Friday, March 8, 2024
பக்தி
பக்தி என்பது ஆடம்பரமல்ல.
ஆழ்மன ஒருமையுடன்
பக்தியில் ஈடுபடவேண்டும்.
சர்வவியாபியான ஆண்டவன்
ஆனந்தக் கூத்தனே.
உலக மாயை இன்னல்கள் அளிப்பதும் அவனே.
இன்னல் வந்தால் தானே இறைவனை மக்கள் நினைக்கிறார்கள்.
கபீர் தாசரின் ஈரடி மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும்.
துன்பத்தில் அனைவரும் இறைவனை வழிபடுகின்றனர்.
இன்பத்தில் இறைவனை நினைப்பதே இல்லை.
இன்பத்திலும் நினைத்தால்
துன்பத்தில் ஏற்படாது.
இராமலிங்க அடிகளார்
ஒருமையுடன்
நினது திருமலரடி
நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்.
மருவு பெண் ஆசையை
மறக்கவே வேண்டும்.
உனை மறவா
திருக்கவேண்டும்.
மதி வேண்டும் நின்
கருணை நிதி வேண்டும்.
நோயற்ற வாழ்வில் வாழவேண்டும்.
இது தான் பிரார்த்தனை.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
Subscribe to:
Posts (Atom)