Monday, September 22, 2014

மாம்பழம்.

மாம்பழம் 

இனிக்கிறதா ?

இப்ராஹிம்:  ஆம்,இனிக்கிறது.

இந்திரன் :     ஆம்  இனிக்கிறது.

இமானுவேல்:      ஆம் இனிக்கிறது.

ரோஜா   மூவரும் மணக்கிறது 

முள் குத்துகிறது.மூவரும்.

வேப்பம்:--கசக்கிறது 

புளி  புளிக்கிறது.

மூவருக்குமே 

மாம்பழம் இனிக்கிறது.

ரோஜா மணக்கிறது 
முள்  குத்துகிறது 
வேப்பம்  கசக்கிறது 
புளி புளிக்கிறது.

இவைகளைப் படைத்தவன் 
இறைவன் மூவரும்.
உங்களைப்படைத்தவன் 
இறைவன் மூவரும்.

இறைவன் படைத்தபோருள்கள் 
மூவருக்கும் ஒரே ருசி.
ஆனால் 

ஆண்டவனைப் பிரித்து 
மதம் என்ற பெயரால் 
மனிதநேயம் மறந்து 
மனிதனை மனிதன் 
வெறுக்க வேண்டும் 
என வாழ்ந்தால் 
மதி உள்ள மனிதனை 
சர்வ வல்லமை படைத்த 
இறைவன் மன்னிக்கமாட்டான்.
இன்னலே மிஞ்சும்.


No comments: