ஓம் நமஹ சிவாய.பாரதம் --பாரினில் பக்தியில் மேன்மையான பாரதம் பக்தி என்பது புரிவது
எளிது அதில் நம்பிக்கை ஏற்படுவது எளிதல்ல.காரணம் மனிதன் உடனடி பலன் பெற நினைப்பவன்
இந்த உடனடி என்பது பக்தியில் முடியுமா?அதை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க புரிய தெளிய இறைவனைத் தேடுகிறோம்.
சனாதன தர்மம் சத்தியத்தின் தர்மம்.அறம்என்பது வேறு.மதம் என்பது வேறு.அறம் அகில உலகிற்கும் பொது.தர்ம சிந்தனை அகில உலகிற்கும் பொது.வையகம் வாழ மனிதநேயம் ஏற்பட தர்மம்.
மதம் சுயநலமானது.அதில் இறைவனை இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும்,இந்தவிதமான மந்திரங்கள் ,வணங்கும் முறை,வணங்கும் நேரம்,உருவ வழிபாடு,அபிஷேகம்,பூமாலை,
சாம்பிராணி,கற்பூரம்,விளக்கு,மெழுகு வர்த்தி அர்ச்சனை ஆராதனை என்ற நெறிமுறையுடன் கட்டுப்பாடான பக்தி.
அதனால் மதம் மனிதனைப் பிரிக்கிறது.குரான்,பைபிள்,புராணங்கள் மனிதனை மனிதனாக்க
இறை தூதர்களால் ,ரிஷிகள்,முனிவர்களால் ஏற்படுத்தப் பட்டவை.
இறைவனால் ஏற்படுத்தப்பட்டது தர்மம்.அறம்.ஓளவையார் திருவள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் அறம் காணலாம்.
அறம் செய விரும்பு என்றால் அது மதமல்ல.மனிதர்களுக்கான
பொது செயல்.இது தான் பக்தி.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் அறம்.ஔவையார் ஈவது விளக்கேல். இது பொது.
இட்டார் பெரியோர்,இடாதார் இழி குலத்தோர். பொது நெறி.
பக்தி நடுநிலை. மதம் குறுகிய வழி முறை.தர்மம் பரந்தநிலை.
தர்மம் காற்று.தர்மம் தண்ணீர்.தர்மம் நெருப்பு.தர்மம் பூமி.தர்மம் ஆகாயம். பஞ்ச தத்துவங்கள்.இவை அனைத்து மதத்தினருக்கும்
தேவை.அனைத்து தாவரங்கள்,விலங்குகள் இவை இன்றி உயிர் வாழமுடியாது. இதை உணர்ந்து விருப்பு வெறுப்பு இன்றி அன்பு செலுத்துவது பக்தி.
இராமலிங்க அடிகளார் காட்டிய நெறி சமரச சன்மார்கம்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்த தாலோ
இது தான் பக்தி.
தொடரும்
Friday, April 19, 2024
tபக்தியும் பாரதமும்
Subscribe to:
Posts (Atom)