Wednesday, February 21, 2018

இன்றைய இறை சிந்தனைகள்

இன்றைய இறை சிந்தனை.

ஓம் கணேசாய நமஹ
அல்லாவே நமஹ.
இறைதூதர் ஏசுவே நமஹ/
அஹிம்சை வழி குரு மகாவீர் போற்றி .
அன்பு வழி புத்தரே போற்றி
வீரமும் பக்தியும் குரு கிரந்த மே போற்றி .
இன்னும் உலகில் நல்வழி காட்டும்
அறிந்தும் அறியாமல் வையகம் காக்கும்
தெய்வங்களே போற்றி.
இன்றைய இறை சிந்தனையில்
ஞானமும் அறிவும் உள்ளவர்களாகிய
மனிதர்களிடம் ஒரு கேள்வி.
மிகப் பழமையான ஹிந்து என்று வெளிநாட்டினர் அளித்த பெயரை சனாதன தர்மம் ஏற்றுள்ளது.
கி.பி.,கிமு என்பதுபோல்
சனாதன
ஹிந்து மதம் தோன்றுவதற்கு முன் / தோன்றிய பின்
என்ற வரலாறு கிடையாது.
அறிவைக்கொடுத்த இறைவன்
சுயநலத்தையும்
கொடுத்துவிட்டான்.
சுயநலம் என்பது சனாதன
தர்மப்படி மாயை.
இஸ்லாமிய /கிறிஸ்தவ மதப்படி
சாத்தான் /சைத்தான்.
சனாதன மதப்படி லௌகீகம் ./அலௌகீகம்.
இவ்வுலக ஆசாபாசங்கள் என்பது
உடனடி இன்பம் என்பதே லௌகீகம் .
ஒரு குளம் .ஏரி, இவைகளை
மூடி நகரமாக்கி
பொருளீட்டுவது ,
இதற்குத்துணை போகும்
அரசியல் வாதிகள்,அதிகாரிகள் ,
வீட்டுமனை ,வீடு விற்பனையாளர்கள் ,தொழிற்சாலைகள் நிறுவும்
தொழில் அதிபர்கள்
லௌகீக ஆசைகள் கொண்டு
வேலைவாய்ப்பு ,நகர்ப்புற அபிவிருத்தி என்று
பணம் ,நகை ,வாகனம் ,ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், விளைவு அறிவியல் சாதனங்கள் என்ற சைத்தான் கள். ஆண்டுக்கு ஒரு மாற்றம் .
அடுத்த சைத்தான் கடன் ,கடன் அட்டை.

விவசாய நிலங்கள் ,ஏரிகள் அழிப்பு
மாயை செய்யும் வேலை.
அரசர்கள் அரண்மனை ஆலயங்கள் .
கல்வி அறிவும் ஆற்றலும் உள்ளவர்களுக்கே.
சராசரி மதிப்பெண்,
இட ஒதுக்கீடு இதுவும் மாயை.
அனைவருக்கும் கல்வி அவசியம்.
ஆனால்
பணம் படைத்தவர்கள் தான்
படிக்கவேண்டும் என்ற அரசர்கால நிலைக்கே இன்று மக்களாட்சிகளும்.
விளைவு ஏகலவியன் ,விதுரன் ,ரைதாஸ் ,கபீர் கர்ணன் ,போன்ற ஆற்றல் மிக்கவர்கள் வளரத்தடை.
இதுவும் அறிவும் ஞானமும் பெற்ற
மனிதர்களின் மாயை/ சைத்தான்கள்.
இப்படியான சிந்தனைகளில்
பாருங்கள் ஒரு விசித்திரம்
அடிமைவம்சம் ஆட்சி .
கல்கத்தகாளி ஆலயம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்
அவர் சீடர் விவேகானந்தர் .
ஆலயம் கட்டி அர்ச்சகர்
கிடைக்காத ஆலயம்.
அப்பொழுது அங்கே பூஜாரி பதவி ஏற்ற அந்தணர் .
அவர் சீடரால் வையகம்
போற்றும் பாரதம்.
பாரதத்தை அவமரியாதையுடன் பார்த்த ,
மேலைநாடுகள் ,
பாரதத்தின் மதிப்பறிந்து
உயர்ந்த நோக்கோடு
பார்த்த நிலை.
விவேகானந்தரின் வையகம் வாழ ,
வையகம் ஒரு குடும்பமாக வாழ
அவர் ஆரம்பித்த சொற்பொழிவின்
முதல் வார்த்தை சகோதர சகோதரர்களே!
இப்படி உலகில் இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயம் வளர்க்கும்
சனாதன தர்ம சிந்தனைகள்.
தர்மம் என்றால் அறம்.
சனாதன அறங்கள்.
அறம் வேறு. மதம் வேறு.
வெளிநாட்டினர் ,மற்ற இந்திய மதங்கள்.
ஆனால் அறவழி/தர்ம சிந்தனை
அருவமும் உருவமும் ஆகிய இறைவன்.
ராமன் குஹன் சபரி நட்பு ,
விதுரன் பிறப்பு என்று ஜாதி
சம்ப்ரதாயம் அற்ற
சனாதன தர்மம்.
குந்தி பாண்டவர்கள் பிறப்பு ,
இவை எல்லாமே ஜாதிய
ஒழிப்புக்கு சான்றுகள்.
இவை எல்லாம் மீறி ஆணவம் ,
சுயநலம் ,
மனித இன சம்பிரதாய
ஏற்றத்தாழ்வுகள்
நாம் பெற்ற ஞானத்தை
சரியாக பயன்பெறவில்லை என்ற
நிலைக்கு சான்றுகள்.
சனாதன தர்மம் அன்பு ,அஹிம்சை ,
பரோபகாரம் ,தானம் தியாகம் ,
முற்றுலும் துறந்த நிலை.
ஆனால் சில மதங்கள் அழகாக
மிகவும் கலை நயத்துடன்
படைத்த சிற்பங்களை அழிக்கின்றன.
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி கொல்கின்றன.
வன்முறை வளர்க்கின்றன.
ஆனால் இக்பால் கூறிய படி மதங்கள் மனிதர்களை விரோதியாக கருத கற்பிக்கவில்லை.
मजहब नहीं सिखाता ,आपस में वैर रखना.
சைத்தான் /சாத்தான் /மாயைகளிடம் இருந்து
தப்பித்து இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயத்துடன் வாழவே கற்பிக்கின்றன.
இதை அறிவுபெற்ற / ஞானம் பெற்ற சித்தர்கள் கூறுகிறார்கள்.
மதப்பற்று சுயநலம் உள்ளவர்கள் இன்னும் மாயை /சைத்தானின் .சாத்தானின் பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதே
இன்றைய இறைவன் எனக்களித்த சிந்தனைகள்.
உலகம் அமைதியாக/ சாந்தியாக/peacefull ஆக
இருக்க அன்பு ,அஹிம்சை .ரஹம் ,இரக்கமாக/
வாழ்ந்து வன்முறையில் இருந்து தப்ப வேண்டும்.
இன்று எனக்கு இறைவன் அளித்த சிந்தனைகள்.
------------------------------------------------------------------------------
ஓம் கணேசாய நமஹ !
ஓம் கார்த்திகேயாய நமஹ .
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காய நமஹ.
அருவமும் உருவமும் உள்ள
பகவானே போற்றி.

Tuesday, February 20, 2018

பக்தி --இன்றைய சிந்தனைகள்

இன்றைய இறை அனுபவம் /சிந்தனைகள் .
_________________________________________
இறைவனிடம் கையேந்துங்கள்
இல்லை என்று சொல்வதில்லை. 
நாம் முழுவதுமாக இறைவனை
விசுவசிக்க வேண்டும் .
மனிதனின் பலமே விஸ்வாஸத்தில் தான்.

  என் தாயார்  எண்பத்தைந்து வயது.
 பல விதநோய்கள். எனக்கும் அப்படியே.

பிரார்த்தனை மற்றும் அருளால்  வாழ்கிறோம்.

அம்மா  சிறுநீர் கழிக்க முடியாமல்
 மிகவும் சிரமப்பட்டார்.
 நேற்று இரவு என் தங்கையிடம்
கட்டாயம்  மருத்துவரிடம் அழைத்துச் செல்   என்று கூறியுள்ளார். இரவு பன்னிரண்டு மணி.

  தங்கையும் அம்மாவும்  தனியாக உள்ளனர்.
இரவு பிரார்த்தனை செய்து   தங்கை தூங்கி விட்டார்.
அம்மா வின் உடல்  திடீரென்று வளைத்துநிமிர்ந்துள்ளார்.
உடனே ஒருமாதமாக  சிறுநீர் கழிக்காதவர்  சிறுநீர் குடம் குடமாக கழித்து   காலையில்  எழுந்து எப்பொழுதும் போல் இயல்பாக  மாறிவிட்டார்.

  ஒரு திரைப்பட பாடல் ,
யானையின் பலம்  எதிலே  தும்பிக்கையிலே,
 மனிதனின் பலம் எதிலே நம்பிக்கையிலே .
நம்மிடம் இறைவனின் மீது நம்பிக்கை உள்ளதா ?
என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.
இறைவனின் மீது உண்மையான பக்தி இருந்தால்
அன்பு இருந்தால் திடமான நம்பிக்கை இருந்தால் தான் குரு கிடைப்பார்.
நம்மில் பலர் குரு கிடைத்தால் தான்
இறைவனின் அருள் கிடைக்கும் என்று
எண்ணுகிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.
நாம் பிறக்கிறோம்.
அழகாக , சிவப்பாக , சிரிப்புடன். அழுகையுடன். கருப்பாக , அசிங்கமாக .
அந்த பிறந்த குழந்தையின் சிரிப்பு ,அழுகை ,
நிறம் , கைகால் அசைவுகள் ,உருவம் பார்த்து
நம்மில் பலர் விமர்சிப்பார்கள்.
அப்பொழுது இறைவன் படைப்பின் ரகசியம் வெளிப்படும்.
அந்தக் குழந்தை சிரிப்பு தெய்வீகம் .
அது பேய் மாதிரி அழுகுது.
அந்தக் குழந்தை அழுவதும் அழகு.
வீர் வீரனு கத்துது.
அந்தக்குழந்தையைப் பார்த்தால்
தூக்கி கொஞ்சனும் போல இருக்கு.
அந்த குழந்தை ரொம்ப புத்திசாலி.
அது சிரிப்பில் கள்ளத்தனம் தோனுது.
இப்படி பிறந்த குழந்தை ஆறு மாதத்தில்
பார்வையாளர்களிடம் ,உறவினர்களிடம்
கொஞ்சலுக்கும் , பேச்சுக்கும் ஏச்சுக்கும்
ஆளாகிறது.
பாரு ,அப்பா மாதிரியே அறிவு / திருட்டுப் பார்வை.
இதனால் தெய்வீகமாக தெய்வ அருளுடன் பிறக்கும்
நாம் இறைவனைக் காண , இறைவன் அருள் பெற ,
சத் குரு பெற , நல்ல நண்பர்கள் பெற, நல்ல சூழல் அமைய , முதலில் இறைவனிடம் மட்டுமே பக்தி , நட்பு , காதல் ,அன்பு , சிரத்தை வைக்கவேண்டும்.
ஞானிகள் வாழ்க்கை வரலாறு முதலில் சாமியார்களையோ ,ஆஷ்ராமங்களை யோ
தேடிச் செல்லவில்லை என்பதே சத்தியம்.
இறைவனின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட
ஆதி சங்கரர் . ரமண மகரிஷி, பிரஹலாதன் ,
கண்ணப்பர் , துளசி தாசர் ,கபீர் , ரைதாஸ் ,
பக்த துக்காராம் , நந்தனார் ,துருவன் போன்றவர்கள் இறைவனின் முழு அருள் பெற்றது
தன் சுய இறை அனுபவத்தால் தான்.
பின்னர் இறைவன் அருளால் உயர்ந்த குரு ,ஞானம் ஆகியவை கிட்டும்.
ஆஷ்ரமங்கள் பணமும் ,நகையும் பொருளும்
வழங்குவோருக்கே முதலிடம் அளித்து ஆசி வழங்கும் . குருவின் ஆசி என்று ஐயாயிரம் ,பத்தாயிரம் ,லக்ஷம் என்று வழங்கி பெறுகிறார்கள்.
சில ஆஷ்ரமங்களில் ஆயுள் சந்தா கொடுத்தால்
முதல் தரிசனம் . ஆசிகள். அங்கு சமத்துவம் இல்லை என்பதே சத்தியம்.
ஆகையால் இறைவனிடம் நேரடி பக்தி ,
தியானமே மற்ற நல வழிகாட்டிகள் கிடைக்க
புகழ் , எண்ணம் போல் வாழ்க்கை அமைய
இறைவனை வழிபட இடைத்தரகர்கள் வேண்டாம்.
நீங்கள் அமைதியாக வழிபட வேண்டுமா,
அழகான குரலில் பாடி ஜபம் செய்யவேண்டுமா ,
தியானம் செய்ய வேண்டுமா
என்ற சுய உணர்வுகள் இயற்கையாகவே வரும்.
பெரியார் , கருணாநிதி போன்றவர்கள் ஒழிந்து
வீட்டுப்பெண்கள் மூலம் இறை அருள் பெறுகிறார்கள் என்பதே சத்தியமான நடவடிக்கை.

Friday, February 16, 2018

भक्ति

 मेरी रचना पर कमंट:-


ईश्वरीय सत्ता पर विचारती एक भक्त की सारगर्भित रचना
भक्ति से शुभरंभ कर भ्रष्टाचार तक का सफर करती रचना .


प्रातः कालीन प्रणाम .
प्रार्थना में है बल.
ईश्वर है कि नहीं
सवाल है ही नहीं.
शक जनता में ,
जग में ठग ही अधिक धनी ;
सजा से बचकर ,
न्याय को अपने हाथ में लेकर
चलते फिरते हैं .
तब भगवान क्यों
तमाशा देखते रहते हैं.
सत्यवान दुखी .
असत्य अत्याचारी सुखी .
शक जनता में
जग में भगवान
है कि नहीं.

असुरों के अत्याचार ,
देवी-देवता खुद भयभीत.
ऐसे वरदानी असुरों की
शक्ति शाली असुरों की
भगवान ने की है सृष्टि .
पर खुद अवतार लेकर ही
वध किया उनसे लड़कर.
ऐसे अत्याचारों को मनमाना वर
क्यों दिया ,पता नहीं ,
जग में भगवान हैकि नहीं.
बुढापा ,रोग ,मृत्यु ,दुर्घटना
प्राकृतिक कोप , न सुधरा भ्रष्टाचारी
अब सोचो ,विचारों ,समझो
ईश्वर है कि नहीं ,
सवाल है ही नहीं.

— thinking about all the good times.

Tuesday, February 13, 2018

காஞ்சி சிவாலயங்கள்.

காலை வணக்கம்.
ஓம் நமஹ சிவாய.
பகவானை வழிபடுகிறோம் .

பாவமும் செய்கிறோம்.
பயம் பகவானிடம் உள்ளதா ?

என்றால் 

சனாதன தர்மத்தில் இல்லாததுபோலும் 

இருப்பதுபோலும் இரட்டை வேடம் தான்.

சுயநலம் பகவானின் மீதுள்ள

பயத்தைப் போக்கிவிடுகிறது என்பது ஒரு பக்கம்.

பொது நலம் இறைவனின் மீதுள்ள 

அச்சத்தை அதிகரிக்கிறதா ?என்றால் 

அதுவும் புரியவில்லை. 

உண்மையான தொண்டர்களின் மனவருத்தம் ,

பராமரிக்காத ஆளாயங்களின் நிலை, 

அங்குள்ள அறிய கலைப் பொக்கிஷங்கள், 

தெய்வீக அலைகள்,

இன்னும் பராமரித்தால் தெய்வத்தின் 

அருள் எவ்வளவு கிட்டும்?

இன்னும் அனைவரும் சிறப்பாக வழி பட்டால் 

எவ்வளவு சக்தி கிடைக்கும் ?

ஏன் இந்துக்கள் ஒன்று பட்டு இந்த பொக்கிஷங்களைக் 

காக்க ஒற்றுமையாக பாடுபடவில்லை.
சுயநலமா?

பொருளாதாரமா ? 

பொறாமையா? 

வேற்றுமைகளா?

ஜாதி சம்பிரதாய உட் பூசல்களா ?

முழு அக்கறை ஏன் இல்லை?

அலட்சியம் ஏன்?

கடவுளிடம் நம்பிக்கை இல்லையா ?

 அறிய தெய்வீக ஸ்தலங்களை  ஏன்  பாதுகாக்க வில்லை.
௧௪௮ சிவாலயங்கள்

காண்பிக்கப்படும் என்றார்கள்.

அப்பர் இறைப்பணிக் குழு

இச்செயலைச் செய்கிறது.

பாராட்டுக்கள் .
காலை ஏழு மணிக்கு 

காஞ்சி மாநகரத்தில் உள்ள

சிவலிங்கங்கள் தரிசனம் செய்ய

ஆரம்பித்தோம்.

இரவு ஏழு மணிவரை தரிசனம். 

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள்.

சிவாலயங்கள் பார்த்தோம்.

அங்குள்ள சிவனின் மகிமைகள்,

சிவ வழிபாடு மிகவும் 

சிறப்பாக இருந்தது.
காஞ்சிமாநகரம் ஒரு சுற்றுலா நகரம்.

இத்தனை சிவாலயங்கள் பக்தி சிரத்தையுடன் 

பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த சிவாலயங்களைச் சுற்றி
வீடுகள். 

தூய்மையற்ற

பராமரிப்பு.

ஆனால் பக்தர்கள் எதையும் பேசவில்லை.

நேராக செல்வது இறைவனை வழிபடுவது,

தரிசித்த சிவனின் பெயரை

குறி த்துக்கொள்வது,

யாரும் ஓம் நமஹ சிவாய என்று

இறைநாம கோசங்கள் எழுப்பவில்லை .

ஆனால் அமைதி வழிபாடு.

இதில் சில ஆலயங்களில் 

பெண்கள் தான் தீபாராதனை .

அனைத்துக் கோவில்களும்

வீட்டிற்குள் இருப்பது போல் சுற்றிலும் வீடுகள்.

அந்த அப்பர் இறைப்பணி மன்றம்
பன்னிரண்டு ஆண்டுகளாக
 இந்த இறைதரிசனம் செய்யும் ,

செய்விக்கும்

பணியைச் செய்துவருகிறது.

இத்தனை கோயில்கள்
.
சில வீடுகளுக்குள்.

சில கடைகள் வளாகத்தின் நடுவில்.

சில ஆலயங்கள் முன் இஸ்லாமிய

சகோதரர்களின் கடைகள்,
கார் மெக்கானிக்கல் செட்.
சிவராத்திரி அன்று நான் தரிசித்தது

கிட்டத்தட்ட அறுபது ஆலயங்கள். 

இன்னும் தரிசிக்காத ஆலயங்கள் எண்பத்தெட்டு. 

இந்த நூற்றி நாற்பத்து எட்டு ஆலயங்களின் 

பெயர்கள் அச்சடித்த பிரதிகள் 

சுற்றுலாவில் கலந்து கொண்ட 

அனைவருக்கும் அளிக்கப்பட்டன. 

கலந்து கொள்ளாத பக்தர்களுக்கும் 
வழங்குகிறார்கள்.
காலையில்   ஆரோக்கியமான சிற்றுண்டி.

கேசரி,இட்லி,பொங்கல்.
ஹிந்து மதப் பற்றாளர்கள், 
இந்து முன்னணி என்று

இந்து மதத்திற்குப்போராடும் பல குழுக்கள்,

ஏன் இந்த நலிந்த நிலையில் உள்ள 

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களைப் 

பிரபலப்படுத்தவில்லை?
சைவ வைணவ  வேறுபாடா ?
ஜாதி-சம்பிரதாயங்களா ?

ஆக்கிரமித்தவர்கள் மீதுள்ள பயமா?

அரசியல் கட்சிகள் மீதுள்ள பயமா ?

நிச்சயமாக ஆலயங்கள் 
கட்டிய காலங்களில் 

இந்த ஆக்கிரமிப்பு,
 சுற்றி இல்லங்கள் ,

கடைகள் இருந்திருக்காது. 

சில  புதிதாக  தோன்றியதாகவும்

இருக்கலாம்.

ஹிந்து மதத்தின் ஆழ்ந்த பற்று ,

பக்தி, சிரத்தை உள்ளவர்களில் 

எத்தனை பேருக்கு இந்த முக்கியமாக

பிரபலமில்லா சிவாலயங்கள் பற்றி தெரியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உள்ள
 இந்த குட்டி குட்டி சிவாலயங்கள் பற்றி தெரியும் என்பது தெரியவில்லை..

(நாளை தொடரும்.......)