Monday, January 21, 2013

ஆழ்கடல் அருள் முத்து கிட்டும்.

மனம்  அலை பாயும் ஒன்றே,
அதை நிலைநிறுத்தும் வழி ,
வழிபாடே.
வழிபாட்டில்  தான் எத்தனை  வழிமுறை,
அமைதி வழிமுறை,
ஆர்ப்பாட்ட  பஜனை முறை,
இனிய பாடல் பாடும் முறை.
ஈகை  மூலம் அருள் பெரும் முறை.
உண்ணா  நோன்பு. பாத யாத்திரை,
காவடி ஆட்டம்,கரகாட்டம்.
வாத்திய முழக்கம்,
சாமர வீசுதல்.
சூர்ய  நமஸ்காரம்,
அர்ச்சனை,
சிதறுதேங்காய்,
அங்கப்பிரதக்ஷணம்,
அலகு குத்தல் 
தீமிதித்தல்,
தீச்சட்டி எடுத்தல்,
பூக்குழி இறங்குதல்,
எவ்வழியில் அவன் இரக்கம்  கிட்டும்.
இருமுடி கட்டி விரதம் இருத்தல்.
கிட்டும் கிட்டும் 
அவனால் கிட்டும் 
அமைதி தியானம்,
முழுமனதுடன்.
அதுதான் அலைபாயும் 
மனம்  ஆழ் கடலாக்கும்.
ஆழ்கடல் அருள் முத்து கிட்டும்.

1 comment:

அம்பாளடியாள் said...

வணக்கம் ஐயா !
எமை ஆளும் மனதை நாம் ஆளக் கற்றுக் கொண்டாலே போதும்
என்று இனியன கூறிச் செல்லும்
தங்களைத் தொடர்வதில் பெருமை கொள்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு