Saturday, June 2, 2012

arul puriyattum

அருள் நெறியில் சென்றால் ஆனந்தமாக இருக்கலாம்.ஆனால் அருள்நெறி பிரசாரம் செய்பவர்கள். ஆணவமாகவும்,மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை,பொருளாசை என்ற ரீதியில் ஆன்மிகத்தை அசிங்கமாக்கும் அவலங்கள் எதிர்கால இளைஞர்களை எப்படி மாற்றும் என்பது கவலைக்குறியதாக்குகிறது. மெய்வழிச்சாலை முதல் பிரேமானந்தா வரை, பூஜ்ய சத்யசாய் பாபா சமாதி நிலை அடைந்த பிறகு அங்கங்கே கிடைத்த கோடிக்கணக்கான பணங்கள், மடாலயங்களில் சேரும் கோடிக்கணக்கான பணம், அதற்கு வரி கிடையாது. ரசீதுகள் கிடையாது, பலர் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கத்தை கட்டி பண உண்டியலில் போடுகிறார்கள்.

கல்கி சாமியார் என்று யார் சாமியார் ஆனாலும் பணமும்,வெள்ளியும் தங்கமும் சேர்க்கிறது,வேலூர் பொற்கோயில்,மேல்வருத்தூர் கோயில் வளம் கொழிக்கும் ஆன்மீக தலங்கள்.வட இந்திய யாத்திரையில் சனிசிங்கனாபூர்,திரிகம்பகேஸ்வரர் கோயில்,

என அனைத்திலும் உண்டியலும் கிடையாது.சீரடி பாபாவின் அன்பர்கள் அடையும் ஆனந்தத்திற்கு வரம்பே இல்லை.ராகவேந்திரர்

அன்பர்கள் அருள்கடாக்ஷம் அடைந்து பேரானந்தம் அடைகிறார்கள்.பண்டரிபுரம் பற்றி கூறத்தேவை இல்லை.திருப்பதி,பழனி வேங்கடவன்,முருகன் அருள் இன்னும் பக்தர்களை பக்தி பரவசப்படுத்துகிறது. திருவண்ணாமலை கிரிவலம் சென்றவர்கள் நானும் தான்.

அங்கு சுற்றி சில தவறுகள் நடந்தாலும் அனைத்து புனித க்ஷேத்திரங்களும் மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டுகிறது.

சங்கரன்கோயில் ,திருநெல்வேலி ,நவ திருப்பதி,கும்பகோணம்,நவக்ரக ஹஸ்தலங்கள்,வைதீஸ்வரன் கோயில்,திருக்கடையூர்,

சமயபுரம்,திருவானைக்காவல்,ஸ்ரீ ரங்கம்,திருநள்ளாறு என நான் சென்று வந்த புண்ணிய ஸ்தலங்கள் அனைத்துமே

ஆனந்தம் அளிப்பவை.பேரானந்தம் தரும் க்ஷேத்ரங்கள்.அறிவியல் வளர்ச்சியுடன் ஆன்மீக வளர்ச்சி இந்தியாவில் வளர் வதை

சுயநல ஆதீனங்கள்,ஆஷ்ராமங்கள்,மடாலயங்கள்,போலி சாமியார்கள்,போலி சாதுக்கள் போன்றவர்கள் இடையூறு செய்வதை

ஒரு மாபெரும் சக்தி வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.மக்கள் தான் தன் ஞான திருஷ்டியால் இதை அறிந்து புரிந்து

மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் .இதற்கு ஆண்டவன் அருள் புரிய பிரார்த்தனைகள்.



No comments: