Thursday, July 11, 2024

இறைவன்

 ஆன்மீகம் என்பது மனிதசக்திக்கு அப்பால் இருக்கும் ஒரு சக்தியை  வழிபடவேண்டும்.

 அது பஞ்ச தத்துவங்கள்.

 அவை இயற்கையில் 

 இறைவனால் படைக்கப்பட்டவை.

 முஸ்லிம் கங்கை

 கிறிஸ்தவ ஆகாயம் 

 ஹிந்து காற்று 

 புத்தர் அக்னி நிலம் 

 மாவீரர்  நிலம் 

  சீக்கிய சீலம் 

 என்றெல்லாம் கிடையாது.

 இந்த ஐந்து தத்துவங்களும் 

  தாவரங்கள் விலங்குகள் புழுக்கள்  பறவைகள் புல் பூண்டு செடி கொடி என்று அனைத்திற்கும் பொது.

 சுனாமி கொரானா பூகம்பம் புயல் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே என்று கூறமுடியாது.

  இவை அனைவருக்கும் இன்னல் தருபவை.

  இந்த ஐந்து தத்துவங்களும் ஒரே இறைவனுக்கு ஷா கட்டுப்பட்டவை.

 இவைகளை மாசு படுத்துவது ஏரிகள்  மூடப்படுவது 

நதிகளின் அகலம் குறைப்பது.

 புகைமண்டலம் எழுப்புவது

 கழிவு நீரை நதிகளில் சேர்ப்பது

மலைகளை தரைமட்டம் ஆக்குவது

 காடுகளை அழிப்பது 

 இவை எல்லாம் இறைவனை இயற்கையை அவமதிப்பது .

 அந்த பஞ்சதத்துவங்கள்

 சீற்றம் அடைந்தால்

 மனிதன் அறிவியல் அழிந்து விடும்.

  ஆகையால் இயற்கை போற்ற வேண்டும்.

 மோடி கோயில் 

 சோனியா கோயில் 

 குஷ்பு கோவில் 

 ஜெயலலிதா எம்ஜிஆர் கோவில் 

 என்று கட்சி வளர்ச்சிக்காக சுயநல ஆலயங்கள்.

 ராமர் கிருஷ்ணர் காலம் போன்றவை.

 இராமர் காளி துர்க்கை சிவன் உபாசகர் அல்லா  ஏசு  என்று  மனித இனத்தைப் பிரித்து 

 மனித நேயமற்ற சூழலை உருவாக்கி

 இனப்படுகொலை 

 தான் மதங்கள்.

 தர்மம்  என்பது  அறம்.

 அறம் பொதுவானது.

 மதம் மாறக்கூடியது.

 மதம் பல பிரிவுகளாக 

 கருத்து வேறுபாடுகள் உடையதாக மாறும்.

 சிவனுக்கு பல ஆதீனம்.

 ஆதினங்களுக்குள் சண்டை.

 விஷ்ணு ஏசு அல்லா பல பிரிவுகள்.

 இவை சுயநல அகங்கார கும்பல்கள்.

  காற்று இல்லை என்றால் மத வேறுபாடின்றி அனைவருக்கும் மூச்சு திணரும்.

தண்ணீர் தாகம் அப்படியே.

 கடல் நீர் உப்பு.

 அது மதம் சார்ந்து இனிப்பாக மாறாது.

 கரும்பு இனிப்பு.

 மதம் சார்ந்து கசப்பாக மாறாது.

 பாலைவனம் மதம் சார்ந்து சோலைவனம் ஆகாது.

 அனைத்தும் ஒரே கடவுள் கட்டுப்பாட்டில்.

 மனிதன் படைத்த ஆலயங்களில் காட்சிகள் மாறும்.

 இறைவனின் இயற்கை மாறாது.

 இயற்கை சீற்றங்கள் மனிதனின் உடனடி பயன் பெறும் முயற்சியால் ஏற்படுவை.

 அறம் /தர்மம் வளர்ப்போம்.

 மதம் மனித மனக் குழப்பம்.

 மனித ஒற்றுமைக்குக்கேடு.

  போலிகள் அனைத்து யுகங்களிலும் உண்டு.

 சிந்திக்க இறைவன் இயற்கை அளித்த கருத்துக்கள் சிந்திக்க.

 சே. அனந்தகிருஷ்ணன்.

No comments: