Thursday, October 31, 2013

அதுவே உச்சகட்ட மன நிறைவு.அதுவே பரமானந்தம்.

இறைவன்  இந்த உலகில் இருக்கிறான் என்றே
 உணர்ந்து வாழ்ந்தால் நன்மை பயக்கும்.

ஒவ்வொரு சாதனையாளனும் தான் சாதிக்க எவ்வளவு முயல்கிறான் .

முயற்சி திருவினையாக்கம்  என்றெல்லாம் கூறினாலும்  

மனிதர்கள் எல்லோரும்  தான் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா? என்றால் நூறு  சதவிகிதம்  "ஆம்"

என்ற விடை வருமா?என்றால் ஐயமே.

நான் இப்படி செய்யலாம்!இத்துறையில் முன்னேறலாம் என்று இருந்தேன் 

ஆனால்  நான் வேறு துறையில் பணி ஆற்றுகிறேன்.

நான் தவறு செய்யவேண்டாம் என நினைத்தேன் .செய்துவிட்டேன்.

ஐயோ !பாவம்!உண்மையில்  அவன் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும்.
அவனை பணியில் நியமித்திருக்கவேண்டும். அவனுக்கு பதவி உயர்வு வந்திருக்கவேண்டும். அவனுக்கு விருது கிடைத்திருக்கவேண்டும்.

அவன் தலை எழுத்து இப்படி அவதிப்படுகிறான்.

இவனுக்கு என்ன தெரியும்னே தெரியலை.காசுமேலே காசு,சொத்துமேலே சொத்து சேருது.

இவன் மாடா உழைக்கிறான் ;கடன்காரனா இருக்கான்.

இவனுக்கு எந்த குறையுமில்ல.ஆனால் அவன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகலே. மகனுக்கு கல்யாணமாகியும் குழந்தை இல்லை.
செய்யாத வைத்தி யமில்லை.  வேண்டாத தெய்வமில்லை.செய்யாத தான தர்மமில்லை.
ஆகா!என்ன வசதி!கார்,பங்களா!அவன் பையன் பைத்தியம்.இவனுக்கு தான் ஊர்ல பாதி சொத்து.ஒரே பையன். நேற்று குளிக்கும்போது வழுக்கிவிழுந்தான்,
அவனை ஆண்டவன் தூக்கிட்டான்.பாவம்.

தேநீர் கடையில் லாரி புகுந்து  பத்து  பேர்  மரணம். ஓடும் பேருந்தில் தீப்பிடித்து நாற்பத்தைந்து பேர் மரணம். இதெல்லாம் விதியா? மதியா?

இதை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் விமர்சித்தும் ஆராய்ந்தும் 
மனிதன் சுயநலத்திற்காக கடமையை மறக்கிறான். கையூட்டு   பெறுகிறான் .

இனத்திற்கும் ,நாட்டிற்கும்,உற்றார் உறவினருக்கும் செய்யும் தொழிலுக்கும் 
துரோகம் செய்கிறான்.

அரசியல் அதிகாரம் பெற்று ஊழலுக்குத்  துணை போகிறான்.

ஒருவன் சேர்க்கும் கோடிகள்,கேடிகள்,அராஜகங்கள்,தீமைகள் எதுவும் மரண நேரத்தில் கை கொடுத்துதவாது.

 இது எப்படி என்றால் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதை

 கிண்டலடி க்கும் கூட்டம்   கட் அவுட் பாலபிஷேகத்திற்கு கண்டனம்

தெரிவிக்காததுபோல். இது பகுத்தறிவு பாசறை.

லக்ஷக்கணக்கில் விநாயகர் சிலை செய்து கடலில் எறிவது போல.

அறிவு பூர்ண மான உண்மையான  அன்பும் பக்தியும் கலந்த சுயநலமற்ற 

பிரார்த்தனையே அருள் பெற வழி. மற்றதெல்லாம் தலை வலி.

அதுவே தலை விதிமாற்றும் மார்க்கம். பக்தி மார்க்கம்.

விதியை மதியால் வென்றோர் பட்டியல்

.விதியால் மங்கி யோர் பட்டியல்.

இதில் எது அதிகம்.?

அதுவே உச்சகட்ட மன நிறைவு.அதுவே பரமானந்தம்.

ஆகையால் மதக்கலவரம் என்பது சுயலத்தின் உச்சகட்டம்.

மனிதநேயம்,மனித ஒருமைப்பாடு ,சர்வஜனா  சுகினோ பவந்து

வையகம் வாழ்க என்று இறைவனை வழிபடுவதே ஆனந்தம்.




































































































இறைச் சிந்தனைகள்.

இறைச் சிந்தனைகள்.
ஆண்டவனைப் பற்றியும் அவனை அறியும் வழி முறைகளைப்பற்றியும் அறிவியல் போன்று  இதுதான் என்று வரையறுக்க முடியாது.ஏனென்றால் ஒரு சனாதன வாதியிடம்  கேட்டால் என்ன  சொல்லுவார்?
ஒரு இஸ்லாம் மதவாதியிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்.?
ஒரு கிறிஸ்தவ ஃபாதரிடம் கேட்டால் என்ன சொல்லுவார்?
மூவருமே  கடவுள்  இருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவார்கள்.
ஆனால்  இறைவனை வணங்கும் விதம் முற்றிலும் வேறு பட்டது.
சனாதன தர்மத்தின் சிறப்பே இதுதான்.இப்படித்தான்  என்று சொல்லவில்லை.அவர்களிடம்  இறைவன் உருவமற்றது தானே?என்றால், ஆம் என்பர். உருவமுள்ள வழி பாட்டுக்குத  தானே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றால் ஆம் என்ற பதில் வரும்.
என்னய்யா இது என்றால் ஞானம் வரும் வரை அப்படித்தான் என்பார்கள்.
நான் என்ன ஞான சூனியமா?உருவமா ?உருவமற்றதா?சொல்லுங்கய்யா?
எப்படி இயலும்? இயற்கைகளின் விந்தைகள் அனைத்தும் இறைவன் தானே?
ஹிந்து மதத்தில் நவக்ரஹ வழிபாடு உண்டு.
இதன் உருவங்களை இப்படி என்று முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக வழிகாட்டியதுடன் அந்த சிலைகளை கோயில்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.நம் தாத்தா இவர்தான்.காந்திதேசத்தந்தை  இவர்தான் என்பதை எப்படி நம்புகிறோமோ  அப்படித்தான் நாம் இவைகளை நம்ப வேண்டும்  .என்பதில் ஏன் ஐயம் ஏற்படுகிறது.?
காரணம் ஒரு நிச்சயமற்ற தன்மை மனதில் ஏற்படுவதே?
  அதற்குத்தான் ஞானம் வேண்டும்.
இந்த மனக் குழப்பத்திற்குக் காரணமே ஒரு ஆவல்.ஆர்வம்.இறைவனின் காட்சி,பேட்டி,வரம், ஆற்றல்  நாம் இந்த அழியும் உலகில் எதையும் சாத்தித்து நிலைத்து இருக்கலாமே என்ற எண்ணம்.இந்த உலகமே மாற்றம் அடையும்.இன்றைய தொழில் நுட்பம் நிலையானதல்ல.
இன்றைய நடைமுறைகள் நிலையானவை அல்ல .உறுதிவாய்ந்த என்று மனிதன் நினைப்பதெல்லாம் எங்கே?
ஆளும் நிர்வாக நடைமுறைகள் மாறுகின்றன.தலைவர்களின் கொள்கைகள் மாறுகின்றன. ஒரே கட்சி பிளவு படுகிறது.இவ்வாறே  இறைவன் ஒருவனே.மனிதன் தன் வசதிக்காக  ஒரு உருவத்தை சிருஷ்டித்துக்கொண்டு  வழிபடுகிறான். அவன் மனம் அதில் ஒன்ருபடுவதால் ஆற்றல் பெறுகிறான்.
பலர் தவம் செய்கின்றனர். ஞானம் பெறுகின்றனர். அவர்களுக்கு முன் எந்த உருவமும் கிடையாது.
முஹம்மது நபி இருண்ட குஹையில் தான் பைகாம் இறைச்செய்தி பெற்றார்.புத்தர் ஞானம் தேடி தவம் செய்தார். அவர் முன் உருவம் கிடையாது. வால்மீகி ராம்,ராம் என்று தவம் செய்தார்.அவர் முன் உருவம் கிடையாது.இவ்வாறே தவ வலிமை பெற்றவர்கள் நாம  ஜபம் தான் செய்தனரே தவிர
ஆடம்பரமாக மடாலயங்களில் தங்களுக்கே அபிஷேகம் செய்தும் தங்க மகுடம் சூட்டியும் ஆன்மிகம் வளர்க்கவில்லை.
இந்த கலியுகத்தில்  அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபடுவதால் ஒரு வித அச்சத்தின் காரணமாக சாஸ்திரிகள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு சொல்லக் கூட முடியாமல் அவசர அவசரமாக செய்து முடித்து ஆத்ம திருப்தி அடைகின்றனர். சாஸ்த்திரிகளும் தன் வருமானமே போதும் என்ற நிலையில் மந்திரத்தால் காதுகுத்தல்,ஹோமம் வளர்க்காமல் ஹோமம் செய்தல்.ஒரே நாளில் பலரின் சடங்குகள் ஏற்று துரித கதியில் முடித்தல் போன்றவை செயல்படுகிறது.
இந்த நிலைமாற முடியாத சூழல்  இருதரப்பினருக்கும்.வால்மீகியே நாம ஜபம் தான் செய்தார்.பல அரக்கர்கள் வரம் பெற்று தேவர்களையே ஆட்டுவித்ததும் நாமஜபத்தால் தான்.
அனைத்து மதங்களிலும் உருவமற்ற இறைவனையும் நாம ஜபத்திற்கு விசேஷ மகத்துவம் அளிக்கப்படுகிறது. ஆகையால்  கலியுகத்தில் இறைவனருள் பெற நாம ஜபங்கள் செய்யுங்கள்.
அதுவே பக்திக்கும் முக்திக்கும்  இறைவன் க்ருபா கடாக்ஷம் பெறவும் சிறந்த வழி.ஆடம்பர பக்தியை ஆண்டவன் விருபுவதில்லை. நாம ஜெபமே சிறந்தது. அதுவே கலியுகத்தில் உடனடி பலன் தருவது.அதுவே இறையன்பைப் பெற எளிய உயர்ந்த மார்க்கம்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

இயற்கையில் இன்பம் துன்பம் சுகம் ஆபத்து விபத்து  
ஆரோக்கியம் நோய் அனைத்தும் உண்டு.அதில் பௌர்ணமியும் உண்டு.அமாவாசையும் உண்டு.இருளில் நாம் ஒளியேற்றி மகிழ முடியும் என்ற மனித ஆற்றல் மேல் நம்பிக்கை கொண்டு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள். 
இறைவன் அனைவருக்கும் அவனி இன்பங்கள் ஆன்மீக அமைதி ,மன நிறைவு மகிழ்ச்சி தர பிரார்த்தனைகள்.தீபாவளி  
பட்டாசுகள் போல் தீமைகள் வெடித்து சிதறட்டும்.நன்மை என்ற ஆரவாரம் ஒளி ஒலி எங்கும் பெருகட்டும்.


Tuesday, October 29, 2013

அதுவே அமைதிக்கும் மன நிறைவுக்கும் வழி .

மனித சமுதாயம்  இவ்வுலகில் நிராசை அடையும்போது 
ஆதரவற்ற நிலை வரும்போது 
உலகில் உள்ள நடவடிக்கைகளால் 
உலகின் பாபங்களால் வெறுப்படைந்து 
சித்தார்த்தர் போன்று சித்தம் தெளிந்து 
உலகியல் ஆசை துறந்து  கானகம் சென்று 
தவம் செய்து ஞானம் பெற்றோர் உண்டு.

உலகில் துன்பங்கள், இன்பங்கள்
 கடல் அலைகள் போன்று ஓய்வதில்லை.
இதற்குக்  காரணம் உலகியல் பற்று;பந்தம் ;ஆசை ஆணவம் .
இவைகள் வரும்போதும் ,செல்வம் பெருகும் போதும் 
அக்ஞான  அந்தகனாக மனிதன் மாறுகிறான்.
அப்பொழுது அவனது செயல்கள் நீதிக்கு எதிராக மாறுகின்றன.
அதன் பலன் தான் துன்பங்கள்.
அநியாயமாக சம்பாதிக்கும் பணம் கையுகத்தில் 
வாழ்நாளிலேயே துன்பமாக நஷ்டமாக மாறுகிறது.
நாம் நினைக்கிறோம் இந்த கையூட்டுப் பணம் வாங்கவில்லை என்றால் 
நம் மகனை படிக்கவைக்க முடியாது.
தக்க மருத்துவம் செய்ய முடியாது.
நம் தேவைகள் பூர்த்தியாகாது என்று.
வீடுவாங்க முடியாது.
சுற்றுலா போக முடியாது. சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்காது.
வேலை கிடைக்காது. என்று.
ஆனால் இதெல்லாம்  கிடைத்தாலும் முழு ஆனந்தமாக 
திருப்தியாக  வாழ்வோர் எத்தனை பேர்.
வீடு வாங்கியாகிவிட்டது.
ஆனால் அது பணியாற்றும் இடத்தில் இருந்து தொலைவு.
பேருந்து பிடித்து ,ரயிலில் ஏறி பின் நடந்து பணியாற்றும் இடம்.
பத்து மணிக்கு பணியிடம் செல்ல எழு மணிக்குப் புறப்படவேண்டும்.
ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து இல்லம் செல்ல எட்டு எட்டரை.
இதிலும் ஒரு மகிழ்ச்சி சொந்தவீடு.
குழந்தைகள் பள்ளி கல்லூரி என்று செயல்கள்.
இந்த உலகில் இன்பம் எங்கே?
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட். தான்.
வயதானதும் இதை உணர்ந்து என்ன பயன்?
ஆரம்ப முதலே தேவைகள் குறைத்து இறைவனை 

வழிபடுவதிலே  தான் மன சாந்தி.
அதுவே அமைதிக்கும் மன நிறைவுக்கும் வழி .



Monday, October 28, 2013

அதுவே சாந்தி மார்க்கம்.அமைதிக்கு வழி;மன ஒருமைப்பாட்டிற்கு வேலி

புரியாத புதிர் இந்த புவி வாழ்க்கை.

புதியதோர் புவி படைக்கும் அறிவியலாளர்கள்.

புவியில் புன்னகை யோடு மானிட ஒற்றுமைக்கோர் கூட்டம்.

தன்னலத்திற்காக  தரணியில் வேற்றுமை வளர்க்கும் கூட்டம்.

தன்  பதவி ,தன்  செல்வம் ,தன்  வளர்ச்சி என்றே வாழும் கூட்டம்.

தன்  செல்வம் ,தன்  பதவி நிலைக்க கடமை மறந்து ,நேர்மை மறந்து

தர்மம் மறந்து ,நியாயம் அழித்து  ,ஒழித்து வாழும் ஓர் கூட்டம்.

தன்  என்னாம் மறந்து பிறருக்காக வாழ்ந்து தொண்டாற்றும் கூட்டம

தன்  உழைப்பின்றி பிறர் உழைப்பில் வாழும் ஓர் கூட்டம்.

தன்  உழைப்பில் பிறர் வாழக்  கண்டு இன்புறும் ஓர் கூட்டம்.

விலங்குகளில் நாம் காணும்  வேறுபாடுகள் அனைத்தும்  கொண்ட

மனிதக் கூட்டம்.

சாதுக்களும் ,அரக்கர்களும் வாழும் புவி இது.

இங்கே மனித நேயம் வளர்க்க ,வையகத்தில் ஒற்றுமை வளர்க்க

ஒரே மார்க்கம்  ஆன்மிகம். அதுவே தன்னலம் மறந்து

பிறர் நலம்  காண வழிகாட்டும்.

ஜன்மம்  .....மரணம் நிச்சயம்  என்ற ஜீவிதக் கோட்பாடு

நாம் அணியும் விபூதி .ஒரு பிடி சாம்பல் மிச்சம்

நாம் வெறும் கையுடன் பிறந்தோம் ,வெறும் கையுடன் மறைவோம்.

வேற்றுமைகள் மறந்து வாழ்வோம் இதுவே ஆன்மீக சாரம்.
அதுவே ஆனந்தம் .அதுவே  இன்பம். அதுவே பிரம்மானந்தம்.
அதுவே சாந்தி மார்க்கம்.அமைதிக்கு வழி;மன ஒருமைப்பாட்டிற்கு வேலி .



 

Sunday, October 27, 2013

அதுவே ஆதரவு தரும் இன்ப வழி .

அவனியில்  அவதரித்த ஆண்டவனே ,
அலுத்து அழுது அல்லல் பட்ட அவனி இது.

அல்லலுக்கே அவனி என்றால் அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது 

அவ்வையின் வாக்கில் என்ன வாய்மை?

அவர் கொடுக்கும் விளக்கம்  அரிது .

பிணி ,வறுமை போன்ற அல்லலளில்லா பிறவி அரிது.

ஆணவம் ,கல்லாமை ,பொறாமை ,ஈகையின்மை ,சுயநலம் ,
பந்த பாசம்,ஒருதலை பக்ஷம் ,ஆசை ,பேராசை, இல்லா 
மனிதப்  பிறவியும் அரிது.
அதனாலே  அழுதது ஆண்டவனின் அவதாரம்.
காமுகனை அழிக்க  ராமரும் அதர்மம்;விபீஷணனுக்கு அவப்பெயர்.
பங்காளி பகை ,அங்கும் பெண் ,அந்தகனுக்கு அபலை,
அல்லலே  அதர்மமே எங்கும்.சதி ;சதியால் வெற்றி;
ராமர் போல் வாழ்க?என்று வாழ்த்த முடியுமா?

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம்;புத்திர சோகத்தால் தசரதன் மறைவு;
ஆதி சங்கரரின் வாழ்விலும் அவர் தாயாருக்கு புத்திரசோகம்;
விதி சதி பிறப்பு வாழ்வு ,மரணம்  இதில் பிரிவு !!
இதில் அமைதிகாண  விதிப்பயன் நினைத்து 
இறைசக்தி இயற்கை வழிபாடே  வழி ; அன்பே ஆண்டவன்.
அதுவே ஆதரவு தரும் இன்ப வழி .

 

Monday, October 21, 2013

பிரார்த்தனை

 பிரார்த்தனை 
 இறைவா! இன்று  உன் அருளால் ,
அறிய வேண்டிய ,அரிய  நண்பன் 
பாலாஜி  அறிமுகம்..
உன்  லீலை உலகம் அறியாது.
உள்ளத்தில் வீற்றிருக்கும் உன்னை 
உலகம் அறிவதோ கடினம்.
உடனடி சுகம் தரும் உனதடி நிழல் அல்ல.
எண்ணங்கள்  நிறைவேற ஏற்றதொரு தருணம்.
பொறுத்தார்  பூமி ஆழ்வார். ஆனால் 
உடனடி பலன் தரா உன்னருள் பலருக்கு 
உண்மை புலப்படா ,புலன்களுக்காப்பாலாய் 
உனதருள் இருப்பதால் உள்ளத்தில் உணரா நிலை.
உனதருள் உணர்ந்து வாழும் எனக்கு 
ஏற்றதோர் வாழ்வு தந்த ஏழுமலையானே .
பாலாஜி அருள் பெறவே வேண்டுகிறேன் தினந்தோறும்.

Sunday, October 13, 2013

எப்போது? உலகில் அநியாயங்கள் அளவு மீறி நடக்கும் போது; தர்மங்கள் முற்றிலும் அழியும் போது.

அலைமகள்  பணம் அலைகள் ஓய்வதில்லை
அலைமகள் கருணையின்றி
கலைமகள் கருணை இல்லை.
இரண்டும் இருந்தாலும்
இருவரையும் காக்க
மலைமகள் தேவை.
மூன்றிற்கும்   அறம் தேவை.
கர்ணனிடம் வீரம் இருந்தது.
துரியோதனிடம் திருமகள்  இருந்தாள்.
ஆனால் ஊழ் வினை சகுனிவடிவில் வந்தது.
பாண்டவர்களுக்கு வீரம் இருந்தது.
விவேகம் தருமரிடம் இல்லை;
சூதாட்டம் அவனைக்கவர்ந்தது.
தோல்வி !தோல்வி!கட்டிய மனைவியை
தோற்றபின்  ;அவருக்கு தர்மராஜ்;
கிருஷ்ணனின் சூழ்ச்சி ,
சகுனியின் பழிவாங்கும் நிலை
பீஷ்மரின்  வீரம்
விதுரனின் அறிவு
அர்ஜுனனின் ஆற்றல்
அனைத்தும் பயனில்லை
மகாபாரதப்போர்.
போரின் முடிவிலும் அழிவிலும்
வெற்றியிலும் மகிழ்ச்சி இல்லை;
தர்மம் வந்றதா?அது தர்ம யுத்தமா?
அபிமன்யு மரணம்;
கர்ணனின் மரணம்;
அஸ்வத்தாமன் கோபம்;
இதுதான் உலகியல்;
இராமாயண முடிவு
சீதையின்  முடிவு;
லவன் குஷன் அதன் பின் இல்லை இதிகாசம்.
அவர்கள் ஆட்சி ?கதை இல்லை;
இருக்கிறதா?
எனக்கு ஆள் ஞானம் இல்லை;
கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே..இது யாருக்கு
ஆள்பவர்களுக்கு இல்லையா?
ஆண்டவனின் அவதாரம் எப்போது?
உலகில்  அநியாயங்கள் அளவு மீறி நடக்கும் போது;
தர்மங்கள் முற்றிலும் அழியும் போது.

Friday, October 11, 2013

அதை அறிந்தால் இன்பம். இல்லையேல் துன்பம்.


ஆண்டவன் அருள் அனைவருக்குமே உண்டு.
இயற்கையின் படைப்பில் அம்ருதமும் உண்டு
நஞ்சும் உண்டு.
நறுமணமும் உண்டு ;துர்மணமும் உண்டு.
இனிப்பில் எறும்புகளின் கூட்டம்,
ஈக்களின் கூட்டம் வெறுப்பு அளிக்கும்.
கொசுக்களின் கூட்டம் நோய் பரப்பும்.
காகங்கள் சுத்தப்படுத்தும், அவைகளே நம் முன்னோர்கள்.
காகத்தை உணவிட்டு அழைக்கிறோம்.
காரணம் அது செத்த எலியைத் தூக்கிச்செல்லும்
வளர்ப்பு மிருகங்கள் ,காட்டு மிருகங்கள்
அறிவுரை கூற விலங்குகள் கதைகள்.
ஒற்றுமைக்கு  மாடும் சிங்கமும்
கிட்டாதாயின் வெட்டன மற.
சீ!சீ!இந்தப்பழம் புளிக்கும் நரியின் கதை.
யானையும் தையல்காரனும்  பிறருக்கு இன்னலின் பலன்
இத்தனையும் அறிந்த மனிதனுக்கு துன்பம் ஏன்?
இத்தனையும் படைத்து ஆறறிவும் கொடுத்த
ஆண்டவனை மறந்து ,அவனளிக்கும் கடமையை
லௌகீக சுகத்திற்கு நேர்மை மறந்து
கோப்புகளை நகர்த்த கையூட்டு.
மின் இணைப்பு ஒளிகாட்டும் கடமை பெற்ற
பொறியாளர்,தாகம் தீர்க்கும் கடமை பெற்ற பொறியாளர்
ஊழியர்கள் கையூட்டு பெற்றே இணைப்பு என்ற நிலை.
நாடாளும் அதிகாரம் பெற்றும் ஊழலில் உழலும் அரசியல்,
ஆன்மீக அருள் பெற்றும் அவ்வருளால் பலாத்காரம்,
ஆசிரியர் கடமை தேர்வுத்தாள் திருத்தல் என ஊழலில்
பொருளின்பம் காணும்  ஆ சிரியர்கள்
ஆண்டவன் நீதி மறந்து தான் தான் அனைத்தும் என்று
பொருளீட்டும்  அதிகாரிகள் அமைச்சர்கள்.மருத்துவர்கள்.
இதிலும் நீதிமான்கள் இருப்பதால் தான் ஊழல்கள்
வெளிவருகின்ற நிலை.
பணம் இருந்தால் பழி  வராது ;நீதிமன்றம் தண்டனை தராது
என்ற ஒரு மமதை.
ஆனால் லக்ஷம் கோடி ஊழல்
வெளிவந்த பின்னணி .இதில் நேர்மையின் வெளிச்சம்.
 மாயை தப்பித்தாலும் மயக்கம் தெளிந்தால்
இறைவனின் தண்டனை,
அதுவே  அறம்
.அதுவே ஆண்டவன்
அதை அறிந்தால் இன்பம்.
இல்லையேல் துன்பம்.
 .

அதில் தானே பரமானந்தம்.

அன்பு இறைவனை  
ஆஸ்திக்காக வேண்டுவோர்--தன்
இச்சைக்காக வேண்டுவோர் ,
ஈகைக்காக வேண்டுவோர் --தன்
உள்ளத்து ஆசைகள் நிறைவேற வேண்டுவோர் 
ஊக்கம் பெற வேண்டுவோர் 
எண்ணங்கள்  நிறைவேற வேண்டுவோர் 
ஏற்றம்பெற வேண்டுவோர் --உலக 
ஐக்கியத்திற்கு வேண்டுவோர் .
ஒப்பில்லா செல்வம் புகழ் பெற வேண்டுவோர் 
ஓங்காரம் ஜபித்து ,அகங்காரம் வெல்ல வேண்டுவோர் 
ஔடதமாகி இன்னல் தீர வேண்டுவோர்  என 
வேண்டுவோர் பல ரகம்,
இதில் உயர் ரகம் அருள் பெரும் ரகம் 

தனி ரகம்.
கடவுளையே சரணடைந்து 
தவம் கிடந்தாலும் 
அவனருள்  பெற்றோர் 
கடமை யாற்றுவோர்;
அன்பை பரப்புவோர்.
அறநெறி செல்வோர் 
அஹிம்சை வழி செல்வோர் 
அறநெறி  காட்டுவோர்
பிறர்க்கென வாழ்வோர்  
பொதுநலம் காப்போர் 
பிறர் துன்பம் கண்டு 
உடன் உதவு வோர் 
பிறருக்கென வாழ்வோர் 
என்றதொரு பெரும் கூட்டம் 
அதுவே உலகியல் தர்மம்.
அதர்மத்தில் செல்வோரும் 
செல்வம் சேர்ப்போரும்
வருந்தியே உயிர் விடும் 
வாழ்க்கைத் தத்துவம்.
சத்யம் ஞானம் அனந்தம் பிரமம்.
கடமை மறந்து ,கடவுளை மறந்து 
அறம் மறந்து செல்வமே பெரிதென 
வாழ்ந்தோர்  பலர் .
பெயர் சொல்ல ஆளில்லை.
நந்தனை சொல்கிறோம்.
கண்ணப்பனை சொல்கிறோம்.
துருவனை சொல்கிறோம் 
தியாகராஜரை சொல்கிறோம்.
ஏகனாத்தை சொல்கிறோம்,
பாரதியை சொல்கிறோம் 
வள்ளுவரை சொல்கிறோம் 
வள்ளலாரை சொல்கிறோம்.
செல்வச் செழிப்பும் ஆண்டவர்களும் 
வரலாற்றில். அது பரப்பப் படுவதில்லை.

நால்லோழுக்கம் தரும் நல நூல்கள் 
அவ்வைகாட்டிய நீதிநெறி ,மூதுரை 
ஆத்திச்சூடிஎன  தேவீகநூல்கள் 
நபிகளின் குரான் ,இயேசுவின் பைபிள் 
எளியோர் நன்றி வழிகாட்டிகள் 
வாழும் உலகமிது.
இதை அறிந்தே  ஆன்மிகம் வளர்கிறது 
அதிலே தான் ஆனந்தம்.
அனந்தம் ஆத்ம திருப்பதி 
அதிலேதானே இயல்பான  சுகம்.
அதுவே அன்பன் ஆண்டவன் அருள்.
அதில் தானே பரமானந்தம்.





Thursday, October 10, 2013

இறைப்பற்று கொண்டே இன்னல் படுகின்றோம்;

இறைவனை  நேர்காணல் பற்றி ,
இறைவன் அருள் பெறல் பற்றி
இறைவனை வேண்டுதல் பற்றி
பற்றுடன் பலர் பகர்ந்திட்டாலும்,
பற்றின்றி பற்றுதலே பக்தி யாகும்;

இன்னல்கள் இல்லா இல்லங்கள் இல்லை'
 இன்னுமா இந்த சோதனை!இறைவா!
இறைஞ்சி வேண்டாதோர் யாரும் இல்லை;
இறைவனே வேண்டுகிறான்.


ஆசைகள்  அலைபாயும் அகிலத்தில்
ஆசையே இன்னலுக்கு மூலம் என்றான் புத்தன்;
இச்ச சக்தி வேண்டும் என்றான் இறைவன்;
இசையில் ஏற்படும் ஞானம் இச்சகத்தில்
செயலாக்கம் பெரும் என்றே
முச்சக்தி பற்றி சொன்னான்;
இன்று அதை இங்கிலீசில் புதுமையாக கேட்கிறோம்;

நேர்மை வாய்மை தவறுகிறோம்;
நேர்வழியில் செல்வதில்லை'
நமக்காக ,உற்றாருக்காக,நண்பனுக்காக என்றே
வருவாயில் நாம் செலுத்தும் கவனம்
வறுமையில்ல வாழ்க்கை என
வஞ்சனையில் வீழ்கிறோம்'

தலைவன் தவறு செய்தால்
நம் தலைவன் என்றே மௌனம் காக்கின்றோம்;
ஆன்மிகம் தவறு செய்தால்
நம் மதம் என்றே சம்மதமளிக்கிறோம்;
புதிய சம்பிரதாயங்கள்,ஊர்வலங்கள்,
கோடிக்கணக்கில் சமுத்திரத்தில் விசர்ஜனம்;
தெரிந்தே செய்யும் வீண் ஆன்மிக செயல்கள்;
புரிந்தும் அறிந்தும் தெளிந்தும் மோனம் காக்கின்றோம்;

இறைவனின் திருவிளையாடல் என்றே
விதிவழி செல்கின்றோம்;
இறைப்பற்று கொண்டே இன்னல்  படுகின்றோம்;




Sunday, October 6, 2013

இயற்கையின் இறைவன் சக்தி. மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயம் ,ஒற்றுமை,இறை அன்பு

ஆண்டவன்  நம்மை ஆள்பவன்.நம்மை மட்டும் அல்ல.நம்மை ஆள்பவர்களையும் ஆட்டுவிப்பவன். இந்த மாபெரும் சக்தி/சர்வ வல்லமை படைத்த ஒரு இறை ஆற்றல்  உலக அளவில் போற்றப்படுகிறது.

அல்லா ,ஏசு,சிவா,விஷ்ணு,ராமா ,கிருஷ்ணா,மாரியம்மா ,மேரியம்மா,லக்ஷ்மி,சரஸ்வதி,பார்வதி ,துர்கா என்று தனிதனி பெயர்களில் வழிபட்டு,மனிதர்களுக்குள் ஒரு வேற்றுமை,வெறுப்பு,ஆணவம்,கொலைவெறி ,அன்பு,பண்பற்ற செயல்களில்
ஈடுபடும்  மத வெறியர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள்.

மனித நேயம் காக்கப்படவேண்டும் .பரோபகாரம்(மற்றவர்களுக்கு உதவுதல்).கடமை (இறைவன் அளிக்கும் தொழில் அதை முழு ஆத்மநிறைஉடன் தன்னலம் கருதாமல் செய்தல்,)பொறாமைப்படாமல் இருத்தல்,மதங்கள் தவறு செய்தால் அதை வெளிப்படுத்தி சீராக்குதல்,தங்கள் மதம் செய்யும் தவறுகளை மத நன்மைக்காக மூடி மறைத்து அதற்கு காரணம் கற்பித்தல்,அதை ஒரு மத உணர்வாக,இறைவன் பெயரால் அச்சத்தை உண்டாக்கி செய்யவைத்தல்  ஒரு மதம் வளர கை கொடுக்குமா?அல்லது
வேறுபாட்டை ஏற்படுத்துமா? என்பதை மதவாதிகள் உணரவேண்டும்.

நான் இறைபக்தன். நான் இந்து. நான் இறைவனால் காக்கப்பட்டுவருகிறேன்.
நான் பிரம்மானந்தத்தை உணர்ந்தவன்.ஸ்ரீ வெங்கடாசலபதியின் நேரடி உதவிகள் பெற்றவன். எனது  புற்று நோய் அறுவை சிகிச்சை.நோய் கண்டுபிடித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.நான் அறுவை சிகிச்சைக்குத் தகுதி என்று சான்றளித்தவர் கிறிஸ்தவர்.எனக்கு அறுவை சிகிச்சை செய்தவர்
பத்மஸ்ரீ/பத்மா விபூஷன் விருது பெற்ற நிபுணர் முஹம்மது அலி.
எனக்கு நான்கு பேரின் இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.அவர்கள் பெயர் மதம் ஜாதி தெரியா தெய்வீக புருஷர்கள்.கண்ணுக்குத்தெரியா உதவி செய்தவர்கள்.
மருத்துவமனை சேத்துப்பட்டில் உள்ள DR.மேத்தா மருத்துவமனை.எனக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்கியவர் பாபகுமாரி.மயக்கமருந்தளித்தவர் ஒரு பெண் மருத்துவர்.
இப்பொழுது சொல்லுங்கள்.?மனிதநேயம் பெரியதா?மதம் என்ற மமதை பெரிதா?இது ஒரு மருத்துவக்குழு.மதபேதமற்ற உயிர்காக்கும் சேவை.

இந்த உயிர் அளிக்கும் செயல் அனைத்து மதங்களின் சங்கமம்.இறைவனின் காக்கும் சக்தி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
இன்று அனைவரும் உயிர்வாழ ஆதாரம் ஆங்கில மருத்துவம்.அதை மனித சமுதாயத்திற்ககாக அர்பணித்தவர்கள்  ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக செய்யவில்லை.
விமானம் ,புகைவண்டி,பேருந்து ,சிற்றுந்து,மகிழுந்து, மின்சாரம் என்ற அனைத்தும் மதங்களுக்கு அப்பாற்பட்டு  மனிதநலம் என்ற பரந்த மனப்பான்மைக்காக. இவைகளை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் பயன்படுத்த வேண்டும்,அதை கண்டுபிடித்த குறிப்பிட்ட நாட்டை/இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பயன் படுத்தவேண்டும் என்றால் அது மனித சேவையாகாது.

இதே நிலையில் மதங்கள் வளரவேண்டும்.மதங்கள் செய்யும் சிலவுகள் அனைத்தும் ஆக்கப் பணிகளுக்கு,மனித சமுதாய ஒற்றுமைக்குப் பயன் படுத்தப்படவேண்டும்.அதைவிடுத்து கோடிக்கணக்கில் கடலில் கரைப்பது எவருக்கும் பயன்படாமல் வீணாவதாகும்

செல்வங்கள் குவிந்தால் மக்களுக்குப்பயன்படவேண்டும்.
வேதபாடசாலையில் படிப்பவர்கள் வறுமை உணர்ந்து படிக்கக்கூடாது.படித்தபின் நாமும் மற்றவர்கள் போல் வசதியாக இருக்கும் நிலை உள்ளது என்பதை உணரவேண்டும்.
அதற்காக ஒரு ஏழையின் வீட்டு மரணத்திற்கு பத்துநாள் காரியத்திற்கு ஐம்பதாயிரம் வாங்கி அப்பாவின் ஆத்மசாந்தி என்று கூறக்கூடாது.
இருக்கும் வரை சாப்பிட கஷ்டப்பட்ட ஆத்மா தன மகன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் வாழ்வதை இறந்த ஆத்மா கண்டு
திருப்தியடையாது. மேலும் வேதனைப்படும்.

மனிதநேயம் ,சேவை தான் இறைப்பணி.
அதுவே முக்திக்கும் ஆனந்தத்திற்கும் வழி.
சுனாமி,பூகம்பம்,வெள்ளம் ,வறட்சி,ஊழல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல. அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் பொது.அவ்வாறே இறைவன் பல மதங்களில் தன் வலிகாட்டிகளைப் படித்தாலும் இறைவன் ஒருவரே.அவர் உருவமும் அருவமும் ஆகி நம் வினைகளுக்கேற்ற பயனளித்து ஆட்டுவிக்கிறார்.
இறைவன் அன்பின் சேவையின் ஒற்றுமையின் வடிவம்.இந்த மதவேற்றுமைகள் முற்றிலும் சுயநலம்.உத்தரகாண்ட் வெள்ளம் ஏற்பட்டபோது சில வேற்றுமததவர்கள் சண்டன தர்மத்தை இகழ்ந்தனர்.பின் பாகிஸ்தான் இயற்கை சீற்றம்.இது தான் இயற்கையின் இறைவன் சக்தி.
மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயம் ,ஒற்றுமை,இறை அன்பு தான் மனித இனத்தைக் காக்கும்.

Saturday, October 5, 2013

THOUGHT FOR THE DAY

THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Prayer is the very breath of religion; for, it brings
man and God nearer and nearer to each other.
Meditation (dhyana) is the process of listening to
the Song Celestial, the flute of Krishna, with the
mental ears alert on the melody. Just as every
day you engage in exercises and consume tonics,
calculating the intake of calories and vitamins,
paying meticulous attention to the nutritional
value of the food, pay attention also to the
intake of impressions into the mind, whether
they debilitate or strengthen, whether they add
to the power of resistance of the mind against the viruses - greed, envy, hatred,
pride, malice, etc. Have a meal of good acts of service, divine thoughts, and drink
the juice of Love (Prema rasa), so that they may be washed down, and digested well.
Then, you can be shining in mental health, happiness and wholesomeness. (Divine
Discourse, Oct 6, 1970.)

Date Saturday, 05 October 2013 ( As it appears in Prasanthinilayam) THOUGHT FOR THE DAY

Date Saturday, 05 October 2013 ( As it appears in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Consider it your foremost duty to revere your mother as
Divine and serve her. If you cannot respect your mother,
who bore you for nine months, brought you forth into the
world and cares for you, whom else would you respect?
Maternal love is akin to that of the Creator who projects and
protects this infinite cosmos in countless ways. You may
choose to worship the Divine in the form of a Goddess.
Another may worship and adore God in a different form.
You should note that the forms in which the Divine is
worshipped by others are as important as your own chosen
deity. If, on the contrary, you criticize or cast a slur on the
deities worshipped by others, you are committing a
grievous sin. Similarly, respect and show equal regard and reverence to all mothers
(women) as you would to your own mother. (Divine Discourse, Oct 14, 1988.)