Sunday, September 23, 2018

ஆண் ட வ னு க் கு த் தெ ரி யு ம்.


இந் நொ டி  உதி த்த எண்ணங்கள் 
பா ரதம் ஆன்மீக 
நா டு 
கொ ள் ளை 
 அடி த் து 
ஆலயம்  கட்டும்
அடி யா ரை ப் போ ற் றி ய நா டு. 
இன்று  ஆலயம் ஆஸ்தி 
கொ ள் ளை  அடி க்க
அரசி யல் அதி கா ரி கள்
கண்டு  ஐ யோ! ஐயகோ!
என்று  அலறு ம் மு ன்
 வி னை  விதை த்த கொ ள் ளை ப் பணம்
மு ன் பி ற வி  இழந்த பணம் 
இப் பி ற வி  அ னு பவ ம் என்று 
ஆலயம்  மு ன் போலி  சந்தனம்,
சந்தனக்கட் டை  போ லி, 
உரசு ம் கல் போ லி 
ரு த் ரா க்ஷம் போ லி 
ஆலயம்  சு ற் றி 
ஏமா ற் று ம்  கூ ட்டம்

அவர்கள்  அரசியல் கட்சி ,
ஆ ளு ம் கட்சி 
கா வல்  அதி கா ரி  என
அ னை த் தி லு ம் ஊழல். 
ஆண்டவன்  கண்டு ம் 
கா ணா மல்  ஊழல் சொ த் து  
அ னு ப வி க் க மு டி யா மல்  
மரண Encounter. ஆண்டவன் த ரு  கி றா ன். 
வா ழ் க  ஆன் மீ கம். 
ஏமா ற் று ம் கடை கள்
ஆ ள்  பவர் களு க்க கு ம்  தெ ரி யு ம் 
ஆண்ட அவ னு க் கு ம் தெ ரி யு ம்.
ஆண் ட வ னு  க் கு த் தெ ரி  யு ம். 

Saturday, September 22, 2018

பு ல் கி ள் ளி பி றந்த க தை

மண மா சா ல்
மன வி ரி சல்.
மன வி ரி ச லா ல்
மண மு றி  வு.
மண மு றி வா ல்
மன சஞ்சலம்
மன சஞ்சலத் தா ல்
மண மா ன வர்கள்
மே ல் நா ட்டம்
பெ ற்ற குழந்தை கள்
கட்டி ய கணவன்
கட்டி ய மனை வி
கண நே ர கா தம் தா ல்
படு  கொ லை.
 பு ரா ணக் க தை
 வரலாறு  அ னை த் தி லு ம்  உண்டு.
 மூ ன் று  மனை வி,
 ஐந்து  கணவர்
  பெ ற் றோ ர் இல்லா
 சீ தை,  தகப்ப னி ல் லா மே ரி
  பா  யா சத்  தா ல் பி ற ந் த  இ ரா தன்.
பு ல் கி ள்  ளி ப் பி றந்த குசன்
என்ற ஒ ழு க்கம்  மா றி ய
க தை  க ளு ம் உண்டு.

Monday, September 17, 2018

இன்ன லு க் கு கா ரணம்

ஆன்மீகத்தில்ஆத்மா
ஒன்றி விட்டால் உலக மாயையில் இருந்து தப்பலாம்.
ஆனால் அகங்காரம் பொறாமை மற்றவர்கள் போல் நாம் இல்லை மேலும் ஆசை கள் தெய்வீகத்தில்
மனதை ஒருமுகப் படுத்த விடாது.
ஜகன் மாயை வென்றால்
ஜகந்நாதன் நமக்கு அடிமை

அவன் அவ்வளவு எளிதில் அடிமை ஆகமாட்டான்.
பெண் பொன் பதவி அறிவியல் சுகம்
அதில் மனிதனுக்கு இயற்கை வென்று வாழமுடியும் என்ற மமதை
அதன் விளைவு  இறை சக்தி மறந்து
 நம்மை ஆட்டு விக்கும் இளமை.
மனிதனின் மமதை அடக்க இறைவனிடம் சரணடைய
முதுமை.
அதிலும் சஞ்சலம் ஆசை
அமைதியின்மை.
இதுவே நாம் வேதம் குரான் பைபிள்
படி த்தும அறிந்தும் இன்னலுக்கு
காரணம்.

Thursday, September 13, 2018

வல்லபாச்சாரியார் --2.

  வல்லபாச்சாரியார்  காலத்தில் நாட்டில் முகலாயரின்

ஆட்சி வந்துவிட்டது. முகலாயர் படை எடுப்பு ,முகலாயர்  ஆட்சி ஆகியவற்றின் காரணமாக   நாட்டில் தீய   முறைகள்
வந்துவிட்டன. மதத்தில்  வெளி ஆடம்பரங்களும் ,கர்மகாண்டங்களும்  தோன்றிக்கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையைப் பற்றி  வல்லபாச்சாரியார்  தன நூலான ஸ்தோத்திர ஸ்ரீ கிருஷ்ணாலயத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கலிகாலத்தில் துஷ்ட குணமுள்ளவர்கள் தோன்றுவார்கள்.
போலித்தனமான பொய்யான வழக்கங்கள் மாயைகள் வரும்போது  ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடைக்கலம்  அளிப்பவர் .

அந்தக்காலத்தில் ஹிந்துக்கள் மிகவும் துன்பப்பட்டவர்களாவும் ,அடைக்கலமளிப்பவர்  இன்றி
 தவித்தனர்.   வல்லபாச்சாரியாரின்  இந்த பகுதி புரட்சியால்  வாடா இந்தியா முழுவதும்  புரட்சி அலை உருவானது.
இந்தப் புரட்சியில் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ஸ்ரீ வல்லபாச்சாரியார் ஸ்ரீ கிருஷ்ணரைத்துதித்துப்   பாடும்
ஒரு பஜனைக்குழுவை  உருவாக்கினார். இந்தக்குழுவில் வல்லபாச்சாரியாரின்  நான்கு சீடர்கள் இருந்தனர்.
அவர்கள் பக்த சூர் தாஸ் , பக்த பரமானந்த தாஸ், பக்த கும்பனதாஸ் , பக்த கும்பனதாஸ் ,பக்த   கிருஷ்ணதாஸ்  .
 வல்லபாச்சாரியாரின் மகன் விட்டல்  நாத்திற்கு நான்கு  சீடர்கள்  பக்த கோவிந்தஸ்வாமி ,பக்த சீதாஸ்வாமி ,
பக்த சதுர்புஜ தாஸ் , பக்த நந்ததாஸ் ஆகியோர். இந்த எட்டு சீடர்கள் "அஷ்டசாப்" என்று புகழ்பெற்றனர்.
  இந்த பக்தர்கள் தினந்தோறும் புதிய புதிய பாடல்கள் இயற்றி பாடிவந்தனர்.  கேட்ட பக்தர்கள் அனைவரும் நன்கு
பாடத்  தொடங்கினர். அநேக இஸ்லாமியர்களும்  புஷ்டி மார்க்க பக்தர்கள் ஆனார்கள். புஷ்டி மார்கத்தில் அயல்நாட்டினர், படிக்காதவர்கள், அப்பொழுது சொல்லப்பட்ட சூத்திரர்கள், பெண்கள் என  புஷ்டி மார்க்கத்தின் எண்ணிக்கை அடைந்தது.  நூற்றுக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மஹாத்மாக்கள்   பக்தி உணர்வுள்ள சங்கீதத்தின் மூலம்  ஸ்ரீ கிருஷ்ண பக்தி மார்க்கத்தை பிரச்சாரம் செய்தனர். வாடா இந்தியாவில் ஆலயங்கள் அழிக்கப்பட்டாலும்   ஒவ்வொரு வீடும் ஆலயங்களாகின.
நம்பிக்கை இழந்த ஹிந்து சமுதாயத்தில் சமரசம் ,உற்சாகம் , நம்பிக்கை ஒளி வீசத்தொடங்கியது.
   தோற்ற ஹிந்துக்களுக்கு புஷ்டி மார்க்க அமிர்த மழை
புதிய வாழ்க்கை ஒளியைக் காட்டியது. 

Tuesday, September 11, 2018

ஸ்ரீ கிருஷ்ணபக்தர் ஸ்ரீ வல்லபாச்சாரியார்.1


ஸ்ரீ  வல்லபாச்சாரியார் அவர்கள்  வாழ்ந்த  காலம் கி.பி.1478 முதல் 1585 வரை . விக்கிரமி வருடம் 1 535 இல் இருந்து  1642 வரை.  அவர் பிறந்த இடம் பற்றி அதிக கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் வாரணாசி அருகில் என்றும் சிலர் பீஹார்  மாநிலத்தின் சம்பாரன்  ஜில்லா  என்றும் கருதுகிறார்கள் .
அவர் காலத்தில்   இஸ்லாமியரின் படையெடுப்பும் ஹிந்து ஆலயங்கள்  அனைத்தையும் அழித்த  நிகழ்ச்சியும் ,அவர்களுடைய காட்டுமிராண்டித்தனமும் அதிகமாக இருந்தன.  ஹிந்துக்களை முஸ்லிமாக மாற்றும்  தீவீர
முயற்சிகள் நடந்துவந்தன .
   இந்த கடின சோதனை காலத்தில்  வல்லபாச்சாரியார் நாடு முழுவதும் பயணத்தைத்   தொடங்கி  ஸ்ரீ கிருஷ்ண பக்தி பற்றி  பிரச்சாரம்  செய்தார்.  அவர் விரஜ்  தன்  பணியிடத்திற்கு  மையமாக்கினார்.  கோவர்த்தன க்ஷேத்திரத்தில்  ஸ்ரீ நாதருடைய ஆலயம் கட்டினார் .
அவர் "புஷ்டி மார்கத்தை பிரச்சாரம் செய்தார். புஷ்டி என்பதன் பொருள்   இறைவனின்  மேல் பக்தி செலுத்தி
அவரின் கிருபையை பெறுதல்.

Monday, September 10, 2018

இறை வா சரணம்

இறை வனை
சரணடை  கி றே ன்.
அவன் அளி த்த
அ னு க்ரஹ வாழ்க்கை
அவ னு க்கு அவன் அருளுக்கு
நன்றி  சொ ல் லுமுன்
ம னி தன் தெ ய்வ ஸ் ரூ பன்
என்று  மனித வடி வி ல்
தெ ய்வம் போ ல்
வளர்த்த  அன்னை
அன்னை யி ன் அன்னை
அன்னை யி ன் தம்பி
தாய்  மா மன்
அன்னை யி ன் அண்ணன்
தா ய் மா மன்,அவன்
மகள் என்  மனைவி .
நண்பர் க ள்

   தக்ஷி ண பாரத ஹி ந் தி
பி ரசா ர சபை, தி ரு ச் சி,
 1966 ல்   தன் நலமற்ற
செ யலர்கள்,
அமை ப் பா ளர் கள்,
அந்த ஹி ந் தி  எ திர்ப் பி லு ம்
ஹி ந் தி  ப யி ன்ற மா ணவர் கள்
அவர்கள் அளி த்த மரி யா தை
ஏழ்மை யி லு ம் ஆத்ம தி ரு ப் தி யு டன்
நடந்த ஹி ந் தி  இலவச
பி ர சா ரம்
அரசியல் சு ய நல ம்
அவதாரம் பு ரு ஷர் கா ந் தி  நி று வனம்
 அனைத்து ம் ஆண்டவன் எனக்கு
 அளி த் த  ஊக்கம் ,
அரசு  உதவி  பெ று ம் பள்ளி யி ல்
வே லை  வா ய்ப்பு,
பகவான்  பா ர் வை
என் செ யல் இல்லை,
அவன் அ ரு ளா ல்
நா ன்  பெ ற்ற பட்டங்கள்
அவன் அருள்.
இன்று  அவன்  பா த  கமலத் தி ல்
சமணம், சரணம்  சரணம்.
சரணா கத வத்சலன்  அவனடி  சரணம்  .
ஓம் க ணே சா ய போ ற் றி.
ஓம் கா ர் த் தி கே யா  போ ற் றி
ஓம் நமஹ சி வா ய,
ஓம் து ர் க் கை யே போ ற் றி

சாது ரைதாஸ் -2


   ரைதாஸ்  சொல்கிறார் --
 
    பக்தி வழி  மெல்ல மெல்ல சாதகனை கடவுளுடன் இணைக்கிறது.   தன்  கடவுளின் மேல் பக்தனின் உரிமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 இந்த உரிமையின் எல்லை  பக்தன்  இல்லை என்றால் இறைவன் பொருளுள்ளவன் அல்ல என்று ரைதாசை சொல்லவைக்கிறது.
  சாது ரைதாஸ்  இறைவனுடன் ஐக்கியமாகி ஒன்றிவிடுகிறார்.
இறைவனுக்கு அவருக்கும் உள்ள தொடர்பு ஒரு நொடி கூட பிரியவிடாது.
ரைதாசின்   பக்தி மார்க்கத்தால் காசி மன்னன் அவரின் சீடராகிவிட்டார்.   ரைதாசின் பக்தி மார்க்கத்தின் படி
தியாகம் ,சமர்ப்பணம் ,இறைபக்தியால் மனிதன் உயர்ந்து விடுகிறான். இந்நிலையில் அவனுடைய ஜாதி மதிப்பின்றி போய்விடுகிறது.
சித்தவுடன் ராணி ஜாலியும்  மீராபாயியும்  ராய்தாஷின் சிஷ்யை ஆகிவிட்டனர். மீரா ரைதாசை தன குருவாக ஏற்றுக்கொண்டார். மீரா கிருஷ்ணனின் பக்தை.
ரைதாஸ் உருவமற்ற இறைவனை வணங்குபவர். இப்படி அருவ- உருவ பக்தர்கள் இணைந்து இருந்தனர் ரைதாஸிடம்.
இந்த உருவ-அருவ  வழிபாடு  ஒற்றுமையும் ஜாதிக்கு முக்கியத்துவம்  தராத  பக்தியும் ஒரு பின்பற்றக்கூடிய
சிறப்பு நிலையாக அமைந்தது.
  ரைதாசின்  புகழ்  பரவியது.  சித்தவுடின்  மஹாராணா
ஆலயத்தின் பிராண பிரதிஷ்டை செய்ய  ரைதாசை அழைத்தார்.அங்குள்ள அந்தணர்கள் இதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் ராணா அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. ராணா ரைதாசை கௌரவித்து பாத பூஜை செய்தார்.
     ஹரிராம் வியாஸ் என்பவர் ரைதாஸ் பற்றி கூறும்போது
ஒரு பக்தர் ரைதாஸிடம் கோடிக்கணக்கில் அந்தணர்கள்
பக்தி செலுத்தினர் என்கிறார்.
 ரைதாஸர்  தன்னைப்பற்றி சொல்லும்போது  என் குடும்ப
உறவினர்கள்   வாரணாசியில் இறந்த மிருகங்களைத் தூக்கும் வேலையில்  ஈடுபட்டுள்ளனர். ஆனால் நான்   இறைவனின் தாசனாகி  பிரபுவின்  பக்தியில் ஈடுபட்டிருந்தேன். அந்த பக்தியின் மகத்துவத்தால்
தாசானுதாசனாகிய  ரைதாசை  ஆச்சாரியர்கள்,அந்தணர்கள்,ஆகியோர்  என்னை வணங்குகின்றனர்.   இவை எல்லாம்  கடவுளின் பக்தியால் தான் பிரசாதமாக நிகழ்ந்திருக்கிறது.
    நாடுமுழுவதிலும்   பக்த ரைதாசை  கௌரவித்தனர்.  அவருடைய 41 பாடல்கள்  ஸ்ரீ குரு கிரந்த சாஹப்பில் இடம் பெற்றிருக்கின்றன.  பக்த ரைதாசின் காரணமாக எல்லா சக்கிலிய சமுதாயத்திற்கும் மதிப்பு கிடைத்தது.  ரைதாஸ் என்ற பெயரே ஒரு பட்டம் போல் ஆகிவிட்டது. ஆயிரக்கணக்கான உயர்சாதியினர் ரைதாசின் பக்தர்கள் ஆகிவிட்டனர். ஹிந்து சமுதாயத்தில் ரைதாசீ என்று சொல்வதில் பெருமைகொள்ளும் ஒரு ஜாதி உண்டாகிவிட்டது.  சாது கபீரும் சாதுக்களின் ரவிதாஸ் சாது என்று கௌரவித்தார்.
 ஜாதியால் யாரும் பதவியை அணியவில்லை என்று  ரைதாஸ்  சொல்கிறார்.  வரலாற்றில் யாருமே ஜாதியின் காரணமாக உயரவில்லை என்பதே நிலையான சத்தியம்.

  ஜாட் இனத்தைச் சேர்ந்த தன்னா, நாவிதர் இனத்தைச் சேர்ந்த  சேனா, சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ரைதாஸ் ,நெசவாளி கபீர் அனைவரும் புகழும் பதவியும் கௌரவமும் பெற்றது  ஜாதியால் அல்ல. ரைதாஸிற்கு மேவாடின்  ராணா வின் குடும்பம் மீரா ,ராணீ ஜாலி ,காசி மன்னன் ஆகியோர் ரைதாசின் சீடனாகியது   ஜாதியால் அல்ல.
ஒரு மனிதன் உயர்வதும் ,கௌரவமும் புகழும் பெறுவதும்
ஜாதியால் அல்ல . அவருடைய கல்வி, செயல் படுவதும்,
சிரத்தை ,உதார குணம்,கடமை உணர்வும்  தான் மகோன்னத நிலையை அடைய  சான்றாக அமைகிறது.





சாது ரைதாஸ் -1

சாது  ரைதாஸ்

        சாது ரைதாஸ்  காசியில் பிறந்தார்.
 அவர் வாழ்ந்த  காலம் விக்கிரமி வருடம் 1433 முதல் 1584 வரை.
(கி. பி. 1376 முதல் 1527 வரை ). அவர் சக்கிலிய குளத்தில் பிறந்தார்.
  தன்னுடைய ஆன்மீக சாதனை ,நன்னடத்தை , பணிவான குணம்   ,பக்தியின்  காரணமாக அவருக்கு லக்ஷ மக்கள் அவருக்கு  சீடர்கள் ஆனார்கள்.  அவர் சக்கிலியர் என்பதில் பெருமை கொண்டவர்.
     ரைதாஸ் மனதில் ராமனந்தர் சீடர் ஆகவேண்டும் என்ற
விருப்பம் உண்டாகியது. ரைதாஸ்  பஞ்ச  கங்காக்  கரையில்
ராமானதரிடம்  தன்  விருப்பத்தை வெளியிடும் போதே தான் ஒரு சக்கிலியன் என்றும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்றும்  கூறினார். உடனே ராமானந்தர் அவரை சீடராக ஏற்று கூறினார் ----"கடவுளுக்கு முன் அனைவரும் சமம்.உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என்ற வேறுபாடு கிடையாது.
நீ உடனே  ஸ்ரீ ராமனிடம் பக்தி செலுத்து.பஜனை செய்.
பக்தி உணர்வைத் தூண்டும் பாடல் எழுது .பக்தர்களுக்கு மத்தியில் பாடு . செருப்பு செய்யும் தொழிலையும் செய்.

ரைதாஸ்  அன்றாடம்  குரு உபதேசத்தைப் பின்பற்றினார்.

  அவர் பாடலின் மையக்கருத்து  எல்லோரின் கடவுள் ஒருவரே.பிறப்பால்  ஜாதிவேறுபாடு  கிடையாது. இது பொய்யானது.
ஜீவனுக்கு  எவ்வித  ஜாதி கிடையாது. இனம் கிடையாது.குலம்  கிடையாது.  ஜாதிவேறுபாடு என்பதே முட்டாள்த்தனம்.பைத்தியக்காரத்தனம். உண்மையில் எல்லோரின் ஜாதியும் ஒன்றே.
சாதுக்களின்  மனத்தில்  எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற  எண்ணமும் உண்டு.
ஒவ்வொவொரு இடத்திலும் இறைவனைப்பார்த்தேன் .
அவர் ஜாதிபற்றி  கேட்கவில்லை.  பிறப்பால் தொழிலால் யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது. இழி செயலால் தான் தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறப்பால் யாரும் பிராமணன், க்ஷத்திரியன் ,வைஷ்யன் ,சூத்திரன் கிடையாது. கர்ம  வினையால் தான் தான் ஒருவன் உயர்ந்தவனாகிறான்.  ஜாதி எதுவாக இருந்தாலும் இறைவனின் பக்தி  எல்லோரையும் முன்னேற்றமடையச் செய்யும்.
  ரைதாஸால்  சுய கௌரவத்திற்காக போராடவேண்டியிருந்தது.
அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் ஜாதிக்கொடுமைகளையும்
மனிதத் தன்மையற்ற  கொடுமையையும் எதிர்த்து போராடும் புரட்சியைச் செய்யவேண்டியிருந்தது.
  சதனா   என்ற பக்கிரி இவரை முஸ்லீம் ஆக்க முயற்சி செய்து   ரைதாசின் சேர்க்கையால்  அவரின் சீடராகி ராமதாஸ் என்று
ஹிந்துவாக மாறினார்.   சதனா  ரைதாஸை      முஸ்லீமாக  மாற்றினால்  அவருடைய  லக்ஷக்கணக்கான  சீடர்கள்  முஸ்லீமாக மாறுவார்கள்  என்ற முயற்சி வெற்றிபெறவில்லை. ஹிந்து தர்மத்தை எதிர்த்தாலும்
ரைதாஸ்   வேதத்தின் மீது மிகுந்த பக்தி சிரத்தையுடன் வாழ்ந்தார். அவர் வேதத்தைத் தவிர மற்றவை எல்லாம் பிரமை  என்று கூறுவார். வேத வாக்கியங்கள் மிகவும் உத்தமமானவை. மற்றவை வீண் என்பார். சிக்கந்தர் லோடி
ரைதாசை  முஸ்லீமாக மாற்ற பேராசை காட்டினார். மிரட்டினார்,ஆனால்  ரைதாஸ்  மதம் மாறவில்லை.
சிக்கந்தர் லோடி கடும் தண்டனை அளிக்க நினைத்தபோது
ரைதாஸ் உயிர்விடுவேன் ஆனால் மதம்  மாற மாட்டேன்.
வேதத்தை விடுத்து குரான் படிக்கமாட்டேன் என்கிறார்.
இவர் தன்   இறைவனை கோவிந்தா,கேசவா,ராமா,கான்ஹா ,
பன்வாரி,கிருஷ்ணா ,முராரி, தீனதயாளா, நரஹரி ,கோபாலா, மாதோ என்று பலவித பெயரில் பஜனை பாடல்கள் இயற்றி பாடினாலும்  அவருடைய ராமர் வையகம் முழுவதும் இருக்கும் இறைவன். அவர் தன ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். ரைதாஸ் காலத்தில் சிவன்-வைஷ்ணவர்கள்  வேற்றுமை வெறுப்புணர்வு அதிகமாக இருந்தாலும் ,ரைதாஸ் இந்த வேறுபாடு  பொய்யானது என்பார். சிவன்,விஷ்ணு ,ராம் என்ற மூன்று பெயர்களும் அவர் ஒன்று சேர்த்து புகழ்கிறார்.
  ரைதாஸர்   இறைவனின் பூஜை-அர்ச்சனைகளை  எதிர்க்கவில்லை.  பூசனை -அர்ச்சனை என்ற பெயரால் நடக்கும் வெளி ஆடம்பரங்களை , போலித்ததானங்களையும்
எதிர்த்தார்.


Sunday, September 9, 2018

தீண்டாமை வெறும் கற்பனை கபீர்தாசர்

   கபீர்   அச்சமின்றி  திட மனதுடன் சொல்கிறார் --தண்ணீர்  குடிக்கிறாய். அது ஜாதி பார்த்து தாகம்  தனிப்பதில்லை.
நீயும்  தண்ணீரிடம் உன் ஜாதி என்ன என்று கேட்டு குடிப்பதில்லை.   மண்ணில் எத்தனையோ பேர்  இறந்து கலந்து இருக்கின்றனர்.  இந்த  மண்ணில் கோடிக்கணக்கான யாதவர்கள் ,88 ஆயிரம் ரிஷிகள் கலந்து இருக்கின்றனர்.
ஒவ்வொரு அடியிலும் தேவதூதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கலந்துள்ள மண்ணில் நீ பாத்திரம் செய்கிறாய் . வீடுகள் கட்டுகிறாய். ஆற்று நீரில் மீன் ,ஆமை ,முதலை,உடும்பு அனைத்தும் பிரசவிக்கின்றன.அவைகளுடைய இரத்தம் தண்ணீரில் கலந்துள்ளது. பசுவின் பால் அதன் கொழுப்புடன் சேர்ந்து வருகிறது. நீ அந்த பாலை குடிக்கிறாய் .நீ தீண்டாமை கடைப்பிடிக்கிறாய்.
பூஜாரிகளே! இவை எல்லாம் பிரமை. ப்ரேமையல்ல.
இது உன்னுடைய சுயநல செயல். இது குறிகிய நோக்கம்.
  ஹிந்துக்களை இஸ்லாமியர்களையும் நேரடியாக தாக்குபவர் கபீர். தைரியமும் மன திடமும்  மன  வலிமையையும் கொண்டவர்.
  மற்றவர்களின் இன்னல் கண்டு உதவுபவனே
பரமபக்தன். அந்த இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கிறான். அந்த இறைவனின் நாமத்தை
மட்டும்  ஜபித்தால்  பிரம்மஞானம் கிட்டும்.
எனக்கு ராமநாம ஜபித்தால் போதும்.
மற்ற வேதங்கள், குரான் படிக்கவேண்டிய அவசியம் இல்லை.
என்கிறார் கபீர்.
விநாயகப்பெருமான் அருள்வேண்டுமா?
விக்னங்கள் இன்றி
அதாவது எவ்வித
இடையூறு கள் இன்றி

வெற்றிப்பாதையில் சொல்லவேண்டுமா ?
விநாயகரை முப்பதாயிரம் வரை சிலவு செய்து
படத்தில் கண்டபடி அவமானப்படுத்தாதீர்கள்.
நிச்சயமாக சத்தியமாக விநாயகரின் கோபக்கனலுக்கு ஆளாவீர்கள்.

क्या आप विघ्नेश्वर का अनुग्रह चाहते हैं ?
बिना किसी बाधा के विजय पथ पर जाना चाहते हैं ?
तब तीस हज़ारों के रूपये खर्च कर निम्न तस्वीर के अनुसार
विघ्नेश्वर का अपमान मत कीजिये।
शाश्वत सत्य , ऐसा करेंगे तो विघ्नेश्वर के क्रोधाग्नि का ,चिनगारी का
पात्र बनेंगे। यह सत्य है।


Saturday, September 8, 2018

கபீர்தாஸ் -3

     பகவானின் பெயர் அச்சமற்ற பதவியைத் தருகிறது.
அவர்  தன்னை முஸ்லீம் என்று சொல்லாமல்  நெசவாளி என்றே  தனது தோஹே (ஈரடியில்) குறிப்பிடுகிறார்.
அவர் வளர்ந்த குடும்பம் சூழல் யோகா மதத்தைச் சார்ந்தது.
கபீர் தானே யோகாவில் நிபுணர். யோகக்கலையில்  சிறந்த
வித்வான்.  அவதூதர். யோகா சாதனை புரிந்தவர். குண்டலினி விழிப்புணர்ச்சி பெற்றவர். எளிய இயற்கையான  சமாதி  நிலையில் விரிவான   விவாதம்  தன்  இலக்கியத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.  அவர் முழு கவனமும் கடவுள் பக்தியிலேயே  மூழ்கியிருந்தது.  கடவுளின்  அன்பு  என்பதை
அறிந்தவன்தான் பண்டிதன்.  பெரிய பெரிய நூல்கள் படிப்பவன் பண்டிதனல்ல .இரண்டரை எழுத்து ப்ரேம்  என்ற அன்பு. அதை அறிந்தவன் தான் அறிவாளி . 

Friday, September 7, 2018

கபீர்தாஸ் -2

  கபீர்தாஸ்   கடவுளுக்குமுன்
எல்லோரும் சமம்  என்றும்
பிறப்பால் யாரும் உயர்ந்தவன்
 தாழ்ந்தவன் இல்லை என்றும்
தாங்கள் செய்யும் வினையால் தான்
அனைவரும்  உயர்ந்தவர்கள்  அல்லது தாழ்ந்தவர்கள்  என்று
தன்  கொள்கையை வலியுறுத்தினார்.
 கடவுள் படைத்த சமத்துவத்தை நிலைநாட்ட
போராடிக்கொண்டே இருந்தார்.
அவருடைய சமுதாய போராட்டத்திற்கு
அடிப்படைக் கோட்பாடுகள் உருவமற்ற இறைபக்தி.
 
 அவர் எழுதுகிறார் :--
  நான்கு கரங்கள் கொண்ட  இறைவனை வழிபடுவதில்
  எல்லா சாதுக்களும் தன்னை மறந்து ஈடுபடுகின்றனர்.
   கபீர் வழிபடும்  இறைவனின்  கரங்களை எண்ணமுடியாது.
முடிவற்ற கரங்கள் ".
   உலகையே படைத்து காக்கும் இறைவனுக்கு   பல கோடி கரங்கள் தானே இருக்கும்.  நான்கு கரங்கள் என்பது குறுகிய மதிப்பீடு.
       சமுதாயம் சீர்பட   ஒவ்வொரு தனிமனிதனும் போராடவேண்டும். ஒவ்வொருவனும் நல்லவனாக
 இரு க்கவேண்டும்.  இதற்கு ஆத்மசோதனை அவசியம்.

கபீர் சொல்கிறார் :- நான் கெட்டவனைத்தேடிச் சென்றேன் ,
 கெட்டவன்  யாரும் இல்லை.
என் மனதைத் தேடும்போது
என்னைவிட  கெட்டவன்  யாருமே இல்லை.
இவ்வாறு சுய சோதனைகள் மூலம்  ஒவ்வொரு தனிப்பட்ட
மனிதனும் திருந்தினால்  சமுதாயம் ,நாடு ,உலகம் அனைத்திலும்  சமத்துவம்  ,இறைத்துவம் ,மனிதநேயம்
நிலைப்படும்.
  கபீர் காலத்தில் ஹிந்து மத வர்ணாஸ்ரம தர்மத்தில் உயர்ந்த தாழ்ந்தவர்களின்  உடலுறவால்   பிறந்தவர்களை ஒதுக்கிவைத்தனர். இப்படி ஹிந்து தர்மத்தின் உயர் ஜாதியனரால் ஒடுக்கப்பட்டவர்கள் முஸ்லீமாக மாறினார் கள் . மத மாற்றத்திற்கு காரமாக செயல் பட்டவர்கள் உயர்ஜாதி  ஹிந்து மத வெறியர்களே .
 இவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள்  முஸ்லீமாக மாறினாலும் ஹிந்துமத பழக்கவழக்கங்களையும் பின்பற்றிவந்தனர்.

கபீரும் இப்படி ஒதுக்கப்பட்டு மத மாறிய முஸ்லீம் தம்பதிகளால்  வளர்க்கப்பட்டவரே .  இப்படி ஒதுக்கப்பட்ட பிரிவினர் நெசவுத்தொழில் செய்தும் ,பிச்சை எடுத்தும் வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு கடவுள்
உருவமற்றவராகவே தோன்றினார். பிராமணனின் மேன்மை
இவர்களுக்கு பெரிதாகத்  தோன்றவில்லை. இறைவனின் அவதாரம் பற்றி இவர்களுக்கு நபிக்கையே இல்லை.
அக்கம் பக்கத்தில் இருந்த ஹிந்து சமுதாயவாதிகள்
இவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் தீண்டப்படாதவர்களாகவும் கருதினர். இவர்கள் முகலாயர்கள் இந்தியாவில் கால் ஊன்றியபோது முஸ்லிம்களாகவே மாறிவிட்டனர்.  நெசவாளியாக  இருந்தவர்கள்  முஸ்லிமாக மாறினார்கள். இந்துக்களால் ஒதுக்கி வெறுக்கப்பட்டவர்கள் .இப்படி இவர்களால் வளர்க்கப்பட்ட கபீர்  தன்னை ஒருபோதும் முஸ்லீமாக எங்கும்  குறிப்பிடவில்லை. தன்னை நெசவாளி என்றே குறிப்பிட்டார்.


 

சாது கபீர்தாஸ் -1

   சாது  கபீர் படிக்காத மா மேதை.
சொல்லின் சர்வாதிகாரி.
அவர் 120  ஆண்டுகள்  உயிர் வாழ்ந்து

பக்தியில் ஒரு புரட்சியும் சமுதாய முன்னேற்றத்தையும்
கொண்டுவந்தார். அவர் வாழ்ந்த காலம் 1398 முதல் 1518 வரை கி.மு.., விக்ரமி  வருடம் 1455 முதல் 1575 வரை.
அவரது காலத்தில் தான் இப்ராகிம் லோடியின் படை எடுப்பும்  ,அவனின் பயங்கர கொடுமையும் நடந்தது.
    சாது  கபீர்  விசித்திரமானவர். அவர் தன்  கொள்கையில்
மிகவும் உறுதிவாய்ந்தவர். எதற்கும் அஞ்சாதவர்.
அவர் பார்த்ததை  யதார்த்தமாக எழுதுபவர்.
அவர் எந்த நூலையும் படிக்காதவர். நல்லவர் சேர்க்கையால் ஞானம் பெற்றவர். சாது கபீர் மத வெறியர்களின் போலித்தனம் ,கொடுமைகள், மூட நம்பிக்கைகள்,
ஜாதி-சம்பிரதாய  வேறுபாடுகள் ,வெளி ஆடம்பர பக்தி.
ஆகியவற்றை அச்சமின்றி சமுதாயத்திற்கு எளிய மொழியில் எடுத்துரைத்தவர். ஆனால் கடவுளின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர்.  அவர் ஹிந்து-இஸ்லாம் தர்மத்தின் மூடப்பழக்கவழக்கங்களை  எவ்வித அச்சமின்றி  எடுத்துரைப்பவர்.
 அழகான மசூதி கட்டி ,தொழுகை என்ற பெயரில்
அதிக சத்தத்துடன் குரான் படித்தால் ,இறைவன் செவிடாகி
எதையும் கேட்காமல் இருந்து விடுவார் என்பார்.
ஹிந்துக்களின்  மூட நம்பிக்கையை எதிர்த்து  உருவ வழிபாட்டைக் கண்டித்து "கல்லாலான சிலையைப்
பிரார் த்தித்தால் , இறைவனின் அருள் கிட்டுமென்றால்
நான் மலையையே பிராத்தனை செய்வேன்.
ஆட்டுக்கல்-திருகைக் கல்லால் மாவு கிடைக்கும்
என்பார்.
மொட்டை அடித்தால்  இறைவன் வரம் அளிப்பான்  என்றால்
வைகுண்டம் கிடைக்கும் என்றால் முதலில்  செம்மறி ஆட்டிற்குத்தான்  வைகுண்டம் கிடைக்கும். அதன் ரோமம்
கம்பளியாகப்  பயன்படும். அடிக்கடி அது முடி வழித்துக்கொள்கிறது  என்பார்.
 அவருடைய  பக்தர்களில் ஹிந்துக்கள் ,சைவர்கள் ,வைஷ்ணவர்கள், இஸ்லாமியர்கள் ,சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர்.

Sunday, September 2, 2018

அபகரிக்கக் கூடாது

பக்தி என்பது உலகப் பற்று கொண்டு செய்ய முடியுமா ?
ஆன்மீக வழி துறவறம் என்பது தான் என்று கூறவில்லை.
ரிஷி பத்தினிகள் ,முனி பத்தினிகள் , தெய்வ பத்தினிகள் என்று கூறப்படுகிறது.
ஆலயங்களில் இல்லறம் இனிது அமைய
சிற்பங்கள் பாலியல் கல்வி இங்கொன்றுமாக அங்கொன்று மாக செதுக்கப் பட்டுள்ளது.
சித்தார்த்தர் வழியில் செல்வோர் ,
படைப்பிலேயே உலகை அன்பு வழியில்
அழைத்துச் செல்பவர்கள். தெய்வீக புருஷர்கள்.

உலகில் அநாச்சாரங்கள் , ஹிம்சை , மனிதர்களிடம் இரக்கமற்ற மிருக குணங்கள்
அதிகாரிக்கு ம் போது சங்கராச்சாரியார்,ராமானுஜாச்சாரியார் , வள்ளலார் ,ராமானந்தர் , கபீர் தாஸ் போன்ற ஆன்மீக மகான்கள் தோன்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜாதி மத பேதமற்ற
சமத்துவ சமரச சன்மார்க்கம் அமையும்
கோட்பாடுகளை பரப்பினர்.
ஆனால் சுயநல அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் மனிதர்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்தி தங்களை உயர்ந்தவர்களாக காட்ட
முயற்சித்தனர்.
அதன் விளைவே ஆண்டவனை கூறு போட்டு
விற்று பணம் சேர்த்து வைத்து நாட்டிற்கும்
வீட்டிற்கு ம் யாருக்கும் பயன் படாமல்

பதுக்கி வைத்தல். அதை இன்று அரசியல் வாதிகள் அதிகாரி கள் கொள்ளை என்று

கூறுவதும் மசூதி, சர்ச் , ஆலய சொத்துக்கள் அரசு

அபகரிக்கக் கூடாது என்பது.

சாதுக்களின் பக்தியும் சமுதாய ஒற்றுமை உணர்வும்.

 
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாதுக்கள் ,பக்தர்கள்
ஆன்மீகத்தில்  மிகப்பெரிய புரட்சியைச் செய்தனர்.
 தென்னிந்தியாவில் ராமானுஜர் என்றார் ,வட இந்தியாவில்
 ராமானந்தர்.  இவர்களைத் தொடர்ந்து  சாது கபீர்,ரைதாஸ் மலுக்தாஸ்  சதான  போன்றோர்  அதே தலைமுறையில்
பக்த வல்லபாச்சாரியார் ,பக்த விட்டல்நாத், பக்த கும்பனதாஸ்  ,பக்த சூரதாஸ் ,பாபா ஹரிதாஸ், ரஸ்கான்,
கோசுவாமி துளசிதாஸ் ஆகியோர்  .
இந்த சாதுக்களும் பக்தர்களும் ஜாதி வேறுபாட்டை ஏற்கவில்லை. மனிதர்களுக்கும் வேற்றுமை உணர்வை போக்கி ஒன்றுபட முயற்சித்தார்கள்   என்பதை  நாம் கவனித்ததில் வைத்திருக்க வேண்டும்.  சாதுக்கள்
ஜாதி வேறுபாட்டை எதிர்த்துப் போராடினர்.
இதில் சில சாதுக்கள் உயர் ஜாதியினருக்கும் தாழ்  ஜாதியினருக்கும்   ஏற்பட்ட உடலுறவால் பிறந்தவர்கள்.
மஹாபாரத விதுரன் போன்று. அவர்கள் புதிய சமுதாயம்
அமைக்க முயற்சித்தனர்.  இறை பக்தியில் சாதுக்களும்
பக்தர்களும் ஒரே நோக்கத்தில் தான் பக்தி மார்க்கத்தை
நடைமுறைப்படுத்தினார்கள் .
 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் தீவீரவாதத்தால் அச்சத்தால் சமுதாயத்தில்  விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும்
முயற்சியைத் துவங்கினர். மனித சமத்துவத்திற்கு நிலையான செய்தி அனுப்பினார்கள்.அவர்கள் எல்லா ஜாதியினரையும்  சேர்த்துக்கொண்டு புனித பயணம் செய்து அன்பையும் சமத்துவக்கொள்கைகளையும் பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமியர்கள் அகில பாரதீய அதிகாரத்தை ஆட்சியை  ஆக்ரா ,பதேஹ் புர் சிக்கிரி போன்ற இடங்களை  உத்திரப்பிரதேசத்தில்  மையமாக வைத்து செலுத்தினர் என்றால் காசி,மதுரா,பிருந்தாவன் ,பிரயாகை ஆகிய இடங்களை மையமாக வைத்து ஹிந்துக்கள் பக்தி புரட்சியைச் செய்தனர். இதற்கு வரலாறு சான்றாகக் காணப்படுகிறது. ராமானந்தர் போன்ற வேதம்  படித்த அந்தணர்களும் கபீர்,ரைதாஸ் போன்றவர்களைத் தன்
சீடர்களாக ஏற்று முக்கியத்துவம் அளித்தனர்.
ஜாதிபேதமற்ற சம்ரசமத்துவ சமுதாயம் அமைப்பதில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத்திற்கு உரியதாகும்.


   அவர்கள்  எந்த 
 சீர்திருத்தக் கருத்துக்களை
மக்கள் வழக்கு மொழியில் எழுதினார்கள் .
பரம்பரை பழக்கம் வழக்கமாக வந்த சம்ஸ்கிருதம் ,
மேல் ஜாதிகளுக்கான  முதலிடம்  இந்த எண்ணங்களை மாற்றி  சமத்துவம் கொண்டுவரவேண்டும்.அந்த போராட்டத்தில்   மன  உ றுதிவேண்டும்.
வெறுப்பு,விழிப்புணர்வு  என்ற மனநிலை,செயல்.
இந்த குணம் சொற்களிலும் வெளிப்படுகிறது.
 வெறுப்பில் மொழி கடுமையாகிறது. கடும்சுடும்  வசைச்சொல்  வெளிப்படுகிறது. தீய சொற்கள் வெளிப்படுகின்றன. சாதுக்களின் சொற்களில்
கல்விகற்காதவனின் மொழி ,அறியாத தன்மையை அறியச்செய்கிறது. எழுதும் சாஸ்திரங்களில்  பக்தர்களுக்கு
நம்பிக்கை ஏற்படுகிறது. சாதுக்களுக்கு நூலில் உள்ள
கருத்துக்களின் மேல் நம்பிக்கை இருப்பதில்லை.
நூலறிவு  பெற்று அஹங்காரத்தில் உள்ளவர்களைப்பார்த்து
கபீர்  எதிரில் தென்படுவதும் ,அனுபவத்தால் உணர்வதும்
தான்  மகத்துவம் நிறைந்தது.
அவர் சொல்கிறார் -"நீ  சொல்வது காகிதத்தில் எழுதியிருப்பது.  நான் சொல்வது கண்ணால் பார்த்து அனுபவத்தால்  உணர்ந்தது ."
   புரட்சிகரமான  மாற்றம் தான் சாதுக்களின் பக்தி. அவர்களை வெறுக்கும்  ஒதுக்கும் சக்தியோடு போராட்டம் .
ஜாதிவேறுபாடுகளுக்குள்  உண்டான  மனிதத்தன்மை அற்ற கொடுமையை  வெறுப்பை எதிர்ப்பது. இது பெரிய மகத்துவமி க்க புரட்சியின்   வெளிப்பாடு. இவர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றி  ஆன்மீகத் துணை கொண்டு
மிகக்  கடினமான       சமுதாயப்போரை நடத்தினர்.
 எல்லோருக்கும் சமமான கௌரவம் ,மரியாதை அளிப்பது
என்ற அடிப்படைக் கருத்துருவை  நிறுவுவதின்   முயற்சியில்
தொடர்ந்து  ஈடுபட்டனர்.



   

 

Saturday, September 1, 2018

ஹிந்து சமுதாயமும் மத உணர்வுகளும்

  வேதங்களின்  பாடல்களை மந்திரம் என்றே சொல்கிறார்கள்.இந்த வேதமந்திரங்களை
சரியாக உச்சரிக்கவில்லை என்றால்  தவறான பொருளால்
பாவங்கள் உண்டாகும். bavam /பாவம்  இரண்டுக்கும் அர்த்தத்தை அறிந்து உச்சரிக்கவேண்டும் .
இந்த சாதுக்கள் /பக்தர்கள் மக்களுக்கிடையில் உபன்யாசம் செய்து  பக்தி உணர்வை ஏற்படுத்தவேண்டும். பொதுமக்களுக்கு  சம்ஸ்கிருதம் தெரிய அறிய வாய்ப்பில்லை.அவர்களுக்கு சம்ஸ்கிருதம்  கற்பிக்க யாரும்
தயாராக இல்லை.
 இந்த சாதுக்களும்/பக்தர்களும்  தேவமொழியை   பயன் படுத்தாமல்  மக்கள் மொழியில் ஆன்மீக உபன்யாசங்கள் செய்தனர். அவர்கள் தங்கள் இலக்கியத்திற்கு வடமொழியைப் பயன்படுத்தவில்லை.அதிக மக்களின் வழக்கு மொழியில்  ஆன்மீக இலக்கியம் எழுதினார்.
அவர்கள் எளிய நடையில் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,மராட்டி,குஜராத்தி ,போஜ்புரி, ஒரியா,அசாமி ,வங்காளம்,
போஜ்புரி ,அவதி ,விரஜ் ,ராஜஸ்தானி மொழிகளில்
இலக்கியம் படைத்து ஆன்மீக  அறிவைப் புரிய ,அறிய,தெளிய வைத்து  பக்தர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். வட்டாரமொழிகள்,பேச்சு மொழிகளில்,நாடோடிப்பாடல்களில்  பக்தி பாமரர்களை
பரவசமடையச்செய்தது. இவை அனைத்தும் ஹிந்து மதத்தத்துவங்கள் ,கோட்பாடுகள்,பக்தியின் சிறப்பு
ஆகியவைகளை அறிய  ஒளிவிளக்காகியது .
கபீர் தாசர்  சம்ஸ்கிருதத்தை கிணற்று மொழி என்கிறார்.
அதை எளிதாக எடுத்து அருந்தமுடியாது. வட்டாரமொழிகள்.பேச்சுமொழிகள்  ஆற்றுநீர் போன்றது.
அதை எளிதாக அருந்தி அறிவுபெறலாம் என்கிறார் .

ஹிந்து சமுதாயமும் சாதுக்களும் பக்தியும்


        பதிமூன்றாம் நூற்றாண்டில்    சாதுக்களும் பக்தர்களும்

பழைய  முறைகளை கண்டித்து எதிர்த்தனர். எண்ணங்களின் சுதந்திரங்கள்,கருத்துச்சுதந்திரம்  மனிதத்தன்மையற்ற தவறுகளை  எதிர்க்க ஆயிரக்கணக்கான சாதுக்களும் பக்தர்களும்  உருவாகினர் . இந்த எண்ணிக்கையில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த  சாதுக்கள் அதிகம்.
    கடவுளுக்கு முன் அனைவரும் சமம்  என்றால் ,பிறப்பின் அடிப்படையில்  வேற்றுமைப்படுத்துவது அநியாயம் என்றனர்.
   சாதுக்கள்   ஆலயங்கள்,உருவங்கள்,சாஸ்திரங்கள், சம்ஸ்கிருத மொழி ,அந்தணர்கள், கர்மகாண்டங்கள் ,
ஜாதி வேறுபாடுகள், முதலிய போலிகளை  எதிர்தது
சாதுக்கள்,கவிதைகள், சங்கீதம் போன்ற அஹிம்சை ஆயுதங்களால் "சொற்போர்"செய்கின்றனர்.
இந்த  சாதுக்கள்  நாட்டின் குறுகிய எண்ணங்கள்,
போலி  பொய்யான ஆடம்பரங்கள்,பொய்யான பரம்பரை மூடப் பழக்கங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து
மனிதத்தன்மையான  மனிதநேயச் செய்திகளைப்
பரப்பினர். 
அருவ  வழிபாட்டு பக்தர்களின் மொழி ,மொழி நடை,
கருத்து வெளிப்பாட்டு முறைகள், பா வகைகள்,
எல்லாமே பாரதமுறையில் பாரத ஆசாரிகளின்
பங்களிப்பு.

 வேதங்களின்  பாடல்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.மந்திரங்களை சுத்தமாக
 பிழையின்றி உச்சரிக்க வேண்டும்  என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.மந்திரங்களின்
மொழி  சம்ஸ்கிருதம் . ஆனால் சாதுக்களின் மொழி மக்கள் பேசும் மொழி. இந்த மக்கள் மிகவும் அப்பாவிகள்.
எளியவர்கள். வேதங்களின் மொழி தெரியாதவர்கள்.
அவர்கள் ஆழ்மனதில் இருந்து பேசுபவர்கள்.










प्रातः कालीन नमस्कार।
भगवान की प्रार्थना
सर्वत्र विद्यमान भगवान
कई प्रकार से हमें परीक्षा देता है.
ज्ञान देने पर भी
मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है
இனி ய கா லை வணக்கம். प्रातः कालीन नमस्कार।
இறை வணக்கம். भगवान की प्रार्थना
எங்கும் நி றை ந் து ள்ள सर्वत्र विद्यमान भगवान
இறை வன் நம் மை
பல வகை யி லு ம் कई प्रकार से हमें परीक्षा देता है.
சோ தி க் கி றா ன்.
ம னி தர் க ளு க்கு
ஞா னம் அளி த் தா லு ம், ज्ञान देने पर भी
அவனு க் கு பல வி த मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।.
ஆசை களை
அளி த் து அவனை
நிம்மதியாக
ம கி ழ் ச் சி யா க
இரு க்க
வி டு வ தி ல் லை .
பதவி ஆசை,
பணத் தா சை,
பெ ண் ணா சை
பே ரா சை,
பொ றா மை
தி யா கம்,
தீ மை கள் எதி ர்த் து போ ரா ட்டம்,
இன, மொ ழி, சா தி, மதம்., நி ற வெ றி
நட்பு அன்பு, ரத்த பந்தம்,
பங்காளி பகை,
தி ரு மணம்.
அதனா ல் வ ரு ம்
இன் னல், து ன்பங்கள்,
கு ழந் தை வளர்ப்பு,
குழந்தை இன்மை,
கா தல், மோ தல்
ஒரு தலை க் கா தல்
மோதல்,
ஜா தி
இத்தனை மீ றி
இறை வன் தா ன்
என் றா ல்
இஸ்லாம்
இந்து
கி றி ஸ்தவர்
அசல், நகல், மதம் மா றி யவர்கள்,
அல்லா வே நன்மை த ரு வார் என்றால்
அதி ல் எத்தனை பி ரி வு கள்
இதனா ல் அதற் கு ள் போ ரா ட்டம் .असल
இயேசு அதன் பி ரி வு எள் போராட்டம்
ி ஹி ந் து மதம் உட் பி ரி வு கள்
போ ரா ட்டம்,
இயற்கை சீ ற்றங்கள்,
வி ஷ ஜந்து க்கள்,
வி லங் கு கள்
பஞ்சம், பசி, பிணி, விபத்து,
அறி வு பெற்று ம்
அமை தியற்ற வா ழ்க்கை யே
ம னி த வா ழ் க் கை. .
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है.