வடக்கிலிருந்து வந்த முருகன்,
தமிழ் கடவுள் ஆகின்றான்.
இது ஆன்மீக ஒற்றுமை.
வடக்கே முருகன் ஒதுக்கப்பட்டான்.
பொதிகை மலை கடந்துவந்த அகஸ்தியன்
தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.
தென்னாடுடையசிவனே போற்றி
தென்னாடுடையசிவனே போற்றி
கைலாய வாசன் சிவன்
ராமேஸ்வரத்தையும் காசியையும் இணைத்தான்.
வால்மீகி வடமொழி கவி அவன் படைத்த
இராமாயணம் தமிழ் கம்பராமாயணம்.
ஆன்மிகம் இணைக்கும் பாரதம்.
ஆலய வருமானம் மது ஆலயவருமானம்
இரண்டில் ஒரு ஆலயவருமானம் அதிகம்.
ஆலயத்தால் வாழ்வோர்ஆயிரமாயிரம்.
ஆலயம் சுற்றி வணிகவளாகம்.
அறநிலையத்துறை ஊழியர்கள்
அர்ச்சகர்கள் , பண்டாரங்கள்
நாத்திகம் பேசுவோர் கடவுள் இல்லை என்றாலும்
நாத்திகம் பேசுவோர் கடவுள் இல்லை என்றாலும்
கட்அவுட்பாலாபிசேகம் ஓயவில்லை.
கல்லுக்கு அபிஷேகம் தீர்த்தமாகிறது
நாத்தீகவாதம் எடுபடாது.
வடக்கும்தெற்கும்இணைந்த பாரதம்
ஆண்டவனால் இணைக்கும் பாரதம்.
வடமொழிஎன்மொழிகலப்பில்கொதிக்கும்
திராவிடஇயக்கங்கள்
ஆங்கிலமொழி இணைத்து
தமிழ்மொழிஅழிக்கும்
உண்மை நிலை பாரீர்.
திராவிட ஆட்சி வந்தபின் பட்டிதொட்டி எல்லாம்
ஆங்கிலப்பள்ளி.
அரசுப்பள்ளி ஆயிரமாயிரம் மூடல் காணீர்.
தமிழ் தமிழ்என்றே மேடை முழக்கம்.
படத்தலைப்பு தமிழ், ஆங்கிலம்கலந்த பாடல்,
வடமொழி கலப்புஎதிர்ப்பு.
வடமொழியால் தமிழுக்கு இலக்கிய வளம்.
பாரதிதாசன் தாசன் வடமொழி யன்றோ.
சிந்திப்பீர் இளைஞர்களே!
சுயநல இயக்கம் புரிந்து
தேசீய நீரோட்டத்தில் இணைவீர்.
வாழ்க நற்றமிழர்! வாழ்க பாரதமணித்திரு நாடு.!