Monday, January 21, 2013

ஆழ்கடல் அருள் முத்து கிட்டும்.

மனம்  அலை பாயும் ஒன்றே,
அதை நிலைநிறுத்தும் வழி ,
வழிபாடே.
வழிபாட்டில்  தான் எத்தனை  வழிமுறை,
அமைதி வழிமுறை,
ஆர்ப்பாட்ட  பஜனை முறை,
இனிய பாடல் பாடும் முறை.
ஈகை  மூலம் அருள் பெரும் முறை.
உண்ணா  நோன்பு. பாத யாத்திரை,
காவடி ஆட்டம்,கரகாட்டம்.
வாத்திய முழக்கம்,
சாமர வீசுதல்.
சூர்ய  நமஸ்காரம்,
அர்ச்சனை,
சிதறுதேங்காய்,
அங்கப்பிரதக்ஷணம்,
அலகு குத்தல் 
தீமிதித்தல்,
தீச்சட்டி எடுத்தல்,
பூக்குழி இறங்குதல்,
எவ்வழியில் அவன் இரக்கம்  கிட்டும்.
இருமுடி கட்டி விரதம் இருத்தல்.
கிட்டும் கிட்டும் 
அவனால் கிட்டும் 
அமைதி தியானம்,
முழுமனதுடன்.
அதுதான் அலைபாயும் 
மனம்  ஆழ் கடலாக்கும்.
ஆழ்கடல் அருள் முத்து கிட்டும்.

Monday, January 7, 2013

விஷயாஸக்தி / அன்பே ஆண்டவன்.

விஷயாஸக்தி / அன்பே ஆண்டவன்.

மனித முன்னேற்றத்திற்கும் ,தியானத்திற்கும்  பெரும் தடை புலனின்பம்.இன்பப் பொருள்களின் மீது  தீவீர ஆசை  தான் விஷயாசக்தி.

புலன்களின் பற்றால் மனத்தொல்லை ஏற்பட்டு மன ஒருமைப்பாடு குறைகிறது.

கீதோபதேசத்தில்  கண்ணன் அர்ஜுனனிடம்  நல்வழியில் அறிஞர்கள்  சென்றாலும் ,நிலைத்து நின்றாலும் அறிஞனுடைய மனதையும் இந்த புலன்கள் அலைபாயச் செய்கின்றன.கப்பலைக் காற்றானது நீர் நிலை 
தத்தளிக்கச் செய்வது  போல் ,மனம் இந்திரிய சுகங்கள் அல்லது பற்றால் அவனது வேகத்தை அதிகரிக்கிறது. பரமாத்மாவின் மீது பற்றுகொண்ட பின் தான்  அவன் ஆசை அழிகிறது.ஆசை அறவே அழிய ஈஸ்வர தரிசனம் தேவை.மனிதன் ஆத்மானுபூதி அடைவதற்கு உயர் குறிக்கோள் ஒன்றே வழி.




Sunday, January 6, 2013

வறுமைக்கோடு  தான் பாசம் பந்தம் தியாகம் சேவை மற்றவர்கள் இன்புற்றநிலையில் உதவும்.இன்னல் களைய ஓடும். பணம் காரில் நிற்காமல் பறக்கும்.  துர்நாற்றம் வறுமைக்  கோடால்  அழியும்.
பணம் படைத்தவர்கள் நறுமணம் பூசி துர்நாற்றம் களைய ரொட்டித் துண்டு வீசுபவர்கள். அவர்களால் இருக்கமுடியாத சஹிக்கமுடியாத  இடம்  வாழும் இடம்  வறுமைக்கோடு.

சர்வேஷாம் சாந்திர் பவது --அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும்

மன ஒருமைப்பாட்டிற்கு  தியானமே .

நிர்குண  தியானம்  அருட்பெருஞ்சோதி ,தனிப்பெருங் கருணையாக உள்ளது.
ஆத்மா பரமாத்மா அஹம் பிரம்மாஸ்மி என்ற  நிலை தியானமே நிர்குண தியானம்.

சகுண  தியானத்தில் இறை உருவத்தை கண்களில் பதியவைத்து  பாதரகேசம் வரை மனத்தை செலுத்தி கண்களை மூடி தியானம் செய்தல்.

  தியானம் செய்யும் பழக்கம் வர வர லௌகீக நாட்டம் குறையும்.இறைவன் தங்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.

ஆணவம்,கோபம்,பேராசை ,காமம் போன்றவை குறையும்.தியானத்திற்கு தடை வீண் கற்பனைகள். நமக்கு ஆண்டவன் சக்தி அளித்தால்  உலக சாதனை படிக்கவேண்டும் என்பது.இந்த ஆசைகளை விட்டால் தான்  மனம்
ஒருமைப்பட்டு தியானத்தில் ஈடுபடும்.
லோகா : சமஸ்தா:ஸுகினோ  பவந்து---உலகம் முழுவதும் இன்பத்தை அனுபவிக்கட்டும்; நலமாக இருக்கட்டும்.
சர்வேஷாம்  சாந்திர்  பவது --அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். என்ற நிலையில்  தியானம் இருக்கட்டும்.

சிவ  தியானம்.

சாந்தம் பத்மாஸனஸ்தம்  சசதரமுகுடம்   பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம் 

சூலம் வஜ்ரம் ச  கட்கம்  பரசுமபயதம்   தக்ஷிணாங்கே வஹந்தம் 

நாகம் பாசம் ச கண்டாம்  டமருக சஹிதாம் சாங்குசம்  வாமபாகே 

நானாலங்கார தீப்தம் ஸ்படிகமநிணிபம்  பார்வதீசம்  நமாமி.


        வித விதமான ஆபரணங்களை  அணிந்தவரும் , ஸ்படிக மணிபோல் 

 பிரகாசிப்பவரும் .பத்மாசனத்தில் அமைதியாக அமர்ந்தவரும் ,தலையில் 

பிறைச்சந்திரன்  மற்றும் வலப்புறத்தில் சூலம் ,வஜ்ரம்,வாள் ,கோடரியைஉடையவரும் ,
இடப்புறத்தில் நாகம், பாசம்,மணி,உடுக்கை,அங்குசத்தைக்   கொண்டவரும்

தமது  பக்தர்களை சகல பயங்களிலிருந்தும்                 

காப்பவருமாகிய  பார்வதியின் ஐந்துமுகத் தலைவனை  வணங்குகின்றேன்..


(ஸ்ரீ சுவாமி  சிவானந்தா ==concentration and meditation)