Tuesday, September 10, 2024

ஆன்மீகம்

 திருடன்.

 பணக்கார வீட்டில் திருட முடியாது.

 கஷ்டப் பட்டு ஆசைப்பட்டு 

 சிறுகச் சிறுக சேர்த்து 

 நகை ஆசையால்  

 போட்ட சங்கிலி

 அதைத்தான் பிரித்துச் செல்ல முடியும்.

 மெய்யோ  பொய்யோ

 சில சுய நல காவல் துறையும் 

 உடைந்தை.

 பணக்கார வீட்டில் திருட்டு 

 உடனடி  நடவடிக்கை.

  அப்படியே இலக்கியத் திருட்டு.

 அதுவும் ஏழை 

எழுத்தாளர்கள் திருட்டு.

 

  இதுவும் நிரூபிக்க  முடியாது.

  அரசியல் ஊழல் அதுவும்  சட்டப்படி முடியாது.

 ஆனால் 

 இறைவன் தண்டனை நிச்சயம்.

 இளைஞர்கள் மனம் கெடுக்கும் திரைப்படம்.

 அரை குறை ஆடை.

 உடலின்ப வெறி தூண்டும் காட்சிகள்.

 அதற்கு முதுமையில்  தண்டனை 

 வறுமை.

 நிம்மதியில்லா இல்வாழ்க்கை.

 கர்ம வினை.

 திறமை என்பது 

 கர்ம வினை முற்பிறவி வினை.

 சஞ்சய் காந்தி அல்ப ஆயுசு.

 ராஜீவ் பிரதமர் அல்ப ஆயுசு.

  ராஹுல் ராஜீவ் போன்று பிரதமர் ஆக முடியவில்லை.

 ஸ்டாலின் உதயநிதி வினைப்பயன்

 அழகிரிக்கு இல்லை.

 ஏபிஎஸ் இபிஎஸ்  இருவரில் 

 இபிஎஸ் ஐந்தாண்டு முதல்வர்.

 முயற்சி ஒரே மாதிரி வினைப்பயன் தான் பதவி.

    இதெல்லாம் ஆண்டவன் எழுதி படைத்த படைப்புகள்.

 புலி சிங்கம் அதன் குணம்

  இயற்கை.

 ஞானம் என்பது இறைவன் அளிப்பது.

 சங்கீதம் கற்காமல் இனிய குரல்.

 ஓவியம் கற்காமல்  சிறந்த 

 சாலை ஓவியங்கள்.

 முயற்சி மேல் முயற்சி 

 பத்தாம் வகுப்பு மஹாவிஷ்ணு 

 ஞானம்   பேராசிரியருக்கு கிடைக்காது.

 சித்தர்  பார்வை  பட்டால் முன்னேற்றம்.

 இந்த ஆன்மீகம் பேசினால் 

 கைது அடக்குமுறை .

இந்த ஆற்றல்  இறைவன் அளிப்பது.

 மஹாவிஷ்ணுவிற்கு 

 இன்று சிறை யோகம் இதுவும் கர்ம வினை.

 இந்த இறை மந்தம் அறியத் தான் பிரம்ம ஞானம். பிரம்மானந்தம்.

  மீண்டும் பழனி கணக்கன்  பட்டி சித்தர்.

 அவரை பார்க்க செல்லாத மேதைகள் கிடையாது.

 அழுக்கு சாமியார் அவர் பார்வைக்காக நிற்கும் பட்டதாரிகள் .

 இது தான் ஆன்மீக சக்தி. தெம்வ சக்தி.

 கடவுளுக்கு உருவம் கிடையாது.

 இன்று சோனியா விற்கு ஆந்திராவில் ஆலயம்.

 ஜெயலலிதா ஆலயம் 

 எம்ஜிஆர் ஆலயம் 

 மோதி ஆலயம் 

 குஷ்பு ஆலயம் 

 இவை பல ஆண்டுகளில் பெருகினால் அது ஆண்டவன் ஆலயம் ஆக முடியாது.

    தெய்வம் என்பது வள்ளுவர் 

 திருககுறள் போல்

 வேண்டுதல் வேண்டாமை இவான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல்.

 நடுநிலையாக உள்ளவர் இறைவன்.

 மனித ஆலயங்கள் 

 அந்தந்த கட்சி சார்புள்ளவை.

 சனாதன தர்மப்படி

இயற்கை தான் கடவுள்

 நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் பஞ்ச பூதங்கள்.

 சிந்திக்க . நல்ல தை நினைக்க.

சே. அனந்த கிருஷ்ணன்.

No comments: