Tuesday, December 31, 2024

வா ல்மீகி இராமயணம் --பாலகாண்டம்

 1. பாலகாண்டம்

2.அயோத்தியா காண்டம்
3.அரண்யகாண்டம்
4.கிஷ்கிந்தா காண்டம்
5.சுந்தரகாண்டம்
6.யுத்தகாண்டம்
7. உத்தரகாண்டம்




  வால்மீகி இராமாயணம்.
                            1.பாலகாண்டம்.

மஹரிஷி  வால்மீகி ஆஸ்ரமத்திற்கு ஒரு நாள் தேவரிஷி நாரதர் வந்தார். அவரை வால்மீகி நன்கு உபசரித்து நலம் விசாரித்தார்.பிறகு நாரதரிடம்  இந்த காலத்தில் இவ்வுலகில் அதிக குணமுள்ள,வீரமுள்ள,அறமுள்ள,உண்மை பேசுகின்ற,உறுதிமொழியில் உறுதியாக இருக்கின்ற மனிதன் யார் என்று நாரதரிடம் கேட்டார். அப்பொழுது நாரதர் இக்‌ஷவாகு குல மன்னன்  இராமனின் குணத்தை வர்ணனை செய்தார். இராமனின் புண்ணிய கதையைக் கேட்டு தேவரிஷி நாரதரை தக்க மரியாதையுடன் அனுப்பிவைத்தார்.

    தேவரிஷி சென்ற பிறகு மஹரிஷி வால்மீகி தன் சீடன் பரத்வாஜுடன் தமசா நதித் துறையில் குளிக்கச் சென்றார்.அப்போது  காமலீலையில் ஈடுபட்டிருந்த கொக்கின் இணைகளில் ஒன்றை ஒருவேடன் அம்பெய்தி கொன்றுவிட்டான். அந்த காட்சியைக் கண்ட மஹரிஷி வேதனைப்பட்டார். உடனே ஒரு சுலோகத்தின் மூலம் சாபமிட்டார்–”வேடனுக்கு இந்த தீய செயலுக்காக அமைதி என்றுமே கிடைக்காமல் போகட்டும்.” தன் வாயில் இருந்து சுலோகமாக வெளிப்பட்டதைக் கண்டு மஹரிஷி தானே ஆச்சரியப் பட்டார். அப்பொழுது பிரம்மன் அவர் முன் தோன்றி என்  தூண்டுதலால் தான் இந்த வரிகள் உங்கள் வாயில்இருந்து வந்தன என்றார். மேலும் இராமரின் குணல் 24ஆயிரம் சுலோகங்கள்,500 சர்கங்கள்,ஏழு காண்டங்கள் உள்ளன.

  இக்‌ஷவாகு குலத்தின் தசரதர் ஆட்சியில் அயோத்தியாவில் மக்கள் செல்வச் சிறப்புடன் வாழ்ந்தனர். அனைத்து அறங்களையும் அறிந்த சான்றோன் மஹாராஜா தசரதர். ஆனால் மக்கட்பேறு இல்லை என்று மிகவும் மனவேதனைப் பட்டார். வசிஷ்டர் முதலிய அந்தணர்களின் ஆலோசனைகளை ஏற்று மக்கட்பேறுக்காக  புத்திர காமேஷ்டி வேள்வி ரிஷ்யசிருங்கர் மூலம் நடத்தினார். அதே காலத்தில் இராவணன் மூலமாக துன்பங்களை அனுபவித்த தேவர்களுக்கு விஷ்ணு பகவான் தான் மனித அவதாரம் எடுத்து இராவணனின் மகன்கள், பேரன்கள், அமைச்சர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரையும் போரில் கொன்றுவிடுவதாகவும்,11000 வருடங்கள் இந்த நிலவுலகை பராமரிப்பேன் என்று ஆறுதல் அளித்தார். 

  வேள்வியின் விளைவாக அக்னி குண்டத்திலிருந்து ஒரு தெய்வீக மனிதர் பாயாசத்துடன் தோன்றினார். அதை குடித்து மூன்று ராணிகளும் குழந்தைப் பேறு பெற்றனர். கௌசல்யா ராமனையும், கைகேயி பரதனையும், சுமத்திரை லக்‌ஷ்மணன்,சத்ருகன்னையும் ஈன்றனர். ராஜா நான்கு புத்திரர்களுக்கும் பெயர் சூட்டும் சடங்கை சிறப்பாக நடத்தினார். பகவான் விஷ்ணு ராஜா தசரதனின் மகனாக அவதரித்தார்.அவருடைய உதவிக்காக பிரம்மாவால் வெவ்வேறு தேவதைகள் வானரங்களாக இந்த பூமியில் அவதரித்தனர்.

  இந்த நான்கு அரசகுமாரர்களும் வேதங்கள், தாய்-தந்தை பணிவிடை செய்தல், வில்வித்தை ஆகியவற்றை  மிகவும் ஈடுபாடுடன் பயின்றனர். ஒருநாள் மஹரிஷி விஸ்வாமித்திரர்
அரக்கர்களிடமிருந்து தான் நடத்தும் வேள்வியைக் காப்பாற்ற
ராஜா தசரதரின் அவைக்கு வந்தார். ராஜா தசரதர் ரிஷியின் மனவிருப்பத்தைக் கேட்டார், விஸ்வாமித்திரர் தன் வேள்வியின் பாதுகாப்பிற்காக அவருடைய மூத்தமகன் ஸ்ரீராமரை தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.இதைக் கேட்டு மஹாராஜா தசரதர் மௌனமானார்.பிறகு மஹரிஷியின் விளக்கத்திற்குப் பின் ராமனையும் இலக்குமணனையும் வேள்வியின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். அந்த சமயம் ராமனின் வயது 16 ,
  மஹரிஷி விஸ்வாமித்திரர் பல தெய்வ சக்தியுள்ள ஆயுதங்களை வழங்கினார்,வனத்திற்கு செல்லும் வழியில் தாடகா என்ற அரக்கி எதிரில் வந்தாள். அவளைப் பெண் என்று வதம் செய்ய இராமர் தயங்கினார். ஆனால் மஹரிஷியின் கட்டளையை ஏற்று  கொடூரமன கெட்டவளான தாடகையை வதம் செய்தார். பிறகு ஸ்ரீராமர் சுபாஹு முதலிய  அரக்கர்களைத் தன் அம்பால் நூறு மைலுக்கு அப்பால் விழவைத்து விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காப்பாற்றினார்.
  வேள்வி முடிந்தபின் மஹரிஷி விஸ்வாமித்திரர் ராமனையும்  லட்சமணனையும் மிதிலையின் அரசரின் தர்மம் நிறைந்த வேள்வியில் கலந்து கொள்ளவும் விசித்திரமான வில்லைக் காட்டவும் அழைத்துச் சென்றார். வழியில் சோணபத்திர நதிக்கரையில் இரவில் ஓய்வெடுக்கும் போது அனேக கதைகளை விளக்கி ஞானத்தை வழங்கினார். மிதிலையை அடைந்ததும்  மஹரிஷி விஸ்வாமித்திரர்  கௌதம மஹரிஷியின் மனைவி அஹில்யா சாபம் பெற்ற கதையையும் சொன்னார். ஸ்ரீராமரின் தர்ஷனத்தால் அஹல்யா சாபவிமோசனம் பெற்றார்.
  மிதிலாபுரியில் மஹரிஷி விஸ்வாமித்திரர் மிதிலை மன்னர் ஜனகருக்கு  ராமனையும் லட்சுமணனையும் அறிமுகப் படுத்தினார். அதற்குப் பிறகு  ராஜா ஜனகர் சீதை கிடைத்த கதையைக் கூறினார். தான் வயலை உழுதபோது கலப்பையின் முன் பகுதி உழுத பூமியில் இருந்து ஒரு பெண் குழந்தை கிடைத்த்தது,கலப்பை மூலம் இழுக்கப்பட்ட கோட்டில் இருந்து கிடைத்ததால்  குழந்தையின் பெயர் சீதை என்று சூட்டினோம் என்றார்.  சிவதனுஷைப் பற்றிஜனகர் விஸ்வாமித்திரரிடம் கூறும் போது இந்த சிவதனுஷ்  பகவான் சிவன் மூலம் தக்‌ஷணின் வேள்வியை அழித்த பிறகு தேவர்களுக்கு கொடுத்த வில் .அதை தேவர்கள் ராஜா ஜனகரின் முன்னோர் மஹாராஜ் தேவராத்திடன் கொடுத்துவைத்தனர். இந்த வில்லில் நாண் ஏற்றும் வீரனுடன் சீதையை மணம் முடிப்பதாகக் கூறினார். ஸ்ரீராமர் இந்த வில்லில் நாண் ஏற்றினால் ராமருடன் சீதையை மணம் முடித்துவைப்பதாகவும் கூறினார். மஹரிஷியின் அனுமதி பெற்று சிவதனுஷை எடுத்து நாண் ஏற்றுவதற்காக நிமிர்த்து பிடிக்கும் போது வில்லின் நடுப்பகுதி உடைந்துவிட்டது.
    ஜனகர் தன்னுடைய அமைச்சர்களை ஸ்ரீராமர் சீதை திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தீர்மானத்தைக் கூறி அவர்களை அழைத்துவர அனுப்பினார். தசரதர் ராஜா ஜனகரின் செய்தியைக் கேட்டதுமே மிக மகிழ்ச்சி அடைந்தார்.பிறகு ரிஷி-முனிகள் மற்றும் தன் குழு கூட்டத்துடன் நான்கு நாள் பயணித்திற்கான ஏற்பாடுகளைச் செய்து  மிதிலையை அடைந்தார். மிதிலையை அடைந்ததுமே ஜனகர்க்கையை ஏற்று ஸ்ரீராமருக்கு சீதையையும்,லட்சமணனுக்கு தனது இரண்டாவது மகள் ஊர்மிளாவையும் திருமணம் செய்துதருவதாக சங்கல்பம் செய்தார்.மஹரிஷி விஸ்வாமித்திரர் மூலமாக பரதனுக்கும் சத்ருகனுக்கும் ஜனகரின் தம்பி குஷத்வஜனுடைய மகள்கள் மாண்டவி மற்றும் ஸ்ருதகீர்த்தி ஏற்பாட்டை ஜனகர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். நான்கு சகோதர்ர்களின் திருமணத்திற்குப் பிறகு மஹரிஷி விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்திற்குப் பறப்பட்டார். ராஜா தசரதர் தன் நான்கு மகன் களையும் மருமகள்களையும் அழைத்துக் கொண்டு அயோத்தியாவிற்குப் புறப்பட்டார்.
 
    சிவதனுஷை உடைத்ததால் பரசுராமர் மிகவும் கோபம் அடைந்தார். வழியில் ராமரை போருக்கு அழைத்தார். விஷ்ணுதனுஷில் நாண் ஏற்றி ராமரின் பலத்தைக் காட்டும்படி கூறினார். ஸ்ரீராமர் தன் சத்திரிய தர்மப்படி பரசுராமரின் கையில் இருந்த வில்லையும் அம்பையும் வாங்கி அதில் நாண் ஏற்றினார்.அப்போது பரசுராமர் ஸ்ரீராம் விஷ்ணுதான் என்பதைத் தெரிந்துகொண்டார். ஸ்ரீராமர் பரசுராமரிடம் அவர் விரைவாக போக்குவரத்து வந்து போவதைப் பற்றி கேட்டபோது பரசுராமர் கஷ்யப் முனிவர் எனக்கு பூமியை தானமாகக் கொடுக்கும் போது நான் பூமியில் இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். ஆகையால் நான் விரைவாக மஹேந்திர மலை திரும்ப ஆணையிடுங்கள். பரசுராமரின் வேண்டுதலின் படி தன் குறிதவறா அம்பின் மூலம் ஸ்ரீராமர் பரசுராமர் தன் தவ்வலிமையால் வெற்றிபெற்ற ஒப்பில்லா உலகை அழித்துவிட்டார்.

 அரசர் தசரதருடன்  ராமர்,அவருடைய சகோதரர்கள்,மற்றும் வந்த நான்கு மருமகள்கள் அனைவரையும் அயோத்யா நகர மக்கள் சிறப்பாக வரவேற்றனர். நான்கு சகோதர்ர்களும் தங்கள் தங்கள் மனைவியுடன் இருந்து தன் தந்தைக்கு சேவை செய்தனர். சில காலத்திற்குப் பிறகு பரதனின் மாமா கேகேய நாட்டு இளவரசர் வீரன் யுதாஜித் அயோத்யாவந்தார். பரதனும் சத்ருகனனும் தன் மாமா யுதாஜித்துடன் தங்கள் தந்தை,அன்னைகள் மற்றும் சகோதர்ர்கள் அனுமதி பெற்று தன் தாத்தாவீட்டிற்குச் சென்றனர். ஸ்ரீராமருக்கும் சீதாவிற்கும் மிகவும் தெய்வீகக் காதல் இருந்தது. சீதா எப்பொழுதும் தன் கணவன் ஸ்ரீராமனை விரும்பினாள் ஸ்ரீராமரும் சீதாவை மட்டும்  விரும்பினார்.


Thursday, December 19, 2024

கடவுள்

 வணக்கம்.


भगवान कौन? கடவுள் யார்?

மனிதன் கடவுள்.

 மனிதனைப்

 படைத்தவன் கடவுள்.

 அவனுக்கு ஞானம் தருபவன் கடவுள்.

 உடல் வலிமை 

தருபவன் கடவுள்.

 வாழ்நாள் நிர்ணயிப்பவன் 

கடவுள்.

 ஆனால் 

 அவன் படைத்த மனிதன் 

 கண்டுபிடிப்புகளால்

 உடனடி உதவுவதால்

 அவன்தான் மனிதன்.

 கபீர் தாஸர்  கடவுளை உனக்குள் தேடு என்கிறார்.

பூவில் மணம் போல் 

கஸ்தூரி மான் வயிற்றில் 

கஸ்தூரி போல்

கடவுள் உனக்குள் இருக்கிறார் என்கிறார்.

 உன்னைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் 

 உன் செயல்களைப் பற்றியும் சிந்தித்தால் 

உன் சுகத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் யார் என்பது யார் என்பது புரியும்.

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா ?

 கடவுள் நடுநிலை உள்ளவர்.

  ஆதிசங்கரர் அருளிய வாக்கின் படி 

 அத்வைதம்.

  தீய எண்ணங்கள்  வரும் 

 போது அதை விட்டு விட வேண்டும்.

 அதற்கும் இறைவன் அருள் வேண்டும்.

 தர்மர் சூதாட்டம்.

 இராவணன் சீதை மோகம்

 இதெல்லாம் அவர்கள் அறிந்தே செய்த தவறு.

  இந்த தவறான நடத்தைகளுக்கும் இறைவனே பொறுப்பு.


சே. அனந்த கிருஷ்ணன்.சென்னை.