்  இயற்கை குணங்களைப் பற்றி  கேள்வி்ப்பட்டதைக் கூறவும்.
அனைத்துத்  தீயவர்களும்  என்னைஉணர்ந்தவர்களும் உணராதவர்களும்  அச்சத்தின் காரணமாக என்னிடம் அடைக்கலமாக வருகின்றனர். அவர்களை நான் மன்னித்துஏற்றுக் கொள்வதுடன் அவ்களுடைய மாயை,மோசடிகள்,வஞ்சகம் முதலியவைகளைப் போக்கிவிடுகிறேன்.அவர்களை முனிவர்களாக மாற்றிவிடுகிறேன்.
ஒரு மனிதன் தன் தாய்,தந்தை,சகோதரன்,மகன்,மனைவி ,உடல்,செல்வம்,நல்ல நண்பர்கள் ,மேல் அன்பு உள்ளவன். ஒரு மனிதன் பற்றுகளைத் துறந்து என்னையே சரணாகதியாக அடைந்தவன் என்று ராமர் கூறினார்.மேலும் ராமர் கூறினார்---நடுநிலையான மனிதர்கள்,ஆசைகளைத் துறந்தவர்கள்,மகிழ்ச்சி,துயரம்,அச்சம் ஆகியவை இல்லாதவர்கள்,என்மனதில் பேராசைஉள்ளவரகள் மனதில் பணமாசை இருப்பதுபோல நிலைத்து இருப்பார்கள். நான் பற்றற்றவர்களை ,ஆசையற்றவர்களை ஆழ்மனதில் வைத்து விரும்புகிறேன்.விபீஷணனே! நீ எனக்கு முனிவர்கள் போன்று 
அன்பானவன். உன்னைப் போன்ற பக்தர்களை அதிகமாக விரும்புகிறேன்.
 உருவ வழிபாடு செய்பவர்கள்,கருணைஉள்ளவர்கள்,நாணயமுள்ளவர்கள்,நேர்வழியில் செல்பவர்கள்,சொன்னசொல் தவறாதவர்கள்,ஞானமுள்ள  நீதி நெறிகளைக் கற்றுத் தரும்அந்தணர்கள் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். அன்பானவர்கள்.
விபீஷணனா! நான்விரும்பும் அனைத்து நற்பண்புகளும் உன்னிடம் இருப்பதால் நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.

  ராமர் சொல்வதைக்கேட்டு கூடியிருந்த அனைத்து வானரங்களும் கருணை மிக்க இராமரே வாழ்க! என்று கோஷமிட்டனர்.வீபீஷணன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான்.அவன்ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை மீண்டும் மீண்டும் வணங்கினான்.
விபீஷணன்  இராமரிடம் வேண்டினான்--பிரபுவே!அசைவன-அசையாதன என அனைத்துபடைப்புகளின்
மீது ஆட்சி செய்பவரே!சரணாகதி அடைவோரைக் காப்பவரே! அனைத்து ஆன்மாக்களையும் 
மனதில் வைத்திருப்பவரே!எனக்கு சில உலக ஆசைகள் இருந்தன.ஆனால்  பக்தி வெள்ளத்தில் அந்த உலக ஆசைகள் அடித்துச் செல்ல்பட்டுவிட்டன.இப்பொழுது. என் மனதில் எவ்வித ஆசையும் கிடையாது.எனது மனம் தூய்மையாகிவிட்டது. எனது பக்தியை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
8.45காலை.
 விபீஷணனின்  கோரிக்கையை அப்படியே ஆகட்டும் என்றார் ஸ்ரீராமர். பிறகு கடல் நீர் வேண்டும் என்றார்.
ஸ்ரீராமர் விபீஷணனிடம் -"தற்சமயம் உன்மனதி்ல் எவ்வித ஆசைகளும் இல்லை. என் பார்வையில் இந்த எண்ணம் பயனற்றது.நிலவுலக  ஆசைகள் முன்பு இருந்தவை போலவே  உனக்கு  இருக்க வேண்டும் என்ற வெகுமதியை  உனக்கு அளிக்கிறேன். உன்மனதில் ஆசைகள் இல்லை என்றாலும் இதைஎன் அன்பின் அடையாளமாக ஏற்றுக்கொள்.  என்று சொல்லிக் கொண்டே அவனுடைய  நெற்றியில்  கடல் நீரால் புனித குறியிட்டார். விபீஷணனை இலங்கையின் அரசனாக்கினார்.அப்பொழுது அனைத்து தெய்வங்களும் விண்ணில் இருந்து மலர்களைத் தூவினர்.
=================================================================


`