Thursday, November 30, 2017

பகவத் கீதை --கர்மயோகம் -8

  கர்மயோகம்

மனிதன்  மனதளவில்
 பல எண்ணங்களில்
ஆசைகளில்
  செயல்களில்
ஈடுபடுகிறான் .

புலன்கள் அவனை
 செயலாக்கத் தூண்டுகிறது .

ஆனால் அவன் தன்
ஆத்மாவை
 நேசித்தால்
அவன் வினை ஓய்கிறது.
ஆத்மாவில் மகிழ்ந்தால்
அவன் மனம் பற்றற்று
மன நிறைவுடன்
லௌகீகக் கர்மங்களை
விட்டுவிட்டு
ஆத்மா நிறைவுடன்
ஆத்மா பரமாத்மா
ஐக்கிய நிலையில்
சாந்தியுடன் இருக்கிறது.

ஆத்மானந்தத்தில்
 லயித்தவர்களுக்கு
வினைப்பயன் ,இழத்தல் ,
சார்ந்திருத்தல்
போன்றவை இல்லவே இல்லை.

ஆகையால் நமது வினைகள்
 பற்றற்று இருக்கவேண்டும்.
ஆனால் நமக்கு
 இறைவனளித்த
 கடமையை   ஆற்றவேண்டும்.
பற்றற்ற பற்றுள்ள வாழ்க்கை.
தாமரை இலை  தண்ணீர் போன்று.
 மகாராஜா   ஜனகர்  தன்
 நல் வினைகளால்
முக்திபெற்றார்.
அவரைப்போன்றே
 பலர்  நல்வினைகள்
செய்து  நற்பயனை
அடைந்திருக்கிறார்.
ஆகையால்  ஜீவாத்மாவின்
கடமையைச் செய்யாமல்
 விடுவது சரியில்லை.

Wednesday, November 29, 2017

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்

நரசிம்ஹா க்ருபா கடாக்ஷம்
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும்.
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.
நாளும் நமக்கிருக்க
நான்முகன் துணை இருக்க
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்.
நிறையே நம் வாழ்வில்
நித்தம் நித்தம் ஆனந்தமே.
நீதியையே நினைப்போம்
ந்ருசிம்ஹனைத் துதிப்போம்.
நுணலும் தன் ஜபத்தால் வாழும்
நூல்களின் அறிவு பெருகும்.
நெடுமால் திருமால்
நேர்மைக்கு அருள் கொடுக்கும்.
நைதிகை மனம்மணம் மணக்கும்.
நொடி நொடி யில் ஞானம் பிறக்கும்.
நோய் உடல்,மனம் அறியாமை தீரும். நௌ கோள்கள் நம்மைத் தீண்டா .
ந்ருசிம்ஹா நருசிம்ஹா ஓம் ந்ருசிம்ஹா.

Tuesday, November 28, 2017

பகவத் கீதா --கர்மயோகம் --௭.7

   

 இவ்வுலகில்   இறைவனின்
 சுழற்சி சக்கரம் .
இதைப் பின்பற்றவில்லை
 என்றால்    புலனடக்கமில்லா
 பாவ  வாழ்க்கை  உடையவனாய்
 தான்  வாழ்வான்.
முறையான அறமான  வினைகள்
செய்யப்படா விட்டால்  அவன்
செல்வங்கள் பெற்றும்
 தீய   வலையில் சிக்கித்  தவிப்பான்.
வசதிகள்      இருந்தும்    வேதனைதான்.
 பதவிகள் இருந்தும் 
அதிகாரம்   இருந்தும்
அறமும்  மனித  நேயமும் 
இல்லை  என்றால் 
அவன் வாழ்க்கை  வீண் மட்டுமல்ல நரகமே.
இன்றைய நடை முறையில்
பல   லக்ஷம் கோடி ஊழல்
புரிந்தவர்கள் ஆஷ்ரம சாமியார்கள்
சிறையில்.

Monday, November 27, 2017

கர்மயோகம் -பகவத்கீதை -6



நாம்  வாழ்வதற்கு  உணவு அவசியம்.
உணவின்றி  உயிர்   வாழ்வது
இயலாதது.
உணவிற்கு பயிர் விளைவது அவசியம்.
பயிர்  விளைய மழை   அவசியம்.
 வேள்வி போன்ற வினைகளால்
மழை பெய்கிறது.
இதற்கு பூத யக்ஞம்  அவசியம்.
இயற்கை ஜீவ   ஜந்துக்கள்
மரம் செடிகொடிகள்
 வளர்ப்பது அவசியம்
அதுவே ஒரு வேள்வி.
இறைவனால் இயற்றப்பட்ட வேதம்
அதாவது அறிவு
வினை. வினைப்பயன்.
வேதத்தால் தான் 
  வேள்வி  நிலை  பெறுகிறது.

கர்மயோகம் --பகவத்கீதா -5



        வேள்விகள் செய்து
 தேவர்களைப்  போற்றுங்கள்.

அந்த தேவர்களை
   நீங்கள்  வளர்ப்பதால் 
  அவர்கள் உங்களை
வளர்க்கட்டும்.   
ஒருவொருக்கொருவர் 
 நன்மை செய்து
  வளர்வீர்களாக. 
இப்படி தேவர்களும்
அவர்களின் ஆசியால்
 நீங்களும் வளர்வீர்களாக. 

      வேள்வியால்  போற்றப்பட்ட  தேவர்கள்  , 
 நல்ல  ஆசாரமுடையவர்களின்  அனைத்து   
  மன விருப்பங்களையும்
  நிறைவேற்றுவார்கள். 
தேவர்கள்  நல்லது செய்யும்போது    
 அவர்களுக்கு  நன்மை 
செய்யாதவர்கள் ,
துதி செய்யாதவர்கள்   திருடர்களே.
அவர்கள்  இழி  நிலை  அடைவார்கள்.

  தேவர்களைப் போற்றி
   நல்ல  நிலையில்
அறநெறியில் வளரவேண்டும்.
பாவங்களில் இருந்து 
விடுபட  வேள்விகள் செய்து
மீதமுள்ளதை சாப்பிட வேண்டும்.

வேள்விகளின்  வகைகள் :--
௧,தேவர்களுக்கான     வேள்வி
௨.  ரிஷியக்கியம் --
உலக சுபிக்ஷத்திற்காக ,
  நல்ல நூல்களை
எழுதியுள்ள  நல்ல 
அறிவியல்  நூல்கள்
மெய்ஞான நூல்கள்   எழுதிய
மகான்களுக்கான  வேள்வி .
௩.பித்ருயக்ஞ்யம் :-
தங்கள் முன்னோர்கள் ,
பெற்றோர்கள் 
நம்மைப் பெற்று வளர்த்து 
ஆளாக்கியவர்களுக்கு  சேவைகள்
நாள் தோறும்   பணிவிடை செய்தல்.
௪. நரயக்ஞம் :--
மனித   இனத்திற்கு  சேவை செய்தல்,
நோய்களைப் போக்குதல் ,
கல்வி   கற்பித்தல் ,
வாழ்க்கைக்கு  நல் ஒழுக்கங்கள்
நாகரிக அறிவியல் வளர்ச்சி 
மாற்றங்கள்  ஆகிவற்றுக்கேற்ற
பண்பினை வளர்த்தல்
மனிதவேள்வியாகும்.

௫.  பூத யக்ஞம் :--
மக்களின்   அன்றாட வாழ்க்கைக்கு
பயன்பட்டுவரும்   
 ஆடு ,மாடு ,செடிகள்,மரங்கள்
ஆகியவற்றைப்  பேணுதல்
 இயற்பியல்   வேள்வியாகும்.

Sunday, November 26, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --௪


  படைப்புக்    கடவுள்   பிரம்ம தேவன் .
   வேள்வியுடன்    மக்களைப் படைத்தான்.
அது மனிதனின்   விருத்திக்காக.
 வளர்ச்சிக்காக .

 விருப்பங்கள்  நிறைவேறும்
  கேட்பதெல்லாம் கொடுக்கும்
காமதேனுவாகட்டும்   
என்றும் பிரம்மா கூறினார்.
   இதுவே  படைப்பின்  ஆரம்பம்.

காமதேனு  ஒரு பசு .
 விரும்புவைகளைக் கொடுக்கும்.
அதை வளர்த்தால்  சிறப்பு.
இங்கு அது நற்செயல் புரியும்
வேள்விகள் செய்வதாகும்.

  இறைவனால்   படைக்கப்பட்ட
மனிதர்களுக்கு இன்னல்கள் இல்லை.
இன்னல்களுக்குக்     காரணம் அவன் கர்மங்களே .

நாம் விதைக்கும் விதைக்குத் தகுந்த
 பலன் கிடைக்க வேண்டும்.
அதற்கு  விதை எப்படிபட்டது,
எவ்வித மண்ணில்    வளரும் .
அதற்கேற்ற  பருவ நிலை ,
தட்ப வெட்ப நிலை
எல்லாம் அறிந்து பயிரிட வேண்டும்.

              மனிதனுக்கு மட்டும் 
  இறைவன்  ஞானத்தைக்கொடுத்தான் .

ஆனால் அவன் நன்மை தீமைகள் அறிந்தும்

 உடனடி பலன் பெற
தீய வழிகளைப்
பின்பற்றுகிறான்.
அவன் தன்  வலிமை,
பதவி, அதிகாரம்
செல்வம் ஆகியவற்றால்
அனைத்தும்
சாதிக்க முடியும்
என்று     நினைக்கிறான்.


அவன் செயல்களுக்கேற்ற
 பரிசும்  தண்டனையும்   கொடுக்க
 ஒருவன் மேலிருந்து கவனிக்கிறான்
 என்பதை முற்றிலும்  மறந்து விடுகிறான்.
அந்த  சர்வ   சக்தியை அறிந்த
 ஞானியின் செயல்  வேறு.
 உலகியல்     கர்மங்கள்  வேறு.
ஆனால் ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டவை.
ஞானி  அந்த   அந்த சர்வ சக்தியின்
 மேன்மையை  நிகரற்ற தன்மையை
 கர்யோகிகளுக்கு   நினைவு
 படுத்திக்கொண்டே இருக்கிறான் .

கர்மயோகம் -பகவத் கீதை --3


  வேள்விகள்  செய்யப்பட வேண்டும். 
ஆனால் இவ்வுலகம் மற்ற
கர்மங்களில் ஈடுபட்டுள்ளது.
வேள்விக்கான செயல்களை
 எவ்வித  பற்று ஆசாபாசங்கள்
 இன்றி செய்யவேண்டும்.
இவ்வுலகத்  துன்பங்களுக்குக் காரணம்
பறித்துப் புசித்தல்.
 இந்நிலையில் போராட்டம்.

இதைக்   கீழ்  நிலையில் உள்ளவர்களை விட
ஆட்சி ,அதிகாரத்தில் உள்ளவர்கள்
  செய்கிறார்கள்.
 ஆனால்    அதிக  மேல் நிலையில் உள்ளவர்கள்
தனக்கென்று  எதுவும் செய்வதில்லை .
நமது ஒவ்வொரு செயலும் உலக நன்மைக்காக
எவ்வித பற்றும் இன்றி செய்வதே வேள்வி.
சாதாரண அறிவு வளர்ந்து
 ஞானம் வரவேண்டும்.
நம் செல்வம் ,நம் ஞானம்
 மற்றவர்களுக்கு
உதவுவதால் வளர்கிறது
என்பதை
மறக்கக்    கூடாது.
ஔவையார்   மற்றும்    நீதி நூல்கள் சொல்வது
இட்டார்   பெரியோர் ,இடாதார் இழி குலத்தோர்.

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

நாம்  கர்ம யோகத்தில் ஈடுபடவேண்டும். 

ஸ்ரீ பகவத் கீதை --கர்மயோகம் --௨.

c
ஸ்ரீ பகவத் கீதை --கர்மயோகம் --௨.

இவ்வுலகில்  செயலாற்றாமல்
ஒருவரும் இருக்க முடியாது .
இயற்கை மனிதன் வாழ    சில 
குணங்களை அளித்துள்ளது.
சில செயல்கள் தானாக அனிச்சையாக
இயங்குகின்றன,  சில இச்சைக்காக
அல்லது
 இயற்கைக்    கழிவுகள் ,
சுவாசித்தல் , இரத்த  ஓட்டம்  என்று
இயற்கை  இயக்கங்கள் .
சும்மா இரு என்றாலும் கர்மங்கள்
  இயற்கையாகவே   இயங்குகின்றன .
இயக்க   வைக்கின்றன .

ஐம்புலன்களை    அடக்கிவிட்டேன்
 என்றாலும்
மனத்தால் அடக்கமுடியாமல்
எண்ணிக்கொண்டிருந்தால்
அது ஜிதேந்திரியம்    அதாவது  புலன்களை வென்று
விட்டோம் என்பது  மெய்யல்ல. அது பொய்யே.

மனத்தால்  அடக்க வேண்டும். கர்மேந்திரியங்களைக்கொண்டு
செயலாற்றவேண்டும்.
மனதை    அடக்காமல்
  புலன்களை   அடக்குபவன்
 பொய்யான    நடத்தை  உள்ளவனே.

ஆகையால்  மனதை  வென்று
  செயல்களைப்    புரிபவனே ,
உயர்ந்தவனாவான்.
 மனதில்   நல்ல எண்ணங்கள்   வேண்டும் ,
ஐம்புலன்களை  ஒழுக்கமாகப்
பயன்படுத்தவேண்டும்.
அன்றாட  செயல்களைச்    செய்ய  வேண்டும்..
கடன்கள் இயற்கை .
இச்சை ,அனிச்சை
இவைகளை  இயல்பாக
சத்திய தர்மத்துடன்   செய்ய  வேண்டும்.

Saturday, November 25, 2017

ஸ்ரீ மத் பகவத் கீதை --கர்மயோகம் --1

ஸ்ரீ  மத் பகவத் கீதை --கர்மயோகம்  --

       அர்ஜுனனுக்கு  மனதில் மிகவும்  கவலை.
உற்றார் -உறவினர்கள், குருமார்கள் ,
இஷ்ட மித்திர பந்துக்கள்
அனைவரையும்  எதிர்த்து போராடுவதால்
 ஏற்படும் தீய விளைவுகள்   ,
மரணம்  துக்கம் ,சோகம்.
அவனுக்குப் போர்
புரிய மனமில்லை.
 
   அவனுடைய ஐயங்கள்
 நீக்கி போரில் ஈடுபட வைக்க 
  ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மயோகம்
பற்றி விளக்குகிறார்.

     அர்ஜுனனிடம்   கிருஷ்ணன் 
  ஞானயோகம் ,கர்மயோகம்
பற்றி  விளக்கமளித்தார்.
ஞானயோகம்  என்பது
தத்துவங்களைப் பற்றி எண்ணுவது.
தத்துவவிசாரம் .
 விவேகம் ,துறவுநிலை,
பற்றற்ற நிலை  என்று 
 ஆத்ம சொரூபத்தை
 நேரடியாக அடைய முயல்வது
ஏற்பது  ஞானயோகம்.
 அவைகளை செயல் படுத்தி
கர்மங்களைப் பின்பற்றுவது
கர்மயோகம்.
 இந்த கர்மயோகத்தில்
அறிவு தெளிவடைகிறது.

      எண்ணத்தில்  ஈடுபடுபவர்கள்,
செயலில்  ஈடுபடுபவர்கள்

இருவருமே   இருப்பதால் தான் 
உலகம் இயங்குகிறது.

     இச்சா சக்தி ,ஞானசக்தி , கிரியா சக்தி
என்பது தொன்றுதொட்டு இயங்கிவருகின்றன.

எவ்வழி நல்வழி


எவ்வழி  நல்வழி 




துவைதம் ,
அத்வைதம் ,
விஷிஷ்டாத்வைதம்
ஞான மார்க்கம் ,
பிரேம் மார்க்கம் ,
 ராம் பக்தி கிருஷ்ண பக்தி
 இப்படியே எதைப் பின்பற்றி
இறைவனைக்காண்பது ? குழப்பம் .
இவை பக்திக்கு வழிகளா ?தடைகளா ?
வலி வழிகளால் .
குழப்பம் .
எந்த வழியையும்
பின்பற்றாமல்
ஆண்டவனை
கண்டோர் உண்டு.
கஜேந்திரன் சரணாகதி .
கண் என்ற கருவிழியை கட்டிலாக்கி ,
இறைவனை அதில் படுக்கவைத்து
கண் இமை என்ற கதவால் பூட்டி
வெளியே விடாமல்
தியானம் .
இதுவும் ஒருவழி--கபீர் .
நெஞ்சைப் பிழந்து
சீதா,ராமரை காட்டிய
பக்தி வேறு
கண்ணைப்பிடுங்கி
இறைவனுக்கு அர்பித்த
கண்ணப்பன் கதை வேறு .
சூடிக்கொடுத்த மாலை
ஆண்டாள் கதை வேறு.
பொண்டாட்டி தாசன்
துளசிதாசன் கதை
இப்படியே சஞ்சலப்பட்டால்
இறைவனைக்கான முடியாது.
கண்ணை மூடி
பிரார்த்தனை செய்யவும்.

பிரார்த்தனை நேரடியாக.

உலகியல் /லௌகீகம் வேண்டாம்.

Friday, November 24, 2017

ந்ருசிம்ம கடாக்ஷம்

ஸ்ரீ ந்ருசிம்ஹ க்ருபா 
கடாக்ஷம் 

ஞானம் கொடுத்தான் .
ஞாலத்தில் வாழ 
நரவடிவும் கொடுத்தான்.
ஆரோக்கியம் அளித்தான். 
ஆஸ்தி அளித்தான்.
ஆனந்தமான வாழ்வில் 
இளமையின் ஆட்டம் 
அவன் அளித்தன எல்லாமே 
நான் என்ற அகந்தையால் 
அவனை மறந்து அவனியில் 
நானே என்று துள்ளித்திரிந்த 
அஹம்பாவத்துடன் இருக்கும் 
நரனுக்கு எச்சரிக்கையாக 
கருப்பு முடியை வெள்ளை யாக்கி
எச்சரிக்கை ! எச்சரிக்கை ! எச்சரிக்கை !
என்றே காட்ட சரீரத்தில் தளர்ச்சி 
இருப்பினும் மனிதன் வெள்ளிப் பணத்தை 
கருப்பாக்கி ஊழல் பலபுரிந்து 
தலைகால் புரியாத நிலையில் 
கடுப்பான கடவுள் முதுமையை அளித்தான்.
கர்ம வினைகளின் சுவர்க்க நரகம் 
புவியினிலே மனிதனுக்கு 
முதுமையின் கொடுமை. 
நல்வினை செய்தோருக்கு 
நல்ல நிலை முதியோர் ஆஷ்ரமம் இல்லை.
தீய கர்மம் செய்தோர் குழந்தைகள் 
சுடும் வார்த்தைகள் ஒரு நரகம்.
ஆட்டங்கள் அடங்கியும் ஆண்டவன் 
நினைவின்றி உள்ளவர்கள் 
காலன் எளிதாக நெருங்காமல் 
பிணிகள் பல அளித்தான்,
முதியோர் ஆஷ்ரமத்தில் கண்ணீர் சிந்த 
நரக வேதனைகளே நரசிம்மன் அளித்தான்.
கள்ளப்பணம் ,ஊழல் , அழாகான மாளிகை வாசம் 
ஆனால் அந்த முதுமையில் சரீர துர்நாற்றம்.
ஆஹா! இந்தக் கிழம் போகவில்லையே 
சீ !என்று எமன் வருவானோ ! உறவுகள்.
நரக வேதனைப்பாட்டே முதுமை.
வயதாகிவிட்டதே! என்று தாங்கும் உறவுகள்,
அன்பாக அருகில் உறவினர் சேவை 
இது ஒரு சுவர்க்க முதுமை .
நரசிம்மன் இங்கே நரனை நாரவைத்து 
காலனை அனுப்புகிறான். 
இதில் எத்தனை வேதனை
சந்தான பாக்கியமின்மை 
சக்தியுள்ள உடல் இன்மை 
சாதனை செய்யும் அறிவின்மை ,
சந்தனாபாக்கியத்தால் ஆனந்தம் 
சந்தான பாக்கியத்தால் குபுத்திர வேதனை 
இப்படி வையாக வாழ்க் கை 
உணர்ந்து குழந்தையில் இருந்தே 
இறைநாமம் , இறைபயம் , இறை அபயம் 
சரணகத்திதுவம் அறம் போதிப்பதே 
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கடாக்ஷம் .
ஓம் நாராயணா. 
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !ஓம் சாந்தி !

Thursday, November 23, 2017

இறைவன் அருள்

Anandakrishnan Sethuraman is thinking about all the good times.
வாழ்க்கையில்
வறுமையுடன்
மட்டுமா
எதிர் நீச்சல் .
பணம் உள்ளவர்களும்
படித்தவர்களும்
போட வேண்டும் எதிர்நீச்சல்.
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.
சோம்பேறிகளே வருமானம் இல்லை என்று
சாக்குப்போக்கு காட்டுவர்.
முப்போதுகோடி மக்கள் இன்று
நூறு கோடி மக்கள் ;
வேலை தேடி அலைவதும் வேலை
அலையாமல் வேலை பெறுவதும்
வேளை வரும் என்று
வேலனை வேண்டுவதும் வேலை.
இரண்டாவது உலகப்போர் டாடா வின்
முயற்சி இரும்பு வாணிகம்.
இறைவன் வேலைக்கு வேளை வர
பாரதியார் சொன்னது போல்
ஆண்டவன் ஒரு அக்னிக்குஞ்சு வழிதான்
காட்டுவார்.
அனைவருக்கும் அனைத்துத் திறனும் அளிப்பதில்லை.
எதோ ஒரு வாய்ப்பு திறமை
நாம் அனைத்துத் திறனும் பெற முயற்சிக்கவேண்டும்
அதில் ஏதாவது ஒன்று நம்மை வாழ்க்கைக்கு வழி
நடத்தும்.
ஹிந்தி போராட்டம். ஹிந்தி எதிர்ப்பு.
எனது தாயார் கோமதி அம்மாள் ஹிந்தி ஆசிரியை .
௧௯௬௬ நானும் ஹிந்தி எதிர்ப்பு.
௧௯௬௭ இல் எனக்கு ௧௭ வயது.
அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை.
வீட்டில் வறுமை .நான் வெறுத்த ஹிந்தி
எனக்கு வாழ வழி வகுத்தது.
அம்மாவின் விடுப்பில் சென்ற வேலை
எனக்கு கிடைத்தது.
அரசின் இருமொழிக் கொள்கையால்
வேலை இல்லை. ஆனால் ஹிந்தி ஆசிரியராக
இருந்ததால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை .
வெறுப்பு என்பது வேறு . அந்த மொழியில்
புலமை பெறுவது வேறு.
நாம் ஆங்கிலேயரை எதிர்த்தோம்.
எதிர்த்த தலைவர்கள் அனைவருமே
ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்கள்.
வழக்கறிஞர்கள்.
அன்றும் சரி இன்றும் சரி
ஆங்கில அறிவு இருந்தால் தான்
மரியாதை . கௌரவம்.
வேலை வாய்ப்பு.
இந்நிலையில் நானும் பல வகையில் எதிர்நீச்சல் போட்டு ஹிந்தியில் முதுகலை பட்டம்.
இந்த முயற்ச்சிக்குப்பின்
ஆண்டவனின் பேரருள் துணை நின்றது.
அரசு உதவி பெரும் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் வேலை.
ஒன்று என் முயற்சி. மற்றொன்று வேலைவாய்ப்பில்லாத ஹிந்தி மொழி ஆசிரியர்.
இந்த எதிர்நீச்சலில் முயற்சியும் ஆண்டவன் அருளும் இணைந்த வெற்றி.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காயை நமஹ.
முயற்சி தெய்வீக அனுக்கிரஹம்
இரண்டுமே தேவை . அப்பொழுதே எதிர்நீச்சலில்
வெற்றி பெற முடியும்.
சத்தியம் , நேர்மை ,கடமையை சரியாக செய்தல்.
நமக்கிருக்கும் உண்மைத் திறனறிதல்
முன்னோர்களின் புண்ணிய பாபங்கள்
. மேலைநாடுகளில் இவை அதிகம்.
பாரதத்தில் இறை பயம் இருந்தாலும்
ஊழல்கள் அதிகம் . ஆனால் நல்லவர்களின்
முயற்சி இறை அருள் நம்மை
வையகத்தில் மேன்மை அடையச் செய்கிறது.
பாரதநாடு பழம்பெரும் நாடு.
இந்நினைவினை அகற்றாதீர் .
நீர் அதன் புதல்வர்.
பத்து ரூபாய் கீரை விதை ஆறு சதுரடி உழைத்தால்
வருமானம். சிந்திப்பீர்!

Saturday, November 4, 2017

कथानक नया ताज़ा नहीं




निरपेक्ष कवि
तटस्थ कवि
विपक्ष कवि
खुशामद कवि
हास्यकवि
दार्शनिक कवि
आधुनिक कवि
आदर्शवादी
यथार्थ वादी
आदर्शोंमुख यथार्थवादी
पलायनवादी
कितना ग्ञानविज्ञान के कवि
धार्मिक अधार्मिक कवि
भक्त कवि अश्लील कवि
छंद बद्धकवि
छंद मुक्त कवि
कितने कवि कितने विषय
कितने सदुपदेश
कितने बदुपदेश
असत्य के लिए सत्य के लिए
धर्म के लिए अधर्म के लिए
सभी के उदाहरण .
एक पत्नी हो तो राम
द्वि पत्नी के लिए विष्णु
जूठ बोल बचने, छद्मवेश में ठगने
हर बात में पौराणिक काव्य
सत्य बोलने हरिश्चंद्र.
माता पिता की सेवा के लिए श्रवण कुमार
अवैध गर्भ धारण बच्चे को फेंकने महाभारत
बलात्कार, दूसरी पत्नी का अपहरण
शासकों के अत्याचार, हत्याएँ
जवहरव्रत, यति प्रथा, न जाने
कथानक एक ही
अभिव्यक्ति में तकनीकी.
अतः कोई बात ताजी या नयी नहीं लगती.
सोचो समझो सत्य की प्रशंसा सदा एक समान.

Wednesday, November 1, 2017

ஞானம்

ஆன்மிகம் என்பது 
கடும் மந்தணம் .
ஆண்டவணைக் காண 
ஆழ்ந்த தியானம் ,
பரிகாரம் ,பாலாபிஷேகம் 
படோடபம் ஆடம்பரம்
லௌகீக வேள்விகள் ,
தேவை இல்லை .
நமக்கு ஆண்டவன் அளித்த கடமையை
அன்புடன் சத்திய தர்மத்துடன்
ஆர்வமாக ஆழ்ந்த ஈடுபாடுடன்
உள்ளத்தில் மகிழ்வுடன்
நடுநிலையுடன் செய்தாலே
அவன் அருளால் அறிவு ஞானம் பெருகும்.
மன சஞ்சலம் அகலும் ,
ஞானம் வந்தால் அழியும் உலகில்
வாழும் நிலையற்ற தன்மை உணரும்.
இலவசமாக மருத்துவம்
தான தர்மம் செய்வோரும்
மூப்படைந்து மரணம் தான்.
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து
உயர் பதவி வகித்தாலும்
மர்ம மரணம் நீதி தேவன் மர்மம்
குடிசையில் வாழ்ந்தாலும்
மரணம் . மரணம். பிணம் .
இதுதான் சித்தர்கள் ஞானம்.
அறிந்து சித்தத்தில் சிவனை வைத்தால்
வாழ்க்கையில் அமைதி உளநிறைவு உவகை .
இதே தான் ஞான நிலை.