Friday, September 9, 2016

काली शिव की छाती पर पैर क्यों ? காளிதேவியின் கால்கள் சிவனின் மார்பின் மேல் ஏன்?


कई लोगों को यह कहानी मालूम नहीं कि
काली क्यों शिव की छाती पर पैर रखकर खडी है.
एक ज़माने में "रक्त बीज" नामक एक क्रूर राक्षस था.
उसका वध करने देवी काली माँ गयी. काली का रूप अति भयंकर था.
रक्त बीज के रक्त बिंदुसे एक एक रक्त बीज राक्षस निकलता था.
देवी क्रोधावेश में उनसब को खाती थी. अतः देवी का क्रोध बढ़ता गया.
अंत में राक्षस को मार डाला.
देवीका क्रोधखुद शिव भी शांत नकर सके. अंत में शिव उसके पैर के नीचे लेट गए. शिव की छाती पर पैर रखते ही देवी शांत हो गयी.
अपने इस कर्म से दुखी हो गयी. इस शांत करने के लिए शिव ने पत्नी के
पैर की चोट सही.
यह कहानी आदर्शदम्पति की अन्योंयता पर भी जोर देती है.
பலருக்கு சிவன் மேல் சக்தி காளி நிற்கின்ற கதை தெரியவில்லை.
ஒரு காலத்தில் ரக்தபீஜ் என்ற கொடிய அசுரன் இருந்தான் .
அவனை வதம் செய்ய காளி மிகவும்
பயங்கர உருவம் எடுத்தாள்.
அந்த ராக்ஷஸனின் ஒவ்வொரு ரத்தத் துளியில் இருந்தும் ஒரு அரக்கன் தோன்றுவான் .
உடனே அதை தேவி தின்றுவிடுவாள் .
அவளது கோபம் அதிகரித்துவந்தது.
காளியின் ருத்ரத்தை எந்த சக்தியாலும் அடக்க முடியவில்லை . சிவனாலும் முடியாதநிலையில்
சிவன் தேவியின் காலடியில் படுத்துவிட்டார்.
தேவி சிவனின் மார்பில் காலடி வைத்ததும்
சிவனைக்கண்டு சினத்தைதவிர்த்தார்.
பலருக்கு இக்கதை தெரியவில்லை.
இங்கு சிவனின் மார்பில் கால்வைத்த காளி கோவில் புஜாரிக்கும் தெரியவில்லை.
அதை கூகுளில் படித்து அறிந்து எழுதியுள்ளேன்.

Monday, September 5, 2016

வீண் ஆடம்பரம் பக்தி அல்ல .

திடீர் ஊர்வலத்திற்கு பக்தனான  நானே எதிர்ப்பு

. இது அடாவடி வசூல்குடி கும்மாளம். 

இறைவனை பளுதூக்கியில் தூக்கிப்போடும் கொடுமை.,

வீண் பதட்டம்.

 ௧௯௫௦இல் பிறந்த   நான் சமீபத்தில்தான்
 இந்த வீண் ஆடம்பர பக்தியைப்பார்க்கிறேன். 

இது விநாயகரைக் கோபப்படுத்தும்.
பயமில்லா பணமில்லா   பக்தி  வேண்டும் .

உணமையான பக்தி உள்ள ஹிந்துக்கள் ஊர்வலத்தை ஆதரிக்காதீர்கள். 


அது விநாயகருக்கு செய்யும் அவமரியாதை. இது சத்தியம்.
******************************************************************************************************************************************************************************************************************************************

என்னவோ அம்மையார் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லிவிட்டாராம், அவரின் அமைச்சர்கள் எல்லாம் நெற்றியில் விபூதி, குங்குமத்தோடு காட்சியளிக்கிறார்களாம். அதற்காக அம்மையாரை பாராட்ட வேண்டும் என்ற ஒரு பதிவை நேற்று பார்க்க நேர்ந்தது. வாழ்த்து சொல்வது போல சொல்லிவிட்டு, மறுபக்கம் விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு பயங்கர நெருக்கடி கொடுத்துள்ளது தமிழக அரசு.
இன்று சில முஸ்லீம்களின் எதிர்ப்பால் திருநெல்வேலியில் பாட்டபத்து தெருவில் விநாயகர் ஊர்வலம் நடத்த காவத்துறையால் தடுக்கப்பட்டு, பதினைந்து ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி கைது செய்வதற்கு எதற்காக வாழ்த்து சொல்லவேண்டும்? தோளில் கைபோடுவது போல போட்டு கழுத்தை நெறிப்பதற்குத்தானா இத்தனை நாடகமும்?
மானமுள்ள ஹிந்துக்கள் கண்டிப்பாக இனிமேல் அதிமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்.
மானமுள்ள பக்தயுள்ள ஹிந்துக்கள் ஊர்வலத்திற்கு
ஆதரவு தராதீர்கள்.

Friday, September 2, 2016

அவனின்றி எந்த ஒரு மகிழ்ச்சியும் துக்கமும் நடக்க வாய்ப்பில்லை.

சனிக்கிழமை காலை வணக்கம்.
ஆண்டவன் காக்கும் ஆட்டுவிக்கும்இந்த உலகில்
அவனின்றி எந்த ஒரு மகிழ்ச்சியும் துக்கமும் நடக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவன் சிலருக்கு மிகுந்த அறிவை அளித்து
உலகிற்கு ஒருநல்வழி காட்டுகிறான்.
நாம் பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாதனைகளை பார்க்கிறோம். அதனால் வரும்
பயன்களை அனுபவிக்கிறோம். இந்த கண்டுபிடிப்புகள்
தனி ஒருவரால். எக்ஸ்ரே, கணினி, விமானம், காவியங்கள், திரைப்படம், மின்சாரம் , ஆட்சி,
என ஒரு தனித்தனி மனிதர்களால்
கண்டுபிடித்த பொருள்களால்
நாம் பயன் அடைகிறோம்.
ஆண்டவன் அருள் பெற்ற ஒருவரால் நாம் ஆங்கில எழுத்து தட்டச்சு , அதில் நாம் தாய் மொழி காண்கிறோம்.
இந்த ஒரு தானியங்கி வையகப் பயன் மூளை எப்படி
அந்த கண்டுபிடிப்பாளருக்கு வந்தது?
கணினியும் வலைத்தளமும் உலகை இணைக்கிறது.
வீட்டில் அமர்ந்துகொண்டே எவ்வளவு உலக விஷயங்கள் அறியவாய்ப்பு.
திருப்பதி பிரம்மோத்சவம் அகிலத்தில் எந்த மூலையில்
இருந்தாலும் பார்க்கிறோம்.
ஆனால் இந்த அரிய கண்டுபிடிப்புகளால் பயன்பெறுவோர் எத்தனைபேர்கள்?
ஒரு அரிய நோய் குணப்படுத்தும் அரிய் சிகிச்சை
அதைப்பெற வசதிகள் இருந்தும் நோய் முற்றி
மரணம்.
ஒருமணிநேர விமானப்பயணம் , அதை அனுபவிக்கும் வசதிஅனைவருக்கும் இல்லை.
ரயிலில் குளிர்சாதனப்பெட்டிஎத்தனை பேருக்கு வாய்ப்பின்றி மடிகின்றனர்.
இப்படி வசதிகள் அதைஅனுபவிக்கும் பாக்கியசாலிகள்.
எழுத்தாளர்களுக்கு ஒரு திறமை. எதையும்அனுபவிக்காமல் வர்ணிக்கும் ஆற்றல்.
சிந்தித்துப்பாருங்கள். ஒரு தெய்வீகஆற்றல் மனிதர்களை ஆட்டிப்படைப்பது புலனாகும்.
ஆகவே நேர்மை வழியில் அவனடியில் சரணாகதி அடையுங்கள்.
மனிதநேயத்தை மறக்காதீர்கள்.
மதங்கள் மனித நேயத்திற்கே.
ஒரு மதத்தை அழித்து ஒழித்து,ஒளித்து ஒரு மதம் வளர் முடியாது.
ஹிந்துமதம் இன்றும் வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் சஹிப்புத்தன்மை.
வையகம் வாழ்க என்ற எண்ணம்.
அனைத்து மனிதர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
வையகம் ஒரு குடும்பம் என்ற எண்ணம்.
சிந்தியுங்கள்.