இறைவன் நம் மதத்தில் ,
அசுரர்களுக்கு அரிய சக்தி அளித்து ,
அஞ்சும் அளவிற்கு அவனியல் ஆட்சி செய்யும்
ஆற்றல் அளித்து ,தேவர்களை அஞ்சி ஓடும் நிலைக்குத் தள்ளி இறுதியில் வதம் செய்யும் கதைகள் அதிகம்.
தேவர்கள் ஆண்டவனை மறந்த நிலையில்
அசுரர்கள் தவம் கடும் தவம் செய்து வரம்
பெறுவதும் ,அசுரர்கள் கொடுமைக்குப்பின்
தேவர்கள் இறைவனை மண்டி இட்டு வேண்டுவதும் ,இறைவன் காப்பதும்
நமக்கு இறைவனை சதசர்வ காலமும்
பிரார்த்தனை செய்தால் அசுர சக்தியின் ஆற்றல்
நம்மை எதுவும் செய்யாது என்பதே தத்துவம்.
நம்மில் எத்தனைபேர் நேர்மையுடன் தினந்தோறும்
இறைவனை வழிபடுகிறோம் ?
என்று ஒரு நொடி சிந்த்தித்தால் அசுரர்களுக்கே
வரம் அளிப்பவன் உண்மை பக்தர்களுக்கு
உடன் அளிப்பான் என்பதில் ஐயம் உண்டா ?