ராவணனின் அவையில் மால்யவான் என்ற
அறிவுமிகுந்த அமைச்சர் இருந்தான்.
அவன் விபீசணனின் சொற்களைக் கேட்டு
மகிழ்ந்து சொன்னான் : --
அரசே! உங்கள் தம்பி விபீஷணன் நீதிவான்.
அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ராவணன் சொன்னான்: --
இந்த இருவரும் விரோதியை
புகழ்ந்துகொண்டிருக்கின்றனர் ,
யார் அங்கே! இவர்களை வெளியேற்றுங்கள்.
உடனே மால்யவான் வீட்டிற்குத் திரும்பி சென்றான்.
விபீஷணன் மறுபடியும் கைகூப்பி
வணங்கி சொன்னான் -:--
நல்ல அறிவு ,கெட்ட அறிவு,
எல்லோரின் மனதிலும் இருக்கிறது.
நல்ல அறிவு இருக்கும் இடத்தில்
எல்லாவித சுகங்களும் சொத்துக்களும் உள்ளன.
கெட்ட அறிவு உள்ள இடத்தில் துயரம்தான் இருக்கும்.
உங்கள் மனதில் தீய அறிவு வந்து அமர்ந்து விட்டது.
ஆகையால் நீங்கள் நன்மையை தீமையாகவும்
விரோதியை நண்பனாகவும் கருதுகிறீர்கள்.
அரக்கர்கள் குலத்திற்கு எமனாக இருக்கும்
சீதையின் மேல் உங்களுக்கு
அன்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா! உங்கள் பாதங்களைப் பிடித்து வேண்டுகிறேன்: --
என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் தீமையில் இருந்து தப்பிக்க ,
காத்துக் கொள்ள சீதையை ராமரிடம் அனுப்பிவிடுங்கள்.
விபீஷணன் வேதங்கள் ,பண்டிதர்கள், புராணங்களில் இருந்து
பல நீதிகளை எடுத்து வர்ணித்தான்.
ஆனால் ராவணனுக்கு அவன் சொற்களைக் கேட்டு
மிகவும் கோபம் வந்துவிட்டது.
அவன் துஷ்டா! உனக்கு சாவு நெருங்கிவிட்டது என்றான்.
என் சாப்பாட்டை சாப்பிட்டு வாழ்பவன் நீ .
முட்டாளே! நீ விரோதியை விரும்புகிறாய். அவனைப் புகழ்கிறாய். அடே ,துஷ்டா!சொல், இந்த உலகில் நான் வெற்றி பெறாத சக்தி உண்டா ?
என் நகரத்தில் இருந்து கொண்டு தபசிகளைப் புகழ்கிறாய். நேசிக்கிறாய். அவர்களிடம் சேர்ந்து அவர்களுக்கு நீதியைச் சொல். இப்படி சொல்லிவிட்டு ராவணன் அவனை உதைத்துவிட்டான். உதைத்தாலும் விபீஷணன் அவரின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினான்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ,சிவா பகவான் உமாவிடம் சொன்னான்--
உமா! சாதுக்களுக்கு உயர்ந்த குணமே இதுதான். இதுதான் அவர்கள் மகிமை. தீங்கு விளைவித்தாலும் நல்லதே செய்வர்.
அங்கு விபீஷணன் ராவணனிடம் சொன்னான் --நீங்கள் என் தந்தையைப் போன்றவர். என்னை அடித்ததும் நல்லதே. ஆனால் உங்களுக்கு ராம பஜனையில் தான் நலமுண்டாகும் .
பிறகு சத்தமாக சொன்னான்--ஸ்ரீராமர் சத்தியமானவர். உறுதிவாய்ந்தவர். ராவணா! உன்னுடைய சபை எமனின் வசத்தில் உள்ளது. ஆகையால் நான் ராமரை சரணடைகிறேன். என்னைக் குறைகூறாதே. பின்னர் தன மந்திர்களுடன் ஆகாய மார்க்கத்தில் ராமரிடம் சென்றான்.
விபீஷணன் இவ்வாறு
சொல்லி சென்றதுமே
அரக்கர்களின் மரணம்
நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
சிவபகவான் பவானியிடம் சொன்னார் --
ஒரு சாதுவை நல்லவனை
அவமானம் செய்தால்
உடனே நடக்கக்கூடிய அனைத்து
நலமும் நாசமாகிவிடும்.
விபீஷணன் ராவணனை
விட்டுவிட்டு சென்றதுமே
அவன் ஒரு துரதிர்ஷ்டசாலி ஆகிவிட்டான்.
அவனுடைய வைபவங்கள்
எல்லாம் போய் விட்டன.
விபீஷணன் மிக்க மகிழ்ச்சியுடன்
மனதின் பலவித
கனவுகளுடன்
ஸ்ரீ ராமனிடம் சென்றான்.
விபீஷணன் , ராமபகவானின்
மென்மையான சிவப்புவண்ண
அழகான தாமரைக்கால்களை பார்ப்பேன்.
அதுதான் தொண்டர்களுக்கு சுகம் அளிக்கக் கூடியது.
அந்த பாதங்கள் பட்டு
கல்லான அஹல்யாவிற்கு
மோக்ஷம் கிடைத்தது,
தண்டகாரன்யவனம் புனிதமாகியது .
சீதையின் இதயத்தில் இடம்
பெற்ற சரணங்கள் அவை.
கபடமான பொன்மானை விரட்டிச் சென்ற பாதங்கள் அவை.
அந்த தாமரை சரணங்கள் சிவபகவான் இதயத்தில் இடம்பெற்றுள்ளன.
என் அதிர்ஷ்டம் அவரை இன்று தரிசனம் செய்வேன்.
பரதன் தன் மனதில் இடமளித்த
பாதங்களை இன்று
என் கண்களால் பார்ப்பேன்.
இவ்வாறு நினைத்துக்கொண்டே
மிக விரைவாக சமுத்திரத்தின்
அக்கரையை அடைந்தான்.
வானரங்கள் விபீஷணனைப் பார்த்ததும்
அவனை எதிரியின் தூதன் என நினைத்தன.
அவனை காவலில் வைத்துவிட்டு
சுக்ரீவனிடம் செய்தி சொன்னார்கள்.
சுக்ரீவன் ராமரிடம்
ராவணன் தம்பி விபீஷணன் உங்களை சந்திக்க
வந்துள்ளான் என்றான்.
ராமன் சுக்ரீவனின்
கருத்தைக் கேட்டான்.
சுக்ரீவன் , மகாராஜா!
அரக்கர்களின் மாயை
அறிய முடியாது.
அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்.
தங்கள் விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்வார்கள்.
இவன் வந்த காரணம் தெரியவில்லை.
இந்த முட்டாள் நம் ரகசியத்தை அறிய வந்திருக்கிறான்.
இவனைக் கட்டிவைப்பதுதான் சரியெனப் படுகிறது என்றான்.
ராமர், நண்பரே!
நீ நன்றாகவே எண்ணியுள்ளாய்.
உன்னுடைய நீதி சரியே.
ஆனால் அடைக்கலம் வந்தவனின்
பயத்தைப் போக்கவேண்டும்.
ஸ்ரீ ராமரின் சொல்லைக்கேட்டு
ஹனுமான் மிகவும் மகிழ்ந்தார்.
கடவுள் சரணாகத்வத்சலர் .
அதாவது சரணடைந்தவரை
விரும்பு பவர்.
ராமர் மேலும் சொன்னார் :--
தனக்கு வரும் தீமையை யூகித்து
அடைக்கலமாக வந்தவனை
விட்டுவிடுபவன் பாமரன்.
அவன் பாவி.
அவனைப் பார்த்தாலே பாவம். தீங்குவரும்.
ஆயிரக்கணக்கான அந்தணர்களைக்
கொன்று பாவியாகவந்தாலும் ,
அடைக்கலம் என்றுவந்தால்
அவனை விடமாட்டேன்.
எந்த ஜீவனும் என் முன்
வந்தால் அவனின் கோடிக்கணக்கான
ஜென்மங்களின்
பாவமும் போகிவிடும்.
பாவிக்கு என்மேல் பக்தி ஏற்படாது.
அது அவர்களின் இயற்கை குணம்.
ராவணனின் சகோதரன்
தீய மனமுள்ளவனாக இருந்தால்
என் முன் வரமுடியுமா ?
களங்கமற்ற புனித மனமுள்ளவனுக்குத்தான்
என்னைப் பிடிக்கும்.
எனக்கு கபடமும் வஞ்சனையும்
உள்ளவனைப் பிடிக்காது.
அவன் ராவணனின் உளவாளியாக வந்தாலும்
எனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.
தோழனே! சுக்ரீவா! உலகில் எத்தனை அரக்கர்கள்
இருந்தாலும் ஒரு நொடியில் என் தம்பி
இலக்குவன் அழித்துவிடுவான் .
அவன் பயந்து என்னிடம் அடைக்கலமாக
வந்தால் அவனைக் காப்பாற்றுவேன்.
என் உயிர் போல் கருதுவேன்.
அவன் தூதனாக வந்தாலும்
நண்பனாக வந்தாலும்
அழைத்துவா.
ராமரின் ஆலோசனை கேட்டு
ஹனுமான், சுக்ரீவன் மற்றும் அங்கதன் மூவரும்
"கிருபை காட்டும் ராமருக்கு ஜய்"
என்ற முழக்கத்துடன் புறப்பட்டனர்.
வானரர்கள் மிக்க மரியாதையுடன்
விபீஷணனை ஸ்ரீ ராமரிடம் அழைத்துச் சென்றனர்.
விபீஷனான் ராம லக்ஷ்மணரை
தொலைவில் இருந்தே பார்த்து
மிகவும் மகிழ்ந்தான்.
இருவருமே கண்டதும் சுகமளிக்கும்
தோற்றப் பொலிவு உடையவர்கள்.
அழகின் இருப்பிடமான ராமரைக்
கண்மூடாமல் பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.
பகவானின் நீண்ட விசாலமான புஜங்கள்,
செந்தாமரைக் கண்கள்,
அடைக்கலமாக சரணடைந்தவர்களின்
பயத்தைப் போக்கும் கருநீலநிறமுடைய உடல்.
சிங்கத்தின் தோள்கள் , அகன்ற மார்பு ,எண்ண முடியா
காமதேவர்களின் மனதை கவரும்
( மோஹிக்கும் ) முகம்.
இந்த அழகிய முகம் கண்டு
விபீஷணனின் கண்களில்
அன்பும் ஆனந்தமும் நிறைந்த கண்ணீர்
பொங்கி வழிந்தது .
மிகவும் ஆனந்தமடைந்தான்,
பிறகு மன தைரியத்துடன் சொன்னான்--
அரசே ! நான் பத்துத்தலை இராவணனின் சகோதரன்.
தேவர்களைக் காக்கும் நாதா!
நான் அரக்கர்கள் குலத்தில் பிறந்துள்ளேன்.
நான் தாமச குணமுள்ளவன்.
ஆந்தைக்கு இரவில் இருட்டு எப்படி
இயற்கையாக விருப்பமோ அவ்வாறே
எனக்கு பாவச்செயல் மிகவும் விருப்பம்.
நான் உங்களின் புகழ் கேட்டு வந்துள்ளேன்.
நீங்கள் பிறப்பு -இறப்பு பயம் போக்குபவர் .
துயரப்படுபவர்களின் துயரம் போக்குபவர்.
அடைக்கலமாக வந்தவரை காப்பாற்றுபவர்.
என்னை ரக்ஷியுங்கள்.
விபீஷணனின் பணிவும் அடக்கமும் ,
வேண்டுகோளும் ஸ்ரீ ராமருக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர் தன விஷாலமான
புஜங்களால் ஆரத் கொண்டார்.
தன்னை அருகில் அமரவைத்து பக்தர்களின்
பயம் போக்கும் கருணைகாட்டி சொன்னார்--
ஸ்ரீ லங்கேச்வரா ! குடும்பத்துடன் உன் நலத்தைக் கூறு.
நீ இருக்குமிடம் கெட்ட இடம்.
இரவும் பகலும் துஷ்டர்களின் கூட்டத்தில் உள்ளாய்.
நீ எப்படி அறத்தைக் காக்க ,
கடைபிடிக்க முடியும்.
எனக்கு உன்னுடைய பழக்கவழக்க
ஆசாரங்கள் தெரியும்.
நீ மிகப்பெரிய நீதிமான்.
உனக்கு அநீதி பிடிக்காது.
மகனே!நரகத்தில் இருப்பது துஷ்டர்களின்
சேர்க்கையில் இருப்பதைவிட சிறந்தது.
ஸ்ரீராமரிடம் விபீஷணன் கூறினான்: --
உங்களை தரிசித்து நலமாக உள்ளேன்.
நீங்கள் என்னை உங்களது தொண்டனாக
ஏற்று தயவு காட்டியுள்ளீர்கள்.
பெண்ணாசை ,மற்ற ஆசைகளை விட்டு
ஸ்ரீ ராமபிரானை ஜெபிக்கவில்லை என்றால்,
அவர்களுக்கு நலம் இல்லை.
கனவில் கூட மனதிற்கு அமைதி கிடைக்காது.
ஸ்ரீ ராம பகவான் கருணைக்காக மனதில் ,
இதயத்தில் வசிக்கும் வரை பேராசை. பொறாமை,
ஆணவம்,காமம் போன்ற பல துஷ்டர்கள்
இதயத்தில் இடம் பெற்று இருப்பார்கள்.
ஆசை என்பது இருண்ட இரவு ,
அது அன்பு-வெறுப்பு என்ற ஆந்தைகளுக்கு
மனதில் இடம் அளிக்கும்.
ராமரின் சூர்யோதயம் மனதில் உதிக்கும் வரை ஆசை இருக்கும்.
ஸ்ரீ ராமச்சந்த்ரரே ! உங்களைப் பார்த்தது
முதல் என் அச்சம் போய் விட்டது.
அருள் கடலே! உங்கள் அனுக்கிரஹம் பெற்றவர்களுக்கு
ஆன்மீக,ஆன்மீகமற்ற ,உலகியல் பயங்கள்
மூன்றும் இருக்காது.
நான் மிகவும் தாழ்ந்த குணமுள்ள அரக்கன்.
நான் நல்லமுறையில் நடந்துகொண்டதே இல்லை.
நீங்கள் முனிவர்களின் மீது கூட
கவனத்தைக் காட்டவில்லை.
என்னைப் பார்த்து மகிழ்ந்து
ஆரத் தழுவினீர்.
இது என்னுடைய பாக்கியம் தான்.
சிவனால் பூஜிக்கப்பட்ட சரணங்களை
இன்று தர்ஷித்தேன்.
ஸ்ரீ ராமர் விபீஷணனிடம் :-
தோழா! கேள்.
என்னுடைய இயற்கை குணம்
என்னை சரணடைந்தவர்களைக் காப்பது.
உலகத்தின் ஜடப்பொருள்-உணர்வுள்ள உயிர்ப்பொருள்
உலகத்துக்கே துரோஹியாக இருந்தாலும் ,
என்னை சரணடைந்தால் ,
ஆணவம் , மோகம் , ஏமாற்றுதல், வஞ்சனை போன்ற
தீய குணங்களை
விட்டுவிட்டால்,
நான் அவர்களை மிக விரைவில் சாது ஆக்கிவிடுவேன்.
இந்த என் உயரிய குணத்தை
காபுஷுண்டி, சிவன் . பார்வதி ஆகியோரும் அறிவர்.
அம்மா, அப்பா, சகோதரன் ,மகன் , மனைவி,
உடல், வீடு, தனம்,நண்பர்கள், குடும்பம் இந்த அன்பு
நூல்களை ஒன்றாக ஒரே கயிறில் கட்டி,
அதன் மூலமாக என் சரணங்களை கட்டுபவன் சம தர்ஷீ.
அவர்கள் மனதில் எவ்வித ஆசையும் இருக்காது,
மகிழ்ச்சி ,சோகம் ,பயம் எதுவும் இருக்காது.
இப்படிப்பட்டவன் பேராசைக்காரனுக்கு
பணத்தின் மீது இருக்கும்
பேராசைபோல்,
எனக்கு அவர்கள் மேல் அன்பு இருக்கும்.
உன்னைப்போன்ற சாதுக்கள் எனக்கு மிகவும் அன்பானவர்கள்.
நன்றிவயப்பட்டு நானும் யாரையும் ஏற்கமாட்டேன்.
உருவவழிபாடு செய்பவர்கள்,
மற்றவர்கள் நன்மையில் ஈடுபடுகொண்டவர்கள்,
நீதி நியமங்களில் திடமானவர்கள்,
அந்தணர்களை விரும்பி அவர்கள் பாதங்களில் வணங்குபவர்கள்,
எனக்கு என் உயிரைவிட மேலானவர்கள்.
இலங்கை வேந்தே ! கேள்.
உன்னிடம் மேலே சொல்லப்பட்ட அனைத்து
குணங்களும் உள்ளன.
அதனால் எனக்கு நீ மிகவும் பிரியமானவன்.
ஸ்ரீ ராமரின் சொற்களைக் கேட்டு
வானரக் கூட்டம் மிகவும் மகிழ்ந்தன.
ஸ்ரீ ராமர் பெயரைகூறி ஜெய ராம் !
என்று முழக்கமிட்டன.
விபீஷணன் ஸ்ரீ ராமரின் பாதங்களைப் பிடித்து
தன் எல்லையில்லா அன்பை காட்டினான்.
தேவரீர்!
உங்களைக் கண்ட மாத்திரத்திலேயே என் மனதில்
எஞ்சி இருந்த ஆசைகளும் போய்விட்டன,
உங்கள் அன்பு நதி அவைகளை அடித்துச் சென்று விட்டது.
சிவனின் மனதில் எப்பொழுதும் இருக்கின்ற
படி யான தங்கள் புனித பக்தியை எனக்கு அருளுங்கள்.
அப்படியே ஆகட்டும் என்று கடல் நீரைக் கேட்டான்.
தோழா! என்னை தரிசித்தவர்கள் பலனற்று போகமாட்டார்கள்.
இது உலகின் நீதி.
இப்படி சொல்லி ஸ்ரீராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.
ஆகாயத்திலிருந்து அதிக அளவில் பூ மழை பொழிந்தது.
ராவணனின் கோபக் கனலில் இருந்து ஸ்ரீராமர் விபீஷணனைக் காப்பாற்றினார்.
அவனக்கு அகண்ட ராஜ்யத்தை அளித்தார்.
ராவணனுக்கு சிவன் அளித்த சொத்துக்கள்
அனைத்தையும் ஸ்ரீராமர்
விபீஷணனுக்கு அளித்தார்.
ராவணன் பத்து தலைகளை
பலி கொடுத்து சிவனிடம் பெற்றான். விபீஷணன் ராமரை சரணடைந்து பெற்றான்.
கிருபை நிறைந்த இப்படிப்பட்ட பக்தவத்சலரான
ராமரை வணங்காதவர்கள் கொம்பும் வாலும் இல்லா மிருகங்கள்.
விபீஷணனை தன் சேவகனாக இறைவன் ஏற்றார்.
ஸ்ரீராமனின் இந்த குணம் வானரங்களுக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது.
அனைத்தும் அறிந்த,
எல்லோரின் மனதிலும் இடம்பெற்று வசிக்கின்ற ,
எல்லாவடிவங்களிலும் வெளிப்பட்டு, வெளிப்படாத ஸ்ரீராமர்
பக்தர்களின் மேல் கிருபை காட்டவும் ,
அரக்கர்கள் குலத்தை அழிக்கவும்
மனித உருவில் அவதரித்தார்.
பிறகு ஸ்ரீ லங்காதி பதி விபீஷணனி டமும் சுக்ரீவனிடமும்
சமுத்திரத்தை எப்படி கடப்பது என்று கேட்டார்.
இதில் பலவித முதலைகள், பாம்புகள், மீன்கள் நிறைந்துள்ளன.
மிகவும் ஆழமான கடலை கடப்பது மிகவும் கடினம்.
விபீஷணன் சொன்னான் ---
ஸ்ரீ ரகுநாதா! உங்கள் அம்புகள் கோடிக்கணக்கான
கடல்களை வறட்சி அடையச் செய்துவிடும்.
ஆனால் அது நியாயமில்லை.
கடலிடமே பிரார்த்திப்போம்.
சமுத்திரம் உங்கள் குலத்தின் முன்னோர்களில் ஒன்று.
அவர் சிந்தித்து வழி சொல்லுவார்.
அப்பொழுது மிகவும் சுலபமாக
கரடிகளும் வானரங்களும் கடல் கடந்து சென்றுவிடும்.
ராமர் தோழா! நல்ல உபாயத்தைச் சொன்னாய்.
இப்படியே செய்யலாம்.
கடவுள் துணை புரிவார்.
இந்த ஆலோசனை இலக்குமனனுக்குப் பிடிக்கவில்லை.
ராமரின் சொல் கேட்டு அவன் வருந்தினான்.
லக்ஷ்மணன் சொன்னான் -- அண்ணா!
தேவர்களை எப்படி நம்புவது?
கோபத்துடன் சமுத்திரத்தை வறட்சி அடையச் செய்யுங்கள்.
இந்த தெய்வம் என்பது கோழை களுக்கு ஆறுதல் அளிக்கும் வழி .
சோம்பேறிகள் தான் தெய்வத்தை அழைப்பார்கள்.
இதைக்கேட்டு ராமர் சிரித்துவிட்டு,
இப்படியே செய்யலாம் தைரியமாக இரு என்று
சொல்லி ராமர் கடலுக்கு அருகில் சென்றார்.
முதலில் தலைவணங்கினார்.
. பிறகு தர்ப்பை விரித்து ஆசனம் செய்து அமர்ந்தார்.
விபீஷணன் வந்ததுமே ராவணன்
தன் தூதர்களைஅனுப்பினான்.
அந்த தூதர்கள் குரங்கு உருவத்தில்
இங்கு நடப்பது அனைத்தையும் கவனித்தன.
அவர்கள் ஸ்ரீராமரின் குணம் கண்டு ,
அடைக்கலமாக வந்தவனை காப்பாற்றும்
அருள் அறிந்து புகழ்ந்தனர்..
பிறகு வெளிப்படையாக
ராமரின் குணங்களைப் புகழ ஆரம்பித்தனர்.
அவன் தன் கபட வேஷத்தை மறந்துவிட்டான்.
வானரர்களுக்கு இவன் ரவாணனின் தூதன் என்று தெரிந்துவிட்டது.
அவனைக் கட்டி சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றனர்.
சுக்ரீவன் அந்த தூதர்களை அங்கஹீனமாக்கி அனுப்பும்படி கூறினான்.
இந்த கட்டளை கேட்டதும் வானரப்படை அவர்களை சூழ்ந்து சுழற்றியது.
வானரர்கள் ராவண தூதர்களை
ஈவு இரக்கமின்றி அடித்தனர்.
அவர்களுடைய இரக்கமான நிலை
குரல் கேட்டும் அவர்களை விடவில்லை.
இறுதியில் தூதர்கள்
கோசலநாட்டு மன்னன்
ஸ்ரீ ராமர் மீது ஆணை ,
எங்கள் மூக்கு காது துண்டித்தால் என்று அலறினர்.
இதைக்கேட்டு லக்ஷ்மணன் அவர்களை
அருகில் அழைத்தான்.
அவனுக்கு அவர்கள் மேல் இரக்கம்ஏற்பட்டது.
இதனால் சிரித்து அவர்களை விடுவித்தான்.
அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினான்.
தூதர்களிடம் ,
ராவணனிடம் சொல்.
குலநாசகன் அவன்.
அவனிடம் இந்த கடிதத்தைக் கொடு.
மேலும் நான் சொன்னதாகச் சொல்.
சீதையை ஒப்படைத்து
ராமனை சந்திக்கவும்.
இல்லையென்றால்
உனது காலன் வந்துவிட்டான் என்று.
இலக்குமணனின் காலில் வணங்கி ,
ஸ்ரீ ராமரின் குணங்களைப் புகழ்ந்து வர்ணித்துக்
கொண்டே சென்றனர்.
அவர்கள் ராவணனை
சிரம் தாழ்த்தி வணங்கினர்.
தசமுக ராவணன் சிரித்துக்கொண்டே
அந்த விபீஷணனின் செய்தி சொல்.
மரணம் அவனை நெருங்கிவிட்டது.
முட்டாள். தன் ஸ்ரீலங்கா ஆட்சியை
விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
அவன் துரதிஷ்ட சாலியான
புழு ஆகிவிட்டான்.
வானரர்களுடன் சேர்ந்து அவனும் கொல்லப்படுவான்.
அந்த கரடி வானரப்படைகள் எப்படி உள்ளது ?
என்று கேட்டான்.
அவைகள் எமனின் தூண்டுதலால்
உயிரைவிட இங்கு வந்துவிட்டன.
மென்மையான மனம் கொண்ட
கடல் நடுவில் வந்துவிட்டது.
இல்லைஎன்றால்
அவர்கள் உயிர் போயிருக்கும்.
என்னிடம் பயம் கொண்ட
அந்த தபசிகளின் நிலை என்ன ?
அவர்களை சந்தித்தீர்களா?
என் புகழ் கேட்டு திரும்பிவிட்டனரா ?
விரோதிகளின் வீரத்தையும் பலத்தையும் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை.
நீங்கள் ஏன் இப்படி பிரமித்து நிற்கிறீர்கள்.
அப்பொழுது தூதன் ,
" உங்கள் தம்பி அங்கே சென்றதுமே
ஸ்ரீராமர் அவருக்கு முடிசூட்டிவிட்டான்.
நீங்கள் கோபத்தை விட்டுவிட்டு
எங்களை நம்புங்கள்.
நாங்கள் சொல்வது உண்மை. "என்றான்.
நாங்கள் ராவணனின் தூதன் என்று அறிந்ததுமே
எங்களைக் கட்டி மிகவும் துன்புறுத்தினர்.
எங்கள் காது -மூக்குகளை
அறுக்க ஆரம்பித்தனர்.
ராமரின் மேல் சபதம் இட்டதும்
எங்களை விட்டுவிட்டனர்.
நீங்கள் ராமரின் படைகளைப்
பற்றி கேட்டீர்கள்.
அதை வர்ணிக்க வார்த்தைகளும் போதாது.
பலகோடி வாய்களும் போதாது.
பயங்கரத் தோற்றத்துடனான
முகங்களையும் மிகப்பெரிய உருவங்களையும் கொண்ட
பல வண்ணக் கரடிகளும்
வானரங்களும் உள்ளன.
உங்கள் மகன் அக்ஷயக்குமாரனைக் கொன்று
இலங்கையை எரித்தவனைக் காட்டிலும்
பலம் வாய்ந்தவர்கள்.
எண்ணமுடியாத பெயர் கொண்ட
கடுமையான பயங்கர போர் வீரர்கள்.
அவர்களில் பலருக்கு யானையின் பலம்.
மிகப்பெரிய உடல்.
பலத்தின் நிதியாக திவித், மயந்து, நீல்,நல, அங்கத்,கத்,
விகடஷ்ய,ததிமுக், கேசரி, நிசட், சட்,
ஜாம்பவான்
முதலியவர்கள் உள்ளனர்.
இந்த எல்லா வானரர் களுமே
சுக்ரீவனுக்கு சமமானவர்கள்.
இவர்களைப்போல் கோடிக்கணக்கில் உள்ளனர்.
அவர்களை எண்ண முடியாது.
ராமனின் கிருபையால் இணையற்ற சக்திசாலிகள்.
அவர்கள் மூவுலகையும் தூசியாக எண்ணுகிறார்கள்.
பதினெட்டு பதுமர்கள் தனியாக
வானர சேனாபதிகள்.
நீங்கள் வெல்லும்படி அங்கு யாரும் இல்லை.
அனைவரும் மிகக் கோபத்துடன் கைகளை
பிசைந்து கொண்டுள்ளனர்.
ஆனால் ஸ்ரீராமர் இன்னும்
அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை.
எல்லாவானரர்களும் மீன்களையும் பாம்புகளையும்
ஒன்றுசேர்த்து கடலை வற்றச் செய்துவிடுவோம்.
இல்லை எனில் பெரும்
மலைகளால் நிரப்பிவிடுவோம் .
ராவணனை நசுக்கி மண்ணோடு மண் ஆக்கிவிடுவோம்
என்றே வானரர்கள் வீராவேசமாக பேசிக்கொண்டுள்ளனர். இலங்கையையே விழுங்கி விடுவோம் என்று கர்ஜிக்கின்றனர்.
எல்லா வானரர்களும் கரடிகளும் இயற்கையிலேயே வீரர்கள். அவர்களுக்குத் தலைவராக ராமர் உள்ளார்.
ராவணா! அவர்களால் யுத்தத்தில்
கோடி எமன்களையும் கொல்ல முடியும்.
ஸ்ரீ ராமரின் சாமார்த்தியத்தையும்
பலத்தையும் ஆய்வையும் வர்ணிக்கமுயலாது.
அவர் நினைத்தால் ஒரே பாணத்தில்
சமுத்திரத்தை வற்றவைக்க முடியும்.
நீதிமானாக இருப்பதால் அப்படி செய்யவில்லை.
உங்கள் தம்பியிடம்
வழி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தங்கள் சஹோதரரின் வழிகாட்டுதலினால்
அவர் சமுத்திரத்தினிடம் வழி கேட்டு
பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்.
அவர் மனதில் சமுத்திர ராஜனின் மேல் இரக்கம் உள்ளது.
இல்லையெனில் அதை வரட்சியாக்க தாமதிக்கமாட்டார்.
தூதனின் செய்தி கேட்டு ராவணன் சிரித்துக்கொண்டே சொன்னான்--
இப்படிப்பட்ட அறிவு உள்ளதால் தான்
வானரர்களை உதவியாளனாக்கிஉள்ளான்.
இயற்கையிலேயே கோழையான விபீஷணன் சமுத்திரத்திடம் வேண்டச்சொல்லி தன் பயந்த குணத்தை நிரூபித்துள்ளான்.
அட முட்டாளே! பொய்யான புகழ்ச்சி ஏன்? நான் விரோதியின் அறிவு மற்றும் பலத்தின் ஆழம் கண்டுகொண்டேன்.
விபீஷணனைப் போன்று கோழை மந்திரி இருக்கும்போது
உலகில் வெற்றி எங்கே? ஐஸ்வர்யம் எப்படி கிடைக்கும் ?
துஷ்ட ராவணனின் சொல் கேட்டு ,
தூதனுக்கு கோபம் அதிகரித்து விட்டது.
காலமறிந்து தூதன் லக்ஷ்மணன் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தான்.
தலைவா!ஸ்ரீ ராமரின் தம்பி லக்ஷ்மணன் இக்கடிதத்தைக் கொடுத்தான். இதை படித்து உங்கள் மனதை குளிர்படுத்துங்கள்.
இடதுகையால் கடிதத்தை வாங்கி மந்திரியிடம் படிக்கக் கொடுத்தான்.
கடிதத்தில் எழுதி இருந்தது---
அட முட்டாளே! வெறும் பேச்சால் மனதில் மகிழ்ந்து
உன் குலத்தை நாசமாக்கிவிடாதே.
ஸ்ரீ ராமரை விரோதித்துக்கொண்டு நீ விஷ்ணு, பிரம்மா, சிவன் போன்ற
மும்மூர்த்திகளை சரணடைந்தாலும்
தப்பிக்க முடியாது.
நீ உன் ஆணவத்தை விட்டுவிட்டு ,
உன் தம்பி விபீஷணனைப் போல கடவுளின்
பாத கமலங்களுக்கு வண்டாகி விடு.
அல்லது துஷ்டனே! ராமரின் அம்புகளின் நெருப்பிற்கு
குடும்பத்துடன் பலியாகி விடு.
கடிதத்தின் செய்தி கேட்டதுமே ராவணன் மனதில் பயந்துவிட்டான்.
ஆனால் முகத்தில் பயத்தை வெளிப்படுத்தாமல் புன்சிரிப்புடன்
சத்தமாக சொன்னான்--
பூமியில் இருந்து ஆகாயத்தை கையில் பிடிக்க
முயற்சிப்பதுபோல் சின்ன தவசி வீணாக பேசுகிறான்.
தூதன் சொன்னான்--ஆணவப் பேச்சை விட்டு
உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.
கோபத்தை விட்டு நான் சொல்வதைக் கேளுங்கள்.
ராமனுடனான விரோதத்தை விட்டுவிடுங்கள்.
ராமர் அனைத்து உலகங்களுக்கும்
கடவுள்.
ஆனால் அவருடைய குணம் மிகவும் மென்மை.
நீங்கள் அவரை சந்திததுமே கருணை காட்டுவார்.
உங்களுடைய எந்த குற்றத்தையும் மனதில் வைக்கமாட்டார்.
ஜானகி அவர்களை ஸ்ரீ ரகுநாதரிடம் ஒப்படையுங்கள்.
நான் சொல்லுவதை செய்யுங்கள்.
ஜானகியை ஒப்படையுங்கள் என்று
சொன்னதுமே துஷ்ட் ராவணன் தூதனை உதைத்துவிட்டான் ,
தூதனும் விபீஷனனைப்போன்று
ராமரை சிரம் தாழ்த்தி வணங்கி சரணடைந்தான்.
தன் கதையை சொல்லி ராமரின் கிருபையால்
நற்கதி அடைந்தான்.
சிவபகவான் இந்த நிகழ்ச்சியைக் கண்டு
தன் மனைவி பவானியிடம் --
ஹே பவானி! அந்த தூதன் ஞானி.
அகஸ்த்தியரின் சாபத்தால் அரக்கனாகிவிட்டான்.
இப்பொழுது மீண்டும் முனிவராகி ராமரை
மீண்டும் மீண்டும் வணங்கி தன்
ஆஷ்ரமத்திற்குச் சென்றுவிட்டான்.
இக்கரையில் மூன்று நாளாகியும்
கர்வமுள்ள சமுத்திரம் ராமரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
ஸ்ரீ ராமர் கோபத்துடன் லக்ஷ்மணனை
அழைத்து அம்பையும் வில்லையும் எடுத்துவா,
பயமின்றி அன்பு ஏற்படாது.
நான் அக்னி-பாணத்தால் சமுத்திரத்தை
வற்றச்செய்து விடுகிறேன்.
முட்டாளிடம் பணிவு, கொடியவனிடம் அன்பு,
கஞ்சனிடம் தாராள குணத்தை உபதேசித்தல் ,
அன்பில் கட்டுண்ட மனிதனிடம் ,
அறிவின் கதை, மிகவும் பேராசைக்காரனிடம் வைராக்கியம்,
கோபமாக உள்ளவனிடம் அமைதி,
காமம் உள்ளவனிடம் இறைவனின் கதை எல்லாம் எடுபடாது.
விளையாத நிலத்தில் விதை விதைத்தது போலாகும்.
வீண்.
இதை சொன்னதும் ரகுநாதன் வில் எடுத்து அம்பை எய்தினான்.
ராமரின் இந்த செயல் லக்குமணனுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
கடவுள் பயங்கரமான பாணத்தை எய்தினார்.
சமுத்திரத்தின் இதயத்துக்குள் தீ ஜ்வாலை பற்றியது.
திமிங்கிலம், பாம்பு, மீன்கள் கவலைப் பட்டன.
சமுத்திரமானது தன் ஜீவராசிகள் எரிவதைக் கண்டு
தன் ஆணவத்தை விட்டுவிட்டு
அந்தணனின் வடிவில் தங்கத் தாம்பாளத்தில்
ரத்தினங்களை நிரப்பி கொண்டுவந்தது.
இதைப்பார்த்து காகபுசுண்டி கருடனிடம் சொன்னார் --
கேளுங்கள். எத்தனை உபாயங்கள் செய்தாலும்
வாழை வெட்டினால் தான் பழுக்கும்.
தாழ்ந்தவன் வேண்டுகோளை கேட்கமாட்டான் .
அவன் மிரட்டினால் தான் பணிவான்.
சமுத்திரம் பயந்து பிரபுவின் கால்களைப் பிடித்து வேண்டியது :-
என் தவறை மன்னித்துவிடுங்கள்.
ஆகாயம், வாயு, அக்னி,நீர் , பூமி அனைத்துமே ஜடப்பொருள்கள்.
உங்கள் கிருபையால் மாயை ஆனது இவைகளை சிருஷ்டிக்காக படைத்திருக்கிறார்.
எல்லா நூல்களும் இதையே சொல்கின்றன.
உங்களின் கட்டளைப்படி இருப்பதிலேயே இவைகளுக்கு ஆனந்தம்.
எனக்கு பிரபு தண்டனை அளித்து நல்லதே செய்துள்ளார்.
ஆனால் ஜீவன் களின் நல்ல கெட்ட குணங்களையும்
நீங்கள்தான் அளித்துள்ளீர்கள்.
முரசு, நாகரீகமற்றவன் , சூத்திரன் .மிருகங்கள், பெண்கள் ஆகியவை
தண்டனைக்கு உரியவர்கள்.
பிரபுவின் பிரதாபத்தால் நான் வரண்டுவிடுவேன்.
சேனை கடந்து சென்றுவிடும்.
எனக்கு பெருமை இருக்காது.
உங்கள் கட்டளையை மீற முடியாது.
வேதங்கள் உங்கள் புகழை இப்படித்தான் பாடுகின்றன.
இப்பொழுது நான் உங்கள் விருப்பபடி நடந்துகொள்கிறேன்.
சமுத்திரம் சொன்னதைக் கேட்டு
ராமர் புன்முறுவலுடன் சொன்னார் :-
வானர சேனை கடப்பதற்கு வழி சொல்.
சமுத்திரம் சொன்னது --நாதா! நீலன் ,நலன் இருவரும் வானர சகோதரர்கள்.
அவர்கள் குழந்தையாக இருக்கும்போது ரிஷிகளின் ஆசியைப் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஸ்பர்சித்தால் பெரிய பெரிய மலைகள் கூட
சமுத்திரத்தில் மிதக்கும்.
நானும் பிரபுவை தியானம் செய்து
என் சக்திக்கேற்ற உதவி செய்வேன்.
நாதா!இவ்வாறு சமுத்திரத்தைக் கட்டுக்கு கொண்டுவந்தால்
மூவுலகிலும் உங்கள் புகழ் பாடப்படும்.
இந்த பாணத்தால் வடக்கு திசையில்
இருக்கிற துஷ்ட மனிதர்களை வதம் செய்யுங்கள்.
கிருபாகரனும் போரில் தீரனுமான ராமர்
சமுத்திரத்தின் மனவேதனை அறிந்து
உடனே துஷ்டர்களை வதம் செய்தார்.
வேதனையை போக்கினார்.
ஸ்ரீ ராமரின் பெரும் வலிமையையும்
ஆண்மையையும் கண்டு சமுத்திரம் மகிழ்ந்தது,
அது அந்த துஷ்டர்களின் எல்லா குணங்களையும் சொன்னது.
பிறகு ராமரின் பாதங்களை வணங்கி சென்றுவிட்டது.
கடல் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டது.
ராமருக்கு கடலின் ஆலோசனை பிடித்து விட்டது.
இந்த குணம் கலியுகத்தின் பாவங்களை போக்கக் கூடியது.
இதை துளசிதாசர் தன் அறிவிற்கு ஏற்றபடி பாடியிருக்கிறார்,
ஸ்ரீ ராமருடைய குணம் சுகத்தின் இருப்பிடம்,
சந்தேகத்தைப் போக்கக் கூடியது, துன்பத்தைப் போக்கக் கூடியது.
முட்டாள் மனமே!
நீ உலகின் எல்லா ஆசைகள் நம்பிக்கைகளை விட்டுவிட்டு
இடைவிடாமல் ராமரின்
புகழைப் பாடு. கேள்.
ராமரின் புகழ் எல்லா மங்களங்களையும் தரக்கூடியது.
இதை மிக மரியாதையுடன் கேட்பவர்கள் ,
எந்தவித கப்பலுமின்றி,
பவசாகரத்தைக் கடந்துவிடுவார்கள்.
உலகின் எல்லா பாவங்களையும் போக்கக்கூடிய ராமச்சரிதமானசின் சுந்தரகாண்டம் நிறைவுற்றது.
****************************************