Tuesday, February 12, 2019

कबीर


I









































ஹிந்தியில்  பக்தி காலத்தில்   ஞான மார்க்கம்
தோற்றுவித்தவர் கபீர் தாஸ் .  


இறைவனை அடைய ஞானம் வேண்டும் .


ஹிந்தி இலக்கியத்தில் அவர் சொல்லின் சர்வாதிகாரி என்று  போற்றப்படுகிறார். பிறப்பால் அந்தணர் .வளர்ப்பதால் முகலாயர் .நெசவாளி.
அவரது ஈரடிகளில் (தோஹைகளில் ) குருபக்தி ,இறைபக்தி ,இறைபக்தியின் உன்னத நிலை ,மூடநம்பிக்கைகளை நிந்தித்தல் , பக்தி ஆடம்பரமல்ல என்ற வழிகாட்டல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.


 அவரின் சிறந்த ஈரடிகள் :--


குரு  மகிமை


1.குருவும் இறைவனும்  எதிரில் காட்சி அளித்தால் யாரை  வணங்குவது ? நான் முதலில் குருவை வணங்குவேன் . ஏனென்றால் குரு தன்  ஞானத்தால் இறைவனைக் காணும் வழிமுறைகளை நமக்கு காட்டுகிறார். குரு அருள் இன்றி இறை அருள் கிடைப்பது அரிது .


2.  இந்த உடல் விஷத்தன்மையால் நிரப்பப்பட்டுள்ளது. அந்த விஷ எண்ணங்களை  அகற்றி
அமிர்தத்தின்  சுரங்கமாகத் திகழ்பவர்  குரு. சிறந்த குரு கிடைத்தால்   அரிய விலைமதிப்பற்ற
உயிர் கொடுத்தும்  அவரைப்பெறுவது மிகவும் மலிவானது .


3. இந்த உலகின் நிலப்பரப்பு முழுவதும் வெள்ளைத் தாளாக மாற்றி , மரங்கள் அனைத்தும்    எழுதுகோலாக மாற்றி , ஏழு கடல் களையும் எழுதும் மையாக மாற்றி எழுதினாலும் உயர்ந்த குரு மகிமை எழுத போதுமானதாகாது.


II .சொல்லின் மகிமை :-


4. மனிதர்கள் கேட்பவர்களுக்குப் பிடித்த  இனிய உயர்ந்த சொற்களைப் பேசவேண்டும் .
இப்படிப்பட்ட இனிய மொழி கேட்பவர்களுக்கும் பேசுபவர்களுக்கும்  சுகமும் ஆனந்தமும் தரக்கூடியன .


5. இந்த நாக்கு மிகவும் பொல்லாதது. விரும்பத்தகாத சொற்களைச்  சொல்லி பாதுகாப்பாக
வாயிக்குள் சென்றுவிடுகிறது . அதன் விளைவால் வாங்கும் செருப்படி தலையில் விழுகிறது. கவனமாக சொற்களைக் கையாள வேண்டும்.


6. பேரிச்சம்பழமரங்கள் போல்  உயர்ந்து வளர்வதால் பயனில்லை. வழிப்போக்கர்களுக்கு நிழல் இல்லை.பழங்களும்  மிக உயரத்தில் பழுக்கின்றன. இப்படி உயர்ந்த மனிதர்களால் எவ்விதப் பயனும் இல்லை.


7.    நாம் எப்பொழுதும் நம்மைக்  கண்டிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.நம் வீட்டின் முற்றத்திலேயே கூட அவர்களைத் தங்க வைக்கலாம்.அவர்கள் மூலம் நம் குறைகளை அறிந்து நிறை காணலாம்.


8. தீயவர்களையும்  கெட்டவர்களையும் தேடிச் சென்றால்  எனக்கு தீயவர்கள் ஒருவருமே கிடைக்கவில்லை. நான் என் மனதில் சிந்திக்கும்  போது என்னைவிட தீயவர்கள் எவரும் இல்லை. இப்படி ஒவ்வொரும் தன்னையே நினைத்துத் திருந்தினால் உலகில் தீயவர்கள் காண்பதரிது.


9.  இறைவனை வழிபட மனத்தூய்மை வேண்டும். கையில் ஜெப  மாலை, மனம் உலக ஆசைகள் ,கவர்ச்சிகள் என பத்து திக்குகளிலும் அலைபாய்ந்தால் அது ஜபம் கிடையாது, கடவுளின் பக்தி கிடையாது. மாலையைச் சுற்றுவதை நிறுத்தி விட்டு மனம் சுற்றுவதை விடுத்து இறைவனை ஜபிக்க வேண்டும்.


10. துன்பத்தில் அனைவரும் இறைவனைத் துதித்து ,சுகங்கள் கிடைத்தவுடன் இறைவனைத் துதிப்பதை விட்டு விடுகிறார்கள். இன்பத்திலும் இறைவனைத் துதித்தால்   இன்னலுக்கே இடமில்லை.


11. மண் குயவனிடம் ,நீ இன்று என்னைப்  பிசைந்து அடித்து துன்புறுத்துகிறாய்.ஆனால்  உன் இறப்பு என்று ஒருநாள் வரும். அப்பொழுது உன்னை நான் அரிக்கும் காலம் வரும்.நீ பயனற்றுப் போய்விடுவாய்.


12.  மனித ஆசைகள் நீர்த்திவளைகள்  போன்றதாகும் .ஒரு நொடியில் வந்து ஒருநொடியில்
     இல்லாமல்    போய்விடும். சிறந்த உயர்ந்த குரு கிடைத்தால் உலகின் மாய மோக இருள்    அகன்றுவிடும்.


13. சுற்றும் திருகைக்கற்களின் நடுவில் சிக்கும் தானியங்கள் படும் இன்னல்களும் உருமாற்றமும் கண்டு கபீர் வேதனைப்படுகிறார்.அவ்வாறே நாமும் இவ்வுலகம் என்ற இயற்கை என்ற திருக்கையில் சிக்கி வேதனைப்படுகிறோம்.


14. தோட்டக்காரன் வருகை கண்டு  மொட்டுக்கள் தங்களுக்குள் பேசின. இன்று மலர்ந்த பூக்கள் பறிக்கப்பட்டுவிடும். நாளை நமது முறை வந்துவிடும். இவ்வுலகின் நிலையாமை குறித்து  கபீர் மொட்டுக்கள் மூலம் கூறுகிறார்.


15.நாளை செய்யும் வேலையை இன்றே செய். இன்று செய்யும் வேலையை இன்றேசெய்.ஒருநொடியில் பிரளயம் வந்து அழிந்து விடுவோம். நம்மிடம் அதிகமான நேரமே இல்லை.


16. உன் கடவுள் உனக்குள்ளே ,பூவில் மணம் இருப்பதுபோல். கஸ்தூரி மான் வயிற்றில் கஸ்தூரி மணம்  . ஆனால் அந்த மணம் தன் வயிற்றில் இருப்பதறியாமல் மான் தன் அறியாமையால் வெளியில் தேடித் திரியும். அதுபோல் அறியாத  மனிதர்கள் இறைவனைத்தேடி அலைவார்கள்.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான்.


17. எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல் ,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பதுபோல் உன் கடவுள் உனக்குள் இருக்கிறார். இறைவனை எழுப்ப முடிந்தால்  எழுப்பி அறிந்துகொள்.


18. இறக்கமுள்ள   இடத்தில் அறம் இருக்கும். பேராசை உள்ள இடத்தில் பாவங்கள் இருக்கும்.
   கோவம் உள்ள இடத்தில் பேரழிவு இருக்கும். மன்னிப்பு உள்ள இடத்தில்  இறைவன் வசிக்கிறான்.


19. அன்பில்லா  இடம் மயானத்திற்கு சமமானது. கொல்லனிடம் இருக்கு தோல் உயிரில்லாமல் காற்று இழுத்து வெளியிடுவதுபோல் அன்பில்லாதவன் உயிரற்ற  மிருகம் போன்றவன்.


20. தாமரை  தண்ணீரில் மலரும். நிலவு ஆகாயத்தில் இருக்கும். ஆனால்  நிலவின் பிம்பம் தண்ணீரில் தெரியும் போது இரண்டும் மிக அருகில் இருக்கும். அவ்வாறே கடவுளிடம் நீ உண்மையான பக்தியும் அன்பும் வைத்தால் இறைவன் உன்னருகில் வந்துவிடுவான் .


21. ஒரு சாதுவிடமோ அறிஞனிடமோ  அவனின் ஜாதி பற்றி விசாரிக்காதே,  அவன் ஞானத்தை அறிந்துகொள். கத்தியைத்தான்  அதன் கூர்மை அறிந்து வாங்கவேண்டும். உரைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.


22. கோபமில்லா மனதில் குணம் இருக்கும். மனம் குளிர்ந்து இருந்தால் எதிரிகள் இருக்கமாட்டார்கள்.
எல்லோரின் கிருபையும் கிட்டும்.


23. இன்றுவரை  நல்ல அறிஞர்களின் சேர்க்கையின்றி வாழ்க்கை கழிந்து விட்டது. அன்பும் பக்தியும் இன்றி மனிதன் மிருகத்திற்கு சமமானவன். பக்தனின் இதயத்தில் இறைவன் வாழ்வான். வாழ்கிறான்.


24, புனித ஸ்தலங்களுக்கு சென்றால் பலன் கிடைக்கிறது. ஆனால் நல்ல மஹான்களில் சேர்க்கையால்  புண்ணியமும் ஞானமும் கிடைக்கின்றன. ஆனால் நல்ல உயர்ந்த குரு கிடைத்தால் பலவகையான ஞானமும் புண்ணியங்களும் கிடைக்கின்றன.


25. மனிதர்கள் தினந்தோறும் குளித்து உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர். ஆனால்  மனத்தூய்மை இன்றி வாழ்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை உள்ள மனிதன் தான் உண்மையான மனிதன்.


26. அன்பு என்பது தோட்டங்களில் விளையாது. அன்பு என்பது சந்தையில் விற்காது. அன்பு வேண்டுவோர்கள் கோபம் ,காமம்,ஆசை ,அச்சம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும்.


27.சாதுக்களையும் சத்தியத்தையும்  பூஜிக்காத வீட்டில் பாவங்களே குடி கொள்ளும்.அந்த வீடுகள் பகலிலும்
பூத -பிரேதங்களை வாழும் மயானம் தான்.


28.  சாதுக்கள் முறம் போல் இருக்கவேண்டும்.  முறம் நல்லதை வைத்துக்கொண்டு உமி தூசி போன்றவற்றை விட்டுவிடும். அப்படியே சாதுக்கள் தீயவைகளை விட்டு விட்டு நல்லவைகளை மனதில் கொண்டு அறவழியிலேயே செல்வார்கள்.


29.  நல்ல நாட்கள் ,நல்லநேரம் வாய்ப்புகள் இருக்கும்போதே  நாம் நம் எண்ணங்களை செயல்களை புரிதல் வேண்டும். அறுவடையைத் தாமதமாக செய்ய  நினைத்து பறவைகளுக்கு இறையானபின் வருத்தப்படுவதால் எவ்வித பயனும் இல்லை. காலத்தே பயிர் செய்யவேண்டும்.


30.  ஆணவம் இருக்கும் போது ஆண்டவன் நினைவில் இல்லை .ஆணவம் சென்ற பின் ஆணவம் மனதில் இல்லை.நல்ல குரு  என்ற விளக்கு பெற்ற பின் மன இருள் முற்றிலும் போய் விட்டது.


31. தினந்தோறும் குளித்தாலும் ,மனதில் உள்ள அழுக்கான எண்ணங்கள்  இருந்தால் ,குளிப்பதால் பயன் இல்லை. மீன் எப்பொழுதும் தண்ணீரில் இருந்தாலும் அதன் துர்நாற்றம் கழுவினாலும் போகாது.


32. கடவுளின் அன்பும் அருளும் ,மனதில் இறை அன்பு ,பக்தி பெற வேண்டும் என்றால் , முக்கியபணியாக ஆணவம் ,கோபம் ,பயம் ,ஆசைஆகியவற்றை விட்டுவிடுதலாகும்..


33. மனிதன் மற்றவர்களின்  மனவேதனை மற்றும் துன்பங்களை  புரிந்து கொள்ளவேண்டும் .அப்படிப்பட்ட வான் தான் மனிதன் ,உயர்ந்த மனிதன். மற்றவர்கள் துன்பம் அறியா  மனிதன் மனிதனாக இருந்தும் பயனில்லை.


34.  குருவின் மகிமை அறியாதவர்கள் குருடர்கள் ,முட்டாள்கள் . கடவுள் உங்களிடம் கோபப்பட்டு விலகிச் சென்றால் குருவின் உதவி கிட்டும் , குரு சினந்துகொண்டால்  உலகில் உங்களுக்கு யாருமே உதவமாட்டார்கள்.


35.  நீ எப்பொழுதும் தூங்கிக்கொண்டிருக்கிறாய். சற்றே விழித்துக்கொள் .கடவுளின் மேல் அன்பையும் பக்தியையும் செலுத்து. இல்லை என்றால் உனக்கு நிரந்தர தூக்கம் , அதாவது  மரணம் வந்துவிடும்.


36. நிலவும் குளிரல்ல ,பனிக்கட்டியும்  குளிரல்ல. உயர்ந்த மனிதர்கள் மனதால் எல்லோரையும் குளிரவைப்பார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள்.


37.   நூல்கள் பல படிப்பதால் ,ஒருவரும் பண்டிதவராவதில்லை.  அன்பு என்ற இரண்டரை எழுத்தை அறிந்து புரிந்து தெரிந்தவர்கள் பண்டிதர்களே இல்லை.


38 மரணம்  நெருங்கும்  போது ராமதூதர்கள் அழைப்பு வரும்போது கபீர்தாசர்  மிகவும் வருத்தப்பட்டார்.
ஏனென்றால் சாதுக்கள் ,உயர்ந்தவர்கள் சாத்துமஹாத்மாக்களுடன் சேர்ந்திருக்கும் ஆனந்தம் சுவர்க்கத்திலும்  இருக்காது.


39 .உலகில் அமைதியும் குணமும் ரத்தினங்களை விட  மிக உயர்ந்தது. நற்பணப்பிற்கும் மூவுலக செல்வமும் இரத்தினத்திற்கு இணையாகாது.


40.    இறைவா !எனக்கு அதிகம் தேவை இல்லை. எனக்கும் ,என் குடும்பபத்திற்கும் என் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் ,சாதுக்கள் போன்றவர்களுக்குத் தேவையான  போதுமான செல்வம் பசிப்பிணி போக்கும் அளவிற்கு அளித்தால் போதும்.


41. ஈ  முதலில் வெல்லத்தில்  ஒட்டிக்கொண்டிருக்கும் .தன் இறக்கைகளை   வெல்லத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் . அப்பொழுது அது பறக்க முயற்சிக்கும் .பறக்க முடியாது.அது வருத்தப்படும் .
அவ்வாறே  மனிதன் உலகியல் சுகங்களில் இணைத்துப்  பிணைத்து வாழ்கிறான் . இறுதிக்காலத்தில் மிகவும் வருத்தப்படுகிறான் .


42.  மறுபிறவியில் இருந்து விடுபட ஞானம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த உலகம் வெறும் மண் தான்.
ஞானம் பெறவேண்டும்  இல்லை என்றால் மீண்டும் மீண்டும் இந்த மண்ணுலகில் பிறந்து இன்னலுறவேண்டியிருக்கும்.


43. கசப்பான சொல் தான் எல்லாவற்றிலும் தீய செயல். மஹான்கள்  சாதுக்களின் சொற்கள் ,நீர் போன்று அமிர்த மழை பொழியும்.


44.  உயர்ந்த குலத்தில்   பிறந்து செயல்கள் உயர்ந்த செயல்கள் இல்லை  என்றால்,அது விஷம் நிறைந்த பொற்கலசத்திற்கு சமமாகும் .நாலா பக்கத்தில் இருந்தும்  வரும் நிந்தனைக்கு சமமாகும்.


45. இரவைதூங்கி கழிக்கின்றோம் ,பகலை உண்டு கழிக்கின்றோம். வைரம் போன்ற மதிப்புள்ள வாழ்க்கையை செல்லாக்காசாக்கியுள்ளோம் . வாழும்  வாழ்க்கையைப் பயன்டுத்தள்ளதாக்கவேண்டும்.


46.  காமம் ,கோபம் ,பேராசை இந்த நான்கும் குடி கொண்டால் பக்தி செய்ய முடியாது. தன்  ஜாதி ,குலம் ,ஆணவம் ஆகியவற்றை தியாகம் செய்தவர்கள் தான் பக்தியில் மூழ்கும் வீரனாவான்.


47.  காகம்  செல்வம் திருடுவதில்லை.இருப்பினும் யாருக்கும் பிடிப்பதில்லை.
குயில் ஒருவருக்கும் பணம் தருவதில்லை . ஆனால் எல்லோருக்கும் பிடிக்கிறது. இந்த வேறுபாடு  குயிலின் இனிமையான குரலால் தான் இந்த வேறுபாடு.இனிமையான குரலால் அனைவரையும் கவரலாம் என்பதற்கு காகமும் குயிலும் தான் காரணம்.


48. இந்த உலகம் அறிவால்  நிறைந்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் கடவுள் இருக்கிறார்.
அறிவைப் பெற்றுக்கொள்.பக்தியை ஏற்றுக்கொள். இல்லை என்றால் இறுதித் தருணத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும்.


49. காலுக்குக்கீழ் இருக்கும் தூசி என்று நிந்திக்காதீர்கள். காற்றில் பறந்து அது கண்களில் விழுந்தால் மிகவும் உறுத்தும் .வலியும்  ஏற்படும். அவ்வாறே எளியோரை நிந்திக்கக் கூடாது.


50.  அனைத்து செயல்களும் மெதுவாக காலத்தால் கனிந்து வரும். அவசரப்பட்டு எந்தக் காரியமும் நடைபெறாது.  தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் உரிய பருவகாலத்தில் தான் பலன் கிடைக்கும்.


51. நல்லவர்களின் சங்கத்தில் இல்லாதவர்களும் நல்ல வேலை செய்யாதவர்களும் வாழ்க்கையை வீணாகக்  கழித்தவர்கள் . அன்பில்லாதவன் மற்றவர்களின் மீது அன்பு செலுத்தாதவர்கள் மிருகத்திற்குச் சமமானவர்கள்.  மனதில் உண்மையான பக்தி இல்லை என்றால் நல்லவையும் கடவுளின் வாசமும் மனதில் இருக்காது.


52. வையகத்தில் ஜீவராசிகள் சந்தேகம் ,பிரமை ,மோகம் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளன. நலனை விரும்புபவர்களே !நீ அவைகளில் கட்டுண்டு கிடக்காதே . உப்பில்லாமல் மாவு சுவை பெறாது. உனது தங்கமான  உத்தமமான உடல் கடவுளின் மீது பஜனை இன்றி வீணாகி விடும்.


53. உடலில் உயிர் இருக்கும்போது ஒருவரும் யதார்த்த ஞானத்தை உணர்வதில்லை.  இறந்தபின் ஒருவரும் அறிவுரை கூற வரமாட்டார்கள். இறந்தஉடலுக்கு அறிவுரை கூறினால்  பயனில்லை.


54.  வியாபாரியின் காளைமாடுகள் சக்கரை மூட்டையைச் சுமந்தாலும்  வைக்கோல் தான் சாப்பிடும். நான்கு பக்கமும் சுற்றி வியாபாரம் செய்யும்.அவ்வாறே சத் குரு அறிவுரை  சொன்னாலும் உலகியல் ஆசாபாசங்களில் சிக்குண்டு மனிதன் அழிந்து விடுகிறான்.


55.  மனம் என்ற  அரசன் மிகப்பெரிய வியாபாரி ஆகி  உலகியல் விஷயங்களை அதிகமாக சுமந்து கொண்டு வந்துவிட்டது. உலகத்தின் சுகங்களை ஐஸ்வர்யங்களை  அனுபவித்தலில் லாபம் என்கின்றனர்.
அதனால் மனிதத் தன்மை என்ற முதலீடு அழிந்து விடுகிறது.


56.  நீசமான  மனிதனே! அடிக்கடி நான் சொல்வதைக் கேள்.வியாபாரியின் மாடு  இடை வழியில் சாவதைப்போல் நீயும் ஒருநாள் திடீரென்று இறந்து விடுவாய்.


57.கபீர் தாசரே !நீ  சத் குருவிற்கு தொண்டு செய். அப்பொழுது இறைவனின் பேட்டி  கிடைக்க வாய்ப்பு வரும். இந்த மனிதப்பிறவியின் அரிய வாய்ப்பு மீண்டும் வராது.


58.  வழிதவறி தவறான வழியில் செல்பவர்களைப்  பிடித்து மனிதநேயத்தை விளக்கிக் கூறு. அவன் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் முடிவான இரண்டு விஷயங்களைக் கூறிவிடு.


59.  ஒருவரைத் திட்டுவதால்  துன்பமும் அடித்தல் அடிவாங்குதல் அனைத்தும் நடந்துவிடுகிறது .இதில் ஈடுபடாமல் செல்பவன் சாது. உயர்ந்தவன் .சண்டை மீண்டும் திட்டுதல் செய்பவன்  நீசன் . தாழ்ந்தவன்.


60.  உங்கள் மனதில் ஞானம் இருந்தால் கிடைத்த  நிந்தனையால் அதிக ஞானம் கிடைக்கும். சகிப்புத்தன்மையால்  கோடிக்கணக்கான வேலைகள் உலகில் சீர்பட்டுவிடுகின்றன. எதிரியும் காலில் வந்து விழுந்து விடுவான்.
இதயத்தில் ஞானம் இருந்தால் கிடைத்த நிந்தனைகளால்  எவ்விதத் தீமையும் இல்லை.


61. ஸாதுக்களால் கிடைத்த சாதனைகள்  விவேகம் ,வைராக்கியம் ,இரக்கம்,மன்னிப்பு  முதலிய குணக்கூட்டம் இதயம் முழுவதிலும் வந்துவிட்டன. அப்பொழுது சாதுக்கள் ஐம்புலன்களை  அடக்கி உடலை நோயற்றதாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் உடலையும் மனதையும் வசத்தில் வைத்துக்கொள்கின்றனர்.


62. வணங்குதல் ,வணங்கும் முறை ,முழு பழக்க வழக்கங்கள் ,மனதில் நிலைத்து விட்டால் , அங்கு செல்வதே சாதுக்களுக்கு பிடித்தமான அன்பான விஷயமாகும்.


63.தான்தான் எல்லோரையும் விட மேலானவன்  என்று கூறும் சாதுக்களிடம் செல்லாதே. அந்த ஸ்வாமிகள் சரியாக ஆசனம் போடும் முறையைக்கூட சொல்லாமல்  பெயரைமட்டுமே சொல்வார்கள்.


64.  உணவிற்கேற்று மனநிலை அடையும்.  என்பதே பொன்மொழி . மனிதன் சேர்ந்த இடத்தில் பெரும் அறிவுரைதான் பேசமுடியும்.  அதாவது உணவு விஷயத்திலும் சேர்க்கையையும் சரியாக வைத்துக்கொள்.


65. சாதுக்களே !முன்னோர்களின் குளம் கோத்திரம் குடும்பம்  சம்பந்த முல்லா உறவினர்களிடம் அறிந்தவர்களிடம் செல்லாதீர்கள். ஏனென்றால் உங்களுடைய  மேன்மையை அறியமாட்டார்கள். உடல் சம்பந்தப்பட்ட அப்பாவின் பெயரைச் சொல்லுவார்கள். உங்களுடைய மகத்துவம் தெரியாது.  தங்களின் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவன் மகன் வந்துள்ளான் என்பார்கள். தந்தையின் தொழில் தெரியும். உங்களின் உயர்வு தெரியாது.


66.  எதிர் மாறாக  பேசி உளறுபவர்களை   உலரவிட்டு விடு. நீ குருவின் கல்வியைப் பெற்றுக்கொள்.  துஷ்டர்கள் மற்றும் நாய்களின் குரலுக்கு திரும்பி பதில் சொல்வது.


67.  அறம்  ,பரோபகாரம் ,தானம் ,தொண்டு  முதலியவற்றை செல்வமாகக் கருத்திக்கொள்.  அவை எப்பொழுதும் குறையாது. நதி எப்பொழுதும் ஓடுகிறது. ஆனால் தண்ணீர் குறைவதில்லை.  நாம் செய்யும் ஆறாம் மிகச் செல்வமாக காக்கும். ஆறாம் செய்து பார் .புரியும்.


68. முடிச்சில் கட்டி வைத்ததை கையில் கொண்டுவா .உன் கையில் அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிடு. மனித உடலுக்குப் பின் மற்ற இடங்களில்
எந்த சந்தையும் கிடையாது. வியாபாரியும் கிடையாது. வாங்குவது எடுப்பதெல்லாம் இங்கேயே முடித்துக்கொள்.


69. இந்த உலக வாழ்க்கை நிரந்தரமல்ல.அதனால் இதன் மோகத்தில் உன்னை இணைத்துவிடாதே, நல்ல குருவின் சரணங்களில் உன்  மனதை ஈடுபடுத்து.
அது தான் முழு சுகம் அளிப்பதாகும்.


70. இறந்த பிறகு உன்னிடம்  ஒருவரும் தர்மம் /தானம் கொடு என்று சொல்ல  மாட்டார்கள் . ஆகையால் வாழ்வின் பிறவியின் பயன் பெற நிச்சயமாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


71.  இந்த உடல் இருக்கும் வரை ஏதாவது கொடுத்துக்கொண்டே இரு.உன் உடலில் உயிர் பிரிந்த பிறகு ஒருவரும் கொடு என்று கேட்கப்போவதில்லை.


76.  உலகவாழ்வில்  மாயையும் மனதும்  இறப்பதில்லை.மனித உடல் மரணமடைவதைக்கண்டும்  மனிதனின் நம்பிக்கைகளும் ஆசைகளின் தாகங்களும்  என்றும் இறப்பதில்லை . கபீர் பலமுறை இதைக் கூறியுள்ளார் .


77.  மன ஆசைகளை விட்டுவிடு.நம் ஆற்றலால் அறிவால்  அவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. தண்ணீரிலிருந்து ணெய் வந்தால் எடுக்க உடைந்தால் ஒருவரும் காய்ந்த ரொட்டி சாப்பிடமாட்டார்கள்.


78.   அறியாமை என்ற தூக்கத்தில்  இருக்காதீர்கள். ஞானத்தின் விழிப்புணர்ச்சி பெற்று  கடவுளின் பெயரை ஜபிக்க ஆரம்பி. விழிப்புணர்வுடன் இறைவனை தியானம்  செய். நீ ஆழ்ந்த மீளாத்தூக்கத்தில் தூங்கும் நாட்கள் விரைவில் வந்துவிடும்.விழித்திருந்து கடவுளின் பெயரை ஜபித்து ஏன்  தியானம் செய்வதில்லை ?


79. தண்ணீரின் அன்பை பசுமையான மரங்கள் தான் உணரும்.   காய்ந்த கட்டைகளுக்கு மழை பெயதால் என்ன ?பெய்யாவிட்டால் என்ன ? சகிக்கும் நல்ல உள்ளங்களுக்குத்தான் அன்பின் அருமை தெரியும் .அன்பில்லா மனதிற்கு இதை உணர அறிய வாய்ப்பில்லை.


80 .மேகங்கள் கல்லின் மேல் மழை  பெய்யத்தொடங்கின. மண் கரைந்து தண்ணீருடன் ஓடியது. கல் அப்படியே உள்ளது.


81. மனித  வாழ்க்கை சில ஆண்டுகள். இதற்காக பல வகை முன்னேற்பாடுகளை செய்ய முற்படுகிறான் .அரசனோ ஏழையோ நின்றுகொண்டே அழிந்துவிட்டன.


82 . அரசர்களே!பேரரசர்களே !  ஒருநாள் எல்லோரையும் ,எல்லாவற்றையும் விட்டுவிட்டு  செல்லும் நாள் வரும் . ஏன் ,நீங்கள் இப்பொழுதே எச்சரிக்கையாக இருக்கமாட்டீர்கள் ?/
83.  அன்பை ருசிக்காதவர்கள் ,ருசித்தும் ரசிக்காதவர்கள் ,சூனியமான ,ஜன சஞ்சாரமற்ற வீட்ட்டில் உள்ளவர்கள் ,அவர்களுக்கு எதுவுமே கிடைக்காது . சூனியமான வீட்டிற்கு வந்தவர்கள் ,சூனியமாகவே சென்றுவிடுவார்கள்.


84. மனிதனிடம் ஏதாவது கொடுக்க சொன்னால் மரியாதை ,பெருமை ,கௌரவம் ,அன்பு எல்லாமே வெள்ளத்தில்  அடித்துச் சென்றுவிடும்.


85.போகின்றவனை ,போவதைத் தடுக்காதே.  நீ உன் தன்னிலையை இழந்து விடாதே. நீ உன் இயல்பு நிலையிலேயே இருந்தால் குகனின் படகுபோல் பலர் உன்னை சந்திப்பார்கள் .


85. இந்த உடல்  பச்சைமண் குடம் போன்றது. உடன் எடுத்துச்செல்கிறாய். சிறிது அடிவிழுந்தாலும் உடைந்துவிடும். எதுவும் மிச்சமிருக்காது.


86.  ஆணவம் மிகவும் கெட்ட  பொருள். முடிந்தால் இதிலிருந்து தப்பித்து ஓடிவிடு.  நண்பனே!பஞ்சினால் சுற்றப்பட்ட நெருப்புபோல் ஆணவம் .இதை நம்மருகில் எப்படி  வைத்திருக்க முடியும்.


87. அன்பு என்ற மேகம் நம்மேல் பொழிய ஆரம்பித்த தால்  உள்ளுள்ள ஆத்துமா நனைந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள சுற்றுப்புறம் பசுமையாகிவிட்டது. நிலை மகிழ்ச்சியாகி விட்டது. அன்பின் அரிய  நிலை.
நாம் என் இதே அன்பில் வாழ்வதில்லை.


88.  அன்பில்லா இதயம் ,அன்பின் ருசி அறியா  நிலை,பகவானின் பெயரை சொல்லா நாக்கு இவை இல்லா மனிதன் உலகில் பிறந்ததே வீண். அன்பு தான் வாழ்க்கையில் பொருள் நிறைந்தது. அன்பின் ரசத்தில் மூழ்கி இருப்பதுதான்  வாழ்க்கையின் சாரம்.


89.பகவானை தரிசிக்க  எவ்வளவு இடையூறுகள்.அவனை அடையச்செல்லும் வழி பயங்கரமானது.அநேக பாதகர்கள் ,திருடர்கள் ,ஏமாற்றுபவர்கள் உள்ளனர். நீண்ட வழி .அநேக ஆபத்துக்கள் .தடைகள். அவைகளில் சிக்குண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறோம். பல மாயைகள் கவர்ச்சிகள், நாம் நம் குறிக்கோள்களை மறந்து மயங்கி விடுகிறோம். நாம் நம் முதலீட்டை இழந்துகொண்டே இருக்கிறோம்.


90. இந்த உடல் விளக்கு. உயிர் திரி. இரத்தம் எண்ணெய்.இவ்வாறான விளக்கு ஏற்றி எத்தனை ஆண்டுகள் கடவுளை தரிசிக்க காத்திருப்பேன். அந்த விளக்கில் ஜ்வாலை ஏற்றி அவனைபி பெறுகின்ற பக்தியில் உடலையும் மனதையும் ஈடுபடுத்துதல்  ஒருபெரும் தவம் சாதனை. இதில் சிலர்தான் வெற்றிபெறுவார்கள்.


91.பகபவானே ! நீ  என்கண்கள் வழியாக உள்ளே வந்து விடு. நான் நீ வந்த பின் கண்களை மூடிக்கொள்வேன். பிறகு நான் மற்றவர்களை மற்றவர்களை பார்க்கமாட்டேன் . எனக்குள் இருக்கும் உன்னை மற்றவர்களையும் பார்க்க விடமாட்டேன்.


92. குங்குமக்கோடு வைக்கும் இடத்தில் கண் மை  ஒருவரும் வைக்கமாட்டார்கள்.கண்களில் பகவான் எழுந்தருளிவிட்டால் வேறு ஒருவரும் மனதில் வசிக்கமுடியாது.எப்படி வரமுடியும்?


93. கடலுக்குள் உள்ள சிப்பி  அளவில்லா கடல் தண்ணீரை குடிக்காமல் , தாகம் தாகம்  என்று சுவாதி நக்ஷத்திரத்தில் விழும் மழை நீர்த்துளிகளை எதிர்பார்த்து   கடல் நீரை தூசிபோல் கருதுகிறது. நம் மனதில் இதைப்பெறவேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ எதைப்பெறவேண்டும் என்ற மன  ஈடுபாடு உள்ளதோ அதைப்பெறாமல் மற்றவை எல்லாம் சாரமற்ற பொருளாகிறது.


94.   ஏழு ஸ்வரங்கள் ஒலி  கேட்ட ,ஒவ்வொரு நொடியும் விழாக்கோலமாக இருந்த  வீடுகளும் இன்று காலியாகி அவைகளில் காகங்கள் வாழ்கின்றன. எப்பொழுதும் ஒரே மாதிரியாக காலங்கள் இருப்பதில்லை. மகிழ்ச்சி இருந்த இடத்தில் துன்பங்கள் சூழ்கின்றன . மகிழ்ச்சியான கூடாரங்கள் துக்கமான கூடாரமாகின்றன. இதுதான் உலக நடப்பாகும்.
95. உயர்ந்த   கட்டிடங்களைப் பார்த்து ஏன்  கர்வப்படுகிறாய்?நாளையோ நாளை மறுநாளோ இந்த உயரங்கள் மண்ணோடு மண்ணாகலாம். நீங்களும்  மண்ணில் சாய்ந்து விடுவீர்கள். மேல் புற்கள் முளைத்துவிடும்.
சூனியமாகிவிடும் . மகிழ்ச்சியான வீடுகள் முற்றங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும்.  ஆகையால் ஆணவம் கூடாது.
இந்த ஈரடி படிக்கும்போது  தனுஷ்கோடி நினைவுதான் வருகிறது.


96. பிறப்பு -இறப்பை எண்ணி தீய செயல்கள் செய்வதை விட்டுவிடுங்கள். நீ செல்லும் வழியை  நல்ல வழியாக எண்ணி -அதையே நினைவில் வைத்து அதையே அழகாக மாற்றி முன்னேறுங்கள்.


97. காவலன் இன்றி பறவைகள் வயல்களின் பயிர்களை காலி செய்துவிட்டன. இருப்பினும் சில வயல்கள் மீதம் இருக்கின்றன. நீ விழித்துக்கொண்டான் அவைகளை காக்கலாம். விழிப்புணர்வும் முன் எச்சரிக்கையும் இல்லாததால் தான் மனிதன் நஷ்டமடைகிறான்.


98.  உடல் என்ற ஆலயம் அழிந்துவிடுகிறது. அதன் ஒவ்வொரு அங்கமும் அழிந்துவிடுகிறது, இந்த உடல் என்ற ஆலயத்தைப் படைத்த பகவானை தியானம் செய்து இந்த உடல் அழியாதவாறு கவனித்துக்கொள் .


99.  இந்த உடல் அரக்கு  ஆலயம். இதை நாம் வைரங்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரித்துக்கொள்கிறோம். இந்த உடல் தற்காலிக பொம்மை அழியக்கூடியது. நாம் முயன்று உழைத்து அதை அலங்கரிக்கிறோம். உடல் நொடியில் அழிவதை  மறந்து விடுகிறோம். உடல் பச்சை மண் பொம்மை உடைந்து விடுகிறது. எதிர்பாராமல் நாம் அறியாமலேயே அழிந்துவிடுகிறது.


100. இந்த உடல் அழியக்கூடியது.நீ இதை நிர்வகித்து சமாளித்துக்கொள். கோடிக்கணக்கில் ரூபாய்கள் சொத்துக்கள் இருந்தவர்களும் வெறுங்கையுடன்  சென்றுவிட்டனர். ஆகையால் பணம் சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக (பொருளுள்ளதாக )ஆக்கிக்கொள் .
சில நல்ல செயல்களும் செய்.

கபீரின் ஈரடிகள்  


 101. இந்த உடல் காட்டைப் போன்றது. நமது செயல்கள் கோடாலி போன்றது . நமது வினைகள் மூலம் நாமே  நம்மை வெட்டிக்கொண்டிருக்கிறோம் .இப்படி நம்மை நாமே அழிப்பதை கபீர் சிந்தித்து சொல்கிறார்.


102.   உனக்கு என்று நண்பர்கள் ஒருவரும் கிடையாது. எல்லா மனிதர்களும் சுயநலத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள். இந்த ஞானம்  அறிந்து நம்பிக்கை மனதில் உண்டாகும் வரை ஆத்மாவின் நம்பிக்கை விழிப்புணர்வு வராது. உண்மை ஞானம் வராததால் மனிதன் உலகியலில்   சிக்கி துன்பம் அடைகிறான் ..இந்த சுயநல உலகை அறிந்துகொண்டால் மனிதன் மனம் இறைவனையே நாடும்.


103. அழிவின் ஆணிவேர் அகங்காரம். ஆணவம் . இதில் சிக்கிக் கொள்ளாதே.  இந்த ஆணவம் கை விலங்காகும்.கழுத்துக்குத் தூக்குக் கயிறாகும்.


104.  இந்த வாழ்க்கைப் படகு பாழடைந்ததாகும் . இதை துடுப்பு போட்டு செலுத்துபவன்  முட்டாள். இந்த உலகியல் ஆசைகளின் சுமை யால் வையகக் கடல் மூழ்கிவிடும். உலகியலில் இருந்து மீட்க முடியாது.
இந்த உலகியலில் இருந்து விடுபட்டவர்கள்  வையகக் கடலில் இருந்து மூழ்குவதில் இருந்து தப்பிவிடுவார்கள் .


105.   மனித மனம் அனைத்தும் அறிந்தும் தீய குணங்களில் சிக்கிக்கொள்கிறது. அதன் செயல் விளக்கை கையில் பிடித்துக்கொண்டே கிணற்றில்  விழுவதுபோல் ஆகிவிடும். அப்படிப்பட்ட மனிதன் நலமாக வாழ்வது எப்படி ? நலமாக இருக்க எப்படி முடியும் ?


106. நம் இதயத்திற்குள் கண்ணாடி இருக்கிறது. ஆனால்  கேளிக்கை காமக் களியாட்டங்களால் முகம் தெளிவாகத் தெரியவில்லை. மனதின் சந்தேகங்கள்  தீய ஆசைகள் நீக்கிவிட்டால் உண்மையான முகம் தென்பட முடியும்.


107.  நீதான் செயல் புரிபவன்.ஏன்  பேசாமல் இருக்கிறாய் ? செயல் புரிந்து ஏன்  வருத்தப்படுகிறாய் ?நீ நட்டதோ கருவேல முள் மரம்.அவ்வாறிருக்க மாம்பழம்  எப்படி கிடைக்கும்.? நீ எப்படிப்பட்ட விதை விதைக்கிறாயோ அப்படித்தான் பலன் கிடைக்கும். தீய வினைக்கு தீய பலன். நல்வினைக்கு நற்பயன் .


108. நாம் நல்லவர்கள் சேர்க்கையால் நல்ல விளைவுகளை தாக்கத்தைப் பெறமுடியும்.  சந்தன மரத்தருகில் இருக்கும் மணம் அதன் அருகில் இருக்கும் வேப்ப மரமும் பெறும் . ஆனால் ,ஓங்கி உயர்ந்து வளரும் மூங்கில்
தன்  பெருமையில் மூழ்கிவிடும். இப்படி மூங்கில் போல் இருக்காமல் , சேர்க்கையின் பலனை கிரஹித்துக்கொள்ள வேண்டும்.


109.   இந்த உலகம்  கண்மை மாளிகை .இதன் கதவு செயல்கள்  கர்ம வினை கருமையால் அமைக்கப் பட்டிருக்கின்றன. பண்டிதர்கள் பூமியில் கற்சிலைகளை ஸ்தாபனம் செய்து வழிகளை அமைத்திருக்கின்றனர்.


110. முட்டாள்களுடன் சேராதே. முட்டாள்கள் இரும்பு போன்று .தண்ணீரில் மூழ்கிவிடுகிறார்கள் .ஆகாயத்தில் இருந்து விழும் நீர்த்துளி வாழைப்பழத்தில் விழுந்தால் கற்பூரமாகிவிடும்.சிப்பியில் விழுந்தால் முத்தாகிவிடும். பாம்பின் வாயில் விழுந்தால் விஷமாகிவிடும். நல்லவர்களின் நட்பும் சேர்க்கையும் தேவை.


111.நல்லவர்களின் சேர்க்கை ஒருபொழுதும் பயனற்றுப் போய்விடாது. சந்தன மரம் உயரத்தில் குறைந்திருந்தாலும் நான்கு பக்கங்களுக்கும் நறுமணம் வீசும். அதை ஒருவரும் வேப்பமரம் என்று சொல்லமாட்டார்கள். சந்தன மரம் தன சுற்றுப்புறத்தை நறுமணமாக வைத்திருக்கும்.


112. தெரிந்தே பொய்  பேசுபவர்கள் ,பொய்யை காதலிப்பவர்கள் ஆகியோரைத்   தவிர்க்க வேண்டும். கனவிலும் அவர்களுடைய சேர்க்கை கூடாது.


113.  மனத்தைக் கொன்று ஆணவத்தை விட்டு வாழ்ந்த யோகிகள் சென்றுவிட்டனர். அவர்களுடைய அஸ்தி விபூதி இருக்கிறது.அதாவது உலகில் அவர்களுடைய புகழ் மட்டுமே உள்ளது.


114.  பன்னிரண்டு மாதங்களும் பலன்கள் பழங்கள்  தரும் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொள்.அதனுடைய குளிர் நிழல் அடர்த்தியாக இருக்கவேண்டும். பறவைகள் விளையாட வேண்டும் .பழங்கள்  அதிகமாக இருக்கவேண்டும்.


115. உடல் அழியக்கூடியது. மனம் சஞ்சலமானது. ஆனால் நாம் இதை நிலையானது என்று எண்ணி வேலை செய்கிறோம்.இந்த நிலையற்றதை நிலையானதாக எண்ணி இவ்வுலகில் நீ போடும் ஆட்டம் கண்டு காலன் சிரிக்கிறான்.மரணம் அருகாமையில் உள்ளது என்று அறிந்தும் மனிதன் அறியாதது போல் வாழ்கிறான். இது மிகவும் வேதனையான விஷயமாகும்.


116.குடத்தில் தண்ணீர் ,தண்ணீரில் குடம் ,உள்ளும் புறமும் தண்ணீர்.குடம் உடைந்தால் குடத்தின் தண்ணீரும்  குளத்தின் தண்ணீரில் கலந்துவிடும். அறிஞர்கள் இந்த தத்துவத்தையே ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று பகர்கின்றனர் .ஆத்மா பரமாத்மாவிலும் பரமாத்மாவில் ஆத்மாவும் கலந்திருக்கிறது. அத்வைதக்கருத்து சங்கரர் கூறியது இதுதான்.


117. படித்தவர்கள் கூறுவது நூலில் உள்ளவை. படிக்காத கபீர் சொல்வது அனுபவத்தில் அறிந்ததும் கண்ணால் பார்த்ததும். உண்மையானவை. நான் எளிதாக புரியவைக்க தீர்வு  காணவும் சொல்கிறேன். அதை சிக்கலாக்கி கடினமாக்குவது படித்தவர்கள். தான்.


118. மனதை  வென்றால் வெற்றி.     மனதை வெல்லவில்லை என்றால்  தோல்வி. வெற்றிக்கும் தோல்விக்கும் மன வலிமை ,மன  திடம் தான் காரணம்..மனா நம்பிக்கையும் வேண்டும் கடவுளின் அனுக்கிரஹம் ,தரிசனம்  கிடைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும். நம்பிக்கை இல்லை என்றால் எப்படி தரிசனம் கிடைக்கும்.


119. ஆணவம் இருந்தால் ஆண்டவன் இல்லை. ஆண்டவன் இருந்தால் ஆணவம் இருக்காது. அன்பின் வழி  மிகவும் குறுகளானது ,ஒன்றுக்குத்தான் இடம். ஆணவமா ? ? ஆண்டவனா ? ஒன்றிருந்தால் மற்றொன்று இருக்காது.

120. அறிவை விட அன்பே உயர்ந்தது, ஞானம் பெற்று மனது கல்லானால் ,செங்கல் போல் உயிரற்றது ஆனால் எவ்வித பயனும் கிடையாது.

Tuesday, February 5, 2019

இறைதத்துவம்

இறை வணக்கம். 
நண்பர்கள்
குழுவினருக்கு 
வணக்கம். 
இறைவன் உடனடியாக 
தங்கள் முன் காட்சி அளி ப்ப து
அபூர்வம்.
அவன் குருவாக,
நண்பன் ஆக,
மு ன் பி ன் அறி முகமாகாத
ம னி த நே ய ம், இரக்கம், தா ன தர்மம்
உதவி செய் யு ம் பலன் எதிர் பா ரா
மே ன் மை மி க் க வ னா க
கா ட் சி அளி ப் பா ன்.
அவ்வாறு தோ ன் றி ய
தனி நபர் வழி பா டு பல
தெ ய்வங்களாக ஆலயங்கள் .
இவர்கள் உலகை ஆட்டிப் படைக்கும்
சர்வேஸ் வர ரி ன் படை ப் புக ள்.
அதில் உலகை ஆட் டித் துன்புறுத்தும்
அ சு ர சக் தி கள் நமக்கு எச்சரிக்கை .
மரணம் நம் மை நே ர் வழி படு த் து ம்
மா றா சட்டம்.
இன்று மன தி ல் எழு ந் த இறை
தத் து வ ம் .

Monday, February 4, 2019

பக வா ன் பக் தி

காலை வணக்கம் .

பகவான் பாதம் பணிந்து வணக்கம்.
பாரினில் பல ஞானங்கள்
பகவானின் ஞானம் அறிவதரிது ,
உடனடி  பயனறியா
 பயன் தரும் ஞானமல்ல .
பரிந்துரை ,கையூட்டு ,ஊழல் ,
உடனடி பயனறிந்து வாழும் இத்
தொல்லுலகில் பக்கவிளைவில்லா ,
தீர்வு பகவானின் அருளே.
பதவிகள் இருந்தும்
பல கோடி சேர்த்தும் ,
பகவானருள் இன்றி
படும்பாடு பெரும்பாடாகும் .
பாடு  பகவான்  புகழ் பாடு
பாரினில் பெறுவாய்
பக்க விளைவில்லா 
நிலைத்த மன-நிறைவு.

மருந்தில்லா வாழ்வு ,
பிணியில்லா வாழ்வு
மன நோயில்லா வாழ்வு ,
மன  சஞ்சலமற்ற வாழ்வு.
மடியும் வாழ்வின் மரண ஓலம்
மாற்ற மனித அறிவின் அறிவியல்.
பதவிநலம், பண நலம் ,உயர் நலம் ,
பகவானருளால் பெரும் ஞானம்
அறிவியில் உலகம் அதிர்ச்சி  அடையும்.
மருத்துவர் உலகம்   மறுத்து அனுப்பிய
தீரா  நோய்கள் ,மரண முடிவுகள்
 ஜபம் மாற்றும், தியானம்  வெற்றி பெறச்
செய்யும் ஜகத்தின் விந்தை தான்
சூக்ஷ்ம அறிவு.